சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 24 ஜூன், 2021

மியாவாக்கிக்காடுகளின் உருவாக்கம் என்பது பசுமைத்திட்டங்கள் என்ற பெயரில் பணம் பாழடிக்கிற முயற்சிகளா : சுப்ரபாரதிமணியன் ஆறு ஆண்டுகளில், 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வகையில் வனத்துக்குள் திருப்பூர் இயக்கப் பணிகள் மகிழ்ச்சி தருகிறது . எதிர்கால சந்ததியினர் வளமுடன் வாழ, 'ஒவ்வொருவரும் ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும்' என்பது, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் விருப்பம். அவரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் உருவாக்கப்பட்டது.'மரம் விவசாயிகளுக்கு சொந்தம்; சுத்தமான காற்று மக்களுக்கு சொந்தம்' என்ற கோஷத்துடன், 2015ல் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவங்கியது. ஆறு கட்டமாக, 551 இடங்களில், 2,282 ஏக்கர் பரப்பில் பசுமை வனம் உருவாக்கப்பட்டுள்ளன. ஆறு ஆண்டுகளில், 10 லட்சத்து, 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், தனியார் அமைப்பு, நேர்த்தியான திட்டமிடல் மூலம், 87 சதவீத கன்றுகளை மரமாக வளர்த்தெடுத்துள்ளது. திட்டப்பணிகள், கோவை, சித்தார்த் பவுண்டேஷன் அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட செயல்வடிவம், ஆவணமாக்கப்பட்டுள்ளது. :கொரோனா ஊரடங்கிலும், பசுமைப்பணி தடையின்றி தொடர்ந்தது. மாவட்டத்தின் பசுமை பரப்பை விஸ்தரிக்க, கொடையாளர் தாராளமாக வழங்கியதும், தன்னார்வலர் தன்னலம் பாராமல் களமாடியதுமே, இத்திட்டம் வெற்றிபெற காரணம்.'வெற்றி' அமைப்பின் பசுமை பாதையை பின்பற்றி, காங்கயம் துளிகள், வெள்ளகோவில் நிழல்கள், உடுமலை 'மலை உடுமலை', சேனாதிபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம், திருப்பூர் வேர்கள், 'டிரீம் 20' - பசுமை அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள், பசுமை வளர்க்க பயணித்துகொண்டிருக்கின்றன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 240 வகையான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சிறகடித்து பறக்கும், 65 வகை பட்டாம்பூச்சிகள், 41 வகை சிலந்திகள், 11 வகையான தட்டான் பூச்சிகளும், மரக்கன்று வளர்ந்த இடங்களில் காணப்படுகிறது. இத்திட்டத்தில் 240 வகையான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சிறகடித்து பறக்கும், 65 வகை பட்டாம்பூச்சிகள், 41 வகை சிலந்திகள், 11 வகையான தட்டான் பூச்சிகளும், மரக்கன்று வளர்ந்த இடங்களில் காணப்படுகிறது இவ்வகைக்குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் பார்க்க நேர்கிறது . மகிழ்ச்சியாக இருக்கிறது அதே சமயம் இவ்வகைப்பயிரிடல் முறையில் மியாவாக்கிக்காடுகளின் உருவாக்கம் என்பது உறுத்தலாகவே உள்ளது. பசுமைத்திட்டங்கள் என்ற பெயரில் பணம் பாழடிக்கிற முயற்சிகளா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி உள்ளனர். அந்த முறையில் சிறிய இடத்தில் அதிக மரக்கன்றுகளை நடுகிறார்கள். அதை அறிமுகப்படுத்தியவர் ஜப்பானைச் சேர்ந்த அகிரா மியாவாக்கி நகர்புறங்களில் காடு வளர்ப்பதற்கானத் திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியதால் அந்தப் பெயரில் வழங்கப்படுகிறது. சிறு பகுதியில் மட்டும் குளுமை கிடைக்கிறது .இயற்கைக் காடுகளைப்போல் அதிக பரப்பளவுக்கு பசுமையைப்பாதுகாக்க அவ்வகைக்காடுகள் பயன்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. குறுகிய காலத்தில் கிடைக்கும் நிதி உதவியைப்பயன்படுத்திக்கொள்ளவே இத்திட்டம் அமுல் செய்வதாகச் சொல்லப்படுகிறது . பத்து ஆண்டுகளுக்கு மேலாக இவற்றைக் கண்காணித்து வளர்த்தால் மட்டுமே பலன் இருக்கிறதாம். பசுமைப்புரட்சி முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது பசுமைச்சூழலைப்பாதுகாக்கத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் ரசாயனக்கலப்பிலான உரங்களால் இயற்கை சூழல் கெட்டு விட்டது . நுண்ணுயிர்கள் அழிந்து விட்டன. அதில் தமிழகம் போன்ற மாநிலங்களில் 133 தாவர இனங்கள் அழிந்து விட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. அவற்றைப்பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையை சுற்றுச்சூழல் சார்ந்தவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.. கடந்த 200க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சுமார் 100 தாவர இனங்கள் அழிந்து போயிருக்கின்றன. மரமஞ்சள், கொலமவு, முடக்கத்தான் போன்ற அரிய வகை மூலிகைகள் வேகமாக அழிந்து வருகின்றன. மூலிகள் மூலம் கிடைக்கும் மருந்துகள் அருகி வருகின்றன. ஆனால் வளர்ச்சித்திட்டங்களில் காடுகள் அழிப்பால் இவை அரிதாகும் சூழல் உருவாகியுள்ளது. பசுமை வழிச்சாலை என்ற பெயரில் சென்னை சேலம் எட்டு வழிச்சாலை, பெங்களூரு சென்னை மத்தியிலான் 300 கிமீ சாலை போன்றவை விவசாய நிலத்தையும் பசுமை வெளிகளையும் அழித்து விடும் என்ற அபாயம் விரிந்து கொண்டே இருக்கிறது . அதிக அளவிலானப் போக்கு வரத்துகள் , அதிக அளவு கரிய வாயுக்களின் வெளியிடல், புதியக் கட்டிட மைப்புகள், நீர்ப்போக்குவரத்தின் திசை மாறல் போன்றவை பசுமைதாவரங்களுக்கு சிரமங்களையேத் தரும் கொரானா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட பல சுற்றுச்சூழல் சட்டங்கள் புதிய நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் விரிவாக்கம் காரணமாக நாள்தோறும் சராசரியாக 300 ஏக்கர் பரப்பள்விலான காடுகள் அழிக்க்கப்படுகின்றன என்பது சாதாரணச் செய்தியாகிவிட்டது. மலைப்பகுதிகளில் எஸ்டேட்டுகள் அமைத்தல் , தொடர்வண்டிப்பாதைக்கான வழிகளை அமைத்தல் போன்றவை மூலம் மரபார்ந்த தாவரங்களும் செடிகளும் மரங்களூம் அழிகிற சூழல் எல்லாக்காலத்தையும் விட இப்போது அதிகமாகியிருக்கிறது . சோலைக்கடுகளின் அழிப்பும் மழைக்காடுகளின் அழிவுக்கு வழி வகுத்திருக்கிறது .இவற்றின் மாற்றுக்காக வளர்க்கப்படும் அயல்நாட்டு மரங்கள் சூறாவளிகளைத் தாக்குப்பிடிப்பதில்லை.வழக்கமான நம் நாட்டுத் தாவரங்களின் மண் பிடிப்பும், இறுக்கமும் காணாமல் போகிறது மரங்கள் அற்ற சூழல் பெரும் நகரங்களில் உருவாக்கப்பட்டு விட்டது. இதை விரிவு படுத்திக்கொண்டே போகிறார்கள். சுவாசிக்கவும் அருந்தவும் உண்ணவும் இயற்கை தரும் பொருட்களை நிராகரிக்கும் இன்றைய உலகினருக்கு இயந்திரங்கள் உருவாக்கும் செயற்கை உணவுகள் மனிதனின் ஆயுள் காலத்தை வெகுவாகக் குறைக்கும்