சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 31 மே, 2021

உடுமலை வரலாறு : : சுப்ரபாரதிமணியன் ” ஊரை நினைத்தாரை ஊர் இனிக்கும் “என்பார்கள் அப்படி தனது சொந்த ஊரை பற்றி மிகுந்த சிரமங்கள் உடன் வரலாற்று ஆய்வு மைய உடுமலை நண்பர்கள் இந்த நூலை சிறப்பாக தயாரித்திருக்கிறார்கள் இந்த வரலாற்று நூல் அமைய காரணமாக பல ஆளுமைகள் இருந்தாலும் இந்த சூழல் உருவாக காரணமாக இருந்த பல முக்கிய நபர்கள் பற்றிய அறிமுகங்கள் கூட சிறப்பாகவே செய்யப்பட்டிருக்கின்றன . திவான்பகதூர் ரசாக்காபாத், பெண் கல்வி தந்திட்ட கோவிந்தசாமி, சாதி சமய நல்லிணக்கத்தை போற்றி பாதுகாத்த சோழிய கவுண்டர், சமூக சேவையில் அக்கறை கொண்டு உடுமலையை வளர்த்த காமாட்சி கவுண்டர் ,பழனி கவுண்டர் குடும்பத்தினர் ,.அந்த நகருக்கு தண்ணீர் தந்து தாகம் தீர்த்த வித்யாசாகர் , பல்வேறு கலாச்சார நடவடிக்கைகள் மூலமாக உடுமலை நகரத்துக்கு ஒரு புதிய முகத்தை ஏற்படுத்திய கெங்குசாமி நாயுடு போன்றவர்கள் இதை எழுதுவதற்கான வித்தாக இருந்திருக்கிறார்கள். உடுமலை வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக இருந்த மறைந்த பேரா.இந்தரஜித் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி உடுமலைப்பேட்டை நூறு ஆண்டு நகராட்சி அளவில் முழுமை பெற்றது ஒட்டி கொண்டுவரப்பட்டது என்று கூட சொல்லலாம். .உடுமலை நகரத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட பல உள்ளங்கள் இந்த தொகுப்பு முழுக்க நினைவு கூறப்படுகிறார்கள். இந்த அமைப்பினர் முன்பே உடுமலைப்பேட்டை நகராட்சி நூறு ஆண்டுகள் ஆனதை ஒட்டி “ உடுமலை 100 “என்ற நூலை கொண்டு வந்திருக்கிறார்கள். பல்வேறு கலை இலக்கிய கலாச்சார நடவடிக்கைகளில் இறங்கி தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கிறார்கள். .பல கலை இலக்கியவாதிகளை அவர்கள் அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு நவீன இலக்கியவாதிகள் சிலரும் நாம் குறிப்பிடலாம்.. உடுமலை நகராட்சி வரிவிதிப்பு செய்து அதை அரசுக்கு செலுத்தி வளர்த்து உடுமலைப்பேட்டை என்ற சிற்றூரை நகராட்சி அங்கீகாரம் செய்த மனிதர்கள் பலர் அவர்கள் உழைப்பில் நகரம் வளமை பெற்றிருப்பது போலவே ஆன்மீக செயல்கள் சமூக சேவை மூலம் பலர் இந்த நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள் அந் நகரத்தில் இருக்கும் பல சிலைகளை பார்க்கிற போதெல்லாம் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள மனம் ஆவலாய் தேடும். அப்படித்தான் இங்கு உள்ள பழைய சேர்மன் கனகராசன் போன்றோர் பற்றிய தகவல்கள் மிக முக்கியமாக சிலைவடிவில் மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலும் உருவாகியுள்ளன. அதேபோல் சாய்ந்த தொல்பொருள் ஆய்வுகள் சார்ந்த பல்வேறு விஷயங்களை தொகுத்துக் கொடுத்து உடுமலை நகரம் பழமையான தொல்பொருள் பொருட்களின் கிடங்காக இருப்பதை காட்டுகிறார்கள் யாரும் இந்த பணியை செய்ய முன்வராததால் நான் என் தோளில் போட்டு செய்கிறேன் என்று தந்தை பெரியார் ஒவ்வொரு பணியும் தானே எடுத்துக் கொண்டு செய்தது போல இந்த வரலாற்றை உருவாக்குவதில் அருள் செல்வன் உட்பட பல உடுமலை வரலாற்று மையம் சார்ந்த பலர் ஈடுபட்டிருந்தார்கள் சரபம் முத்துசாமிக் கவிராயர் ,உடுமலை நாராயணகவி, பெரும்புலவர் நயினார் முகமது போன்ற எழுத்துலக சிற்பிகள் வாழ்ந்த ஊரை அவரைப் பற்றி நல்ல அறிமுகம் கிடைக்கிறது ஆனால் நவீன இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் இல்லாமல் இருப்பது பெரிய பலவீனமாக இருக்கிறது மைக்ரோ ஹிஸ்டரி எனப்படும் நுணுக்கமான வரலாற்றை எழுதுவது ஒவ்வொரு நகரத்திலுள்ள எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முக்கியமான பணியாக மாறி இருக்கிறது அந்தப் பணியின் அடையாளம்தான் இந்த நூல் . கரிசல்மண் விளைச்சலுக்கு ஏற்றதாகவும் வியாபாரத்திற்கு ஏற்றதாகவும் இருந்ததால் நூற்றுக்கு மேற்பட்ட பஞ்சாலைகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருந்து வந்த செய்திகளை பார்க்கும்போது திருப்பூர் பின்னலாடை துறையின் வளர்ச்சிக்கு உடுமலை பெரும்பங்காற்றி இருப்பது தெரிகிறது தன் பெருமை நினைக்காமல் தான் வாழும் மண்ணின் பெருமையை காக்கும் உள்ளங்களை இந்த வரலாற்று மையம் அடையாளம் காட்டும் முக்கிய அம்சமாக இந்நூல் இருக்கிறது. அந்த வகையில் இதில் விடுபடும் உள்ள நவீன இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் மற்றும் சில சரித்திர பூர்வமான செய்திகளை சேர்த்து அடுத்த பதிப்பு கொண்டுவரும் என்று நம்பலாம் மணிமேகலைப் பிரசுரம் சென்னை இதை வெளியிட்டிருக்கிறது பிரதிகளை வரலாற்று ஆய்வு நடுவம் உடுமலைப்பேட்டை அமைப்பில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம் ( Rs 500 ..வரலாற்று ஆய்வு மையம், உடுமலைபேட்டை 98420 91244 ) --சுப்ரபாரதிமணியன்