சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 31 மே, 2021

அழகுபாண்டி அரசப்பனின் நீண்ட பயணம் : சுப்ரபாரதி மணியன் அழகுபாண்டி அரசப்பனின் கவிதைகளில் இருந்த கதையம்சங்கள் அவரை ஒரு சிறுகதையாளாரகக் காட்டிய போது மகிழ்ச்சியாக இருந்தது. கதை என்ற வடிவம் அவருக்கு சரியாகக் கூடி வரும் என்றுத் தோன்றியது. கொரானா பெருந்தொற்று காலத்தில் அவர் முக நூலில் எழுதியக்கதைகள் அதை மெய்ப்பித்தன. என் மகிழ்ச்சிக்கு அளவில்லை என்றே சொல்லலாம் . அவரின் சொந்த ஊரில் கிராம வாழ்க்கையில், வேலை அனுபவ இடங்களில், திருப்பூரில் அவர் கண்டு கொண்ட மனிதர்களின் சித்திரங்களாக அவை இருந்தன. ரத்தமும் சதையுமான மனிதர்களைச் சிறுகதைகளுக்குள் கொண்டு வந்திருந்தார். பல கதைகளில் அவரை அடையாளம் காட்டினார். பலவற்றில் அவரோடு பழகிய நூற்றுக்கணக்கான மனிதர்களின் சித்திரங்களை வரைவதில் அவரின் உணர்ச்சிப்பெருக்கெடுப்பு இருந்தது. அவரின் பீறிடும் எண்ணங்களின் வடிகால்கள் தென்பட்டன. தேனி பிரதேச மனிதர்களின் நினைவுக்குவியல்களாக அவை நின்றன. இதெல்லாம் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்த பாக்கியவான்களுக்கே நிகழும். அந்த பாக்கியவான்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்கிற பாகிர்வுத்தன்மையில் அவரின் புதிய தடம் இக்கதைகளில் உள்ளன. மனிதர்களோடு குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்களோடு அவர் பயணப்படுவது என்பது சமகாலத்து எல்லாவகை நிகழ்வுகளோடும் பயணப்படுவதுதான் அழகுபாண்டி அரசப்பனின் பயணத்தில் நாமும் கூட இருந்து அவரின் விளிம்பு நிலை மனிதர்களோடும் அவரோடும் கைக்குலுக்கி மகிழ்ச்சி கொள்ளுவோம். கே பொன்னுசாமி என்ற கலாச்சாரத் தூண் : பொன்னீலன் 1990களின் பிற்பகுதியில் கலை இலக்கியப்பெருமன்றம் ஒரு பண்பாட்டுப் பேரியக்கமாக்கத் தமிழகம் முழுவதும் பரவி வளர்ச்சியடைந்தது. கே. பொன்னுசாமி , எஸ் ஏ . பாலகிருஷ்ணன் போன்றோர் கோவை மாவட்டத்தில் திருப்பூர் மையத்திலிருந்து துடிப்பாகச் செயல்பட்டனர். அவர்களின் முயற்சியால் அக்காலத்தில் திருப்பூரில் ஆண்டுதோறும் கலை இலக்கியப்பெருமன்ற முகாம் நடைபெற்றது . எத்தனையோ இடஞ்சல்கள், அதை மீறித் தொடர்ந்து நடைபெற்றது முகாம். திருப்பூர் வட்டாரத்தில் பணம் வசூலித்தும் முகாம் பங்கேற்பாளர்கள் செலுத்தும் கட்டணத்தைக் கொண்டும் மூன்று நாளும் நல்ல முறையில் உணவு, தங்குமிடம் மற்றபடியான தங்கும் வசதிகள் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டன இது திருப்பூர் முகாமாக இருந்தாலும் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 300-400 தோழர்கள் கலந்து கொண்டார்கள். ஆய்வாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள், நடிகர்கள் எனப்பலதரப்பட்டவர்க்ளும் பங்கெடுத்தனர் 1998 ம ஆண்டு முகாம் பற்றியக்குறிப்புகள் என்னிடம் உள்ளன. தோழர் இரா. நல்லக்கண்ணு, கே சுப்பராயன், தனுஷ்கோடி ராமசாமி, டாக்டர் எஸ் ஸ்ரீகுமார், தஞ்சை இரா இளங்கோவன், கவிஞர் ரவீச்திரபாரதி, அ ப பாலையன், வழக்கறிஞர் ரங்கநாதன், இரா. காமராசு. எஸ். தோத்தாதிரி, , எஸ் கே கங்கா, ஆய்வாளர் பூங்குன்றன், டாக்டர் பா ஆனந்த குமார், டாகடர் திசு நடராசன், எஸ் பாலச்சந்திரன், கவிஞர் முருகேஷ், வாய்மைநாதன் , டாக்டர் ந.முத்து மோகன், டாக்டர் நா. ராமச்சந்திரன், மு.சிவராமன், அ ரேணுகாதேவி, ஹெச் ஜீ ரசூல், செந்தமிழ்க்கொதை, எம் எஸ் ராதாகிருஷ்ணன், தேவ பேரின்பன், ஹாமீம் முஸ்தாபா,இளசை மணியன் என்று பெரும் படை திரண்டது. ஏழாவது முகாமில் மூன்றாம் நாளில் பிரமாண்டமான கலை விழா நடைபெற்றது. பின்நவீனத்துவமும் உலகாயதமும் பற்றி சி சொக்கலிங்கம் . ,பின்நவீனத்துவமும் சாதிய எழுச்சியும் பற்றி ஆழமாக விளக்கினார். அடித்தள மக்கள் ஆய்வில் . பின்நவீனத்துவம் பற்றி புலவர் சிவம் விளக்கினார். பின்நவீனத்துவம் நேற்றும் இன்றும் என்னும் தலைப்பில் பேரா. எஸ். தோத்தாத்ரி பின்நவீனத்துவக் கோட்பாடுகள் என்றத் தலைப்பில் திசு நடராசன், மார்க்சீயமும் . பின்நவீனத்துவமும் பற்றி ந.முத்து மோகன் , நாட்டார் வழக்காற்று ஆய்வியலில் . பின்நவீனத்துவம் பற்றியும் ஆய்வுரைகள் தந்தனர். . செந்தமிழ்க்கோதை அறிவியலும் பின்நவீனத்துவமும் பற்றிப் பேசினார். பொருளாதாரமும் . பின்நவீனத்துவமும் பற்றி தேவப்பேரின்பன் பேசினார், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இந்த முகாம் சாட்சியாகும் இதைபற்றி நினைக்கும் போது இப்போது ஏக்கமே ஏற்படுகிறது. நம்புவோம் மீண்டும் ஒரு காலம் வரும் இவ்வகை முகாம்கள் இவ்வகை எழுச்சியோடு நடைபெறும் . ஜீவா கனவு கண்ட பண்பாட்டு எழுச்சி ஏற்படும் இந்த முகாம்களின் பின்னணியில் முக்கியதூணாக இருந்தவர் கே. பொன்னுசாமி என்பதால் என்றும் நினைக்கப்படும் நம் தோழர் கே. பொன்னுசாமி பல விதங்களில் முன்னோடியானவர்.. *