சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 24 ஜூன், 2021

உயிரினப் பன்மை சமநிலையும் மனிதப்பண்பேற்றமும் சுப்ரபாரதிமணியன் : நாய்களும் குரங்குகளும் சமமா.. காக்கையும் குருவியும் சம்மா .. பேண்டா கரடியும் கருங்குரங்கும் சம்மா. எல்லாவற்றிலும் பேதமிருக்கிறது. மனிதர்கள் பார்க்கும் பார்வையிலும் அவற்றை ஏற்றுக் கொள்வதிலும். குழந்தைகளுக்கு நாய்களும் குரங்குகளும் இயல்பாகவே மிகவும் பிடிக்கும் பிராணிகள். நாய்களோடு குழந்தைகள் சுலபமாக விளையாடும் கொஞ்சும். வாக்கிங் பழகும். பந்தை வீசும். எல்லா வகை விளையாட்டுகளையும் விளையாடிப்பார்க்கும் நாய்கள். நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு வேடிக்கைக் காட்டுகையில் மனிதர்களைப்போல்வேத் தென்படும்.மனிதர்கள் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பது போலவே இருக்கும். சற்றே நிமிர்ந்து இரு கால்களையும் முன்னால் நீட்டி நிற்கும் போது கைகளாய் அதன் கால்கள் மாறிவிடும். இதுபோல்தான்குரங்குகளும் .மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்ற முறையில் அதன் சேஷ்டைகள் குழந்தைகளின் விளையாட்டைப்போலவே இருக்கும். மனிதன் அங்கிருந்துதான் வந்தான் என்று காட்டிக்கொள்ளும் விதமாய் காணப்படும் உருவங்களும் புகைப்படங்களும் மனிதனின் தோற்றத்தையே ஏகதேசம் காட்டி விடும் குரங்கோ நாயோ உற்சாகத்தில் எழுப்புமொலிகளை குழந்தைகள் சுலபமாகப் பின்பற்றும் . அவை குழந்தைகளுக்கு உற்சாகத்தின் எல்லைக்கோடாகவும் இருக்கும்.இவை குழந்தைகளின் மனதில் பதிந்து விடும்போது பாடத்திட்டங்களில் இவை இடம்பெறுகையில் அவர்களுக்கு வெகு நெருக்கமாகவே வந்து விடும். ஆம் வெகு நெருக்கமாகவே வந்து விடும் நாய் மாதிரி இருக்கான், நாய் மாதிரி நடந்துக்கறான் என்று சொல்வதைப்போலவே - குரங்கு மாதிரி இருக்கான், குரங்கு மாதிரி நடந்துக்கறான் என்று சொல்கிற போது அவற்றின் பண்புகளை மனிதன் தனக்குள் ஏற்றிவைத்துக்கொள்வதை மனிதப் பண்பேற்றம் என்று நாராயணி சுப்ரமணியம் போன்றோர் குறிப்பிடுகிறார்கள், நாராயணி கண்ணகி என்றொரு எழுத்தாள நண்பர் ஜோலார் பேட்டையில் வசிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் அவரை அங்கு சந்தித்தபோது ஒரு தோப்பில் உட்கார்ந்து உரையாடினோம். அப்போது அங்கு காணப்பட்ட ஒரு உடல் நீளமும் நல்லச் செழிப்பும் கொண்ட நாயுடன் அவர் பழகிய போது அவர் இதே விசயங்களைக்குறிப்பிட்டது ஞாபகம் வந்தது தோற்றத்தில் உருவமைப்பில் இருக்கும் இத்தன்மைகளை மீறி அதன் குணங்களும் மனிதர்களுள் அமைந்து விடுகின்றன.நாய் நன்றியுள்ளது. குரங்கு சேஷ்டை செய்யும் என்பது போல் . பல வகை உயிரினங்கள் அதிகமாக ஒவ்வோர் இடத்திலும் அமைந்திருப்பது அப்படி உருவாக்கப்படுகிறது பிற உயிரினங்களிடம் இருந்த பிரித்து தனித் உள்ளதால் தான். ஏற்ற தாழ்வுகளுடன் அங்கு வாழும் உயிரினங்கள் பிற இடங்களுடன் கலந்துவிடாமல் தடுக்கப்படுகின்றன. விலங்குகள் இடம் பெயர்வது நூற்றாண்டு கணக்கில் இல்லாமல் குறைந்த கால நாட்களிலேயே ஏற்படுகின்றது. மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படும் சொந்த இடம் அல்லாத வேறு இடத்துச்சிற்றினங்களால் உயிரியல் பல்வகைமைக்கு ஆபத்து எற்படும். இத்தகைய சூழலில் அங்குள்ள மண் சார்ந்த ரகங்களின் வாழிடத்தை வைத்து குறைத்தும் மதிப்பிடுகின்றனர்.இதிலும் மாறுபட்டுத்தனியாக நிற்கின்றன. இப்பூவுலகில் வாழும் வாய்ப்புஅனைத்து உயிரினங்களும் உண்டு.. அவைகள் அதற்குறிய இயல்புகளைச்சார்ந்த அமைப்பு முறைகளிலேயே வாழும். இவ்வாறான இயல்புகளை முன்வைத்தே அவைகள் அடையாளமும் சொல்லப்படும் உணர்வால் -வார்த்தையால் - செயலால் - பரிமாற்றங்களால் பிறருக்கு தீங்கை ஏற்படுத்தாத நிலையையும் கடந்து பிறருக்கு மதிப்பையும் மகிழ்வையும் பலனையும் வெளிப்படுத்தும் பரிமாற்றங்கள் அனைத்தும் நற்பண்புகளாகவே கருதப்பட்டு. இந்நற்பண்புகள் தன் நிலையில் பல படித்தரங்களை உடையவைகளாக அமையப்பெறுகிற போது அவற்றில் பண்பேற்றமும் ஊடாடி நிற்கிறது ஊர்வனவற்றில்பலவை சார்ந்த பொதுக்கருத்தாங்கள் தவறாகவே அமைந்து விடுகிறன்றன. பாம்புக்காது என்று சொல்கிறோம். ஆனால் பாம்பிற்கு காது இல்லை என்பது அதன் உடலமைப்பினை நன்கு புரிந்து கொண்டவர்கள் சொல்கிறார்கள். முதலைக்கண்ணீர் விடுகிறான் என்கிறோம். ஆனால் முதலைகள் அழுவதில்லை உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை வெளியேற்றுவதை அப்படிச் சொல்கிறோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள் பலகுழந்தைகள் சார்ந்தத் திரைப்படங்களில் இடம்பெறும் கரடிகளும் கரடி பொம்மைகளும் குழந்தைகளுக்கு வெகு நெருக்கமாக அமைந்து விடும் பாண்டா கரடியை முன்வைத்து பல கேலிச்சித்திரப்படங்களும் முழுத்திரைப்படங்களும் வந்திருக்கின்றன். அவை சாதாரணமாக குழந்தைகள்கீழே உட்கார்ந்து சாப்பிடுவதைப்போலச் சாப்பிடும் . கைகளை பயன்படுத்திக்கொள்ளுவதைப்போல் கால்களையும் பயன்படுத்தி எல்லாக்காரியங்களையும் செய்யும். அவற்றோடு குழந்தைகள் வீரதீரச்செயல்களில் ஈடுபடுவதை பலத்திரைப்படங்களில் கண்டிருக்கிறோம் .கொங்கு நாட்டில் ஆடு வளர்ப்பு என்பது ஏழை விவசாயப் பெண்கள், கணவனை இழந்தக் கைம்பெண்கள், விவசாயக்கூலிகள் ஆகியோருக்குப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்பதை மீறி உளவியல் ரீதியாக வளர்ப்புக்குழந்தைகள் போலவே இயைந்து இருப்பதைக்காணலாம்.காலத்திற்கும் சூழ்நிலைக்கும் பயன்தரும் இன ஆடுகளை விவசாயிகள் இனங்கண்டு வளர்ப்பதன் மூலம் நல்ல ஆதாயம் அடைய முடிவதால் அவை வெகு நெருக்கமாகிவிடுகின்றன மனிதப்பண்பேற்றமும் காணக்கிடைக்கிறது சிரிக்கும் தோற்றம் கொண்ட பிராணிகள் குழந்தைகளை வெகு இயல்பாக ஆகர்சிக்கும். சிரிக்கும் தொந்தி மனிதன் போன்று பல பிராணிகளின் பொம்மைகளில் இந்தச் சிரிப்புத்தோற்றத்தைக்காணலாம். இவ்வகையில் குழந்தைகளின் இயல்பில், தோற்றத்தில் அல்லது வளர்ந்த மனிதர்களின் இயல்பில், தோற்றத்தில் இருப்பவற்றுக்கு மனிதர்கள் மத்தியில் ஆதரவும் கிடைக்கிறது. சில பிராணிகள், விலங்குகளுக்கு மேற்கண்ட விபரங்களால் மனிதர்கள் மத்தியில் கரிசனம் கிடைப்பதும் மனிதப்பண்பேற்றமும் காணக்கிடைக்கிற போது மற்றவை புறக்கணிக்கப்படுவதும் எல்லா உயிர்களும் சமமானவை என்ற கருத்தாக்கத்தை உடைத்தெறிவதும் சூழலியலில் மிகையாக, வேற்றுமைகளை அதிகப்படுத்துகிறது. மனிதன் வேற்றுமையில்லாமல் பார்க்கப்படவேண்டும் என்பதைப்போல் எல்லா உயிரினங்களும் வேற்றுமையில்லாமல் பார்க்கப்படுவதில்தான் உயர்ந்தத் தன்மை கிட்டுகிறது என்று சூழலியாளர்களும் உயிரினபன்மை சமநிலை குறித்துப்பேசுபவர்களும் கருதுகிறார்கள் காக்கை குருவி எங்கள் ஜாதி என்று கொண்டாடப்படுவதும் இதனால்தான்.