சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 24 ஜூன், 2021
களிறும் கன்றும் : சுப்ரபாரதிமணியன்
சிவதாசனின் கடிதங்கள் தொகுப்பு களிறும் கன்றும். .சிவதாசனின் தொடர்ந்த இலக்கிய முயற்சிகள் எப்போதும் ஆரோக்கியமாக தென்படுவது ..வகை வகையான விசயங்களைச் செய்து பார்ப்பார்.
சமீபத்தில் கடிதங்களின் தொகுப்பாக இதை கொண்டுவந்திருக்கிறார் கடித இலக்கியம் என்பது அரிதாகி கொண்டிருக்கிறது. கடிதங்கள் எழுதுவது அரிதாகிக் கொண்டிருக்கிறது. அந்த கடிதங்களைப் பாதுகாப்பது கூட சிரமமாக இருக்கிறது ..கடிதங்கள் எழுதுகிற காலம் முடிந்து விட்டது போல இருக்கிறது.
அதே போல கவிதைகளில் குறுங்கவிதைகள்,, சின்ன கவிதைகள் என்று தொடர்ந்து முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது நெடுங்கவிதை களும் காப்பியங்களும் இல்லாமல் போகின்றன .ஆனால் சிவதாசன் பெரும்பான்மையானக் கவிதைகளை நீளமாக அமைத்துக் கொள்கிறார். காரணம் அவரின் மன எழுச்சியை முழுமையாக அந்த நெடுங்கவிதைகள் கொண்டு வந்து விடுகின்றன என்று நம்புவதாகவும் அதற்கு அவரின் மரபு வடிவம் உதவிகரமாக இருப்பதாலும் அப்படிச் செயல்படுகிறார் .தொடர்ந்து அதற்கான வெளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். .அவற்றின் பிரசுர வாய்ப்புகளைப் பற்றி அவர் அக்கறை கொள்வதில்லை .ஒரு கவிமனம் அப்படித்தான் செயல்பட வேண்டும் .பிரசுர வாய்ப்புகள் , பாராட்டுகள், பரிசுகள் என்பதைத் தாண்டி தொடர்ந்து படைப்புச் செயல்பாட்டில் இருப்பது ஆரோக்கியமானது ,அதை அவர் செய்கிறார். முகநூலில் அவர் தொடர்ந்து செயல்படுவது கூட இப்படித்தான்
அதேபோல இந்த கடிதங்களை எழுதும் விசயத்தைக் கூட இன்றைக்கும் அவர் தொடர்ந்து கை கொள்கிறார் .அதுவும் பெண் நண்பர்களுக்கு கடிதம் எழுதுவது என்பது அவருக்கு உவப்பானதாக இருக்கிறது. இந்த நூலில் அவர் பெண் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதங்களும் அந்தப் பெண் நண்பர் இவருக்கு எழுதியக் கடிதங்களும் தொகுப்பாக வந்திருக்கின்றன.. இந்த கடிதங்களை அவர் பல ஆண்டுகள் கழித்து சேகரித்து வைத்திருந்த புத்தகம் ஆகியிருக்கிறார் . இதுபோல சேகரிப்பு மனப்பான்மையும் பாதுகாக்கும் மனப்பான்மையும் அவருக்குள் இருப்பதை அவர் திருப்பூர் வரலாறு சார்ந்தும் , தொல்லியல் சார்ந்தும் பல தரவுகளை தன்னிடம் சேகரித்து வைத்து இருப்பதில் நமக்கு தெரியவரும் ..அந்த வகையில் இந்த கடிதங்கள் ரொம்ப இயல்பாக அமைந்திருக்கின்றன.
சிவதாசன் கடிதங்களை மன எழுச்சியின் உயர்ந்தபட்ச வெளிப்பாடாகக் கொள்ளலாம். அவற்றில் உள்ள கவித்துவ அம்சங்கள் வெகுவாகப் பாராட்ட கூடியவை. அதற்கு எதிர்மறையாக அந்தப்பெண் நண்பருடைய கடிதங்கள் வேறு வகையில் இயல்பாக அவருடைய இடத்திலிருந்து பாசத்தை எதிர்பார்க்கும் ஒரு பெண் மனதின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்றது. இந்த இரு உலகங்களை இந்த தொகுப்பில் நாம் காணமுடிகிறது
சிவதாசனுக்கு பெண் குழந்தைகள் இல்லை இந்த ஏக்கத்தை அவர் நட்பு கொள்ளும் பெண்களிடத்தில் வெளிப்படுத்துவதையும் அவர்கள் அப்பா என்று அழைத்து அவரிடம் அன்பு பாராட்டும் போது அவர் கொள்ளும் பேருவகைவியும் இதன் காரணமாக தொடரும் நட்பும் என்று பல அம்சங்களை அவர் முந்தின படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார். .அப்படித்தான் இந்தத் தொகுபில் வருகிற பெண் அவரை அப்பா என்று அழைத்துக் கொள்வதும் இலக்கியம் சார்ந்த பல்வேறு விஷயங்களை ஆலோசனையாக முன்வைப்பதும் ஏற்றுக்கொள்வதும் வாழ்க்கையின் சகல விஷயங்களையும் அவரிடம் முன் வைப்பதும் என்று வெவ்வேறு கோணங்களில் இந்த கடிதங்கள் அமைந்திருக்கின்றன .
இதுபோல் நூற்றுக்கணக்கான கடிதங்கள் அவரிடம் இருக்கின்றன அதை பெண் நண்பர்கள் எழுதியவை என்பது மட்டுமில்லாமல் பல இலக்கிய நண்பர்கள் எழுதியவை என்ற வகையிலும் பல நூற்றுக்கணக்கான கடிதங்களை அவர் வைத்திருப்பதை நான் அறிந்திருக்கிறேன்
கடித இலக்கியம் அரிதாகிக் கொண்டிருக்கும் காலத்தில் இதுபோன்ற கடித இலக்கியத் தொகுப்புகளை நல்ல முயற்சிகளாக எடுத்துக்கொள்ளலாம் .இந்த நூலில் சில படங்களும் இடம் பெற்றிருக்கின்றன அதை அவர் குறிப்பிடத்தக்க படங்களாக நினைக்கிறார். அதில் ஒன்றுதான் காந்தியடிகள் தன்னுடைய இரு பக்கங்களிலும் இரு பெண்களை வைத்து அணைத்துக் கொண்டு புகைப்படத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று …இரண்டு பெண் நண்பர்களை அணைத்துக் கொண்டும் பக்கம் வைத்துக்கொண்டும் அவர் எடுத்து இருக்கிற புகைப்படங்கள் இந்த தொகுப்பில் உள்ளன. அவை பற்றிய சிலரின் நமட்டுச்சிரிப்பை மீறி நட்பையேக் கொண்டாடுவதை அவரின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. கடித இலக்கியம் என்பதும் இலக்கிய படைப்புகளில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதும் அந்த வகையிலேயே இந்த தொகுப்பு கொண்டாட வேண்டியதாக இருக்கிறது . இவரின் ஊர் சார்ந்த வரலாற்று குறிப்புகள் மற்றும் கவிதை முயற்சிகள் என்பதைத் தாண்டி இதுபோன்ற தொகுப்பு முயற்சிகளும் குறிப்பிடத் தக்கவையாக அமைந்திருக்கின்றன
கவிமனத்திற்கு ஓய்வு இல்லை. தொடர்ந்து சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றைப்போன்றது அது.
சுப்ரபாரதிமணியன் ( ரூ 100 கைபேசி எண் 90039 29699)
விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.
பிராண்டி குவார்டர் ரூ900 ( வெளி மார்க்கெட்)
பெட்ரோல், லிட்டர் 96.71 ரூபாய்,
டீசல் லிட்டர் 90.92 ரூபாய்