சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

திங்கள், 31 மே, 2021

காலடித்தடங்கள் நதித்தடத்தில் சில கூரிய கற்கள் “ - சுப்ரபாரதிமணியன் காலடித்தடங்கள் : நாமக்கல் நாதன் காலடித்தடங்கள் என்ற தலைப்பில் நாமக்கல் நாதன் அவர்கள் தன் வாழ்க்கையின் சில பகுதிகளை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே என்பது இந்த மண்ணின் மரபு ..அதனால் எழுத்தாளர்கள் தங்களை அறிமுகப் படுத்தும் விதமாய் பதிவுகளை நூல்களில் கொண்டிருக்கலாம் என்பது தேவையாகத்தான் இருக்கிறது .அந்த வகையில்தான் நாமக்கல் நாதன் அவர்களும் தன் வாழ்க்கையில் சின்ன வயதில் ஏற்பட்ட அனுபவம் தழும்புகளை, படிப்பினைகளை ,வாழ்க்கையின் சிரமங்களை சுருக்கமாக இந்த நூலில் கொண்டு வந்திருக்கிறார் , கடுகளவு கவலை என்றால் கண்ணீர் குணமாகிறது கண்கள் ,அதுவே மழை அளவு வந்தால் மனம் கூட மறந்து விடுகிறது என்ற கண்ணதாசன் வரிகளை ஓரிடத்தில் சுட்டிக்காட்டுகிறார் ,அப்படித்தான் மழையளவு சிரமங்கள் என்னுடைய வாழ்க்கையில் வந்து இருக்கிறது, அதனால் மனம் மரத்துப் போய்விட்டது என்கிறார் ,அந்த அனுபவங்களை எல்லாம் மிகவும் வெளிப்படையாக சொல்கிறார் .இவ்வகை அனுபவங்கள் இன்றைய தலைமுறையில் உள்ள எழுத்தாளனுக்கு வாய்க்காது ஆனால் நாமக்கல் நாதன் வாழ்க்கையில் அந்த கால சூழல் அப்படி அமைந்துவிட்டன அதை தவிர்க்க முடியாது .தன் தந்தை பற்றியும் தன் திருமணம் பற்றியும் தன்னுடைய உறவுகள் பற்றியும் பலவற்றை இதில் பதிவு செய்துகொண்டிருக்கிறார் பெரும்பாலும் இலக்கிய நண்பர்கள் பற்றியெல்லாம் அதிகமாகவே சொல்லியிருக்கிறார் என்று கூட சொல்லலாம் .இந்த நூலில் இவ்வகை அனுபவங்கள் மட்டுமில்லாமல் நாமக்கல் நாதனுடைய பல நூல்களைப் பற்றி பல எழுத்தாளர்கள் எழுதியக் கட்டுரைகள் ,அவர்கள் எழுதிய கடிதங்கள் இணைத்திருக்கிறார் .அது இவரைப்பற்றி புது வாசகன் சரியாக அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. அதே போல இந்த நூலில் இடம் பெற்ற நேர்காணல்கள் அவனுடைய இன்னொரு முகத்தை சரியாகக் காட்டுகின்றன. திராவிட சார்பாக இருந்தது இலக்கியத் துறைச் சார்ந்தவர்கள் அவரோடு நட்பு கொண்டிருந்தது போன்றவைதான் இவருடைய இலக்கிய வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கிறது. ஒரு சிறந்த படைப்பாளி நல்ல வாசிப்பவனாக இருத்தல் வேண்டும் என்பதை தொடர்ந்து நேர்காணல்களில் அவர் வலியுறுத்தி இருக்கிறார் மரபுக் கவிஞர் என்ற வகையில் தொடர்ந்து அவ்வகையிலேயே பயணித்திருக்கிறார் நம் முன்னோர்கள் விட்டுச் சென்றிருக்கிறர் தொல் மரபுகளை பொன்னேபோல் போற்றி வருபவன் அதற்காக மரபுக்கு மனம் வைத்தான் அது ஏதுவாக இருந்தது அது மூச்சுக்காற்று .புதுக்கவிதை மோகம் வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது .அது முதுகை தடவிச் செல்லும் சாதாரண காற்று என்கிறார் . சமூகத்தில் இவருடைய என் ஆசான் சுரதா என்ற நூலில் கூட இலக்கிய நண்பர்கள் பற்றி விரிவான அனுபவங்களை அளித்திருக்கிறார் பூமிக்குள்ளே வேறு ஒன்றாமல் எந்த தாவரமும் புதுவசந்தம் பரப்பியது இல்லை. தமிழன் மட்டும்தான் அற்ப சந்தோஷம் மட்டும் அடிமையாகி போனான் .உணவு உடை உணர்வுகள் யாவும் ஆங்கில கலாச்சாரத்தின் கூறுகளாகிவிட்டன. மொழிதான் ஒரு இனத்தின் முதல் அடையாளம் .அந்த இனத்தின் கலாச்சார மரபுகளை அடுத்து அடையாளங்கள் இவை இரண்டும் இழந்த பிறகு அந்த இனம் தனது நாட்டை கூட தக்கவைத்துக் கொள்ள இயலாது .இதில் எச்சரிக்கை இல்லாத தமிழகம் ஒரு நாளும் மேம்பட போவதில்லை அறிவு சார்ந்த உறவுகள், உணர்வுகள் வளர்ந்தால் மட்டும் போதா, பண்பு சார்ந்த கல்விதான் மிக அவசியமாகத் தேவை என்று அவர் குறிப்பிட்டார் ஒரு நேர்காணலில் . அதுதான் அவருடைய இன்றைய செய்தியாக இருக்கிறது .தன் வாழ்க்கையின் செய்திகளை ஒரு நூலில் திறம்பட எழுதி இருக்கிறார் நாமக்கல் நாதன் ஒவ்வொரு படைப்பாளியும் தன் அனுபவங்களை இந்த வகையில் எழுதி பதிவு செய்ய வேண்டும் என்பதுகூட அவசியம் .