சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 19 பிப்ரவரி, 2016


மலேசியா எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவின் படைப்புகள்
கருத்தரங்கம் : 22/2/16 மலேசியா கோலாலம்பூரில் 
---------------------------------------------------


எளிய மனிதர்களின் தன் முனைப்பு      நடவடிக்கைகள்
        
” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து ..   சுப்ரபாரதிமணியன்                 
பச்சைப் பசுங்கோயில் இன்பப்
பண்ணை மலைநாடு
இச்சைக்குகந்த நிலம்என்
இதயம் போன்ற நிலம்
               - சுத்தானந்த பாரதியார் )


  அய்ந்து நாவல்கள் கொண்ட ரெ.கார்த்திகேசு அவர்களின் இத் தொகுப்பை  படித்து முடிக்கிற போது மலேசியாவின் நிலவியல் சார்ந்த பதிவுகளும்கல்வித்துறை சார்ந்த முனைப்புகளும்,முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய மனிதர்களின் ஒரு பகுதியினரும்  மனதில் வெகுவாக  நிற்கின்றனர்.
ரெ.கார்த்திகேசுவின் அய்ந்தாவது நாவலை எடுத்துக் கொள்ளலாம்.” சூதாட்டம் ஆடும் காலம்” இதன் நாயகன்  கொஞ்ச காலம் பத்திரிக்கையாளனாக இருந்து  விட்டுக்  கல்வித்துறை விரிவுரையாளனாகச் செல்கிறான்அப்பாவின் வன்முறையால் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்வி கற்று முன்னேறியவன் அவன்அம்மாவைத்தேடிப்போகிறான்காதலியாக இருப்பவள் இன்னொருத்தனை பணத்துக்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டு  பின் விவாகரத்து பெறுகிறவள் இவனை விரும்புகிறாள்அப்பாஅம்மாக்களை தேடிப்போய் அவர்களின் நோய்மரணம்  ஆகியவற்றில் அக்கறை கொள்கிறான்.
இந்த அம்சங்களை மற்ற நாவல்களிலும் காண முடிவதில் அவர் தன்னை பாதித்த  அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கிற தன்மை காணப்பட்டது.                 .. முதல் நாவலில்  வானத்து வேலிகள்குணசேகரன் இப்படி வீட்டை விட்டு விரட்டப்பட்டவன் மாட்டுத் தொழுவத்தில் வேலை பார்த்து அந்த வீட்டு பணக்காரப் பெண்ணை காதலித்துலண்டன் போய் படித்து பெரும் பணம் சம்பாதித்து ஏழை மாணவகளுக்கு விடுதி ஒன்றை பெரும் செலவில் கட்டுகிறான்மனைவியுடன் உடல் தொடர்பு இல்லாமல் இருக்கிறவன் மகன் தந்த பாடத்தால்   மனைவியுடன் சேர்கிறான்ராணி என்ற குணசேகரனின்உதவியாளர் திருமணம் செய்து கணவனைப்  பிரிந்து கொஞ்சம் குணசேகரனுக்காக தவிக்கிறவள்.              ” தேடியிருக்கும் தருணங்களில் ” நாவலில் நாயகன் அப்பாவின் சாவுஅஸ்தி கரைப்பு என தன் அம்மாவைத் தேடிப் போகிறான்.  அம்மா சாதாரண கூலிக்காரப் பெண்அவளைக் கண்டடைகிறான்.   அந்திம காலம் “ நாவலில் சுந்தரத்திற்கு புற்று நோய்மகள் ராதா கணவணை விட்டு லண்டனுக்கு மகன் பரமாவை அப்பா சுந்தரத்திடம் விட்டு போய்விடுகிறாள்பின் அந்த வாழ்க்கையும் சரியில்லையென்று திரும்புகிறாள்பரமா இறந்து விடுகிறான்.சுந்தரம் புற்று நோயிலிருந்து தப்பிக்கிறார்” காதலினால் அல்லநாவலில்  கணேஷின் பல்கழைக்கழக அனுபவம்ரேக்கிங்,,அத்தை பெண்காதலிப்பவனைக் கட்டாமல் அத்தைப் பெண்ணை கட்டும் சூழல்எல்லா நாவல்களிலும் நோய் சார்ந்த மனிதர்களின் அவஸ்தை இருக்கிறதுஅதிலும் புற்று நோய் என்று வருகிற போது விவரமான விவரிப்பு இருக்கிறதுகல்வி சூழல் சார்ந்த விரிவான அணுகுமுறைபாடத்திட்டங்கள்,பல்கலைக்கழக கல்வியில் இருக்கும் அரசியல்மாணவர்களின் போக்குகள்ரேக்கிங் சித்ரவதைகள் இடம்பெறுகின்றன.அங்கங்கே இடம் பெறும் இலக்கியக் குறிப்புகளும்  சுவாரஸ்யப்படுத்துகின்றனஎளிய மனிதர்கள் படித்து சுய அக்கறையுடன் கல்வியைத் துணைக்கு வைத்துக் கொண்டு லவுகீய வாழ்க்கையில் முன்னேறும் படிமங்களின் சிதறல் எங்கும் காணப்படுகிறது.

வெகுஜன ஊடகங்களில் கல்விக்கூடம் அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டுகுறிப்பாய் திரைப்படங்களில் இளைஞர்கள் இன்று திரைப்படக் கொட்டாய்களுக்கு அதிகம் செல்பவராய் இருப்பதால் அவர்களைப் பற்றிய மேலோட்டமான விசயங்களைக் கொண்ட திரைப்  படங்களே அதிகம் ஆக்கிரமிக்கின்றன,ஆனால் கல்வித்துறையின் இன்னொரு பக்கமாய் இருக்கும் கல்வித்துறை சார்ந்த அரசியல்,மாணவர்களின் போக்குகல்வித்திட்டங்கள்மாணவர் ஆசிரியர் உறவு போன்றவை அதிகம் சொல்லப்படுவதில்லை.இந்நாவல்களில் அதைக்காண முடிவது ஆரோக்கியமானது.
ரெ.கார்த்திகேசு கல்வித்துறையில் பணிபுரிந்தவர் .  கல்வித்துறை சார்ந்த அவரின் விஸ்தாரமான நாவல் அனுபங்கள் வியப்பூட்டுகின்றனஅந்த வகையில் கல்வித்துறை பற்றின முறையான பதிவாகவும் இருப்பது இந்நாவல்களின் பலம்.மலேசியா சூழலின் கல்வித்தன்மைஅவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் கல்விசூழல் குறிப்பிட வேண்டியது.சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிகிறபோது அத்துறை பற்றி படைப்புகளில் வெளிபடுத்துவது பல விமர்சனங்களுக்கும்,அத்துறையினருக்கும்சம்பந்தப்பட்ட மாதிரிகளுக்கும் சங்கடங்களையும் பகைமையையும் உருவாக்கும்அதையும் மீறி கல்வித்துறை பற்றிய அனுபவங்களையே முன்னிலைப்படுத்தி கார்த்திகேசு இதில் இயங்குவது  ஆச்சர்யப்படுத்துகிறதுஅவர் கல்வித்துறையில் பணிபுரிகிறபோது  இவற்றை எழுதியிருக்கக்  கூடும்அப்போது கல்வித்துறையில் எதிர்கொண்ட பல பாத்திரங்களை பலர் இதில் அடையாளம் கண்டிருப்பார்கள்.விரோதமும் கொண்டிருப்ப்பார்கள்.சிக்கலான சூழ்நிலைகளுக்கும் கொண்டு சென்றிருக்கும்அத்துறையில் பணி செய்யும் காலத்திலேயே இவற்றை அவர் எழுதி வெளியிட்டிருப்பதை பாராட்டியாக வேண்டும்.அவ்வனுபங்களைப் படைப்பாக்குகிற தன்மை தெரிகிறது.   புதிய தலை முறை பற்றிய அக்கறை இந்த கதாபாத்திரங்களுக்கு இருக்கிறதுகுழந்தைகளுக்கு ஆங்கில ஆக்கிரமிப்பு மீறி தமிழ் சொல்லித்தரும் தாத்தாக்கள் இருக்கிறார்கள்பழைய இலக்கியங்களில் தோய்ந்து  அவற்றை வெளிப்படுத்தும் பல இடங்கள் உள்ளனமரணம் பற்றிய பயத்தில் பல கதாபாத்திரங்கள்  அலறிக் கொண்டிருக்கிறார்கள் மரணம்  கூத்தாடுகிறதுஇங்கு எல்லோரும் அதன் பேய்ப் பிடியில் இருக்கிறோம்இன்றொன்றும் நாளையொன்றுமாக தனது விருப்பத்திற்கு அது மனிதர்களைக் கொய்து தின்கிறது.இது மரணப் பேயின் விருந்துக்கூடம் என்று தோன்றியது   “ (பக்கம் 551 )
கார்த்திகேசுவின் சிறுகதைகளின் நுணுக்கமான விசயங்கள் இதிலும் உள்ளனஅவரின் சிறுகதைகள் வெகுவாக சமகாலத்தன்மையோடும் நவீன வாழ்க்கைச் சிக்கலோடும் வெளிப்படுபவைஆனால் இந்நாவல்களின் பிரசுரிப்பு காலம்80,90 என்பதால்  அக்கால மாதிரிகள்  மத்திய தர மலேசியர்களின் வாழ்க்கையை மையமாகக் வெளிப்படுத்துபவையாக அமைந்துள்ளன.. அக்கால இலக்கிய சூழலையும் மனதில் கொண்டே இவற்றை மதிப்பிடுவது நியாயமாகும்இந்நாவல்களின்    நேரடிசாட்சியாக இருந்து அனுபவித்திருப்பதை வெளிப்படுத்தியிருப்பதில்  தன்னை முன்னிருத்திய நேர்மை  தென்படுகிறதுவேறு கற்பனை அனுபவங்களைத் தேடிப்போகாமல் தன் அலுவலக அனுபவங்களையே மேலோங்கியபடிச் சொல்லியிருக்கும் பாணி இவரின் தனித்தன்மையானதாக உள்ளது. இன்றைய புது வாசகன்  இதிலிருந்து  சற்றே மாறுபடலாம்ஆனால் அந்த அனுபவங்களைக் கடந்துதானே இன்றைய சூழலுக்கு வந்திருக்கிறோம் என்பதையும் மறக்க முடியாது.. மலேசியா நிலவியல் சார்ந்த பெரும் விவரிப்புகளும்சரளமான  நடையும்  நாவகளை நல்ல வாசிப்பிற்குள்ளாக்குகிறது.மலேசியா பற்றிய    தகவல்களை அள்ளித்தருகிறது.முன்னுரையில் கார்த்திகேசு இப்படி குறிப்பிடுகிறார்.  “ இது பிள்ளைப் பேறுமாதிரிதான்.பிறக்கும்போது என்ன அமைகிறதோ அதுதான் அதற்கு வாய்த்ததுஅடுத்தவர் கையில் கொடுத்த பிறகு இதன் மூக்கைக் கொஞ்சம் எடுப்பாகப் பண்ணியிருக்கலாம்கண்ணை கொஞ்சம் நீடியிருக்கலாம் எனத் தாய் கவலைப்பட்டு பயனில்லை.எழுத்தின் கருத்துகளுக்கு அவனே பொறுப்புஆனால் நாவலின் மொத்த வடிவத்துக்கு அவன் மூளையோடு அவன் சுரப்பிகளும் பொறுப்பு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் “ இவ்வகை திருப்தியின்மையும்சுய விமர்சனமும் எழுத்தாளனிடம் தென்படுவது ஆரோக்யமாக படைப்புத்தளத்தை முன்னகர்த்திச் செல்லும்.முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய வாழ்க்கையின்  அப்போதைய பதிவாக அவற்றைத் திரும்பிப் பார்க்க வைக்கிறதுஅய்ந்து நாவல்களை ஒரே தொகுப்பாக வெளியிட்டிருப்பது அவரின் நாவல் படைப்புகளை ஒரு சேர படிக்கவும்கல்வித்துறை சாந்தவர்களுக்கும்ஆராய்ச்சிமாணவர்களுக்கும்மலேசியா சூழலை ஓரளவு வெளீயிலிருக்கும் வாசகன் சரியாகப் புரிந்து   கொள்ளவும் சரியானதாக அமையும்.

  காவ்யா பதிப்பகம்சென்னை வெளியீடு  998 பக்கங்கள்  விலை ரூ 1300  )