சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 24 ஜூன், 2021
சுப்ரபாரதிமணியன் :
கொரானாவும் காடுகளும்
காட்டில் பறவைகள் இல்லாதபடி துரத்த பல முயற்சிகள். வேட்டையாடுவது, எக்கோ டூரிசம் என்று பல.அவை காட்டில் இருக்கவே விரும்பும்
‘‘காடைக்குக் கலக் கம்பைக் கொட்டினாலும்
காடை காட்டைத்தான் நோக்கும்’’
பறவைகளைப் பிடித்துக் கொண்டு வந்து வீட்டில் கூண்டுகளில் அடைத்து வளர்க்க முடியாது. அவ்வாறு வளர்க்கப்படும் பறவைகள் வீட்டுச் சூழ்நிலைக்கேற்ப வாழ இயலாது. ஆனால் இன்று காடுகளில் வாழ்ந்து திரிந்த காடைகள் என்ற சிறுபறவைகளைப் பிடித்து வந்து அவற்றை உணவிற்காக வளர்க்கின்றார்கள். அவற்றைத் தீனிபோட்டு வளர்த்து, அவை வளர்ந்தவுடன் கொன்று உண்ணுகின்றார்கள். இக்காடைகளை மக்கள் கூண்டுக்குள் அடைத்தே வளர்க்கின்றனர். அக்கூண்டை அவர்கள் திறப்பது இல்லை. திறந்தால் அவை காட்டை நோக்கிப் பறந்துவிடும். இத்தகைய காரணத்தாலேயே கூண்டைத் திறவாது அவற்றை வளர்க்கின்றனர்.
இக்காடையை அதற்குப் பிடித்தமான உணவைப்போட்டு வளர்த்தாலும் அப்பறவையானது வளர்த்தவரை விரும்பாது. அது காட்டையே விரும்பிப் பறந்து போகும். வளரும்வரை இருந்துவிட்டுப் பின்னர் வளர்ந்தவுடன் அது காட்டை நோக்கிப் பறந்து சென்றுவிடும். அதுபோன்று மனிதர்களும்தான் பிறருடைய உதவி தேவையில்லை என்று தெரிந்தவுடன் தன்னை வளர்த்தவரையே தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிவிடுவர். இதைப் பழமொழி எடுத்துரைக்கின்றது.
இயற்கை சார்ந்த அக்கறையை மனிதன் தூக்கி எறிந்து விட்டதால் இன்று கொரான சிக்கலில் வந்து நிற்கிறான். இயற்கையின் சமநிலை, பன்னுயிர் தன்மையை பாதித்ததால் இந்த சோகம். இதில் காடழிப்பும் ஒரு காரணம்
உலகில் இன்று புவிவெப்பமடைதல், காலநிலை மாற்றம், கொரானா போன்ற பல்வேறு சூழல்பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக காடழிப்பு காணப்படுகின்றது.
ஆக்சிசனின் அளவை அதிகரிப்பதில் காடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தாவரங்கள் ஒளித்தொகுப்பு நடவடிக்கைக்காக கார்பன் டை ஆக்சைடு வாயுவை உள்ளெடுத்து ஆக்சிசனை வெளிவிடுகின்றன. இதனால் வளிமண்டலத்தில் பல்வேறு விதத்தில் வெளியேறும் தாவரங்களால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றது. இன்றும் கூட தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மற்றும் பல்வேறு விதத்தில் வெளியெறும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வாயுவை உறிஞ்சிக் கொள்ளக்கூடிய விதத்தில் செயற்கை மரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மரங்கள் இயற்கையான தாவரங்களைப் போன்று உயிர்கலங்களை கொண்டிராவிட்டாலும் மரங்களின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இவை தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன
- ஆவியுயிர்ப்புத் தொழிற்பாட்டின் மூலம் வளிமண்டலத்தில் நீராவியின் செறிவை அதிகரிக்கச் செய்வதுடன், உயர்ந்த காடுகள் காற்றுகளைத் தடுத்து மழைவீழ்ச்சியைக் கொடுக்கின்றன.
• . பெரும்பாலான வளர்முக நாடுகளில் எரிபொருளாக விறகே பயன்படுத்தப்படுகின்றது. வீடுகளிற்குரிய கதவுகள், கூரைகள், தளவாடங்கள் செய்வதற்கும் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அரிய பல மருந்து வகைகளையும் காடுகளே கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
:- காற்றுக்களின் செல்வாக்கு பெரிதும் தாவரப் போர்வையற்ற பகுதிகளிலே மையம் கொள்பவை. உதாரணமாக பாலைவனப் பகுதிகளில் காற்றின் வேகம் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் அதிகமாகக் காணப்படும். இதற்குக் காரணம் அங்கு தடையாகத் தாவரப்போர்வை காணப்படாமையே ஆகும். ஆனால் தாவரப் போர்வை மிகுந்த பகுதிகளில் காற்றுக்களின் செல்வாக்கு அதாவது வேகம் கட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படும். அத்துடன் புயற்காற்றுக்கள் விருத்தி பெறுவதும் தாவரப் போர்வையினால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
:- தாவரப்போர்வை மிக்க பிரதேசங்கள் உயிரினப் பல்வகைமையை அதிகளவில் கொண்டனவாக காணப்படுகின்றது. மிருகங்கள் முதல் ஊர்வன வரை ஒரு காட்டு சூழற்தொகுதியில் இனங் காணக் கூடியனவாக உள்ளன. விலங்குகள், பறவைகளின் புகலிடங்களாகக் காடுகள் காணப்படுகின்றன. பூமியின் நிலப்பரப்பில் மழைக்காடுகள் 7 சதவீதம் மாத்திரமே உள்ள போதிலும் உலகில் வாழும் உயிரினங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அங்கு காணப்படுகின்றது.
காடுகள் மண்ணரிப்பு, மண்வரட்சி, மண்சரிவு போன்றவற்றை குறைவடையச் செய்கின்றது. தாவரங்கள் காணப்படுகின்ற பகுதிகளில் மழைபெய்கின்றபோது பூமியில் நீர்த்துளிகள் நேரடியாக விழாமல் பாதுகாக்கின்றதுடன், தாவரவேர்கள் மண்பகுதிகளைப் பற்றிப்பிடிப்பதனாலும் மண்ணரிப்பு நிகழ்வதனைக் குறைவடையச் செய்கின்றது. மேலும் நதிக்கரையோரங்களின் நிற்கும் தாவரங்களினால் நதியின் கரையோரம் அரிக்கப்படுவதனை தடுக்கின்ற ஒரு பாதுகாப்புச் சுவராகவும் இது காணப்படுகின்றது. அத்துடன் தாவரங்கள் நிலத்திற்கு போர்வையாக அமைகின்றமையால் பெருமளவில் நீர் ஆவியாவதைத் தடுப்பபதுடன், மண்ணின் ஈரத்தன்மையினையும் பாதுகாக்கின்றது. இதனால் மண் வறட்சியடைதல் குறைவடைகின்றது. தாவரங்கள் மலைச்சரிவுகளில் காணப்படுகின்றபோது நிலச்சரிவை குறைப்பதிலும் பங்காற்றுகின்றது.
• தரைக்கீழ் நீரைப் பாதுகாத்தல்,
• வெள்ளப்பெருக்கைக் குறைத்தல் , போன்றவையும் முக்கியம்
உலகின் சனத்தொகை இன்று10 பில்லியனாக அதிகரித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப வளங்களின் நுகர்விலும் அதிகரிப்பு காணப்படுகின்றது. மனித தேவைகள் அதிகரிப்பினால் உறைவிடங்களை அமைத்துக் கொள்வதற்கான நிலத்திற்குரிய தேவையினால் காட்டுநிலப்பரப்புக்கள் அழிக்கப்பட்டு குடியிருப்பு நிலங்களாக மாற்றப்படுகின்றன. குடியிருப்புக்கள் மாத்திரமன்றி அவற்றுக்குரிய போக்குவரத்துப் பாதைகளை அமைப்பதற்காகவும் காடுகளை ஊடறுத்துச் செல்லக்கூடிய வீதிகள் அமைக்கப்படுகின்றபோது அருகாமையிலுள்ள காட்டு நிலப்பரப்புக்கள் அழிக்கப்படுகின்றன.
:- உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவையும் வர்த்தக விருத்தியும் ஏற்பட்ட காரணத்தினால் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பெருமளவில் அதிக நிலப்பரப்பில் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. உதாரணமாக ஆரம்ப காலங்களில் இயற்கையாகவே காணப்பட்ட காடுகளிலிருந்து இறப்பர் பால் எடுக்கப்பட்டது. பின்னர் தேவை அதிகரிப்பு ஏற்பட்டதனால் இறப்பரை பெருந்தோட்டங்களில் பயிரிடுவதற்கு முடிவெடுத்தனர். இதனால் பெருமளவில் காட்டுநிலப்பரப்புக்கள் அழிவடைவதற்கு இது வழிஏற்படுத்தியது. இறப்பர் மாத்திரமன்றி தேயிலை, கோப்பி, எண்ணெய்த்தாவரங்கள் முதலியவற்றினால் காட்டு நிலப்பரப்புக்கள் குறைவடைகின்றன. உதாரணமாக இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் எண்ணெய்த்தாவரங்கள் பண்ணப்படுவதற்காக பெருமளவு அயனக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்நாடுகள் உலகின் பாம் ஆயில் வினியோகத்தில் 80 சதவீதத்திலும் அதிகமாகக் காணப்படுகின்றது. இலங்கையில் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நிலங்களை உருவாக்கிக் கொள்வதற்காக காடு மற்றும் பற்றைக்காடுகளைக் கொண்ட பகுதிகள் அழிக்கப்பட்டு பெறப்படுகின்றன.
• வெட்டுமர வர்த்தக வளர்ச்சி:- மரப்பலகைகள், மரக்குற்றிகள், மரக்கூழ், கடதாசிகள் போன்ற காட்டு உற்பத்திகளின் அளவு அதிகரித்துவருவதனால் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பெருமளவில் வைரமான மரங்களான, தேக்கு முதலியவை பலகைகள், தளவாடங்கள் போன்றவற்றுக்காக அரியப்படுகின்றன. வெட்டுமர உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பிரான்ஸ், கொங்கோ, கானா ஆகிய நாடுகள் வகிக்கினறன. ஆனால் ஸ்புறுச், பேர்ச், அஸ்பென், மஞ்சள் பைன் போற் மரங்கள் காகிதக்கூழ் உற்பத்திக்காக பெருமளவில் அழிக்கப்படுகின்றன. பிறேசிலில் வெட்டுமர உற்பத்திக்காக 10000 சதுரகிலோமீற்றர் பரப்பளவு பகுதி காடழிக்கப்பட்டுள்ளது.
• காட்டுத்தீ:- இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ ஏற்படுகின்ற காட்டுத்தீயினாலும் காடுகள் அழிவுக்குள்ளாக்கப்படுகின்றன. சூரிய வெப்பம், காற்று என்பவற்றின் சக்தி, மரங்களின் உராய்வு என்பன காட்டுத்தீ ஏற்பட துணை புரிகின்றன. காட்டுத்தீ ஏற்படுவதற்குரிய சூழ்நிலையை பிரதேசத்தில் ஏற்படும் வறட்சி ஏற்படுத்துகின்றது..
• கனிப்பொருள் அகழ்வு நடவடிக்கைகள், • போக்குவரத்துப் பாதைகள் அமைப்பும் பெரும் பாதிப்பை உண்டு
• நகரின் பரப்பளவு விஸ்தரிக்கப்படுகின்றமையை பொதுவாக நகராக்கம், விலங்குகளை வளர்த்து அவற்றிலிருந்து பால், இறைச்சி, கம்பளி மயிர்கள் என்பன கால்நடைப் பண்ணைகளோ அல்லது பாற்பண்ணைகளோ பெருமளவு நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு விவசாய நடவடிக்கையாகும். இன்று உலக உணவுத்தேவையில பால் உற்பத்திப் பொருட்களுக்கும், அதே போன்று பெரும்பாலான மேலைத்தேய நாடுகளில் இறைச்சிகளுக்கும் பெருமள்வில் கிராக்கி காணப்படுகின்றது. இதனால் உற்பத்தியாளர்கள் தமது பண்ணை நிலங்களின் பரப்பளவுகளை அதிகரித்துக் கொள்வதற்காக மேலதிகமாக காடுகள் காணப்படுகின்ற பகுதிகளை வெட்டி அழித்து அவற்றை தமது பண்ணை நிலங்களாக மாற்றுகின்றனர்.
கிராமிய மக்கள் வறுமை காரணமாக விறகுளை எடுத்தல், இலாபமீட்டும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் மரம் எடுத்தல் போன்றவற்றாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன. மிகவும் வறுமையான நாடுகளில் வாழுகின்ற மக்கள் தமது வயிற்றுப்பிழைப்புக்காக சட்டவிரோதமான முறையில் காடுகளை வெட்டி விறகாக விற்கின்றனர். கென்யா, கொங்கோ போன்ற நாடுகளில் வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானோர் விறகுத் தேவைகளுக்காக காடுகளை அழிக்கின்றனர்.
• மழைவீழ்ச்சி குறைவடைதல் , • மண்ணரிப்பு ஏற்படுதல், • புவிவெப்பமடைதல்,• மண்ணின் ஈரத்தன்மை குறைவடைதல்.
• காற்றின் வேகம் அதிகரித்தல் ஆகியவையும் சிரமம் தருகின்றன . இவை பன்னுயிர் சமநிலையை பாதித்து கொரானா போன்ற கிருமிகளின் தாக்கத்திற்க்கும் பரவலுக்கும் காரணங்களாகி விட்டன
கொரானாவைக்குற்றம் சொல்லிப்பயனில்லை காடுகளை அழிப்பதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது நம் மூச்சை நிறுத்தி விடும்