சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

            கோவை புத்தக்க் கண்காட்சியில் இறுதி நாளில்

நடைபெற்ற கோவை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.விழாவில் இளஞ்சேரல் வரவேற்றார். பூஅரவீந்திரன் தலைமை உரை நிகழ்த்தினார். கீழ்க்கண்ட 3 நூல்கள் வெளியிடப்பட்டன..    1. சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத் தொகுப்பு குகைகளின் நிழலில்  “         ( மலேசியா பல்கலைக்கழகம் மற்றும் கலைஞன் பதிப்பகம் இணைந்து வெளியீட்டது, ) .2  அன்புசிவாவின் 21ம் நூற்றாண்டு நவீன கவிதைகளில் புதியப் போக்குகள் ( ஆய்வு நூல், காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு ) 3. ஸ்டிப்பன் ஜஸ்வேய்க்கின் ஆட்கொள்ளப்பட்டவன் ஜெர்மானிய நாவல்: தமிழில் லதா ராமகிருஷ்ணன்( ( புதுப்புனல் பதிப்ப்கம் , சென்னை வெளியீடு )
சுப்ரபாரதிமணீயனின் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் மலேசியப் பின்னணீல் உள்ளவை. அவர் பேசியது : உலகம் முழுக்க தமிழர்கள் இன்று வாழ்கிறார்கள். மலேசிய நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உரமாக இருந்தவர்கள் தமிழர்கள். தமிழ் ஆட்சி மொழியாக அங்கு கவுரவம் பெற்றுள்ளது. தமிழை முதன்மை மொழியாக்க் கொண்ட 540 தாய்த்தமிழ்ப்பள்ளிகள் அங்கு அரசாங்கத்தின் முழு நிதி உதவியுடன் இயங்குகின்றன. அகிலன் பால்மரக்காட்டினிலே நாவல், எனது மாலு ஆகிய நாவல் ஆகியவை  அங்கு சென்று கண்ட மலேசிய அனுபவங்களை நாவல் வடிவில் கொண்டிருக்கின்றன.அங்கு கணினி தொழில் சார்ந்து வேலை செய்வோர், பல வியாபாரங்களில் ஈடுபட்டத் தமிழர்கள்,   டூரிஸ்ட் விசாவில் சென்று பணம் சம்பாதிக்கிற ஆசையில் அங்கு முறையற்ற முறையில் வேலை செய்யும் தமிழர்களின் அனுபவங்களை பல எழுத்தாளர்கள் இலக்கியப் படைப்புகளீல் பதிவு செய்திருக்கிறார்கள். மலேசிய தமிழர்களின் இலக்கியப் படைப்புகள் இன்னும் விரிவாய் தமிழகத்தில்  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தமிழகம் மலேசியா இணைப்புப் பாலத்திற்கு அது அடிப்படையாக அமையும்.
  புதுப்புனல் பதிப்பகம்     ரவிச்சந்திரன் தன் பதிப்பக அனுபவங்களைப் பற்றிப் பேசினார். வழக்கறிஞர் நந்தகுமார், அகிலா, அவைநாயகன், பூபாலன், உட்பட பலர் பேசினர். மரபின் மைந்தன் முத்தையா, பேரா.மணி, க.வை.பழனிச்சாமி, சி.ஆர் ரவீந்திரன், சோழநிலா, அம்சப்ரியா உட்பட பலர் பங்கு பெற்றனர். இளவேனில் நன்றி கூறினார்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

           கனவு இலக்கிய வட்டம் 
    8/2635  பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

திருப்பூர் : டாலர் சிட்டி ஆவணப்படம்
இயக்குனர் ஆர்.பி. அமுதன் ..

விமர்சனம் 1:
தலித் பிரச்சினைகள் பற்றி முகத்தில் அடிக்கிற மாதிரி பல படங்கள் எடுத்த நீங்க இவ்வளவு மேம்போக்கா திருப்பூரைப் பத்தி ஏன் படம் எடுக்கணும். தொழிலாளி, முதலாளி, தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருமே அன்னிய செலவாணியை குறிக்கோளா வெச்சு சமரசமா இயங்கற ஊர்லே, இதுலே நீங்களும் சமரசம் பண்ணீட்டீங்களா 

3. காலாவதியான மார்சியம், காணாமல் போன காந்தியம் .. இதையெல்லாம் தூக்கி பிடிச்சிருக்கீங்க  ..துக்கம்..தூக்கம் .

4.,  பனியன் தொழிலாளி வீட்டு கண்ணாடிப்புட்டி மீன் , முதலாளி வீட்டு வாஸ்து 50 ஆயிரம் ரூபாய் தொட்டி மீன்... கேட்பாரற்று கிடக்கும்  நெசவுப் பாவடிக் கற்கள்... அபாரமான குறியீடுகள்.... அபாயமான குறியீடுகள்.
5. கூட்டுக் களவணித்தனம்: தொழிற்சங்க உணர்வு இல்லாதத் தொழிலாளி,  சுரண்டலுக்கு பேர் போன முதலாளி, சந்தா வசூலிக்கிற தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருக்குமே அன்னிய செலவாணிதா  குறிக்கோள்.எல்லாரும் சேந்து பண்ற திருப்பூர் கூட்டுகளவணித்தனத்தே  நாசுக்கா சொல்லீட்டீங்க.
6. சேரிக திருப்பூர்லே வளர்ந்திட்டே இருக்கு. பின்னலாடையிலே  சுமங்கலித்திட்டக் கொடுமை வந்திருச்சு. வட மாநில பெண்கள் வார இறுதிகள்லே விபச்சாரத்துக்கு பயன் படற நிலை.இதியெல்லா சொல்லாமா திருப்பூரைப் பத்தி படம் என்ன வேண்டிக்கிடக்கு....குணா
7. பாரீசின் சொகுசுத்தனம், ஆப்ரிக்காவின் வறுமை திருப்பூர்லே இருக்கு. இந்தப் படத்திலெ இதெல்லா இல்லே. திருப்பூரைப் பத்தின வெறும் அறிமுகம்.
8. திருப்பூரைப்பத்திச் சொல்றப்போ மோடியில வந்து ஏன் முடியணும். மோடி காய்ச்சல் உங்களுக்கும் இருக்கு.. நேரடியான படமல்ல..முழுமையில்லாத படமல்ல.
9. motivateபண்ற படம்.     Quiet, subtle    பார்வை.  . converted audience, non-converted audienceக்கான யுத்தம்  திருப்பூரைப் பத்தின விமர்சனம் இல்லை.  

10. பனியன் தொழிலாளி, கைத்தறி நெசவுத்தொழிலாளி, பவர்லூம் தொழிலாளிகளோட பார்வை இருக்கு. தமிழ் டப்பிங் பார்த்து மகிழ்ச்சியா இருக்கறதா ஒரு சின்னத்திரை வசனம் வருது. அதுதா திருப்பூர் உள்ளூர் வாசிகளின் அற்பமான நிலைமை.
11. கபாலி இயக்குனர் பா. ரஞ்சித் பார்வையிலே தலித் அம்சம் இருக்கும், உங்களதும் தலித் பார்வை, விளிம்பு நிலைப் பார்வை இருக்கும்.  அது இதிலெ மிஸ்ஸிங். ஆனாலும் கபாலி சொல்றது மாதிரி மகிழ்ச்சி.

12. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்ட கால நிலைமை அவர்களின் வாழ்நிலையைச் சரியாகக் காட்டுகிறது. இயக்கமில்லாமல் நிற்கும்  விசைத்தறி மனதை உறுத்துகின்றன. ( போராட்ட கால கஞ்சித் தொட்டி சம்பவங்கள் பேச்சில்லாமல் பலவற்றை உணர்த்தி போகின்றன ) நெசவாளர்களின் சுதந்திரமான தொழில் நிலை கதர் முதற்கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது
13. தொழிற்சங்கங்களின் பலவீனத்தை  இப்படி அப்பட்டமா சொல்லியிருக்க வேண்டாமே துரோகியே

                   நூல் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத் தொகுப்பு ” குகைகளின் நிழலில்  “         ( மலேசியா பல்கலைக்கழகம் மற்றும் கலைஞன் பதிப்பகம் இணைந்து வெளியீட்டது, )

கோவை புத்தக்க் கண்காட்சியில் இறுதி நாளில்

நடைபெற்ற கோவை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.விழாவில் இளஞ்சேரல் வரவேற்றார். பூஅரவீந்திரன் தலைமை உரை நிகழ்த்தினார். கீழ்க்கண்ட 3 நூல்கள் வெளியிடப்பட்டன..    1. சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத் தொகுப்பு குகைகளின் நிழலில்  “         ( மலேசியா பல்கலைக்கழகம் மற்றும் கலைஞன் பதிப்பகம் இணைந்து வெளியீட்டது, ) .2  அன்புசிவாவின் 21ம் நூற்றாண்டு நவீன கவிதைகளில் புதியப் போக்குகள் ( ஆய்வு நூல், காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு ) 3. ஸ்டிப்பன் ஜஸ்வேய்க்கின் ஆட்கொள்ளப்பட்டவன் ஜெர்மானிய நாவல்: தமிழில் லதா ராமகிருஷ்ணன்( ( புதுப்புனல் பதிப்ப்கம் , சென்னை வெளியீடு )
சுப்ரபாரதிமணீயனின் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் மலேசியப் பின்னணீல் உள்ளவை. அவர் பேசியது : உலகம் முழுக்க தமிழர்கள் இன்று வாழ்கிறார்கள். மலேசிய நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உரமாக இருந்தவர்கள் தமிழர்கள். தமிழ் ஆட்சி மொழியாக அங்கு கவுரவம் பெற்றுள்ளது. தமிழை முதன்மை மொழியாக்க் கொண்ட 540 தாய்த்தமிழ்ப்பள்ளிகள் அங்கு அரசாங்கத்தின் முழு நிதி உதவியுடன் இயங்குகின்றன. அகிலன் பால்மரக்காட்டினிலே நாவல், எனது மாலு ஆகிய நாவல் ஆகியவை  அங்கு சென்று கண்ட மலேசிய அனுபவங்களை நாவல் வடிவில் கொண்டிருக்கின்றன.அங்கு கணினி தொழில் சார்ந்து வேலை செய்வோர், பல வியாபாரங்களில் ஈடுபட்டத் தமிழர்கள்,   டூரிஸ்ட் விசாவில் சென்று பணம் சம்பாதிக்கிற ஆசையில் அங்கு முறையற்ற முறையில் வேலை செய்யும் தமிழர்களின் அனுபவங்களை பல எழுத்தாளர்கள் இலக்கியப் படைப்புகளீல் பதிவு செய்திருக்கிறார்கள். மலேசிய தமிழர்களின் இலக்கியப் படைப்புகள் இன்னும் விரிவாய் தமிழகத்தில்  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தமிழகம் மலேசியா இணைப்புப் பாலத்திற்கு அது அடிப்படையாக அமையும்.
  புதுப்புனல் பதிப்பகம்     ரவிச்சந்திரன் தன் பதிப்பக அனுபவங்களைப் பற்றிப் பேசினார். வழக்கறிஞர் நந்தகுமார், அகிலா, அவைநாயகன், பூபாலன், உட்பட பலர் பேசினர். மரபின் மைந்தன் முத்தையா, பேரா.மணி, க.வை.பழனிச்சாமி, சி.ஆர் ரவீந்திரன், சோழநிலா, அம்சப்ரியா உட்பட பலர் பங்கு பெற்றனர். இளவேனில் நன்றி கூறினார்.

                                          கனவு இலக்கிய வட்டம் 
    8/2635  பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

திருப்பூரைப் பற்றி  இயக்குனர்  ஆர் பி அமுதன் எடுத்துள்ள “  டாலர் சிட்டி “  ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் நைரா “ வெளியீட்டு விழா

திருப்பூரில் 21/8/16 ஞாயிறு குறும்பட விழா கனவு சார்பில் நடைபெற்றது ..  ( இடம் : பொன்னுலகம் புத்தக அங்காடி, சுதர்சன் வளாகம், இரண்டாம் மாடி ., பின்னி காம்பவுண்ட் பிரதான சாலை, குமரன் வீதி, திருப்பூர் )
திருப்பூரைப் பற்றி  இயக்குனர்  ஆர் பி அமுதன் எடுத்துள்ள
“  டாலர் சிட்டி “  ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் “ நைரா “ ஆகியவை வெளியிடப்பட்டன. வெளியீட்டில் பொன்னுலகம் குணா, மானூர் ராஜா, இயக்குனர்  ஆர் பி அமுதன், சுப்ரபாரதிமணீயன் ஆகியோர் பங்கு பெற்றனர். மனோகர் தலைமை வகித்தார். ஜோதி நன்றி கூறினார். சுப்ரபாரதிமணியன்  நைரா நாவல் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை   எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு  கலாச்சார அதிர்ச்சி  ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும்   சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. என்றார். இயக்குனர்  ஆர் பி அமுதன் திருப்பூர் பலருக்கு பல விதமான பார்வைகளைத் தரக்கூடியது. தொழிலாளர் நிலையும், பின்னாலாடை வளர்ச்சியும் பற்றி இந்தப் படத்தில் ( டாலர் சிட்டி 77 நிமிடப்படம் )  சில விசயங்களை இப்படத்தில்  எடுத்துள்ளேன். இது குறித்த மாறுபட்டப்பார்வைகள் திருப்பூரின் வளர்ச்சிக்கு உதவும் என்றார். 
செய்தி: கே. ஜோதி ( கனவு இலக்கிய வட்டத்திற்காக.. )

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

சுப்ரபாரதிமணியனின் “ சிவப்புப் பட்டியல் ”   ( அழியும் உயிரினங்கள் பற்றிய நூல் ) வெளியீடு
28/8/16 ஞாயிறு மாலை 5 .30 மணி
அரசு உயர்நிலைப்பள்ளி, மேனன் சாலை, சித்தாபுதூர், காந்திபுரம் பேஉந்து நிலையம் பின்புறம், கோவை
பங்கேற்பில்: ஓசை காளிதாஸ், அவை நாயகன், சந்தோஷ், என்சிபிஎச் மேலாளர் ரங்கராஜன், சுப்ரபாரதிமணீயன்
வருக
சுப்ரபாரதிமணியனின் “ சிவப்புப் பட்டியல் ” 
ரூ65 ., வெளியிடு என்சிபிஎச், சென்னை 
          திருமதி பிரேமா நந்தகுமார் அவர்களின் கடிதம் :

அன்புள்ள திரு சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு
நமஸ்காரம்.
நூல்கள், கனவு இதழ்கள் ஆயிரம் விஷயம் தாங்கி வந்துள்ளன. மிக்க நன்றி.  தங்களது பொறுமை அசாத்தியமானது.  ஆதிவாசிக்கவிதைகள் படிக்கும்போது எப்படி உன்னிப்பாக அனைத்தையும் கவனித்திருக்கிறீர்கள் என்று ஆச்சரியப்படுகிறேன். "பத்து ருபா வெத்தலைக்கு உங்க கிட்ட கை ஏந்தரம்.  எவ்வளவு ஏக்கம், வேதனை, இதுதான் வாழ்க்கை என்று அந்த குமிழிக்குள் முழுகிப்போவது -- என்ன உலகமடா!
இப்பொழுது பணத்தில் புரளும் புரட்டு மனிதர்களைப்பார்த்து மேலும் வ்யிறு  எரிந்திட வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன.

தாங்கள் இது பற்றி  எல்லாம் நிறைய எழுதி வருவதும், மற்றவர்கள் எழுதுவதை ஊக்குவிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது, புது மாதிரியான சிறுவர் கதைகள். என் கணவர் ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி நடத்தும் ஆறு பள்ளிகளுக்கு Hon.correspondent. இன்று பிரச்சினையே பள்ளிப்படிப்பு என்று ஆகிவிட்டது.
குகைகளின் நிழலில்  நூலைக் கடைசியாக எடுத்தேன், ஒரு இனிய அதிர்ச்சி!  எனக்கு சமர்ப்பணம் செய்துவிட்டீர்களே!  நான் செய்ததேதும் இல்லையே!  உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.  சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் -- மலாயா சென்றிருந்தேன்.  உலகத்தமிழ் மாநாட்டில் பாரதி பற்றி பேசும் வாய்ப்பு.  அதைவிட, ஒரு வார காலம் கி.வ.ஜ'; மு.வ., ஐராவதம் மகாதேவன் போன்ற வர்களுடன் பழகும் வாய்ப்பு, இதெல்லாம் நினைவில் மலர்ந்தன. செரம்பான் முதலிய சில இடங்களுக்குப்போய் பேசியது நினைவுக்கு வந்தது.  , ஜெர்மனி, பிரான்ஸ் தேசத்தவர்கள் தமிழில் பேசியது  எனக்கு மிகவும ஆச்சரியமாக இருந்தது. நான் ஆந்திராவிலேயே வளர்ந்து, பிகாரில் வாழ்ந்து வந்ததும் ஒரு காரணம்.
எனக்கு முதுகில் ஏற்பட்ட disc prolapse காரணமாக என்னால் முன்போல் எழுத முடிவதில்லை. இரண்டு மாதங்கள் படுக்கையிலேயே இருக்கவேண்டியதாயிற்று (இதுவரை இப்படி ஏதும் எனக்கானதில்லை) டாக்டர் சிரிக்கிறார்:  மாமி! "வயசை மறந்துடறேளே! " வீட்டு வேலை செய்தும், எழுதியும், படித்தும் பழகிவிட்டது.  கூடியவரை  செய்கிறேன்.  இதுவும் ஒரு பரீக்ஷைதான்! பாஸ் பண்ண முயற்சிக்கிறேன்!
குகைகளின் நிழலில் நான் அறிந்திராத மனிதர்களை, சம்பவங்களை முன் வைக்கிறது.  அதனால்தான் முதலிலேயே எழுதினேன்: நீங்கள் அனுப்பிய நூல்கள் ஆயிரம் விஷயம் தாங்கி வந்துள்ளன.  அதனால் தங்க்ளது கதைகளைப்படிப்பதும் turns out to be an education in sociology!
மீண்டும் நன்றி.
அன்புடன்
பிரேமா நந்தகுமார்

புதன், 24 ஆகஸ்ட், 2016

சிங்கப்பூர் எழுத்தாளர் ஷாநவாஸு
மூன்றாவது கை" சிறுகதைத் தொகுப்பிற்காக நண்பர் ஷாநவாஸுக்கு இன்று சிங்கப்பூரின் முக்கிய பரிசான "ஆனந்தபவன் - மு.கு.ராமசந்திரா விருது" வழங்கப்பட்டது. மனமார்ந்த வாழ்த்துகள்  அவரின் சமீபத்திய நூல் பற்றி..

    ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று-
பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்
                     ---------------------- சுப்ரபாரதிமணியன்
----------------------------------------------------------------------------                                                            ஷாநவாஷின் சிறுகதையொன்றில் “ கறிவேப்பிலை “ கடைக்காரர் கறிவேப்பிலைக் கொத்தை சடக்கென்று ஒடித்து கொசுறு போடும்போது “ வேண்டாம் எங்கள் வீட்டில் கருவேப்பிலை கன்று இருக்கிறது “  என்று அம்மா சிரித்தபடி சொல்லும் வார்த்தைகள் இன்னும் வாடாமல் அப்படியே இருக்கிறது என்று ஆரம்பித்திருப்பார்..
நவாஸிடம் இந்த கொசுறு கறுவேப்பிலை வேலையெல்லாம் இல்லை. முழு கருவேப்பிலைக் கன்றையே கையில் எடுத்துத் தந்து விடுவது போலத்தான் அவரின் விஸ்தாரணமான பேச்சு இருக்கு.
 பரோட்டா, கறி என்று ஓரிரு வார்த்தைகளை தெளித்து விட்டால் போதும் அவர் அதுபற்றியெல்லாம்  விரிவாக, சுவரஸ்யமாகப் பேசிக் கொண்டே இருப்பார்.  அந்த வார்த்தைகளின் நதிமூலம் , அர்த்தம், கலாச்சாரம், அது தொடர்பான வெவ்வேறு கூறுகள் அவரின் பேச்சு விரியும். அவரின் உணவுக்கடைக்குப் பெயர் கறி வில்லேஜ்.

 அவர் கடையில் அதிகம் சாப்பிடக்கொடுக்கவில்லை. ஒரு மதியத்தில் நன்கு சாப்பிட்டு விட்டு பின்னதான அரைமணி நேரத்தில் சென்றிருந்தேன்.  சாப்பிட ஆசை இருந்தாலும் முடியவில்லை.  கறி என்பதற்கு விளக்கம் கேட்டால் 10 பக்கங்களுக்கு விபரங்கள் தந்து விடுவார். அப்படித்தான் பரோட்டா பற்றி அவர் சொல்வதும்.பரோட்டாவை முன்னிருத்தி அது தரும் கனவுகள், கற்பனைகள், அறிமுகப்படுத்தும் மனிதர்கள், பரோட்டாவும் மனிதர்களும் தரும் சுவையான அனுபவ எண்ணங்களை ஒரு நூலாய் வடிவமைத்திருக்கிறார்.

 நம்மூரில் சிங்கப்பூர் பரோட்டா, மலேசியா பரோட்டா என்று ஆரம்பித்து பாக்கிஸ்தான் பரோட்டா கூட வந்து விட்டது. பாகிஸ்தான் பரோட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சமீபத்தில் வேலூர் அருகே ரகளை செய்த்து சமீபத்திய செய்தி.

பரோட்டாவுக்கு  எதிராக தமிழ்நாட்டில் ஒரு பெரிய இயக்கமே நடந்து வருகிறது. மருத்துவர் கு.சிவராமன் இதில் முக்கியப்போராளி.  நான் பரோட்டாவைப் பற்றி நினைக்கிற போது அவர் பேச்சு மனதில், கண்ணில் வந்து பரோட்டா சாப்பிடுவதை மறுக்க வைக்கும். ஆனால்  பரோட்டா பற்றி ஷாநவாஸ் பேசும் போது  சாப்பிடத்தோன்றும்.  தமிழ்நாட்டில் அய்ந்தாம் தர ஆட்டா மாவு பரோட்டாவுக்குப் பயன்படுகிறது  சிங்கப்பூரில் நாங்கள் பயன்படுத்துவது முதல் தர மாவு. தமிழ்நாட்டில் அந்தக் குரலுக்கு நியாயம் இருக்கிறது. அவர் பேச்சிற்குப் பின்னால் ஒரு வாய்  பரோட்டா அள்ளிப்போட்டுக் கொண்ட போது அவருக்கு ஒரு ஜே ( ஜெ. அல்ல )போடத்தோன்றியது.நாம் எதைச் சாப்பிடுவது என்பதையார் முடிவு செய்வது. விவசாயி, தரகன், மருத்துவர், சமையல்காரர், போகும் உணவகம் என்ற பட்டியலில் 50 சதம் விருப்பம் மட்டுமே நம்முடையது. என்கிறார் அவர்.  இயற்கை உணவிற்கு ஆதரவு இயக்கம் பல இடங்களிலும் பரவி வருகிறது. முட்டை, பால் முதல் எல்லாவற்றிலும் ரசாயனக்கலப்பு, கோழிக்கறி சாப்பிடுவதால் 7 வயதில் பெரியவர்கள் ஆகும் பெண் குழந்தைகள், சிறுமிகள். உடம்பைக்காக்க, எடையைக்குறைக்க ஆரோக்கியமாய் வாழ  என்று தேவையான  இயற்கை உணவை 3% மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் இதை புணர் ஜென்ம வேளான்மை  என்கிறார் இவர்.  மனிதர்கள் பணத்தைச் சாப்பிட முடியாது என்று உணரும்போது அவர்களுக்கு வயதாகி விடுகிறது என்கிறார்.  சாதாபாவா, அண்டா பாவா, அம்பாசிக்  ( சாதா , முட்டை, சதுரப் பரோட்டாக்கள் ) என்று ஆரம்பித்து சுவைக்குள் நாக்கைக் கொண்டு வந்து விடுவார் ஷா.  6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். புரோட்டா பற்றிய அனுபவங்கள கவிதை என்று ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார் சமீபத்தில் ( சுவை பொருட்டன்று )இந்நூலில் ஒரு சவுகரியத்திற்கு  கவிதை என்று பெயர் இட்டிருக்கிறார். பரோட்டா என்ற வஸ்துவை சிங்கப்பூர் சமூகம் எதிர் கொள்வதைச் சொல்கிறார். சத்துக்கோசம், சத்துளேர் ( உயர்ந்தவை ) என்கிறார்.காதலி போட்ட மோதிரம்  இடஞ்சல், கழற்று  என்று அதிகாரம் செய்ததால் பரோட்டா உருட்டுவதிலிருந்து வேறு வேலைக்குப் போகிறவன்,  80 வயதிலும் பரோட்டா சாப்பிடுகிறவர், எல்லா நடைகளும் பரோட்டா கடையை நோக்கி செல்வது , அந்தந்த புரோட்டாவின் ருசியை அடுத்தப் பரோட்டாவில் தேடுதல் பெரும் பிழை போன்ற அனுபவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறார். பல சொற்களில் வாழ்கிறது பசி என்று பல   பரோட்டா ருசியை உடம்போடு வளர்த்த மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார்..மூச்சைப்பிடித்து விசிறினாலும்/பக்குவமாய்  புரட்டி எடுத்தாலும் கடைசி நிமிடத் திருப்பத்தில்தான் நேர்கிறது புரோட்டாவின்  அடையாளம் “  என்கிறார்,பசியை பலபேர் பலவிதமாய் வெளிப்படுத்துகிறார்கள். அவசரகதியில், கோபத்தில் ,  பசியின் உடசத்தில் கூட . பல சொற்களில் வாழ்கிறது பசி என்கிறார்.

பரோட்டா எதிர்ப்பாளர்கள் கூட பரோட்டா என்பதற்கு பதிலாய், திணை, சாமை, மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு தோசை என்று கூட நிரப்பிக் கொண்டு இக்கவிதைகளைப் படித்து சுவாரஸ்யப்படுத்திக்கொள்ளலாம.
ஷா தோடம்பழம் “ என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ( மூன்றாவது வலது கை என்ற தொகுப்பில்)  ஒரு பழத்தை முன் வைத்து மனித உறவுகளுக்குள் அது செய்யும் வித்தையைச் சொல்கிறார். அக்கதையின் இறுதி வாக்கியம் இப்படி முடிகிறது “ திஸ் ஒன் சுவீட் “ என்று பொதுமைப்படுத்துவார். அதைத்தான்  பரோட்டா நூலிலும் சொல்லியிருக்கிறார். “ ஒவ்வொரு முறையும்/ முதல் பேடாவைத் தட்ட ஆரம்பிக்கும்போது ஒரு விளையாட்டை புத்தம் புதிதாய் அணுகுவது போல் என்றும் இருக்கிறது  என்பதை அவரின் படைப்புகளை தொடர்ந்து கவனிக்கிற போது எல்லா இலக்கியப் படைப்புகளையும் இப்படித்தான் அணுகுகிறார்  என்பதும் தெரிகிறது.
இத்தொகுப்பைப் படித்து விட்டு  பரோட்டா  சாப்பிடாமல் இருந்தால் எப்படி. ..டுவா கோஸா “ ( இரண்டு பரோட்டா  ) என்று ஆர்டர் தரலாம் உடனே.

. ( சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள் ஹாநாவஸ் வெளியீடு, சிங்கப்பூர் விலை 25 சிங்கப்பூர் வெள்ளி )

-------------சுப்ரபாரதிமணியன்

                                          கனவு இலக்கிய வட்டம் 
    8/2635  பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

திருப்பூரைப் பற்றி  இயக்குனர்  ஆர் பி அமுதன் எடுத்துள்ள “  டாலர் சிட்டி “  ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் நைரா “ வெளியீட்டு விழா

திருப்பூரில் 21/8/16 ஞாயிறு குறும்பட விழா கனவு சார்பில் நடைபெற்றது ..  ( இடம் : பொன்னுலகம் புத்தக அங்காடி, சுதர்சன் வளாகம், இரண்டாம் மாடி ., பின்னி காம்பவுண்ட் பிரதான சாலை, குமரன் வீதி, திருப்பூர் )
திருப்பூரைப் பற்றி  இயக்குனர்  ஆர் பி அமுதன் எடுத்துள்ள
“  டாலர் சிட்டி “  ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் “ நைரா “ ஆகியவை வெளியிடப்பட்டன. வெளியீட்டில் பொன்னுலகம் குணா, மானூர் ராஜா, இயக்குனர்  ஆர் பி அமுதன், சுப்ரபாரதிமணீயன் ஆகியோர் பங்கு பெற்றனர். மனோகர் தலைமை வகித்தார். ஜோதி நன்றி கூறினார். சுப்ரபாரதிமணியன்  நைரா நாவல் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை   எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு  கலாச்சார அதிர்ச்சி  ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும்   சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. என்றார். இயக்குனர்  ஆர் பி அமுதன் திருப்பூர் பலருக்கு பல விதமான பார்வைகளைத் தரக்கூடியது. தொழிலாளர் நிலையும், பின்னாலாடை வளர்ச்சியும் பற்றி இந்தப் படத்தில் ( டாலர் சிட்டி 77 நிமிடப்படம் )  சில விசயங்களை இப்படத்தில்  எடுத்துள்ளேன். இது குறித்த மாறுபட்டப்பார்வைகள் திருப்பூரின் வளர்ச்சிக்கு உதவும் என்றார். 
செய்தி: கே. ஜோதி ( கனவு இலக்கிய வட்டத்திற்காக.. )

திருப்பூர் : டாலர் சிட்டி ஆவணப்படம்
இயக்குனர் ஆர்.பி. அமுதன் ..விமர்சனம் 1:
தலித் பிரச்சினைகள் பற்றி முகத்தில் அடிக்கிற மாதிரி பல படங்கள் எடுத்த நீங்க இவ்வளவு மேம்போக்கா திருப்பூரைப் பத்தி ஏன் படம் எடுக்கணும். தொழிலாளி, முதலாளி, தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருமே அன்னிய செலவாணியை குறிக்கோளா வெச்சு சமரசமா இயங்கற ஊர்லே, இதுலே நீங்களும் சமரசம் பண்ணீட்டீங்களா 

3. காலாவதியான மார்சியம், காணாமல் போன காந்தியம் .. இதையெல்லாம் தூக்கி பிடிச்சிருக்கீங்க  ..துக்கம்..தூக்கம் .

4.,  பனியன் தொழிலாளி வீட்டு கண்ணாடிப்புட்டி மீன் , முதலாளி வீட்டு வாஸ்து 50 ஆயிரம் ரூபாய் தொட்டி மீன்... கேட்பாரற்று கிடக்கும்  நெசவுப் பாவடிக் கற்கள்... அபாரமான குறியீடுகள்.... அபாயமான குறியீடுகள்.
5. கூட்டுக் களவணித்தனம்: தொழிற்சங்க உணர்வு இல்லாதத் தொழிலாளி,  சுரண்டலுக்கு பேர் போன முதலாளி, சந்தா வசூலிக்கிற தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருக்குமே அன்னிய செலவாணிதா  குறிக்கோள்.எல்லாரும் சேந்து பண்ற திருப்பூர் கூட்டுகளவணித்தனத்தே  நாசுக்கா சொல்லீட்டீங்க.
6. சேரிக திருப்பூர்லே வளர்ந்திட்டே இருக்கு. பின்னலாடையிலே  சுமங்கலித்திட்டக் கொடுமை வந்திருச்சு. வட மாநில பெண்கள் வார இறுதிகள்லே விபச்சாரத்துக்கு பயன் படற நிலை.இதியெல்லா சொல்லாமா திருப்பூரைப் பத்தி படம் என்ன வேண்டிக்கிடக்கு....குணா
7. பாரீசின் சொகுசுத்தனம், ஆப்ரிக்காவின் வறுமை திருப்பூர்லே இருக்கு. இந்தப் படத்திலெ இதெல்லா இல்லே. திருப்பூரைப் பத்தின வெறும் அறிமுகம்.
8. திருப்பூரைப்பத்திச் சொல்றப்போ மோடியில வந்து ஏன் முடியணும். மோடி காய்ச்சல் உங்களுக்கும் இருக்கு.. நேரடியான படமல்ல..முழுமையில்லாத படமல்ல.
9. motivateபண்ற படம்.     Quiet, subtle    பார்வை.  . converted audience, non-converted audienceக்கான யுத்தம்  திருப்பூரைப் பத்தின விமர்சனம் இல்லை.  
10. பனியன் தொழிலாளி, கைத்தறி நெசவுத்தொழிலாளி, பவர்லூம் தொழிலாளிகளோட பார்வை இருக்கு. தமிழ் டப்பிங் பார்த்து மகிழ்ச்சியா இருக்கறதா ஒரு சின்னத்திரை வசனம் வருது. அதுதா திருப்பூர் உள்ளூர் வாசிகளின் நிலைமை.
11. கபாலி இயக்குனர் பா. ரஞ்சித் பார்வையிலே தலித் அம்சம் இருக்கும், உங்களதும் தலித் பார்வை, விளிம்பு நிலைப் பார்வை இருக்கும்.  அது இதிலெ மிஸ்ஸிங். ஆனாலும் மகிழ்ச்சி.

12. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்ட கால நிலைமை அவர்களின் வாழ்நிலையைச் சரியாகக் காட்டுகிறது. இயக்கமில்லாமல் நிற்கும்  விசைத்தறி மனதை உறுத்துகின்றன. ( போராட்ட கால கஞ்சித் தொட்டி சம்பவங்கள் பேசில்லாமல் பலவற்றை உணர்த்தி போகின்றன ) நெசவாளர்களின் சுதந்திரமான தொழில் நிலை கதர் முதற்கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது

சனி, 13 ஆகஸ்ட், 2016

குழந்தைகள் புத்தகக் கண்காட்சி 

காலை பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் …..
ஓவியர் மேட்டுப்பாளையம் தூரிகை சின்ராசு ” ஓவியக்கலையும் இலக்கியமும் “என்ற தலைப்பில் பேசினார். “ எல்லா மொழிகளுக்கும் பொதுவாக விளங்கும் மொழி ஓவியம். அது மனதின் சிறந்த வெளிப்பாடு.. அரசியலோ, சமூக நிகழ்வுகளோ ஓவியம் மற்றும் கேலிச்சித்திரங்கள் மூலம் விமர்சிக்கப்படுவதைப் போல் . எங்கும் வெளிப்பட்டதில்லை.ஓவியம் கலைகளில் மிகவும் முக்கியமானதும் தலைசிறந்ததும் பழமையானதும் கூட . அது எப்போதும் , கணிணி யுகத்திலும் உயிர்ப்போடு இருப்பதற்குக் காரணம் அது இதயத்திலிருந்து வெளிப்படும் நேரடி மொழியாக இருப்பதுதான் “ என்றார். 

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ” குழந்தை இலக்கியம் “ பற்றிப் பேசியது: ” தமிழ் நாவலுக்கு 130 வயதாகிறது .அதில் குழந்தை நாவலுக்கு மிக முக்கியப்பங்கு உள்ளது .கவிதை, பாடல் என்றிருந்த தமிழ் இலக்கியக் போக்கு மேற்கத்திய இலக்கியங்களின் பாதிப்பில் நாவல் வடிவத்தை எடுத்தது. சுதந்திர எழுச்சி வேண்டிய நாவல்கள், திராவிட பகுத்தறிவு கருத்து நாவல்கள், யதார்த்த நாவல்கள்., நவீனத்துவ நாவல்கள் என்று வளர்ந்து இன்று இந்திய இலக்கியத்தின் முக்கிய பகுதியாக தமிழ் நாவல் விளங்குகிறது. விளிம்புநிலைமக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் இன்றைய நாவல்கள் விளங்குவது சிறம்பம்சமாகும்.. அதில் கொங்கு நாவல்களின் பங்கு உலகமயமாக்கலில் பாதிக்கப்பட்ட, நுகர்வு சார்ந்த மக்களின் வாழ்க்கையைச் சரியாகச் சொல்கிறது. தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் முதல் இன்றைய நவீன நாவல்கள் வரை மக்களின் குரலாக தமிழ் நாவல் இடம் பிடித்திருக்கிறது. அதிலும் குழந்தை நாவல்களில் கொங்கு நாட்டைச் சார்ந்த பூவண்ணன் போன்றோரும், குழந்தைப்பாடல்களில் கோவையைச் சார்ந்த செல்வகணபதி, அழகுதாசன் போன்றோரும் உயர்ந்த சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். “ என்றார்
ஆசிரியை மோகனப்ரியா நன்றி கூறினார். 

17/8/16 வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. வரும் நாட்களில் ” கதை சொல்லி “ நிகழ்ச்சிகள், பறவைகள் உலகம் காணொளி கண்காட்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ” புத்தக வாசிப்பு “ போன்றவை நடைபெற உள்ளன. சுற்றுச்சூழலாளர் சின்ன சாத்தன்., பின்னல் சவுந்தர பாண்டியன், பாரதி, , செந்தமிழ்வாணன், சு.மூர்த்தி., , மகேந்திரன் , , கராத்தே நாட்ராயன், ஓவியர் மருதபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.பாரதி புத்தகாலயம், என்சிபிஎச்,, என்பிடி போன்ற பதிப்ப்கங்களின் குழந்தை நூல்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
Photos : In Face book : Kanavu Subrabharathimanian Tirupur

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

தினமணியில் வந்திருக்கும் என் கட்டுரை
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்
சுப்ரபாரதிமணியன்

பகீரென்கிறது.
உள்ளூர் ஜனகூட்டத்தில் அந்நிய முகங்கள் தென்படுவது அதிகரித்துக் கொண்டே போவது உள்ளூர் மண்ணின் மைந்தர்களுக்கு பகீரெனப் பயம் கொள்ளவே வைக்கிறது.
எங்கும் அந்நிய முகங்கள் எல்லாவற்றிலும் அந்நிய பதிவு என்பதைத் தவிர்க்கவே முடியவில்லை சாதாரண உள்ளூர் மக்களால்.
இடம்பெயர்ந்து வேலைக்காக வந்து பெரு நகரங்களில் குவிந்திருக்கும் அந்நியமுகங்கள் வயிற்றுப்பாட்டுக்காகவே வந்து கூலிகளாக, கொத்தடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா பெரு நகரங்களிலும் 25% அதிகமானவர்களாய் இவர்கள் குவிந்திருக்கிறார்கள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி இந்தியாவின் எந்தப்பகுதியினரும் எந்தபகுதிக்கும் வேலை வாய்ப்புக்காக செல்வதற்கும், குடியேறுவதற்கும் உரிமை உண்டு. நீ யார் இங்கு வர என்று கேள்வியெழுப்ப முடியாது.
உலகமயமாக்கலில் உலகமே பெரும் சந்தை. சந்தை வணிகத்திற்காக யாரும் எங்கும் செல்லலாம். உலகமயமாக்கல் விவசாயம், சிறு தொழில்கள், கைத்தொழில்களை முடக்கி கிராம மக்களை பெரும் நகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயர வைக்கிறது. முன்பு கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து இளம் பெண்களும் ஆண்களும் இப்படி வந்தனர். இப்போது வட மாநிலத்திலிருந்து பீகார் , ஒரிசா, நேப்பாளம், வங்காளம் என்று பல பகுதி மக்களும் இந்தியப் பெருநகரங்களில் குடியேறியிருக்கிறார்கள். போர், கால நிலை மாற்றம், அகதி நிலையெல்லாம் மக்களை இடம் பெயர வைக்கும் என்ற வரையறை உடைந்து போய் காரல் மார்க்ஸ் வகைப்படுத்தாத, கண்டுபிடிக்காத தொழிலாளர்களாய் இவர்கள். ..கார்ப்பரேட்டுகளின் கூலி பொம்மைகள்இவர்கள். இந்தி படி . வேலை கிடைக்கும்.வட நாடு போய் பிழைத்துக் கொள்ளலாம் என்பதெல்லாம் போய் படித்த, படிக்காத வடநாட்டினர் தமிழ்நாட்டில் குவிந்து விட்டனர். வடமாநிலங்களில் பொருளாதார சிரமங்கள், இங்கே வந்தால் வேலையும் உண்டு. ஜாதிய முத்திரையும் ஒழிந்து போகும். அங்கு உய்ர்சாதி, தாழ்த்தப்பட்டவன் என்ற அடையாளங்களுடன் உலவி வந்தவனுக்கு சுதந்திரம் இங்கு. சோற்றுக்கமைந்து விடும் வாழ்க்கை அவர்களுக்கு இங்கு வந்த பின்
. நம்மவர்கள் உடல் உழைப்புக்குத் தயாரில்லாத இடங்களில் அவர்கள் சுலபமாக அமர்கிறார்கள். கூலியும் எப்படியும் குறைத்துக் கொள்ளலாம். தொழிலாளி அந்தஸ்து யாருக்கு வேண்டும். தொழிலாளி உரிமைகள் தேவையில்லை. கோதுமை மாவு மூட்டைகள், உருளைக்கிழங்கு மூட்டைகள் அவர்களுக்குப் போதும். கால்களை நீட்டிப் படுத்துக் கொள்ள பத்தடி நீளம், இரண்டடி அகல இடம் போதும். அதற்குள்தான் கலவியும் காமமும்.
நிரந்தரத் தொழிலாளி அந்தஸ்து வேண்டாம், ஒப்பந்தத் தொழிலாளி அடையாளம் போதும், தினசரி கூலியாள் முத்திரை போதும். உலக முதலாளித்துவம் கொத்தடிமைகளை சுலபமாய் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அடிமைத்தனம் ஒழிந்து தொழிலாளர் நிலை வந்தது. உலகம் உருண்டை. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் கோரம்.
பெருநகர வாழக்கை அவர்களுக்கு ஏசி அறை, வால்மார்ட் சட்டை, கெண்டகி சிக்கன், கோக்கோகோலா வழங்கும் என்ற எதிர்பாப்பில் கனவு காணவும் அவகாசம் கிடைப்பதில்லை. அவர்களுக்கான விதிமுறைகளும் சட்டங்களும் காகிதங்களில் மட்டுமே உள்ளன. அடையாள, ஆதார் அட்டைகள் கூட மறுக்கப்பட்டவர்கள். எங்கும் அரசே அடிமைகளை உருவாக்க தொழில்களைப் பிரித்துப் போட்டு விட்டது. இதில் சர்வசிக்‌ஷா அபியான் ஆசிரியர்கள், நெடுஞ்சாலை ஊழியர்கள், சத்துணவு, ரேசன் கடை ஊழியர்கள் என்று சகலமானவர்களும் அடைக்கலமாகிற போது இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அதில் இடமில்லாமல் போய் விடுமா என்ன..அவர்களின் அடுத்தத் தலைமுறைக்கும் கூட. சகலவர்களும் அமைப்பு சாராத தொழிலாளர்கள் என்ற கூரைக்கு கீழே.
சர்வசிக்‌ஷா அபியான், கல்வி உரிமைச் சட்டம் 2009 போன்றவை எல்லாக் குழந்தைகளுக்குமான கல்வியை வலியுறுத்தினாலும் இடம்பெயர்ந்து வந்து வேலை செய்யும்தொழிலாளர்களின் ஏழை குழந்தைகளின் கல்விநிலை பெரும் கேள்விக்குறி இப்போது.
சுலபமாய் அவர்களுக்கு குழந்தைத் தொழிலாளர் அட்டை கிடைத்து விடும். ஆதார் அட்டைக்கும் அவர்கள் விண்ணப்பிக்கலாம். உடம்பில் ஆடைகள் இருந்தால் அதுவே அடையாள அட்டையாகி விடும்.
உயிர் வாழ ஏதாவது அட்டை அவசியம். இரத்தத்தை உறிஞ்ச முதலாளித்துவ அட்டைகள் எப்போதும் தயார்தான்.
திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.
இடம்பெயர்ந்து வந்து வாழும் தொழிலாளர்கள் மண்டியிட்டு தங்களை ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பலி கொள். தலையை எடுத்துக் கொள் என்கிறார்கள். மீண்டும் மீண்டும் தலைகள் அவர்களுக்கு முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

புதன், 3 ஆகஸ்ட், 2016

சுப்ரபாரதிமணியன்   எழுதிய சிறுவர்களுக்கான நூல்
             “ கதை சொல்லும் கலை “   பற்றி..
கோவை ஆனந்த் சின்னசாமி
A book on importance of story telling & it's techniques. Today's gadget world had taken away kids' time & energy, leaving them unproductive & fatigue. Still they are dissatisfied & feel bored. outdoor games & story telling are good solutions to these current issues faced by most parents, especially with dual income families without grand parents . It enhances creativity & imagination , enables communication skills, develops interpersonal bondage etc. Highlights of this book -(1). the techniques are backed with short stories to explain better . (2). The font size is big enough to elders, who are the target readers.
                திருப்பூரில் 21/8/16 ஞாயிறு
          ஒரு நாள் குறும்பட விழா கனவு சார்பில்..
ஒருங்கிணைப்பு : ஆர் பி அமுதன்
அவரின் “  டாலர் சிட்டி “  உட்பட
இவ்வாண்டு திரையிடப்போகும் படங்களின் பட்டியல் விரைவில்.
காலை பத்து மணி முதல்...
இடம் : பொன்னுலகம் புத்தக அங்காடி, சுதர்சன் வளாகம், இரண்டாம் மாடி ., பின்னி காம்பவுண்ட் பிரதான சாலை, குமரன் வீதி, திருப்பூர்.
----------------------------------------------------------------------------------------------
சென்றாண்டு நடந்த விழாவில்
திரையிடப்பட்ட படங்களின் பட்டியல் :
1.Mercury in mist –doc.On Kodaikanal envi. Issues
2. Highways doc. Dir . Amudan on highways activites on deve.
3.Gaon chodah hanin –Doc. North eastern
4. Omul ( human) Sf..Dir Drodtloff
5. Yaadhum .. doc –Dir Anwar
6. Final solution doc.Dir Rakesh Sharama
7.viratnam sf
8 Three of us Docu –on handihapped
9. Kodai music video dir: sofia asraf,
10 Good story sf
11. Ant story – sf-exploitation of children on sex
12.Tawaaz –on muslims -doc
13. My name is Palaru_ doc Dir .RR Srinivasan
14.Start Mexico film doc.
15raththassuvadu –doc on salem prisoners
16.kasadar karkaa –sf