சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 23 செப்டம்பர், 2016

அழகு நிலாவின் ஆறஞ்சு சிறுகதைத் தொகுப்பு

ஜீரோஸ் ஈஸ்ட்லிருந்து மெரினாபேக்குக்கு ஒரு பயணம்
                                                    சுப்ரபாரதிமணியன்

  கலைஞன் பதிப்பகம் தன் 60 ஆம் ஆண்டு பதிப்புப் பணியை முன்னிட்டு 60 நூல்களை மலேசியா கோலாலம்பூரில் வெளியிட்ட்து. அதில் 50 பேர் தமிழக எழுத்தாளர்கள் . பத்துப்பேர் மலேசியா சிங்கப்பூர் எழுத்தாளர்கள்.50 எழுத்தாளர்களையும் கலைஞன் பதிப்பகம் கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றிருந்த்து. அதில் என் சிறுகதைத் தொகுப்பு குகைகளின் நிழலில் ஒன்று. அந்த்த் தொகுப்பில் பல கதைகள் மலேசியா பின்ன்ணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்ல்லாம். 2012ல் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் பட்டறை ஒன்றை நடத்த என்னை அழைத்திருந்த்து.அதன் பின் மலேசிய பயண அனுபவம், நாவல் பட்டறை அனுபவம், படித்த மலேசியா எழுத்தாளர்கள் நூல்கள், சந்தித்த எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் என்று 25 கட்டுரைகள் எழுதியிருந்தேன். அது ஓ.. மலேசியா என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன் . நூல் இன்னும் வெளியாகவில்லை. மலேசியப்பின்னணி நாவல் ஒன்றையும் எழுதினேன் மாலு “( உயிர்மை பதிப்பக வெளியீடு சென்னை ) . அதில் டூரிஸ்ட் விசாவில் கோலாலம்பூர் சென்று வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனின் தலை மறைவு வாழ்க்கை பற்றி சொல்லியிருக்கிறேன். அகிலன் மலேசியாவில் ஒரு மாதம் தங்கியிருந்து எழுதிய பால் மரக்காட்டினிலே நாவல்   மலேசியப்பின்னணி நாவல் ஆகும். ஓ.. மலேசியா ““ மாலு ஆகிய நூல்களில் இடம் பெறாத மலேசிய அனுபவங்களை  சில சிறுகதைகளாகவும் எழுதினேன்.அந்தச் சிறுகதைகள் குகைகளின் நிழலில் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.. அந்த்த் தொகுப்பில் பல கதைகள் மலேசியா பின்ன்ணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்லலாம். ஆனால் முழுத்தொகுப்பையும் அப்படி அமைத்திருக்கலாம் என்று நினைத்தேன்.
அழகு நிலாவின் ஆறஞ்சு  சிறுகதைத் தொகுப்பு அப்படி சிங்கப்பூர் வாழ்நிலை அனுபவங்களை முழுமையாகக்கொண்ட கதைகள் என்று நினைத்தேன். ஆனால் அதில் உள்ள ஒரு மகாபாரத கதை அந்த முத்திரையை நழுவ விட்டு விட்டது. அடுத்தத் தொகுப்பில் அந்த முத்திரையை அழகுநிலா அழுத்தமாகப் பதிக்கவேண்டும்.
ஆனால் சிங்கப்பூர் வாழ்நிலை அனுபவங்களை இத்தொகுப்பு பதிவு செய்திருக்கின்றது என்பது முக்கியமே.வேலை நிமித்தமாய் சிங்கப்பூர் வந்து கஷ்டப்படுகிறவர்கள், வேலை நிமித்தமாய் சிரமங்கள், சொந்த ஊர் போகிற கனவு, சொந்த ஊரில் செத்துப்போகிறவர்கள் பற்றிய நினைவு ஏக்கங்கள், கஷ்டம் வரும்போது உதவும் பக்கத்து வீட்டு மனிதர்கள் , பக்கத்து வீட்டு அறியாத மனிதர்கள் , பூனை முதற்கொண்டு பிராணிகள் போன்றவற்றை கூர்ந்து கவனித்து கதைகளாக்கியிருக்கிறார்.  பள்ளிக்குழந்தைகளின் விரோதமான மன நிலை பற்றி ஒரு கதை பேசுகிறது. இந்தோனிசியா வேலைக்காரப் பெண்ணின் மீது கொண்ட கோபமும் அது சட்டென ஏதோவொரு கணத்தில் மறைவதும் ஒரு கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.  வேலை நிமித்தமாய் சிங்கப்பூர் வந்து கஷ்டப்படுகிறவர்கள்  பணத்தை சம்பாதித்து என்னவாகப்போகிறது என்று அங்கலாயித்துக் கொள்கிறார்கள்.  பூனை ஒன்று விபத்தில் சிக்கிக் கொள்ள  அந்நியமாகவே இருக்கிற பக்கத்து வீடுகள் ஒன்று சேருகின்றன. அம்மாவின் மரணத்திற்குப் பின் தனிமையில் வாடும் அப்பாவிற்கு ஒரு பூனை நண்பனாவதை வீட்டில் இருப்பவர்கள் கண்டு கொள்கிறார்கள். அம்மாவை அதிகம் கண்டு கொள்ளாதவன் சீனப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு குழந்தை பிறந்த பின் அம்மாவின் முக்கியத்துவத்தை உணர்கிறான். இப்படி பல கதைகள் . அசட்டுத்தனமான காதல் . அசட்டுத்தனமான அனுபவங்கள் . புது மலர்கள் கட்டுபவளுக்கு ஏற்படும் அசட்டுத்தனத்தை ஒரு கதையில் சொல்கிறார்.சிங்கப்பூர் சூழல்-  குடும்பம்  , வேலை, பக்கத்து வீடுகள், தொடர்வண்டி பிரயாண அனுபவங்கள் என்று கதைகள். எளிமையான வெளிப்பாட்டில்  அதிகம் சிரம்ப்படுத்தாத நடையில் விசயங்களைச் சொல்லிப்போகிறார். எளிமையாக உள்வாங்கிக் கொள்ளும் அனுபவங்களாய் இருக்கின்றன.பெண்களின் பிரச்னைகளை அந்தப்பார்வையிலேயே சொல்லியிருப்பதும் நன்று.
( தங்கமீன்கள் பதிப்பக வெளியீடு, சிங்கப்பூர் )
Subrabharathimanian/8-2635 Pandian nagar, Tirupur 641 602
094861 01003/ subrabharathi@gmail.com.www.rpsubrabharathimanian.blogspot