சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 24 ஜூன், 2021

களிறும் கன்றும் : சுப்ரபாரதிமணியன் சிவதாசனின் கடிதங்கள் தொகுப்பு களிறும் கன்றும். .சிவதாசனின் தொடர்ந்த இலக்கிய முயற்சிகள் எப்போதும் ஆரோக்கியமாக தென்படுவது ..வகை வகையான விசயங்களைச் செய்து பார்ப்பார். சமீபத்தில் கடிதங்களின் தொகுப்பாக இதை கொண்டுவந்திருக்கிறார் கடித இலக்கியம் என்பது அரிதாகி கொண்டிருக்கிறது. கடிதங்கள் எழுதுவது அரிதாகிக் கொண்டிருக்கிறது. அந்த கடிதங்களைப் பாதுகாப்பது கூட சிரமமாக இருக்கிறது ..கடிதங்கள் எழுதுகிற காலம் முடிந்து விட்டது போல இருக்கிறது. அதே போல கவிதைகளில் குறுங்கவிதைகள்,, சின்ன கவிதைகள் என்று தொடர்ந்து முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது நெடுங்கவிதை களும் காப்பியங்களும் இல்லாமல் போகின்றன .ஆனால் சிவதாசன் பெரும்பான்மையானக் கவிதைகளை நீளமாக அமைத்துக் கொள்கிறார். காரணம் அவரின் மன எழுச்சியை முழுமையாக அந்த நெடுங்கவிதைகள் கொண்டு வந்து விடுகின்றன என்று நம்புவதாகவும் அதற்கு அவரின் மரபு வடிவம் உதவிகரமாக இருப்பதாலும் அப்படிச் செயல்படுகிறார் .தொடர்ந்து அதற்கான வெளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். .அவற்றின் பிரசுர வாய்ப்புகளைப் பற்றி அவர் அக்கறை கொள்வதில்லை .ஒரு கவிமனம் அப்படித்தான் செயல்பட வேண்டும் .பிரசுர வாய்ப்புகள் , பாராட்டுகள், பரிசுகள் என்பதைத் தாண்டி தொடர்ந்து படைப்புச் செயல்பாட்டில் இருப்பது ஆரோக்கியமானது ,அதை அவர் செய்கிறார். முகநூலில் அவர் தொடர்ந்து செயல்படுவது கூட இப்படித்தான் அதேபோல இந்த கடிதங்களை எழுதும் விசயத்தைக் கூட இன்றைக்கும் அவர் தொடர்ந்து கை கொள்கிறார் .அதுவும் பெண் நண்பர்களுக்கு கடிதம் எழுதுவது என்பது அவருக்கு உவப்பானதாக இருக்கிறது. இந்த நூலில் அவர் பெண் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதங்களும் அந்தப் பெண் நண்பர் இவருக்கு எழுதியக் கடிதங்களும் தொகுப்பாக வந்திருக்கின்றன.. இந்த கடிதங்களை அவர் பல ஆண்டுகள் கழித்து சேகரித்து வைத்திருந்த புத்தகம் ஆகியிருக்கிறார் . இதுபோல சேகரிப்பு மனப்பான்மையும் பாதுகாக்கும் மனப்பான்மையும் அவருக்குள் இருப்பதை அவர் திருப்பூர் வரலாறு சார்ந்தும் , தொல்லியல் சார்ந்தும் பல தரவுகளை தன்னிடம் சேகரித்து வைத்து இருப்பதில் நமக்கு தெரியவரும் ..அந்த வகையில் இந்த கடிதங்கள் ரொம்ப இயல்பாக அமைந்திருக்கின்றன. சிவதாசன் கடிதங்களை மன எழுச்சியின் உயர்ந்தபட்ச வெளிப்பாடாகக் கொள்ளலாம். அவற்றில் உள்ள கவித்துவ அம்சங்கள் வெகுவாகப் பாராட்ட கூடியவை. அதற்கு எதிர்மறையாக அந்தப்பெண் நண்பருடைய கடிதங்கள் வேறு வகையில் இயல்பாக அவருடைய இடத்திலிருந்து பாசத்தை எதிர்பார்க்கும் ஒரு பெண் மனதின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்றது. இந்த இரு உலகங்களை இந்த தொகுப்பில் நாம் காணமுடிகிறது சிவதாசனுக்கு பெண் குழந்தைகள் இல்லை இந்த ஏக்கத்தை அவர் நட்பு கொள்ளும் பெண்களிடத்தில் வெளிப்படுத்துவதையும் அவர்கள் அப்பா என்று அழைத்து அவரிடம் அன்பு பாராட்டும் போது அவர் கொள்ளும் பேருவகைவியும் இதன் காரணமாக தொடரும் நட்பும் என்று பல அம்சங்களை அவர் முந்தின படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார். .அப்படித்தான் இந்தத் தொகுபில் வருகிற பெண் அவரை அப்பா என்று அழைத்துக் கொள்வதும் இலக்கியம் சார்ந்த பல்வேறு விஷயங்களை ஆலோசனையாக முன்வைப்பதும் ஏற்றுக்கொள்வதும் வாழ்க்கையின் சகல விஷயங்களையும் அவரிடம் முன் வைப்பதும் என்று வெவ்வேறு கோணங்களில் இந்த கடிதங்கள் அமைந்திருக்கின்றன . இதுபோல் நூற்றுக்கணக்கான கடிதங்கள் அவரிடம் இருக்கின்றன அதை பெண் நண்பர்கள் எழுதியவை என்பது மட்டுமில்லாமல் பல இலக்கிய நண்பர்கள் எழுதியவை என்ற வகையிலும் பல நூற்றுக்கணக்கான கடிதங்களை அவர் வைத்திருப்பதை நான் அறிந்திருக்கிறேன் கடித இலக்கியம் அரிதாகிக் கொண்டிருக்கும் காலத்தில் இதுபோன்ற கடித இலக்கியத் தொகுப்புகளை நல்ல முயற்சிகளாக எடுத்துக்கொள்ளலாம் .இந்த நூலில் சில படங்களும் இடம் பெற்றிருக்கின்றன அதை அவர் குறிப்பிடத்தக்க படங்களாக நினைக்கிறார். அதில் ஒன்றுதான் காந்தியடிகள் தன்னுடைய இரு பக்கங்களிலும் இரு பெண்களை வைத்து அணைத்துக் கொண்டு புகைப்படத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று …இரண்டு பெண் நண்பர்களை அணைத்துக் கொண்டும் பக்கம் வைத்துக்கொண்டும் அவர் எடுத்து இருக்கிற புகைப்படங்கள் இந்த தொகுப்பில் உள்ளன. அவை பற்றிய சிலரின் நமட்டுச்சிரிப்பை மீறி நட்பையேக் கொண்டாடுவதை அவரின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. கடித இலக்கியம் என்பதும் இலக்கிய படைப்புகளில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதும் அந்த வகையிலேயே இந்த தொகுப்பு கொண்டாட வேண்டியதாக இருக்கிறது . இவரின் ஊர் சார்ந்த வரலாற்று குறிப்புகள் மற்றும் கவிதை முயற்சிகள் என்பதைத் தாண்டி இதுபோன்ற தொகுப்பு முயற்சிகளும் குறிப்பிடத் தக்கவையாக அமைந்திருக்கின்றன கவிமனத்திற்கு ஓய்வு இல்லை. தொடர்ந்து சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றைப்போன்றது அது. சுப்ரபாரதிமணியன் ( ரூ 100 கைபேசி எண் 90039 29699) விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது. பிராண்டி குவார்டர் ரூ900 ( வெளி மார்க்கெட்) பெட்ரோல், லிட்டர் 96.71 ரூபாய், டீசல் லிட்டர் 90.92 ரூபாய்
Malayalam poem வாக்களிக்கப்பட்ட நாடு  பாஹியா இதனைப் பாருங்கள், வரைபடத்தில் இல்லையென்றாலும் இது ஒரு நாடு. இது மங்கிப் போகிறது, மறைகிறது இது எப்படி… இது என் இடம் இங்கே என் பெற்றொர் பிறந்தார்கள் - மூதாதையோரும் கூட - வாழ்ந்தார்கள்… பாருங்கள், இது இங்கே இருந்தது நான் பிறக்கும் வரையில். எனினும் யாரோ யாருக்கோ அவர்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நிலத்தை ஒரு இல்லத்தை ஒரு நாட்டை வாக்களித்தார்கள். கேட்பதற்கு மிக எளிமைதான்… ஆனால் நான் பிறந்த வீட்டில் நான் தூங்கிய படுக்கையில் நான் சமைத்த சமையல் கட்டில் நான் அந்நியனேன்…. என்னுடைய காலடி மண் மங்குகிறது வேறொரு நாடாய் ஆகிறது. பாருங்கள் தாளில் மையை அழித்தல்போல அழித்தல் எளிது. எனது வரைபடத்தின் பச்சை மை வெண்மையாய் உலர்கிறது. எனது நாடு ஏன் இப்படி மங்குகிறது? எனக்கு யாராவது சொல்லமுடியுமா? எங்கெணும் எனது நாடு இரத்தத்தில் தோய்ந்து கிடக்கிறது. நாங்கள் சிகப்பு ரோஜாக்களின் கூழ்போல இரத்தத்தால் எங்கள் நாட்டுக்கு நீர் ஊற்றுகிறோம்.. எனினும் எப்படி எனது நாடு இங்ஙனம் மங்கி மறைகிறது? Translation : pro Vincent sundaram
வேசடை வணக்கம். நலமா சமீபத்தில் தமிழ்வெளி வெளியீடாக வந்த தங்கள் நாவல் வேசடை படித்தேன். எளிமையான, ஆனால் மனதை இறுக்கிய நல்ல நாவல், உங்கள் கிராம மனிதர்களை வெகு உயிர்ப்புடன் சாதாரணமாகவே படைத்து விடுகிறீர்கள் . கொரானா காலத்தில் சென்னை வாழ்க்கை எப்படி இருக்கிறது .இதற்குப் பிறகு வேறு நாவல் வந்துள்ளதா. எனது பல நாவல்கள் கிடப்பில் உள்ளன , கொரானா காலம் இன்னும் மனதினை இறுக்குகிறது வாழ்த்துக்கள் அன்புடன் சுப்ரபாரதிமணியன்
அண்டனூர் சுரா ,கந்தர்வகோட்டை கேள்வி - திருப்பூர் கனவு இலக்கிய வட்டம் கூகுள் மீட் - நேற்றைய நிகழ்வு எப்படி இருந்தது? பதில் - 'நூலேணி' குறித்து பேசலாமென இருந்தேன். அதென்ன நூலேணி? மரத்தினலான ஏணி என்றால் குறைந்தபட்சம் 30 டிகிரியில் சாய்த்து வைத்தாக வேண்டும். அதற்கான இடமில்லாத இடங்களில் நூலேணியே உகந்தது. மேலிருந்து கீழே தொங்கவிட்டால் எளிதாக ஏறிக்கொள்ளலாம். மரஏணி கீழிருந்து மேலே ஏற்றும். நூலேணி மேலிருந்தபடி கீழே உள்ளவர்களை தன் உயரத்திற்கு அழைக்கும். சுப்ரபாரதிமணியன் அவர்கள், 'நூலேணி' தக்கவர். (நூல் - புத்தகம்). இதைச்சொல்ல என் இதயத்தில் இடம் இருந்தது. இருந்தென்ன,??? கடந்த X ஆட்சிக்காலத்தில் Y என்கிற அமைச்சர் Z மேடையில் அரசு - ஆட்சி - அதிகாரம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருக்கும் போதே அவரது அமைச்சு பறிபோய்விட்டது. பாவம் அவர், கொக்குநோய் கண்டவராக அமர்ந்துவிட்டார். அந்தக் கதைதான் நேற்று எனக்கு நிகழ்ந்தது ! நாம் மனது வைக்க இங்கே எதுவும் நடக்கப்போவதில்லை. எதற்கும் கோபுர சமிக்ஞை மனது வைக்க வேண்டும், அதற்கேது இதயம்???? கனவு - மெய்நிகர் சந்திப்பில் Google .. 27/6/21 மாலை 6 மணி .. • படைப்பு அனுபவம் : உரை : திருவாளர்கள் சி. அருண், மலேசியா ஓ கே குணநாதன் ,இலங்கை புதுவை யுகபாரதி ,பாண்டிச்சேரி மஞ்சுளாதேவி ,உடுமலை ஹேமலதா , கொச்சி பேரா.விஜயன் , சித்தூர். கேரளா சந்திரா மனோகரன் , ஈரோடு வீரபாலன், ராஜபாளையம் சாமக்கோடாங்கி ரவி, திருப்பூர் மற்றும் உங்களின் கவிதை வாசிப்பும் கருத்துரைகளும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஆழ்வைக்கண்ணன் முன்னிலை : சுப்ரபாரதிமணியன் தொடர்புக்கு : ஆழ்வைக்கண்ணன் 75503 16500 (கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் ) மெய்நிகர் சந்திப்பில்.. 27/6/21 மாலை 6 மணி ..வருக • படைப்பு அனுபவம் உரை : திருவாளர்கள் சாந்தாதத், ஹைதராபாத் விஜி வெங்கட் , ஹைதராபாத் பேரா. பி ஆர் ராமானுஜம் ,தில்லி அண்டனூர் சுரா ,கந்தர்வகோட்டை மலர்விழி ,பெங்களூர் இராமன் முள்ளிப்பள்ளம் ,மைசூர் வெள்ளியோடன், கோளிக்கோடு பேரா மணிவண்ணன்,உதகை பொள்ளாச்சி அம்சப்ரியா கோவை சசிகுமார் கோவை மகேந்திரன் திருப்பூர் விதுரன் சுரேஷ் மற்றும் உங்களின் கவிதை வாசிப்பும் கருத்துரைகளும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஆழ்வைக்கண்ணன் முன்னிலை : சுப்ரபாரதிமணியன் தொடர்புக்கு : ஆழ்வைக்கண்ணன் 75503 16500 (கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் )
உயிரினப் பன்மை சமநிலையும் மனிதப்பண்பேற்றமும் சுப்ரபாரதிமணியன் : நாய்களும் குரங்குகளும் சமமா.. காக்கையும் குருவியும் சம்மா .. பேண்டா கரடியும் கருங்குரங்கும் சம்மா. எல்லாவற்றிலும் பேதமிருக்கிறது. மனிதர்கள் பார்க்கும் பார்வையிலும் அவற்றை ஏற்றுக் கொள்வதிலும். குழந்தைகளுக்கு நாய்களும் குரங்குகளும் இயல்பாகவே மிகவும் பிடிக்கும் பிராணிகள். நாய்களோடு குழந்தைகள் சுலபமாக விளையாடும் கொஞ்சும். வாக்கிங் பழகும். பந்தை வீசும். எல்லா வகை விளையாட்டுகளையும் விளையாடிப்பார்க்கும் நாய்கள். நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு வேடிக்கைக் காட்டுகையில் மனிதர்களைப்போல்வேத் தென்படும்.மனிதர்கள் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பது போலவே இருக்கும். சற்றே நிமிர்ந்து இரு கால்களையும் முன்னால் நீட்டி நிற்கும் போது கைகளாய் அதன் கால்கள் மாறிவிடும். இதுபோல்தான்குரங்குகளும் .மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்ற முறையில் அதன் சேஷ்டைகள் குழந்தைகளின் விளையாட்டைப்போலவே இருக்கும். மனிதன் அங்கிருந்துதான் வந்தான் என்று காட்டிக்கொள்ளும் விதமாய் காணப்படும் உருவங்களும் புகைப்படங்களும் மனிதனின் தோற்றத்தையே ஏகதேசம் காட்டி விடும் குரங்கோ நாயோ உற்சாகத்தில் எழுப்புமொலிகளை குழந்தைகள் சுலபமாகப் பின்பற்றும் . அவை குழந்தைகளுக்கு உற்சாகத்தின் எல்லைக்கோடாகவும் இருக்கும்.இவை குழந்தைகளின் மனதில் பதிந்து விடும்போது பாடத்திட்டங்களில் இவை இடம்பெறுகையில் அவர்களுக்கு வெகு நெருக்கமாகவே வந்து விடும். ஆம் வெகு நெருக்கமாகவே வந்து விடும் நாய் மாதிரி இருக்கான், நாய் மாதிரி நடந்துக்கறான் என்று சொல்வதைப்போலவே - குரங்கு மாதிரி இருக்கான், குரங்கு மாதிரி நடந்துக்கறான் என்று சொல்கிற போது அவற்றின் பண்புகளை மனிதன் தனக்குள் ஏற்றிவைத்துக்கொள்வதை மனிதப் பண்பேற்றம் என்று நாராயணி சுப்ரமணியம் போன்றோர் குறிப்பிடுகிறார்கள், நாராயணி கண்ணகி என்றொரு எழுத்தாள நண்பர் ஜோலார் பேட்டையில் வசிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் அவரை அங்கு சந்தித்தபோது ஒரு தோப்பில் உட்கார்ந்து உரையாடினோம். அப்போது அங்கு காணப்பட்ட ஒரு உடல் நீளமும் நல்லச் செழிப்பும் கொண்ட நாயுடன் அவர் பழகிய போது அவர் இதே விசயங்களைக்குறிப்பிட்டது ஞாபகம் வந்தது தோற்றத்தில் உருவமைப்பில் இருக்கும் இத்தன்மைகளை மீறி அதன் குணங்களும் மனிதர்களுள் அமைந்து விடுகின்றன.நாய் நன்றியுள்ளது. குரங்கு சேஷ்டை செய்யும் என்பது போல் . பல வகை உயிரினங்கள் அதிகமாக ஒவ்வோர் இடத்திலும் அமைந்திருப்பது அப்படி உருவாக்கப்படுகிறது பிற உயிரினங்களிடம் இருந்த பிரித்து தனித் உள்ளதால் தான். ஏற்ற தாழ்வுகளுடன் அங்கு வாழும் உயிரினங்கள் பிற இடங்களுடன் கலந்துவிடாமல் தடுக்கப்படுகின்றன. விலங்குகள் இடம் பெயர்வது நூற்றாண்டு கணக்கில் இல்லாமல் குறைந்த கால நாட்களிலேயே ஏற்படுகின்றது. மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படும் சொந்த இடம் அல்லாத வேறு இடத்துச்சிற்றினங்களால் உயிரியல் பல்வகைமைக்கு ஆபத்து எற்படும். இத்தகைய சூழலில் அங்குள்ள மண் சார்ந்த ரகங்களின் வாழிடத்தை வைத்து குறைத்தும் மதிப்பிடுகின்றனர்.இதிலும் மாறுபட்டுத்தனியாக நிற்கின்றன. இப்பூவுலகில் வாழும் வாய்ப்புஅனைத்து உயிரினங்களும் உண்டு.. அவைகள் அதற்குறிய இயல்புகளைச்சார்ந்த அமைப்பு முறைகளிலேயே வாழும். இவ்வாறான இயல்புகளை முன்வைத்தே அவைகள் அடையாளமும் சொல்லப்படும் உணர்வால் -வார்த்தையால் - செயலால் - பரிமாற்றங்களால் பிறருக்கு தீங்கை ஏற்படுத்தாத நிலையையும் கடந்து பிறருக்கு மதிப்பையும் மகிழ்வையும் பலனையும் வெளிப்படுத்தும் பரிமாற்றங்கள் அனைத்தும் நற்பண்புகளாகவே கருதப்பட்டு. இந்நற்பண்புகள் தன் நிலையில் பல படித்தரங்களை உடையவைகளாக அமையப்பெறுகிற போது அவற்றில் பண்பேற்றமும் ஊடாடி நிற்கிறது ஊர்வனவற்றில்பலவை சார்ந்த பொதுக்கருத்தாங்கள் தவறாகவே அமைந்து விடுகிறன்றன. பாம்புக்காது என்று சொல்கிறோம். ஆனால் பாம்பிற்கு காது இல்லை என்பது அதன் உடலமைப்பினை நன்கு புரிந்து கொண்டவர்கள் சொல்கிறார்கள். முதலைக்கண்ணீர் விடுகிறான் என்கிறோம். ஆனால் முதலைகள் அழுவதில்லை உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை வெளியேற்றுவதை அப்படிச் சொல்கிறோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள் பலகுழந்தைகள் சார்ந்தத் திரைப்படங்களில் இடம்பெறும் கரடிகளும் கரடி பொம்மைகளும் குழந்தைகளுக்கு வெகு நெருக்கமாக அமைந்து விடும் பாண்டா கரடியை முன்வைத்து பல கேலிச்சித்திரப்படங்களும் முழுத்திரைப்படங்களும் வந்திருக்கின்றன். அவை சாதாரணமாக குழந்தைகள்கீழே உட்கார்ந்து சாப்பிடுவதைப்போலச் சாப்பிடும் . கைகளை பயன்படுத்திக்கொள்ளுவதைப்போல் கால்களையும் பயன்படுத்தி எல்லாக்காரியங்களையும் செய்யும். அவற்றோடு குழந்தைகள் வீரதீரச்செயல்களில் ஈடுபடுவதை பலத்திரைப்படங்களில் கண்டிருக்கிறோம் .கொங்கு நாட்டில் ஆடு வளர்ப்பு என்பது ஏழை விவசாயப் பெண்கள், கணவனை இழந்தக் கைம்பெண்கள், விவசாயக்கூலிகள் ஆகியோருக்குப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்பதை மீறி உளவியல் ரீதியாக வளர்ப்புக்குழந்தைகள் போலவே இயைந்து இருப்பதைக்காணலாம்.காலத்திற்கும் சூழ்நிலைக்கும் பயன்தரும் இன ஆடுகளை விவசாயிகள் இனங்கண்டு வளர்ப்பதன் மூலம் நல்ல ஆதாயம் அடைய முடிவதால் அவை வெகு நெருக்கமாகிவிடுகின்றன மனிதப்பண்பேற்றமும் காணக்கிடைக்கிறது சிரிக்கும் தோற்றம் கொண்ட பிராணிகள் குழந்தைகளை வெகு இயல்பாக ஆகர்சிக்கும். சிரிக்கும் தொந்தி மனிதன் போன்று பல பிராணிகளின் பொம்மைகளில் இந்தச் சிரிப்புத்தோற்றத்தைக்காணலாம். இவ்வகையில் குழந்தைகளின் இயல்பில், தோற்றத்தில் அல்லது வளர்ந்த மனிதர்களின் இயல்பில், தோற்றத்தில் இருப்பவற்றுக்கு மனிதர்கள் மத்தியில் ஆதரவும் கிடைக்கிறது. சில பிராணிகள், விலங்குகளுக்கு மேற்கண்ட விபரங்களால் மனிதர்கள் மத்தியில் கரிசனம் கிடைப்பதும் மனிதப்பண்பேற்றமும் காணக்கிடைக்கிற போது மற்றவை புறக்கணிக்கப்படுவதும் எல்லா உயிர்களும் சமமானவை என்ற கருத்தாக்கத்தை உடைத்தெறிவதும் சூழலியலில் மிகையாக, வேற்றுமைகளை அதிகப்படுத்துகிறது. மனிதன் வேற்றுமையில்லாமல் பார்க்கப்படவேண்டும் என்பதைப்போல் எல்லா உயிரினங்களும் வேற்றுமையில்லாமல் பார்க்கப்படுவதில்தான் உயர்ந்தத் தன்மை கிட்டுகிறது என்று சூழலியாளர்களும் உயிரினபன்மை சமநிலை குறித்துப்பேசுபவர்களும் கருதுகிறார்கள் காக்கை குருவி எங்கள் ஜாதி என்று கொண்டாடப்படுவதும் இதனால்தான்.
மியாவாக்கிக்காடுகளின் உருவாக்கம் என்பது பசுமைத்திட்டங்கள் என்ற பெயரில் பணம் பாழடிக்கிற முயற்சிகளா : சுப்ரபாரதிமணியன் ஆறு ஆண்டுகளில், 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வகையில் வனத்துக்குள் திருப்பூர் இயக்கப் பணிகள் மகிழ்ச்சி தருகிறது . எதிர்கால சந்ததியினர் வளமுடன் வாழ, 'ஒவ்வொருவரும் ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும்' என்பது, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் விருப்பம். அவரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் உருவாக்கப்பட்டது.'மரம் விவசாயிகளுக்கு சொந்தம்; சுத்தமான காற்று மக்களுக்கு சொந்தம்' என்ற கோஷத்துடன், 2015ல் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவங்கியது. ஆறு கட்டமாக, 551 இடங்களில், 2,282 ஏக்கர் பரப்பில் பசுமை வனம் உருவாக்கப்பட்டுள்ளன. ஆறு ஆண்டுகளில், 10 லட்சத்து, 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், தனியார் அமைப்பு, நேர்த்தியான திட்டமிடல் மூலம், 87 சதவீத கன்றுகளை மரமாக வளர்த்தெடுத்துள்ளது. திட்டப்பணிகள், கோவை, சித்தார்த் பவுண்டேஷன் அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட செயல்வடிவம், ஆவணமாக்கப்பட்டுள்ளது. :கொரோனா ஊரடங்கிலும், பசுமைப்பணி தடையின்றி தொடர்ந்தது. மாவட்டத்தின் பசுமை பரப்பை விஸ்தரிக்க, கொடையாளர் தாராளமாக வழங்கியதும், தன்னார்வலர் தன்னலம் பாராமல் களமாடியதுமே, இத்திட்டம் வெற்றிபெற காரணம்.'வெற்றி' அமைப்பின் பசுமை பாதையை பின்பற்றி, காங்கயம் துளிகள், வெள்ளகோவில் நிழல்கள், உடுமலை 'மலை உடுமலை', சேனாதிபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம், திருப்பூர் வேர்கள், 'டிரீம் 20' - பசுமை அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள், பசுமை வளர்க்க பயணித்துகொண்டிருக்கின்றன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 240 வகையான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சிறகடித்து பறக்கும், 65 வகை பட்டாம்பூச்சிகள், 41 வகை சிலந்திகள், 11 வகையான தட்டான் பூச்சிகளும், மரக்கன்று வளர்ந்த இடங்களில் காணப்படுகிறது. இத்திட்டத்தில் 240 வகையான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சிறகடித்து பறக்கும், 65 வகை பட்டாம்பூச்சிகள், 41 வகை சிலந்திகள், 11 வகையான தட்டான் பூச்சிகளும், மரக்கன்று வளர்ந்த இடங்களில் காணப்படுகிறது இவ்வகைக்குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் பார்க்க நேர்கிறது . மகிழ்ச்சியாக இருக்கிறது அதே சமயம் இவ்வகைப்பயிரிடல் முறையில் மியாவாக்கிக்காடுகளின் உருவாக்கம் என்பது உறுத்தலாகவே உள்ளது. பசுமைத்திட்டங்கள் என்ற பெயரில் பணம் பாழடிக்கிற முயற்சிகளா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி உள்ளனர். அந்த முறையில் சிறிய இடத்தில் அதிக மரக்கன்றுகளை நடுகிறார்கள். அதை அறிமுகப்படுத்தியவர் ஜப்பானைச் சேர்ந்த அகிரா மியாவாக்கி நகர்புறங்களில் காடு வளர்ப்பதற்கானத் திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியதால் அந்தப் பெயரில் வழங்கப்படுகிறது. சிறு பகுதியில் மட்டும் குளுமை கிடைக்கிறது .இயற்கைக் காடுகளைப்போல் அதிக பரப்பளவுக்கு பசுமையைப்பாதுகாக்க அவ்வகைக்காடுகள் பயன்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. குறுகிய காலத்தில் கிடைக்கும் நிதி உதவியைப்பயன்படுத்திக்கொள்ளவே இத்திட்டம் அமுல் செய்வதாகச் சொல்லப்படுகிறது . பத்து ஆண்டுகளுக்கு மேலாக இவற்றைக் கண்காணித்து வளர்த்தால் மட்டுமே பலன் இருக்கிறதாம். பசுமைப்புரட்சி முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது பசுமைச்சூழலைப்பாதுகாக்கத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் ரசாயனக்கலப்பிலான உரங்களால் இயற்கை சூழல் கெட்டு விட்டது . நுண்ணுயிர்கள் அழிந்து விட்டன. அதில் தமிழகம் போன்ற மாநிலங்களில் 133 தாவர இனங்கள் அழிந்து விட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. அவற்றைப்பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையை சுற்றுச்சூழல் சார்ந்தவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.. கடந்த 200க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சுமார் 100 தாவர இனங்கள் அழிந்து போயிருக்கின்றன. மரமஞ்சள், கொலமவு, முடக்கத்தான் போன்ற அரிய வகை மூலிகைகள் வேகமாக அழிந்து வருகின்றன. மூலிகள் மூலம் கிடைக்கும் மருந்துகள் அருகி வருகின்றன. ஆனால் வளர்ச்சித்திட்டங்களில் காடுகள் அழிப்பால் இவை அரிதாகும் சூழல் உருவாகியுள்ளது. பசுமை வழிச்சாலை என்ற பெயரில் சென்னை சேலம் எட்டு வழிச்சாலை, பெங்களூரு சென்னை மத்தியிலான் 300 கிமீ சாலை போன்றவை விவசாய நிலத்தையும் பசுமை வெளிகளையும் அழித்து விடும் என்ற அபாயம் விரிந்து கொண்டே இருக்கிறது . அதிக அளவிலானப் போக்கு வரத்துகள் , அதிக அளவு கரிய வாயுக்களின் வெளியிடல், புதியக் கட்டிட மைப்புகள், நீர்ப்போக்குவரத்தின் திசை மாறல் போன்றவை பசுமைதாவரங்களுக்கு சிரமங்களையேத் தரும் கொரானா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட பல சுற்றுச்சூழல் சட்டங்கள் புதிய நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் விரிவாக்கம் காரணமாக நாள்தோறும் சராசரியாக 300 ஏக்கர் பரப்பள்விலான காடுகள் அழிக்க்கப்படுகின்றன என்பது சாதாரணச் செய்தியாகிவிட்டது. மலைப்பகுதிகளில் எஸ்டேட்டுகள் அமைத்தல் , தொடர்வண்டிப்பாதைக்கான வழிகளை அமைத்தல் போன்றவை மூலம் மரபார்ந்த தாவரங்களும் செடிகளும் மரங்களூம் அழிகிற சூழல் எல்லாக்காலத்தையும் விட இப்போது அதிகமாகியிருக்கிறது . சோலைக்கடுகளின் அழிப்பும் மழைக்காடுகளின் அழிவுக்கு வழி வகுத்திருக்கிறது .இவற்றின் மாற்றுக்காக வளர்க்கப்படும் அயல்நாட்டு மரங்கள் சூறாவளிகளைத் தாக்குப்பிடிப்பதில்லை.வழக்கமான நம் நாட்டுத் தாவரங்களின் மண் பிடிப்பும், இறுக்கமும் காணாமல் போகிறது மரங்கள் அற்ற சூழல் பெரும் நகரங்களில் உருவாக்கப்பட்டு விட்டது. இதை விரிவு படுத்திக்கொண்டே போகிறார்கள். சுவாசிக்கவும் அருந்தவும் உண்ணவும் இயற்கை தரும் பொருட்களை நிராகரிக்கும் இன்றைய உலகினருக்கு இயந்திரங்கள் உருவாக்கும் செயற்கை உணவுகள் மனிதனின் ஆயுள் காலத்தை வெகுவாகக் குறைக்கும்
சுப்ரபாரதிமணியன் : கொரானாவும் காடுகளும் காட்டில் பறவைகள் இல்லாதபடி துரத்த பல முயற்சிகள். வேட்டையாடுவது, எக்கோ டூரிசம் என்று பல.அவை காட்டில் இருக்கவே விரும்பும் ‘‘காடைக்குக் கலக் கம்பைக் கொட்டினாலும் காடை காட்டைத்தான் நோக்கும்’’ பறவைகளைப் பிடித்துக் கொண்டு வந்து வீட்டில் கூண்டுகளில் அடைத்து வளர்க்க முடியாது. அவ்வாறு வளர்க்கப்படும் பறவைகள் வீட்டுச் சூழ்நிலைக்கேற்ப வாழ இயலாது. ஆனால் இன்று காடுகளில் வாழ்ந்து திரிந்த காடைகள் என்ற சிறுபறவைகளைப் பிடித்து வந்து அவற்றை உணவிற்காக வளர்க்கின்றார்கள். அவற்றைத் தீனிபோட்டு வளர்த்து, அவை வளர்ந்தவுடன் கொன்று உண்ணுகின்றார்கள். இக்காடைகளை மக்கள் கூண்டுக்குள் அடைத்தே வளர்க்கின்றனர். அக்கூண்டை அவர்கள் திறப்பது இல்லை. திறந்தால் அவை காட்டை நோக்கிப் பறந்துவிடும். இத்தகைய காரணத்தாலேயே கூண்டைத் திறவாது அவற்றை வளர்க்கின்றனர். இக்காடையை அதற்குப் பிடித்தமான உணவைப்போட்டு வளர்த்தாலும் அப்பறவையானது வளர்த்தவரை விரும்பாது. அது காட்டையே விரும்பிப் பறந்து போகும். வளரும்வரை இருந்துவிட்டுப் பின்னர் வளர்ந்தவுடன் அது காட்டை நோக்கிப் பறந்து சென்றுவிடும். அதுபோன்று மனிதர்களும்தான் பிறருடைய உதவி தேவையில்லை என்று தெரிந்தவுடன் தன்னை வளர்த்தவரையே தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிவிடுவர். இதைப் பழமொழி எடுத்துரைக்கின்றது. இயற்கை சார்ந்த அக்கறையை மனிதன் தூக்கி எறிந்து விட்டதால் இன்று கொரான சிக்கலில் வந்து நிற்கிறான். இயற்கையின் சமநிலை, பன்னுயிர் தன்மையை பாதித்ததால் இந்த சோகம். இதில் காடழிப்பும் ஒரு காரணம் உலகில் இன்று புவிவெப்பமடைதல், காலநிலை மாற்றம், கொரானா போன்ற பல்வேறு சூழல்பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக காடழிப்பு காணப்படுகின்றது. ஆக்சிசனின் அளவை அதிகரிப்பதில் காடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தாவரங்கள் ஒளித்தொகுப்பு நடவடிக்கைக்காக கார்பன் டை ஆக்சைடு வாயுவை உள்ளெடுத்து ஆக்சிசனை வெளிவிடுகின்றன. இதனால் வளிமண்டலத்தில் பல்வேறு விதத்தில் வெளியேறும் தாவரங்களால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றது. இன்றும் கூட தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மற்றும் பல்வேறு விதத்தில் வெளியெறும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வாயுவை உறிஞ்சிக் கொள்ளக்கூடிய விதத்தில் செயற்கை மரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மரங்கள் இயற்கையான தாவரங்களைப் போன்று உயிர்கலங்களை கொண்டிராவிட்டாலும் மரங்களின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இவை தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன - ஆவியுயிர்ப்புத் தொழிற்பாட்டின் மூலம் வளிமண்டலத்தில் நீராவியின் செறிவை அதிகரிக்கச் செய்வதுடன், உயர்ந்த காடுகள் காற்றுகளைத் தடுத்து மழைவீழ்ச்சியைக் கொடுக்கின்றன. • . பெரும்பாலான வளர்முக நாடுகளில் எரிபொருளாக விறகே பயன்படுத்தப்படுகின்றது. வீடுகளிற்குரிய கதவுகள், கூரைகள், தளவாடங்கள் செய்வதற்கும் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அரிய பல மருந்து வகைகளையும் காடுகளே கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. :- காற்றுக்களின் செல்வாக்கு பெரிதும் தாவரப் போர்வையற்ற பகுதிகளிலே மையம் கொள்பவை. உதாரணமாக பாலைவனப் பகுதிகளில் காற்றின் வேகம் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் அதிகமாகக் காணப்படும். இதற்குக் காரணம் அங்கு தடையாகத் தாவரப்போர்வை காணப்படாமையே ஆகும். ஆனால் தாவரப் போர்வை மிகுந்த பகுதிகளில் காற்றுக்களின் செல்வாக்கு அதாவது வேகம் கட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படும். அத்துடன் புயற்காற்றுக்கள் விருத்தி பெறுவதும் தாவரப் போர்வையினால் கட்டுப்படுத்தப்படுகின்றது. :- தாவரப்போர்வை மிக்க பிரதேசங்கள் உயிரினப் பல்வகைமையை அதிகளவில் கொண்டனவாக காணப்படுகின்றது. மிருகங்கள் முதல் ஊர்வன வரை ஒரு காட்டு சூழற்தொகுதியில் இனங் காணக் கூடியனவாக உள்ளன. விலங்குகள், பறவைகளின் புகலிடங்களாகக் காடுகள் காணப்படுகின்றன. பூமியின் நிலப்பரப்பில் மழைக்காடுகள் 7 சதவீதம் மாத்திரமே உள்ள போதிலும் உலகில் வாழும் உயிரினங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அங்கு காணப்படுகின்றது. காடுகள் மண்ணரிப்பு, மண்வரட்சி, மண்சரிவு போன்றவற்றை குறைவடையச் செய்கின்றது. தாவரங்கள் காணப்படுகின்ற பகுதிகளில் மழைபெய்கின்றபோது பூமியில் நீர்த்துளிகள் நேரடியாக விழாமல் பாதுகாக்கின்றதுடன், தாவரவேர்கள் மண்பகுதிகளைப் பற்றிப்பிடிப்பதனாலும் மண்ணரிப்பு நிகழ்வதனைக் குறைவடையச் செய்கின்றது. மேலும் நதிக்கரையோரங்களின் நிற்கும் தாவரங்களினால் நதியின் கரையோரம் அரிக்கப்படுவதனை தடுக்கின்ற ஒரு பாதுகாப்புச் சுவராகவும் இது காணப்படுகின்றது. அத்துடன் தாவரங்கள் நிலத்திற்கு போர்வையாக அமைகின்றமையால் பெருமளவில் நீர் ஆவியாவதைத் தடுப்பபதுடன், மண்ணின் ஈரத்தன்மையினையும் பாதுகாக்கின்றது. இதனால் மண் வறட்சியடைதல் குறைவடைகின்றது. தாவரங்கள் மலைச்சரிவுகளில் காணப்படுகின்றபோது நிலச்சரிவை குறைப்பதிலும் பங்காற்றுகின்றது. • தரைக்கீழ் நீரைப் பாதுகாத்தல், • வெள்ளப்பெருக்கைக் குறைத்தல் , போன்றவையும் முக்கியம் உலகின் சனத்தொகை இன்று10 பில்லியனாக அதிகரித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப வளங்களின் நுகர்விலும் அதிகரிப்பு காணப்படுகின்றது. மனித தேவைகள் அதிகரிப்பினால் உறைவிடங்களை அமைத்துக் கொள்வதற்கான நிலத்திற்குரிய தேவையினால் காட்டுநிலப்பரப்புக்கள் அழிக்கப்பட்டு குடியிருப்பு நிலங்களாக மாற்றப்படுகின்றன. குடியிருப்புக்கள் மாத்திரமன்றி அவற்றுக்குரிய போக்குவரத்துப் பாதைகளை அமைப்பதற்காகவும் காடுகளை ஊடறுத்துச் செல்லக்கூடிய வீதிகள் அமைக்கப்படுகின்றபோது அருகாமையிலுள்ள காட்டு நிலப்பரப்புக்கள் அழிக்கப்படுகின்றன. :- உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவையும் வர்த்தக விருத்தியும் ஏற்பட்ட காரணத்தினால் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பெருமளவில் அதிக நிலப்பரப்பில் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. உதாரணமாக ஆரம்ப காலங்களில் இயற்கையாகவே காணப்பட்ட காடுகளிலிருந்து இறப்பர் பால் எடுக்கப்பட்டது. பின்னர் தேவை அதிகரிப்பு ஏற்பட்டதனால் இறப்பரை பெருந்தோட்டங்களில் பயிரிடுவதற்கு முடிவெடுத்தனர். இதனால் பெருமளவில் காட்டுநிலப்பரப்புக்கள் அழிவடைவதற்கு இது வழிஏற்படுத்தியது. இறப்பர் மாத்திரமன்றி தேயிலை, கோப்பி, எண்ணெய்த்தாவரங்கள் முதலியவற்றினால் காட்டு நிலப்பரப்புக்கள் குறைவடைகின்றன. உதாரணமாக இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் எண்ணெய்த்தாவரங்கள் பண்ணப்படுவதற்காக பெருமளவு அயனக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்நாடுகள் உலகின் பாம் ஆயில் வினியோகத்தில் 80 சதவீதத்திலும் அதிகமாகக் காணப்படுகின்றது. இலங்கையில் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நிலங்களை உருவாக்கிக் கொள்வதற்காக காடு மற்றும் பற்றைக்காடுகளைக் கொண்ட பகுதிகள் அழிக்கப்பட்டு பெறப்படுகின்றன. • வெட்டுமர வர்த்தக வளர்ச்சி:- மரப்பலகைகள், மரக்குற்றிகள், மரக்கூழ், கடதாசிகள் போன்ற காட்டு உற்பத்திகளின் அளவு அதிகரித்துவருவதனால் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பெருமளவில் வைரமான மரங்களான, தேக்கு முதலியவை பலகைகள், தளவாடங்கள் போன்றவற்றுக்காக அரியப்படுகின்றன. வெட்டுமர உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பிரான்ஸ், கொங்கோ, கானா ஆகிய நாடுகள் வகிக்கினறன. ஆனால் ஸ்புறுச், பேர்ச், அஸ்பென், மஞ்சள் பைன் போற் மரங்கள் காகிதக்கூழ் உற்பத்திக்காக பெருமளவில் அழிக்கப்படுகின்றன. பிறேசிலில் வெட்டுமர உற்பத்திக்காக 10000 சதுரகிலோமீற்றர் பரப்பளவு பகுதி காடழிக்கப்பட்டுள்ளது. • காட்டுத்தீ:- இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ ஏற்படுகின்ற காட்டுத்தீயினாலும் காடுகள் அழிவுக்குள்ளாக்கப்படுகின்றன. சூரிய வெப்பம், காற்று என்பவற்றின் சக்தி, மரங்களின் உராய்வு என்பன காட்டுத்தீ ஏற்பட துணை புரிகின்றன. காட்டுத்தீ ஏற்படுவதற்குரிய சூழ்நிலையை பிரதேசத்தில் ஏற்படும் வறட்சி ஏற்படுத்துகின்றது.. • கனிப்பொருள் அகழ்வு நடவடிக்கைகள், • போக்குவரத்துப் பாதைகள் அமைப்பும் பெரும் பாதிப்பை உண்டு • நகரின் பரப்பளவு விஸ்தரிக்கப்படுகின்றமையை பொதுவாக நகராக்கம், விலங்குகளை வளர்த்து அவற்றிலிருந்து பால், இறைச்சி, கம்பளி மயிர்கள் என்பன கால்நடைப் பண்ணைகளோ அல்லது பாற்பண்ணைகளோ பெருமளவு நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு விவசாய நடவடிக்கையாகும். இன்று உலக உணவுத்தேவையில பால் உற்பத்திப் பொருட்களுக்கும், அதே போன்று பெரும்பாலான மேலைத்தேய நாடுகளில் இறைச்சிகளுக்கும் பெருமள்வில் கிராக்கி காணப்படுகின்றது. இதனால் உற்பத்தியாளர்கள் தமது பண்ணை நிலங்களின் பரப்பளவுகளை அதிகரித்துக் கொள்வதற்காக மேலதிகமாக காடுகள் காணப்படுகின்ற பகுதிகளை வெட்டி அழித்து அவற்றை தமது பண்ணை நிலங்களாக மாற்றுகின்றனர். கிராமிய மக்கள் வறுமை காரணமாக விறகுளை எடுத்தல், இலாபமீட்டும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் மரம் எடுத்தல் போன்றவற்றாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன. மிகவும் வறுமையான நாடுகளில் வாழுகின்ற மக்கள் தமது வயிற்றுப்பிழைப்புக்காக சட்டவிரோதமான முறையில் காடுகளை வெட்டி விறகாக விற்கின்றனர். கென்யா, கொங்கோ போன்ற நாடுகளில் வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானோர் விறகுத் தேவைகளுக்காக காடுகளை அழிக்கின்றனர். • மழைவீழ்ச்சி குறைவடைதல் , • மண்ணரிப்பு ஏற்படுதல், • புவிவெப்பமடைதல்,• மண்ணின் ஈரத்தன்மை குறைவடைதல். • காற்றின் வேகம் அதிகரித்தல் ஆகியவையும் சிரமம் தருகின்றன . இவை பன்னுயிர் சமநிலையை பாதித்து கொரானா போன்ற கிருமிகளின் தாக்கத்திற்க்கும் பரவலுக்கும் காரணங்களாகி விட்டன கொரானாவைக்குற்றம் சொல்லிப்பயனில்லை காடுகளை அழிப்பதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது நம் மூச்சை நிறுத்தி விடும்
ஸ்னோலினும், சுகுதகுமாரியும் சுப்ரபாரதிமணியன் : ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பைத் தந்து தார்மீகக் கடமையை நிறைவேற்றிய ஸ்டாலின் அவர்களின் ஆட்சியின் முதல் வார நடவடிக்கையில் ஒன்றாய் அமைந்தது .அது சுற்றுச்சூழல் சார்ந்தவர்களுக்கு ஆறுதல் தந்த செய்தியாக அமைந்தது . தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த நூறாவது நாள் போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார் 18 வயது ஸ்னோலின்.. வழக்கறிஞராக வேண்டும் என்ற உறுதியடன் இருந்தவர் ஸ்னோலின். துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் கோரமாக வாயில் சுடப்பட்டு இறந்தார் . போராட்ட்த்தில் இறந்த 13 நபர்களில் இளவயது நபர் “ இனி என் மகளுக்கு கல்யாணமா நடத்தப்போறேன். முதல் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எல்லோரையும் அழைச்சிருக்கேன். எத்தனையோ மக்கள் என் மகளுக்காக கண்ணீர் விட்டாங்க. எளிமையாக சர்ச்சில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு எல்லோரும் வரணும். அரசு அதிகாரிங்க, போலீஸ்காரங்களையும் அழைச்சிருக்கேன். அவுங்கள மன்னிச்சிட்டேன். அன்பு மட்டும்தான் நிஜம்னு என்னோட ஸ்னோலின் சொல்லுவா. அவளுக்காக, அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிறேன்,'' என கண்ணீருடன் அழைப்பிதழை தந்திருந்தார் வனிதா. ” அவளது தியாகத்தை பற்றி என்னிடம் கேட்கிறார்கள். இந்த வாழ்க்கை எனக்கு புதிது. உலகம் முழுவதும் பல சொந்தங்களை எனக்கு என் மகள் அள்ளித்தந்துவிட்டு போய்விட்டாள்,''என்கிறார் தாய் வனிதா. சுற்றுச்சூழல் போராட்டங்களுக்கு முன்னோடியாக இருந்த எழுத்தாளர் சுகுதகுமாரி அவர்களின் கொரானா கால்மரணம் குறித்த செய்தியோடு ஸ்னோலின் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளலாம். காரணம் சுகுதகுமாரியின் சுற்றுச்சூழல் போராட்ட இயக்கம் இவ்வகையில் முன்னோடியாக இருந்தது என்பது முக்கியமானது. சூழல் நீதி என்றக் கோட்பாடு சமூகத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சூழலியல் செயல்பாடுகளில் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வதற்கான முயற்சியாக அது அமைந்தது. சூழல் உரிமைக்குரல்களின் அடிப்படையில் அது அமைந்தசாதாரண மக்களின் வாழ்விடங்களில் நச்சுக்கழிவுகளுக்கான களங்களாக மாறியதை தூத்துக்குடி காட்டியது. இதே போல் ஒரு ஆரம்ப நடவடிக்கையே முளையில்கிள்ளி எறியப்பட்ட்து சுகுதகுமாரி போன்ற எழுத்தாளர்களின் சூழல் இயக்க நடவடிக்கைகளால். கோடாரி வெட்டு விழப்போகிறது . ஏற்கனவே தாமதமாகிவிட்டது என்று தொடர்ந்து முழங்கியவர் மலையாளக் கவிஞர், சூழியல் களப்போராளி, பெண்ணுரிமைப்போராளி,அபயா என்ற ஆதரவிழந்தோர் சேவை அமைப்பின் முன்னோடி (திக்கற்ற மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புகலிடம் தரும் அபயா என்றொரு அமைப்பு). எனப் பலமுகங்கள் கொண்ட சுகதகுமாரி எனக்கு அறிமுகமானதே அவர் நடத்திய அமைதிப்பள்ளத்தாக்குப் போராட்டம் மூலம்தான் அந்தப்போராட்டம் தொடங்கியபோது அவர் குறிப்பிட்ட வரிகள் “ கோடாரி வெட்டு விழப்போகிறது . ஏற்கனவே தாமதமாகிவிட்டது. “ 1970 இல் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் அணையொன்றை நிறுவுவதற்கு எதிராகத் தோன்றிய மக்கள் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர் கவிஞர் சுகதகுமாரி, உலகின் பல சூழற் போராட்ட அமைப்புகளில் இந்தியாவின் முதற் சூழல் செயற்பாட்டு இயக்கம் இதுவாகும். இயற்கை எழில் கொஞ்சும் இம் மலைப்பள்ளத்தாக்குப் பிரதேசம் அட்டப்படி அருகில் இருப்பதாகும் நீளவால்க் குரங்குகள் போன்ற பல வன விலங்குகள் இருக்குமிடமாகும்.. இந்தியாவின் முதல் சூழல் செயற்பாட்டு இயக்கம் அது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் அங்கு வறண்ட பூமியை வளமாக்கி கிருஷ்ணவனம் என்ற பெயரில் பூங்காவாக்கியவர். சூழலியல் அறிவியல் விசயங்களைப்பற்றி அரசியல்வாதிகள், அறிவியலாளர்கள் ஆகியோரைவிட எழுத்தாளர்கள் அக்கறை கொண்டு அவர்கள் மொழியில், உள்ளூர் மக்களிடம் மேம்பட்ட பரப்புரையை செய்ய வேண்டும் என்ற அவரின் கருத்துக்கள் என் சுற்றுச்சூழல் படைப்புகளுக்கு ஆதாரமாக இருந்தன. சுற்றுச்சூழலுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் சுகதகுமாரி. அதற்காக 'பிரக்ருதி சமரக்‌ஷனா' என்கிற அமைப்பையும் ஏற்படுத்தினார். அமைதிப் பள்ளத்தாக்கில் அணையொன்றை நிறுவுவதற்கு அரசு எடுத்த முயற்சிகளை இப்போராட்டங்கள் தடுத்து நிறுத்தி வெற்றி கண்டது..இதைத் தொடர்ந்து பூயம்குட்டி, ஜீரகப்பாறை, அச்சன்கோயில், பொன்முடி, மாவூர், விளாப்பில்சாலை போன்ற இடங்களில் சுற்றுச்சூழலுக்கு எதிராக சுகுதகுமாரியும் இந்த அமைப்பினரும் நடத்தியப் போராட்டங்கள் வெற்றி கண்டன. ஆரம்பத்தில் பெண் உணர்வுகளைப்பற்றி அதிகம் எழுத ஆரம்பித்தார். 'முத்துச்சிப்பிகள்', 'பத்திரப்பூக்கள்', 'கிருஷ்ண கவிதைகள்', 'ஸ்வப்னபூமி' என்று இவருடைய சில கவிதைத் தொகுப்புகள் 'கேரள சாகித்ய அகாடமி விருது', 'கேந்திர சாகித்ய அகாடமி விருது', 'ஒடக்குழல் விருது', 'எழுத்தச்சன் விருது' பெற்றவர்..சுற்றுச்சூழலுக்காகப் இவருக்குக் கிடைத்த விருதுகளும் ஏராளம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களையும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு குடும்பத்தால் கைவிடப்பட்ட பெண்களையும் பாதுகாக்க ஏற்படுத்திய 'அபயா' என்ற அமைப்பின் அலுவலகத்தில் ஒருமுறை அவரைப்பார்த்தேன். அந்த அலுவலகத்தில் நண்பர் வனமாலிகை பணி புரிந்து வந்தார். அவரிடம் அவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தபோது அவர் வீட்டிற்குக்கிளம்பும் நேரம் ஆகிவிட்டது. இன்னொருமுறை சந்திக்கலாம் என்றார். அப்போது மதியம் சாப்பாட்டு நேரம் . அப்போது இயலவில்லை. இன்னொரு முறை நண்பர் வனமாலிகையைச் சந்திக்க அபயா அலுவலகம் சென்றபோது சந்தித்து அறிமுகப்படுத்தினேன். அப்போது நண்பர் வனமாலிகை உடல் நலக்குறைவால் அலுவலகம் வராமல் இருந்தார்,என் நாவல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் தகவலையும் அதில் என் சாயத்திரை ( சாயம்புரண்ட திர என்ற தலைப்பில் சிந்தா பதிப்பகம் வெளியிட்டிருப்பதைச் சொன்னபோது மகிழ்ந்தார். சுற்றுச்சூழல் சார்ந்த நாவல் என்பதைச் சொல்லி விளக்கினேன். மகிச்சியடைந்தார். ________________________________________ மலையாளத்தின் புதியகவிதை இயக்கத்தின் பெண்குரல் சுகதகுமாரி. 1962ல் வெளிவந்த புதுமுளகள் [புதியகுருத்துகள்] என்னும் நவீனக்கவிதை தொகுதியில் இடம்பெற்ற அன்றைய புதியகவிஞர்களில் சுகதகுமாரி மட்டுமே பெண். பின்னர் கவிஞராக . . பெரும்புகழ்பெற்றார்.என் கனவு இதழின் சார்பாக தற்கால மலையாளக்கவிதைகள் குறித்து ஒரு சிறப்பிதழைக் கொண்டுவந்தேன். ஜெயமோகன் மலையாளக்கவிதைகளைத் தேர்வு செய்தும் மொழிபெயர்ப்பு செய்தும் உதவினார். தாயாரித்தார். பின்னர் கனவு, காவ்யா ஆகியவை அதைத் தனியாக நூலாக வெளியிட்டன கேரள மக்களால் 'சுகந்தா டீச்சர்' என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட கவிஞர் சுகதகுமாரி எழுத்தாளர் மத்தியில் சுற்றுச்சூழல் போராளி என்ற ஒளிவட்டத்துடனே திகழ்ந்தார். 86 வயதான அவருக்கு நிமோனியா பிரச்னை தீவிரமாக இருந்ததால், வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வந்தனர். உடன் கொரோனா பாதிப்பும் . மரத்தினு ஸ்துதி எந்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை போராட்ட ஆர்ப்பாட்டங்களின்போது பிரபலமாக மக்களிடம் சென்றடைந்தது. அவரின் இந்தக்கீழ்க்கண்ட பாடல் பிரசித்தி பெற்றது 1 இரவுமழை வெறுமே விம்மியும் சிரித்தும் விசும்பியும் நிறுத்தாமல் முணுமுணுத்தும் நீள்கூந்தல் சுழற்றியும் குனிந்து அமர்ந்திருக்கும் இளம் பித்தியைப்போல இரவுமழை மெல்ல இந்த மருத்துவமனைக்குள் ஒரு நீண்ட விம்மலென பெருகிவந்து சாளரவிரிசலின் வழியாக குளிர்ந்த கைவிரல் நீட்டி என்னை தொடும் கரிய இரவின் துயர் நிறைந்த மகள் இரவுமழை நோவின் முனகல்கள் அதிர்வுகள் கூரிய ஓசைகள். திடீரென்று ஓர் அன்னையின் அலறல். நடுங்கி செவிகளை மூடி நோய்ப்படுக்கையில் உருண்டு நான் விசும்பும்போது இந்த பேரிருளினூடாக ஆறுதல் வார்த்தைகளுடன் வந்தணையும் பிரியத்திற்குரிய எவரோ போல. யாரோ சொன்னார்கள் வெட்டி அகற்றலாம் சீர்கெட்ட ஓர் உறுப்பை. சீர்கெட்ட இந்த பாவம் நெஞ்சத்தை என்ன செய்ய? இரவுமழை முன்பு என் இனிய இரவுகளில் என்னை சிரிக்கவைத்த மெய்சிலிர்க்கவைத்த வெண்ணிலவைவிட அன்பை அளித்து உறங்கவைத்த அன்றைய காதல்சாட்சி இரவுமழை இன்று என் நோய்ப்படுக்கையில் துயிலற்ற இரவுகளில் இருளில் தனிமையில் அழவும் மறந்து நான் உழலும்போது சிலையென உறையும்போது உடனிருக்கும் துயரம்நிறைந்த சாட்சி இரவுமழை! இரவுமழையிடம் நான் சொல்லிக்கொள்கிறேன் உன் துயரத்தின் இசையை நான் அறிகிறேன் உன் கருணையும் அடக்கிக்கொண்ட சீற்றமும் இருளில் உன் வருகையும் தனிமையின் விம்மல்களும் விடியும்போது முகம்துடைத்து திரும்பிச்செல்லும் உன் அவசரமும் ரகசியப்புன்னகையும் பாவனைகளும் எனக்குத்தெரியும் எப்படி அறிகிறேன் என்கிறாயா தோழி நானும் உன்னைப்போலத்தான். இரவுமழைபோலத்தான். * ஸ்னோலின் எழுப்பிய முழக்கமும் பாடலும் இதேத் தொனியில்தான் அமைந்திருந்தது. சூழல் நீதி என்றக் கோட்பாடு சமூகத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சூழலியல் செயல்பாடுகளில் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வதற்கான முயற்சியாக அது அமைந்திருந்தது