சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 31 மே, 2021
சுப்ரபாரதிமணியன்
சுற்றுச்சூழல் கவிதை : இடம்
இந்த இடம் பிறரின் வருகைக்கென்றிருப்பது
தடை செய்யப்படலாம்.
தடை செய்யப்படுவதற்கு முன்
வந்து விட்டுப் போங்களேன் ஒருமுறை.
நதிநீரின் தூய்மையும்
சாயக்கழிவுகளின் தொடக்கமும்
ஒன்று சேரும் இடம் இது.
இதற்கப்புறம் நதி
சாயக்கழிவுகள் ஓட்டம்தான்.
இவ்வளவு தூய்மையாய் நீரா …
இவ்வளவு சாய கலவையாய் நதியா கணிக்கத் துல்லியமாய் ஓரிடம் இது.
நகரத்தில் இருந்து சற்று தொலைவில்
தான் தொடங்குகிறது இவ்விடம்.
இவ்விடத்தில்
நிலத்தடி நீரிலிருந்து கிளம்பும்
சாயங்களின் வர்ணங்கள் அபரிமிதமானவை .நின்று சலிக்கும் தண்ணீர் லாரிகளின் துருப்பிடித்த தொட்டிகள் ..
பிளாஸ்டிக் குடங்களின் வரிசைகளில் வானவில்லின் கலவைகள் .
அழுகையாய் பலரின் மெல்லியக்குரல்கள்.
இதற்கு மத்தியில்
புண்ணியத்தலமாய் இந்த இடம்
தென்பட்டு விட்டது பலருக்கும் ..
இந்த இடமும் பிறரின் வருகைக்கு
என்று இருப்பது விரைவில்
தடை செய்யப்பட்டு விடலாம்
தடை செய்யப்படுவதற்கு முன் வந்து விட்டுப் போங்களேன் ஒருமுறை..
சுப்ரபாரதிமணியன்
மந்திரச்சிமிழ் கவிதைத் தொகுப்பு , காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு 2006)
.. subrabharathi@gmail.com Fb: Kanavu Subrabharathimanian Tirupur : blog: www.rpsubrabharathimanian.blogspot.com
Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003
சுப்ரபாரதிமணியன் அவர் வாழும் பகுதி சார்ந்த மக்களின் அனுபவங்களை இலக்கியமாக்கியிருப்பதில் வெற்றி கண்டிருப்பவர். இந்த வெற்றியை அவரின் தொடர்ந்த இலக்கிய முயற்சிகளுக்கான வெற்றி எனக்கொள்ளலாம்
இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது