சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 31 மே, 2021
சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் - “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு
எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் ( 044 28270 937 ). . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக எழுத்தாளர் இலக்கியா நடராஜன் விளங்கி வருகிறார்.
ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு எழுத்து இலக்கிய அறக்கட்டளை ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி வருகிறது
பெரும் நகரங்களுக்கு வேலைகாரணமாக இடம் பெயர்ந்து வாழும் வடமாநிலத்தொழிலாளர்களின் வாழ்வியலின் ஒரு பகுதியாய் ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்ட இந்த நாவல் 2020 ஆம் ஆண்டுக்கான எழுத்து இலக்கிய அறக்கட்டளை - திருமதி சௌந்திரா கைலாசம் இலக்கியப்பரிசு பெற்ற நாவல் ( வெளியீடு : எழுத்து & கவிதா, சென்னை ரூ 250 )
செய்தி: மதுராந்தகன் ,( கனவு இலக்கிய வட்டத்திற்காக )
மதுராந்தகன் 77089 89639
முகவரி 8/.33 94 பாண்டியன் நகர் வடக்கு
தாய்த்தமிழ்ப் பள்ளி அருகில் திருப்பூர் 641 602