சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 31 மே, 2021

அறக்கயிறு: . டி.கே சந்திரனின் வாழ்வியல் அனுபவங்கள்/ சுப்ரபாரதிமணியன் இந்த அனுபவப்பதிவுகளைப்படித்தபோது . டி.கே சந்திரனுடன் இணையாகப் பயணித்திருப்பதைத் தெரிந்து கொள்ளுமளவு ஏகப்பட்ட ஒற்றுமைகள் என்னுள்ளூம் இருந்தன முதலில் நானும் நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவன் ( பள்ளிக் கோடை விடுமுறை காலங்களின் நெய்திருக்கிறேன் ) டெலிகாம் துறையில் பணியில் நுழைந்தவன் டெலிகாம் பயிற்சி அவர் பயிற்சி எடுத்த இடத்தில்தான் நானும் பயிற்சி எடுத்தேன் பியூசி அவர் படித்தது. நானும் பியூசியில்கடைசி செட் மாணவன்.. பியூசியில் வேதியில் பரிசோதனைகளில் நானும் உப்பு என்ன என்பதைக்கண்டுபிடிப்பதில் திணறியிருக்கிறேன் நான் மறந்து போன observation unit - தொலைபேசித்துறைக்குள் இருந்த அனுபவங்களை கிளறி விட்டிருக்கிறார். துறை சார்ந்த சலுகையாய் LTC எல் டி சி யில் காசி போனேன் அவரைப் போலவே தீப்பெட்டியில் தொலைபேசி விளையாட்டினை விளையாடாதோர் யார் இருக்கிறார். அந்த அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. பாரதி கிருஷ்ணகுமார் முதர்கொண்டு உஸ்மான் அலி வரை எனக்கும் நணபர்கள் அவர்கள் . நானும் டெலிகாம் துறையிலிருந்து பணி முழுமையடையாமல் விலகினேன். நான் விட்டது 2 ஆண்டு அனுபவங்கள்தான். அவர் நட்பு கொண்டிருந்தப் பலருடன் நானும் நட்பும் பிரியமும் கொண்டிருந்தேன். உதாரணம் ..நம்மாழ்வார் அய்யாவுக்கு என் சாயத்திரை நாவலின் ஆங்கிலப் பதிப்பைச் சம்ர்ப்பணம் செய்திருந்தேன். அதன் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார், அவரின் இறுதி காலம் வரை தொடர்ந்த நட்பு இருந்ததை பலக் கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறேன் கொஞ்சம் வாழ்க்கை அனுபவங்கள்., குடும்பச்சூழல் பிறகு அவரை பாதித்தப்புத்தகங்கள், பாதித்த நண்பர்கள்,, அவருக்கு ஆதர்சமாய் இருந்த நண்பர்கள் என்று இந்த நூலை வடிவமைத்திருப்பது சிறப்பு. நெசவில் பார்டரும், முந்தானை டிசைனும் முக்கியம் என்பது போல் இந்த நூலின் அபூர்வமானப்புகைப்படங்கள் முக்கியமாக அமைந்துள்ளன சாந்தி கியர்ஸ் சுப்மணியன் முதல் உமாபிரேமன் வரை ( உமா பிரேமனின் கதை கேட்கும் சுவர்கள் நூல் வெளியீடு சார்ஜா புத்தகக் கணகாட்சியில் நடைபெற்ற விழாவுக்கும் சென்றிருக்கிறேன். கோவையில் அவர் நூல் வெளியீட்டுக்கும் ) பல சாதனை மனிதர்கள் பற்றியச் சித்திரங்கள் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்கும். வாசிப்பில் வழிகாட்டியாய் பலரை அடையாளம் காட்டுகிறார். வியாபாரிகள், செல்வந்தர்களின் வாழ்க்கை நூல்கள் சுருக்கமாய் சுக்கு டீ போல் /காபி டேபிள் புக் போல் அமைந்திருக்கும் ஆனால் இது வாழை இலை போட்டு கொங்கு நாட்டின் “ ஒணத்தியான பலகாரம்” சாப்பிட்ட உணர்வைத் தந்தது என்பது குறிப்பிடத்தக்க விசயம். தேங்காய் எண்ணைய் ஊற்றி அரிசி பருப்பு சாதம் சாப்பிட்ட அனுபவம்தான் .( அதற்கு நெய்யெல்லாம் ஆடம்பரம். தேங்காய் எண்ணைய் அதன் அற்புத ருசிக்கு போதும் ) வியாபாரம் சார்ந்த அணுகுமுறைகளையும் அனுபவங்களையும் அவர் பதிவு செய்வது புதிய தலைமுறையினருக்கும் வியாபாரத்தில் நுழைகிற, இப்போது இருக்கிற பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும் அடுத்த முயற்சியாய் வியாபார அனுபவங்களை விரிவாய்- தொழில் சார்ந்த அறம்., தொழில் நுட்ப அனுபவங்களையும் அவர் பதிவு செய்ய வேண்டும் சமரசம் செய்யாத அவரின் தந்தையின் வியபாரம், மற்றும் அம்மத்தாவின் முயற்சிகளைச் சொல்கிற போது செல்வம் சேர்ந்தால் அதனைக் கையாள வேண்டிய அடிப்படை விழுமியங்களை கற்றுத் தரும் அனுபவங்களை இந்த நூல் உள்ளடக்கியிருப்பது மிக முக்கியமானதாகும் . இன்றைய வியாபார நியதியில் அதுதான் முக்கியம் கூட . சுப்ரபாரதிமணியன் ( 150 ரூ விலை / 176 பக்கங்கள் / வம்சி புக்ஸ் வெளியீடு )