சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 23 செப்டம்பர், 2016


குவியம்.காமிலிருந்து ..
---------------------------------

kuviyam.com
திருப்பூர் வாசியான திரு சுப்ரபாரதிமணியன், கடந்த நாற்பது ஆண்டுகளாகச் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம், நூல் மதிப்புரைகள் என பல படைப்புகளை அளித்தவர். இவரது கனவுஇலக்கியச் சிற்றிதழ் 1987 முதல் வெளிவருகிறது. திருப்பூரில் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார். கதா விருது, தமிழக அரசு சிறந்த நாவல் விருது உட்பட பதினைந்திற்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். பல்வேறு மொழிகளில் இவரது கதைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சிறந்த திரைப்பட ஆய்வாளர். இவரது தெளிவான விமர்சனக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 11 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள், குறுநாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள் என 40க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகி உள்ளன.
**************************************************************
இவரது புதுப் பழக்கம் என்னும் கதை இப்படித் தொடங்குகிறது.

பஸ் இரைச்சலுடன் வந்து நின்றது. புழுதியை அலட்சியப்படுத்தியபடி இறங்கினர். தினத்திற்கு ஒரு தரம் மட்டுமே வரும் பஸ். ஏறவும் நிறையக் கூட்டமிருந்தது. ஆலமரத்துப் பின்புறத்திலிருந்து பரபரப்பாய் ஓடி வந்தாள் ஈஸ்வரி. அய்யபஸ்ஸு.. என்று வாய் விட்டுச் சொன்னாள்.
ஈஸ்வரிக்கு பஸ் ஒரு வேடிக்கை.

பள்ளிக்கூட நாட்களில் சரியாகக் கணக்கு பாட நேரத்தில்தான் வரும். கணக்கு வாத்தியார் வேடிக்கை பார்க்க அனுமதிக்க மாட்டார். எனவே, விடுமுறை நாட்களில் இன்னும் சில வாண்டுகளுடன் இரைக்க இரைக்க ஓடி வந்து பஸ் வருவதை வேடிக்கை பார்ப்பது ஒரு ஆனந்தம். ஆரன் அடி மாமா ..என்று ஓட்டுனுரைப் பார்த்துக் கேட்பதும்  அந்த ஒலி கேட்டு மகிழ்வதும் சிலசமயம் நடக்கும்.

இரண்டு நாட்கள் முன்பு, மூன்று கூடைகளுடனும் ஒரு பெரிய பாத்திரத்துடனும் ஒரு பெண்மணி பஸ்ஸில் வந்து இறங்கி நின்றுகொண்டு இருந்தாள். ஈஸ்வரியையும் அவள் சகாக்களையும் பார்த்து இல்லம் எங்கே இருக்கிறது என்று கேட்டாள். இவர்களே இல்லத்தைச் சேர்ந்தவர்கள்தானே. ஆளுக்கு ஒரு பொருளைத் தூக்கிகொண்டு இல்லம் நோக்கிச் செல்கையில், எவ்வளவு நாளாக அவர்கள் இல்லத்தில் இருக்கிறார்கள் என்று விசாரிக்கிறார். ஈஸ்வரி மட்டும் கடந்த விசாழன்வந்து சேர்ந்தவள் என்று தெரியவருகிறது, ‘நீங்களெல்லாம் அனாதைகளா?’ என்றும் கேட்டுவிட்டு, தவறாகக் கேட்டுவிட்டோமோ என்று கூச்சமும் அடைந்தாள் அந்தப் பெண்மணி.

ஈஸ்வரிக்கு அக்காவும் பாவாவும் உண்டு. ஈஸ்வரியையும் அவள் அக்காவையும் வளர்த்த மாமா, அந்த அக்காவை இரண்டாம் தாரமாக மணமுடிக்கக் கேட்டாராம் , அதனை மறுத்து பாவாவை மணமுடிக்க, ஈஸ்வரியை வளர்க்க மாமாவோ பாவாவோ முன்வரவில்லை. வேறு வழியின்றி அனாதை என்று சொல்லி அக்காவே ஈஸ்வரியை இல்லத்தில் சேர்த்துவிட்டாள்.  இந்த ஒரு வாரத்திற்குள்ளேயே ஜெபம் சொல்லவும் சரியாக சிலுவை போடுவதற்கும், சிஸ்டர், பிரதர் என்று விளிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டாள் ஈஸ்வரி.

அந்தப் பெண்மணி கொண்டு வந்த இனிப்புகளும் பழங்களும் அனைவருக்கும் கிட்டின. சிஸ்டர் அவளுக்கு ஹாப்பி பர்த்டே சொல்ல அனைவரும் கைதட்டினார்கள்.

இன்றும் யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் பஸ்ஸிற்காகக் காத்திருந்த ஈஸ்வரி, யாரும் வராததால் பஸ் பின்னால் டுர்ர்என்று ஓடிக் களைக்கிறாள். சிவப்பு நந்தியாவட்டைப் பூக்கள், பிள்ளையார், வண்ணத்துப் பூச்சி என்று வேடிக்கை பார்த்த ஈஸ்வரி ஆலமரத்தடியிலே கண்ணயர்ந்து விடுகிறாள்.

விழித்ததும் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். கூடவந்த இல்லத்து நண்பர்கள் யாரையும் காணவில்லை. ஜெப நேரமும் அதனை அடுத்த உணவு நேரமும் கடந்திருக்குமா என்றும் தெரியவுமில்லை. ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் மாட்டு வண்டிகளையும், செம்மறியாட்டு மந்தையையும் வேடிக்கை பார்த்தபடி நடக்கிறாள். மாமா வீட்டில் இருந்தபோது விடுமுறை நாட்களில் அக்கா காட்டன் ஆபீசிலிருந்து திரும்பும்வரை இப்படி அலைந்து திரிவதுதானே வழக்கம்.
இல்லம் அடைகிறாள். கைவைத்து மெல்லக் கேட்டைத் திறந்து போகிறாள்

எல்லோரும் சாப்பாட்டுத் தட்டுடன் அமர்ந்திருந்தார்கள். தட்டில் சாதம் விழுந்திருந்தது. அவளை யே எல்லோரும் பார்த்தார்கள்.
பிரதர் சார்லஸ் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தார். கேட்டை மறுபடியும் மூடுகையில் அவர் நகர்ந்து வருவது ஈஸ்வரிக்குத் தெரிந்தது, அவர் வெகு சீக்கிரம் அவள் அருகில் வந்து நின்றார்.

ஜெபத்துக்கு வராமே எங்க போயிருந்தே…?
வெளியே…”
அவள் சொல்லச் சொல்ல அவள் முகத்தில் அறை விழுந்தது.
ஜெபத்துக்கு இல்லாமே வெளிய கேட்குதோ…”

கோணிக்கொண்டு வந்த அழுகையுடன் தினமும் போறதுதானே பிரதர். ஜெபம்தா புதுசுஎன்றாள் சிதைந்த குரலில்.
என்று முடிகிறது.
***********************************************************************
செகந்தரபாத்தில் பணிபுரிந்த நாட்களில் வெளிவந்த தொலைந்துபோன கோப்புகள்முதலிய கதைகள் பரவலாகப் பேசப்பட்டவை. டாலர் சிட்டிஎன்று அறியப்படும் திருப்பூர் வாழ்க்கை பனியன் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் ஏற்ற தாழ்வுகளையும் , சமுதாயச் சிக்கல்களையும், சுற்றுப்புற சூழல் பாதிப்புகளையும் தனது கதைகள், கட்டுரைகள் நாவல்கள் மூலம் பேசி வருபவர். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, நொய்யல் ஆற்றைப் பாதுகாத்தல், பெண்கள் சுரண்டப்படும் சுமங்கலிதிட்ட எதிர்ப்பு என சமூகக் களப்பணியிலும் முன் நிற்பவர்.
இவரது குறிப்பிடத்தக்க நாவல்களில் சில : ஓடும் நதி, மற்றும் சிலர், சாயத்திரை, நீர்த்துளி, புத்துமண்.

சிறுகதைகளில் சில:- ஆழம், தொலைந்துபோன கோப்புகள், ஒலைக்கீற்று, அரேபியக் கிராமம், கைகுலுக்க நிறைய சந்தர்ப்பங்கள்.
இணையத்தில் கிடைக்கும் ஒரு கதை : ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்-

எஸ் கே என்