சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 31 மே, 2021
சுப்ரபாரதிமணியன்
குரு அரவிந்தனின் நான்கு கதைகளை …
குரு அரவிந்தனின் நான்கு கதைகளை தேர்வு செய்ய இணைய தளத்தைத் தேடியபோது எதேச்சையாகப் பட்ட நான்கு கதைகளை எடுத்துக்கொண்டேன் .அவை நான்கும் வெகுஜன இதழ்களில் வெளியானவை என்பதால் அதன் பக்க அளவு பலவீனங்களும் எடுத்துக்கொண்ட கதைகளின் களமும் முக்கியமாகப்படுகின்றன.
அவற்றையெல்லாம் பல லட்சம் பேர் வாசித்திருக்கிறார்கள் என்பது பலம் கூட . நம் கூட்டுக்குடும்பங்கள் அவற்றின் சிறப்புகள் அதிலிருந்து எழும் பிரச்சினைகளோ சலசலப்புகளோ கதைகளின் மையங்களாகி உள்ளன
குடும்ப அமைப்பில் அம்மாவும் அப்பாவும் முக்யமானவர்கள் அவர்களைத் தவிர்த்து கதைகள் எழுதி விட முடியுமா ..
சிங்கங்கள் உறுமும். வேட்டைக்காக அவை ஒரு உயிரினை மட்டும் எடுத்துக்கொள்ளும் , ஆனால் புலிகள் பிய்த்துக் குதறும். வாழ்க்கை இப்படித்தான் சிங்கமாய் நின்று சில சமயம் கர்ஜிக்கும். புலியாய் குதறும். அப்படி குடும்ப வாழ்க்கையில் சிங்கமாயும் புலியாயும் நின்று கர்ஜித்தும் வேடிக்கை காட்டியும் நடக்கும் பல சம்பங்களைப் பதிவு செய்திருக்கிறார் குரு அரவிந்தன் .
அப்பாவையோ அம்மாவையோ நிராகரிக்கும் பிள்ளைகள் இருக்கத்தான் மாட்டார்கள். ஆனால் வாழ்க்கை அப்படி பிள்ளைகளைக் கொண்டு போய் நிறுத்துகிறது. அவர்கள் அதற்காய் எவ்வளவு வலியை உணர்ந்திருப்பார்கள்
'இவளுக்கு அப்பா நீங்கள் அல்ல" என்று அம்மா ஆவேசமாகக் கத்திக் கூச்சல் போட்ட போது கூட நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் 'நீ என் பெண்தானா?' என்ற கேள்விக் குறியோடு என்னை நீங்கள் நிமிர்ந்து பார்த்தீர்களே அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
'ஆமாம் காதல்தான்! என் காதலனைத் திருமணம் செய்யப்போவதாக நினைத்துத் தான் அவனோடு நான் நெருங்கிப் பழகினேன். ஆனால் விதி தான் உங்கள் உருவத்தில் வந்து விளையாடி விட்டதே! இனிமேலாவது எனக்கு விவாகரத்து மூலமா விடுதலை கொடுங்க…"
இந்த நிலைமையில் ஒரு பெண் தன்னைத்தக்கவைத்துக்கொள்ளுவதோ பொருத்திக்கொள்வதோ இம்சைதான் . அதை அரவிந்தன் சரியாகவேச் சொல்லியிருக்கிறார்.
வாய்க்குள் இருந்த புகையைக் கஸ்டப்பட்டு மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெரிந்தது. பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான் என்று வருகிற சூழல்களை வாசிக்கிற வாசகர்களும் உணர்வார்கள்
வாழ்க்கை பலரை காலடியில் நசுக்கி வீசப்பட்ட சிகரெட் துண்டுகளைப் போலத்தான் ஆக்கி வைத்திருக்கிறது அரவிந்தன் பார்வையில் இப்படி
” அவனது காலடியில் கிடந்த நசிக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு சங்கடப்பட்டது “
மாணவர்களின் உல்கத்தில் இருக்கும்பிரச்சினைகள் என்று காதல், கேளிக்கை சார்ந்த பொறாமை என்று பல எழுத்தாளர்கள் கண்களில் பல விசயங்கள் தட்டுப்படும்போது குரு அரவிந்தனின் பார்வையில் படும் விசயங்கள் அப்படித்தான அபூர்வமாக இருப்பதை புல்லுக்கு இறைத்த நீர் கதையில் கண்டு கொண்டேன் .
சுமை என்ற கதையில் சிறையில் இருந்து வெளிவரும் இளைஞன் தான் காணும் உலகம் அதிர்ச்சி தரத்தக்கதாக இருக்கிறது . இந்தக்கதை உலகம் முழுவதும் இன்றைக்கு இருக்கும் இனவாத பிரச்சினையின் அடிநாதமாக விளங்கி பொதுமையான உலக மையமாக விளங்குவது ஒரு முக்கிய கதையாக்குகிறது.தன் பிரியமானவர்கள் எப்படியெல்லாம் சிதைந்து போய் காணப்படுகிறார்கள் என்பது முக்கியமாகும். உலகெங்கும் இருக்கும் இனவாதம் மனிதர்களைப்பியத்துப் போட்டு வேடிக்கை காட்டும் அவலத்தை ஒரு கதையில் சொல்லிவிடுகிறார்.
ரோசக்காரி கதையில் பெண்ணை வீட்டில் முடமாக்கி வைத்திருக்க நினைக்கும் மனிதர்கள் மத்தியில் அவளை வெளியே பிரகாசிக்க வைக்க அவள் கணவன் செய்ய்யும் ஒரு சிறு நாடகம் வெளிப்படுகிறது. அந்த வகையில் அவன் உயர்ந்தவனாகிறான். நேர் மறை எண்ணங்கள் அவனை கபட நாடகம் ஆடச் செய்கிறது . அது வெற்றிகரமான விளைவுகளைக்கொண்டிருப்பதும் நல்ல விசயம்தானே.
பல எழுத்தாளர்களின் கதைகளில் நிகழ்கால, யதார்த்த வாதப் போக்குகள் ஒரே மாதிரியானக் கதைகளை உதிர்க்கும் போது நேர் மறை எண்ணங்கள் கொண்ட கதைகள் தென்படுவது அபூர்வம்தான். ஆனால் இந்த ஆசிரியர் அந்த வகையிலும் எழுத்துலகச் சிந்தனைகளை விதைத்திருக்கிறார் எனபது ஆரோக்யமானதாக உள்ளது
எழுத்தாளன் மனம் நல்ல சிந்தனைகளுக்கும் ஆக்கப்பூர்வமான விசயங்களுக்கும் செல்வது வாசிப்போர் மத்தியிலுண்டாக்கும் இலக்கிய அனுபவம் தவிர்த்த மனநிலைகள் இன்னும் தொடர்ந்து நடக்கச் செய்யும். அந்த வகையில் குரு அரவிந்தன் வாசகர்களை தன்னோடு அழைத்துச் சென்று நேர் மறை எண்ணங்களை உருவாக்குவதும் கூட பல சமயங்களில் படைப்பாளியின் பொறுப்பாக அமைவதை இது போன்ற அவரின் கதைகள் தெரிவிக்கின்றன.
எல்லா மனிதர்களுக்குள்ளும் கசடுகள் இருக்கின்றன. அந்தக்கசடுகளைப் பலர் கொட்டித் தீர்த்துகொள்கிறார்கள் .எல்லா மனிதர்களும் அப்படிக்கொட்டித்தீர்ப்பதில்லை. சிலர் கொட்டித்தீர்ப்பதால் மனபாரம் குறையும் என்று எண்ணுகிறார்கள். நேர்மறை எண்ணங்கள் தரும் சிந்தனைகளும் அவற்றின் அடிநாதங்களும் மந்திற்கு ஆறுதல் தருபவை. அந்த வகை ஆறுதல் எண்ணங்களை குரு அரவிந்தன் விதைத்துக் கொண்டே இருக்கிறார்.
TAMIL WRITER SUBRABHARATHIMANIAN
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003
* Got “ katha award “ fro best short story writer from President of India-1993.