சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 3 பிப்ரவரி, 2016

“எப்படி தோழர் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் ஆனது...?”
---------------------------------------------------------------------------------------------------------------------------
அச்சுதானந்தன்) 92 வயது பூர்த்தியாகிவிட்டது.
 தோழர் நல்ல மூடில் இருந்தபோது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 

“எப்படி தோழர் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் ஆனது...?”

ஒரு நிமிடம் கண்களை மூடி மவுனமாகிறார். பின் கண்களை திறந்து நிலத்தை பார்த்தபடி பேசுகிறார். ‘அப்பா, அம்மா, சகோதரர்கள் அடங்கிய ஒரு அன்பான குடும்பம் என்னுடையது. என் அம்மாவுக்கு தொற்று நோயான வைசூரி வந்துவிட்டது.அப்பல்லாம் வைசூரி வந்தால் யாருமில்லாத இடத்தில் ஒரு ஓலை குடிசை கட்டி நோயாளியை அதில் அடைத்து விடுவார்கள். யாராவது சாப்பாடோ, தண்ணியோ, மருந்தோ கொண்டு போய் கொடுத்தால்தான் உண்டு.நோயாளி வலியினால் கதறி கூப்பாடு போட்டு அழுவது தொலைவில் கேட்கும். யாரும் போக முடியாது. துன்பத்தின் முடிவில் நோயாளி இறந்ததும் குடிசையோடு சேர்த்து எரித்து விடுவார்கள்.(அந்த பயங்கரத்தை கற்பனை செய்து பாருங்கள்)என் அம்மாவையும் தோட்டத்தில் ஒரு குடிசையில் அடைத்தார்கள்.நான் அப்போது சிறுவன்.
அம்மாவை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்து அழுதால் அப்பா தோட்டத்திற்கு கூட்டிப் போவார். தூரமாய் தெரியும் சிறு குடிசையை சுட்டிக்காட்டி அம்மா அதனுள் இருப்பதாய் சொல்வார்.பார்த்தால் குடிசை மட்டுமே தெரியும். அம்மா ஒரு வேளை குடிசையின் உள்ளிருந்து எங்களை பார்த்திருக்கலாம்.(ஒரு நிமிடம் மவுனமானார்... தொடர்ந்து)கொஞ்சநேரம் பார்த்துவிட்டு எதுவும் புரியாமல் அப்பாவோடு திரும்பி விடுவேன்.அம்மாவின் நோய் குணமடைய அழுது பிரார்த்திப்பதை தவிர வேறொன்றும் அன்று அறிந்திருக்கவில்லை.ஒருநாள் அம்மா எங்களை விட்டுபோய்விட்டாள் என்று அறிந்தேன்.அப்பா மட்டுமே பின் ஒரே துணை எல்லாமும் அம்மா இல்லாத குறை தெரியாதபடி அப்பா எங்களை பேணி வளர்த்தார்.திடீரென அப்பாவும் உடல் நலம் குன்றி படுக்கையில் விழுந்தார்.பயந்து நடுங்கி... உறக்கம் வராமல்... சுருண்டுகிடந்து இரவு முழுவதும் அப்பாவையாவது காப்பாற்றி விடு தெய்வமே என்று கேள்விப்பட்ட எல்லா தெய்வங்களையும் கூப்பிட்டு பிரார்த்திப்போம்.
ஆனால், சிறுவர்களான எங்களை அனாதை ஆக்கிவிட்டு அப்பாவும் போய்விட்டார்.அப்போதெல்லாம் எங்கள் குரலை கேட்காத தெய்வங்களை அதன்பிறகு கூப்பிட வேண்டும் என்று தோன்றவே இல்லை”.தானாகவே வழிந்தோடிய கண்ணீரை துடைத்தபடி அவரது கண்களை பார்த்தேன்.கண்ணீர் எதுவும் வரவில்லை இருப்பதுதானே வரும்.
- கதிர்வேல் (theekkathir )