சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 24 பிப்ரவரி, 2016

நூலின் முன்னுரை:சுப்ரபாரதிமணியன்
பறந்து மறையும் கடல் நாகம் : ஜெயந்தி சங்கர் கட்டுரைகள் நூல்

==========================================================
நான் வெகு சமீபத்தில்  பார்த்த ஒரு சீன ஆவணப்படத்தை இங்கு நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
சீனாவில் தற்போதைய  மக்கள் தொகையில் 32 மில்லியன் பையன்கள் பெண்களைவிட அதிகமாக  ( இருபது வயதிற்குட்பட்டவர்களில்)  அதிர்ச்சியைத் தருகிறது.இந்த விகிதம் இந்தியாவிலும் காணப்படுவதிப்பற்ரிய்ச் செய்திகள் சமீபத்தில் அதிகரித்திருக்கின்றன. கருச்சிதைவும், குழந்தைகளின் வளர்ப்புச் சிரமங்களும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. திருமண வயதையொட்டிய ஆண்களின் பெண் தேடலில் இது சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. பெண் குழந்தைகளை வீட்டில் பள்ளி வயதிற்கு முன் பூட்டி வைத்து பாதுகாப்பது, பள்ளிக்குப் போக விடாமல் வீட்டிலேயே இருக்கச் செய்வது, என்று பல அசாதாரண நடவடிக்கைகளும்  சில சமயங்களில் காணப்படுகிறது.

     பள்ளி வகுப்பறையில் பிறக்காத குழந்தைகளின் ஆவிகள் உலவுவது பற்றிய பலகதைகள் உலவுவதாகச் சொல்கிறார்கள். சீனர்களின் சம்பிரதாய மூடநம்பிக்கைகளுக்கு அவை நல்ல உரமாக உள்ளன.
அதே சமயம் ஆண்கள் துணை இல்லாமல், திருமணம் செய்யாமல் வாழும் பெண்களின் எண்ணிக்கை ஜந்து ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் 51% ஆக இருந்தது.4 கோடி இளம் அமெரிக்கப் பெண்கள் தனித்தே வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.

சீனாவிலும் இரண்டு கோடிக்கு அதிகமாக இளம் பெண்கள் திருமண வாழ்க்கையைத் தேர்வு செய்யாமல் தனித்து வாழ்கிறார்கள். இப்படி திருமண வாழ்க்கையை மேற்கொள்ளாமல் வாழ்ந்து தங்களின் முதுமையை ஆடைந்திருக்கும் முதியவர்கள் பற்றி  வெளியாகியிருக்கும் ஆவணப்படம்
  Living without Men’   சீனாவில் இருந்து வெளிவந்துள்ளது.
இப்படத்தில் தொழிலாளர்களாக ஜவுளி மில் தொழிற்சாலைகளுக்கு பெண்கள் இருபது வயதிற்குப் பிறகு செல்ல நேர்கையில், திருமணம் செய்து கொண்டால் மில் வேலை பறிபோகும் என்பதால் பலர் வேலைக்குப்போய் சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்றும் உந்துதலில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிறார்கள். கணவனாக வருகிறவன் குடிகாரனாக, தறுதலையாக இருந்தால் வாழ்க்கைச் சீரழிந்துவிடும் என்று பயப்பட்டும் சிலர் திருமணத்தைத் தவிர்த்ததால் இந்த தள்ளாத வயதை அடைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.
இந்த படத்தில் இடம் பெற்ற முதியவயதுப் பெண்கள் சாப்பாடு கேரியருக்காக காத்து சலிக்கிறார்கள். சதுரங்கமோ, உருட்டை ஆட்டமோ ஆடி பொழுதைக் கழிக்கிறார்கள். ஒரு முதியவள் ஆக்ஸிஜன் சிலிண்டரை தயாராக வைத்துக் கொண்டு மூச்சுத் திணறும் போது ஆக்ஸிசன் முகமூடியை அணிந்து கொள்கிறாள். மருத்துவ ஊசிபோட, குளுகோஸ் செலுத்த வரும் தாதியர்களுடன் பேசுவது சிலருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. தொடர்ந்து புகைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள். துணிகளைக் காயப்போட்டு அவற்றோடு உறவாடும் முதியவர்களும் இருக்கிறார்கள்.
சீன பெண்களின் திருமணத்தின்போது தலைகோதுவது, தலைபின்னிவது ஒரு முக்ய சடங்காக இருக்கிறது. இந்த தலை பின்னும் சடங்கை நிராகரித்தவர்களே இன்று முதிய இல்லங்களில் தங்களின் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சடங்கை நிராகரித்தபின் அவர்களை திருமணத்திற்குக் கூப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். வசந்தகாலத் திருவிழாக்களில் இப்பெண்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. பிறரைக் காதலிப்பதாக அறிவிக்கிறப் பெண்களும் ஓதுக்கப்படுகிறார்கள்.
           ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணாவது இப்படி திருமணத்தை நிராகரிப்பவளாக இருப்பது ஒரு சடங்காகி விட்டது. இது ஒரு ‘பேஷன்போல பெண்கள்  மத்தியில் இருந்த காலமுண்டு. எங்கள் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாகப் பெண்கள் திருமணத்தை நிராகரிப்பது நடந்திருக்கிறது. இந்த தொண்ணூறு வயதில் எனக்கு இப்போது நப்பாசையாக இருக்கிறது. திருமணம் செய்து கொண்டிருக்கலாமே என்று நாற்பது வயதிற்கு மேல் என்னுடன் இருந்தவர்கள் , மனைவியை இழந்தவர்கள், அரசியல் கைதிகள் போன்றோரை திருமணம் செய்திருக்கிறார்கள்”  என்கிறார் ஒரு முதிய பெண். அவள் வாயில் சிகரெட் புகை.

ஜடைபின்னும் சடங்கை நிராகரித்த இந்தப் பெண்கள் முதியவர்களாகி காலத்தைக் கடத்துகிறார்கள். ஜடை பின்னும் சடங்கு திருமண இரவிற்கு முந்தின நாளில்  நடைபெறுவதாகும். புது ஆடைகள் உடுத்திய மணப்பெண் நிலாவொளியில் உட்கார்ந்து கொள்ள இது நடக்கிறது. அல்லது பெரிய கண்ணாடி முன் உட்கார வைத்துச் சடங்காகிறது. ஜடை பின்னலின் போதான முதல் முடிச்சு திருமண உறவை வலியுறுத்துகிறது. இணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை இரண்டாம் பின்னல் முடிச்சு வலியுறுத்துகிறது. குழந்தைகளை நன்கு வளர்க்கிற அவசியத்தையும், முதுமையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டியதை பின்முடிச்சுகள் தெரிவிக்கின்றன.

முதிய வயதில் முடி உதிர்ந்து நரைத்தக் குட்டை ஜடையைத் தொட்டபடி சிலர் நினைவுகளில்  அப்படத்தில் அமிழ்ந்து போகிறார்கள்..
         சீனாவைப் பற்றிய தகவல் என்ற ரீதியில் இது ஒரு சாம்பிள்.
                            சீனாவைப்பற்றி  , அதன் வரலாறு, கலாச்சாரம், தொன்மம் , இலக்கியம்  என்று ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் எழுதியிருப்பவர்  ஜெயந்தி சங்கர் அவர்கள். . சீனாவை இது போல் திரைப்படங்கள்,  லூசுன் போன்றோ ரின் எழுத்துக்கள் மூலம்  சொற்பமாகவே அறிந்திருக்கிறேன். சிங்கப்பூர் சென்ற போது அங்கு தென்பட்ட சீனப்பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும்  அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுத்தியது. கொஞ்சம் எழுத ஆசை வந்தது. 15 வருடங்கள் முன்பு இணைய தளம் சரியாக புழக்கத்தில் இல்லாத காலம் . நண்பர் ரெ.பாண்டியன் சில தகவல்களைக் கொடுத்திருந்தார்.(இப்போது எங்கிருக்கிறீர்கள் நண்பரே...சிங்கப்பூரிலா) ஒரு குறு நாவலுக்கு முயன்று விட்டு விட்டேன்.ஜெயந்தி சங்கர் தொடர்ந்து சீனா சமாச்சாரங்களை எழுதும் போது சந்தோசமாக இருக்கிறது. கம்யூனிச நாடு என்று மார் தட்டிக்கொண்டிருந்தது .இப்போது வேறு போர்வையில் முதலாளித்துவ நாடாகிவிட்டது. அள்ள அள்ள தகவல்கள். தோண்ட தோண்ட சுரங்கம். அவ்வளவு கொடுத்து விட்டார் ஜெயந்தி சங்கர் .சீனா விஜயம், சீனா அரசாங்க விருது என்று நாமும் காத்திருப்போம். முன்னதாக வாழ்த்தையும் சொல்லி வைப்போம்.அவையெல்லாம் அவரின் எழுத்திற்கும் உழைப்பிற்கும் தகுதியானதுதான். சிங்கப்பூர் இலக்கியம் அங்கு வாழும் தமிழர்களின் வாழ்க்கையைச் சரியாக  பிரதிபலிக்கவில்லை., பதிவு செய்யவில்லை என்ற் குற்றச்சாட்டு ஒரு காலத்தில் இருந்த்து. அதைப் போக்க அக்கறை எடுத்துக்கொண்டு சில நல்ல படைப்புகளைத்தந்திருப்பவர் ஜெயந்தி சங்கர். அதிலும் குறிப்பாக அவரின் நாவல்கள் சரியாக கவனிக்கப்பட வேண்டியவை. புலம்பெயர்ந்த் அங்கு வாழும் தமிழர்களின்  சூழலை பதிவு செய்திருப்பதாகட்டும், இன்றைய உலகமயமாக்கல் சூழல் பாதிப்பு கலாச்சாரதளத்தில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளாகட்டும் அவரால் சரியாகவே நாவல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையை இடைசெருகலாகப்பயன்படுத்திக் கொள்கிறேன் இங்கே. தலைப்பு:.      சிங்கப்பூரில்  புத்தர்
     
ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருக்கும் வரை சிங்கப்பூர் ஆச்சர்யங்களுக்குக் குறைவில்லைதான். 15 , 25 சிங்கப்பூர் டாலர் செலவழித்து எந்திரன் படத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் , நூறு டாலர் செலவழித்து தேக்காவிலும்  மற்ற இடங்களுலும் அம்மன், முருகன் கோவில்களில் விசேச   பூஜை செய்து திருப்தி அடைந்திருக்கின்றார்.  ரஜினி தெய்வங்களுக்கு நன்றி சொல்கிறார். ரஜினி ரசிகர்கள் அவரை தெய்வம், புத்தர் என்று வர்ணிக்கிறார்கள்.  . ஜெயகோ.
      சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் மொழிபெயர்ப்புப் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கிறபோது இன்னும் ஆச்சயம் குறையாது. வாழுமிடத்து கலாச்சாரம், நம்பிக்கை, தொன்மம் முதற்கொண்டு பலவற்றை கிரகித்து, மொழிபெயர்த்து அவர் இருப்பை நியாயப்படுத்த அவர் செய்யும் முயற்சிகள் ஆச்சர்யப்பட வைப்பவை. சீன நாடோடிக் கடைகள் முதற்கொண்டு தொன்மக்கதைகள் வரை பல  பாலியல் உவ்வே சமாச்சாரங்களை  மிகவும் எளிமையாக மொழிபெயர்த்து  வரும்   அவரின் மொழிபெயர்ப்பு  உட்பட   நூல்களின் பட்டியல் 25 தொடும் சீக்கிரம். அவரின் கடைசி இரண்டு நாவல்கள் மனப்பிரிகை, குவியம்  சரியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவை..சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையை அவ்வளவு கூர்மையாக அவதானித்து நேர்கோட்டுப்பாணி தவிர்த்த வடிவத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.  அவரின் வாழும் புத்தர்  “  என்ற  சமீபத்திய  மொழிபெயர்ப்புக் கதை இப்படி முடிகிறது    ( வடக்கு வாசல் ஜுன் 2011 ) : “  நிச்சயமாக இவ்வுலகில் தெய்வங்கள் இருக்க முடியாது. ஆனால் முட்டாள்தனத்தினால் எதன் மீதாகிலும்  முக்கிய நம்பிக்கை வைக்கவும்  மனிதன் தெய்வங்களை உருவாக்குகிறான். சக மனிதர்கள்  அவனை வண்ங்கும் போது தானும் தெய்வம்தான் என்றே  எண்ணத்தலைபடுகிறான்.  தெய்வமாக நடந்து கொள்ளவும்  ஆரம்பிக்கலாம். மனிதர்களும் முன்பை விட அதிகமாக அவனினை நம்பவும் பைத்தியமாக வழிபடவும்  ஆரம்பிக்கலாம். மக்களுக்குக் தெரியாது அவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது. சொல்லப்போனால் தெய்வமாக்கப்பட்டிருக்கும் மனிதனுமே ஏமாற்றப்பட்டிருக்கிறான். ஆனால், காலம் செல்ல அம்மனிதன் வேறு வழியில்லாமல் தெய்வத்தைப்போலவே நடக்க முயற்சிக்க வேண்டியதிருக்கிறது. இது மக்களை மேலும் முட்டாளாக்கும் வேலை. இதே போன்று ஏமாற்று வேலைகளில் பல்லாண்டுகள் கழிந்து போயின.  அவ்வருடங்கள்  அபத்தங்கள்  நிறைந்தவை. அபத்த வருடங்கள் எல்லாம் போனது போனதுதான். அதே மக்களால்தான் வரலாறும் எழுதப்படும் என்பதுதான் மிகவு வேடிக்கை.ரஜினியை   ரசிகர்கள் மனிதனாயும், தெய்வமாயும் பார்க்க சமீப சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கின்றன.
     ஜெயந்தி சங்கர் தொடர்ந்து அசுரத்தனமாக இயங்குவது  சந்தோசமும்,  பொறாமையும் தருகிறது. எழுத்துச்  செயல்பாட்டில் தொடர்ந்து அக்கறையும், தீவிர மூச்சுச் சிந்தனையும் இல்லாவிட்டால் இது வாய்க்காது.குழந்தைகள், குடும்பம், அலுவலகம் என்பதை மீறி இதை சிந்தித்தாலே  அவரின் எழுத்துப்பணியின்தீவிர  அக்கறை புரியும். அந்த அக்கறையின் இன்னொரு வெளிப்பாடுதான் இந்நூல்.  வழ்த்துக்கள்

                              சுப்ரபாரதிமணியன்   
( ரூ 1000, 1100 பக்கங்கள் , காவ்யா வெளியீடு, சென்னை