சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 17 ஆகஸ்ட், 2022
செங்கடல் முதல் நைல் நதி வரை: 6 (எகிப்து , இஸ்ரேல் ,பாலஸ்தீனம் ,ஜோர்டான் நாடுகளுக்கான பயணம்)
சுப்ரபாரதி மணியன்
அமிதாபச்சன் ஆலீவ் எண்ணெய்யைத்தான் வீட்டில் பல ஆண்டுகளாய் சமையலுக்குப் பயன்படுத்துகிறாராம்.பாரசீக நாட்டு மக்களை அமிதாப்பச்சன் தோற்றத்துடன் ஒப்பிடும் போது அது உண்மை என்பது உறுதிப்படும்
நாமெல்லாம் உடம்பு உபாதைகளின் போது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் போது அதன் விலை உறுத்தும். அதை சாதாரணமாக சமையலுக்குப் பயன்படுத்தி உடல் உரத்துடன் இருக்கும் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் நாட்டினர் பொறாமைப்படவே வைப்பர்
ஒரு ஆலிவ் மரத்தின் வயது 2,244. மத்திய கிழக்கு நாடுகளில் மான்டினிக்ரோ என்ற நாடு இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள ஒரு ஆலிவ் மரத்தின் வயது 2,244. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மரம் பூமியில் உயிருடன் வாழ்ந்துவருகிறது.
அதாவது இயேசுவின் வயதை விட இந்த மரத்தின் வயது அதிகம் இந்த மரத்தை உள்ளூர்க்காரர்கள் ஸ்டாரா மஸ்லீனா என்ற பெயரில் அழைக்கிறார்கள்..
இயேசு ஒலிவ மலையில் பிரசங்கம் செய்த பல நிகழ்ச்சிகள் உண்டு . இந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் தெரிந்ததே.
இயேசுவோ ஒலிவ மலைக்குப் போனார். மறுநாள் அதிகாலையில் அவர் திரும்பவும் தேவாலயத்துக்குப் போனார். அனைவரும் இயேசுவிடம் வந்தனர். இயேசு உட்கார்ந்து மக்களுக்கு உபதேசித்தார்.
வேதபாரகரும், பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். அவள் விபசாரம் செய்ததற்காகப் பிடிக்கப்பட்டவள். அவளை மக்களுக்கு முன்னால் நிற்கும்படி யூதர்கள் வற்புறுத்தினர். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாக உறவுகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டாள். 5 மோசேயின் சட்டப்படி இவ்வாறு பாவம் செய்கிற ஒவ்வொரு பெண்ணையும் கல் எறிந்து கொல்லவேண்டும். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீர் சொல்கிறீர்?” என்று கேட்டனர்.
6 யூதர்கள் இந்தக் கேள்வியை இயேசுவைச் சோதிப்பதற்காகக் கேட்டனர். இயேசுவின் மீது ஏதாவது குற்றம் சுமத்தவே அவர்கள் விரும்பினர். ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரலால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். 7 யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார். பிறகு இயேசு மறுபடியும் கீழே குனிந்து தரையில் ஏதோ எழுத ஆரம்பித்தார்.
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் ஒவ்வொருவராக விலகிப் போயினர். முதலில் முதியவர்கள் விலகினர்; பிறகு மற்றவர்கள் விலகினர். அந்தப் பெண்ணோடு இயேசு மட்டும் தனியாக விடப்பட்டார். அவள் அவருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தாள். இயேசு அவளை ஏறிட்டுப்பார்த்து, “பெண்ணே, எல்லோரும் போய்விட்டார்கள். ஒருவனும் உன்னைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லையா?” என்று கேட்டார்.
அதற்கு அவள், “ஆண்டவரே, எவரும் என்னைத் தண்டனைக்குட்படுத்தித் தீர்ப்பளிக்கவில்லை” என்றாள்.
பிறகு இயேசு, “நானும் உனக்குத் தீர்ப்பளிக்கவில்லை. இப்பொழுது நீ போகலாம், ஆனால் மறுபடியும் பாவம் செய்யாதே” என்றார்.
மீண்டும் இயேசு மக்களோடு பேசினார். அவர், “நானே உலகத்துக்கு ஒளி. என்னைப் பின்பற்றி வருகிற எவனும் ஒருபோதும் இருளில் வாழமாட்டான். அவன் வாழ்வைத் தருகிற ஒளியைப் பெறுவான்” என்றார்.
ஆனால் பரிசேயர்கள் இயேசுவிடம், “உன்னைக்குறித்து நீ பேசும்போது நீ சொல்வதை உண்மையென்று நீ மாத்திரமே கூறுகிறாய். ஆகையால் நீ சொல்லுகின்றவற்றை நாங்கள் ஒத்துக் கொள்ளமுடியாது” என்றனர்.
அதற்கு இயேசு, “ஆம், என்னைப்பற்றி நானே பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்லுகின்றவற்றை மக்கள் நம்ப முடியும். ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேன் என்பது எனக்குத் தெரியும். அதோடு எங்கே போகிறேன் என்றும் எனக்குத் தெரியும். நான் உங்களைப் போன்றவன் இல்லை. நான் எங்கிருந்து வந்தேன் என்றும் எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது. சாதாரணமாக ஒருவனைப் பார்த்து கணிக்கிற விதத்திலேயே நீங்கள் என்னைப்பற்றி கணிக்கிறீர்கள். நான் எவரைப்பற்றியும் கணிப்பதில்லை. 16 ஆனால் நான் கணிக்கும்போது என் கணிப்பு உண்மையுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தீர்ப்பளிக்கும் காலத்தில் நான் தனியாளாக இல்லை. என்னை அனுப்பிய என் பிதா என்னோடு இருக்கிறார். இரண்டு சாட்சிகள் ஒரே உண்மையைச் சொன்னால் உங்கள் சட்டம் உண்மைதான் என்று ஏற்றுக்கொள்கிறது. நானும் என்னைப்பற்றி சொல்லுகிற ஒரு சாட்சி, அத்துடன் என்னை அனுப்பிய என் பிதாவும் எனது இன்னுமொரு சாட்சி” என்றார்.
மக்கள் அவரிடம் “உன் பிதா எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்கள். “நீங்கள் என்னைப் பற்றியும் என் பிதாவைப்பற்றியும் அறியமாட்டீர்கள். ஆனால் நீங்கள் என்னை அறிந்துகொண்டால் என் பிதாவையும் அறிந்துகொள்வீர்கள்” என்று பதிலுரைத்தார்.
பிரசங்கங்கள் செய்ய கடலையும் ஒலிவ மரக்காடுகளையும் யேசு விரும்பி தேர்வு செய்திருக்கிறார் .
உலகத்திலுள்ள எல்லா மரங்களிலும் விசேஷமான மரம், "ஒலிவ மரம்" தான். அதன் இலைகளிலும், தண்டுகளிலும் விசேஷித்த எண்ணெய் நிரம்பியிருக்கிறது. அதமுழு உலகமும், ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்பட்டபோது, அனைத்து மரங்களும், நீரால் அழுகிப்போனபோது, ஒலிவமரமோ, எல்லா தண்ணீர்களுக்கும் மேலாக, அலங்காரமாய் தன்னுடைய இலைகளை காண்பித்தது. அது வெற்றிக்கு அடையாளம். 'எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும், நான் நிலைகுலைந்து போவதில்லை. தலைநிமிர்ந்து நிற்பேன்' என்று சொல்லுகிறதுபோல, இருக்கிறது. நோவாவின் பேழையிலிருந்து புறப்பட்ட புறா, ஒலிவ இலையை கொத்திக்கொண்டு, நோவாவிடம் போய் கொடுத்தது.
இந்தியாவிலே, பெண் கேட்டு வருகிற மாப்பிள்ளையிடம், உங்களுக்கு வீடு வாசல் உண்டா? சம்பாத்தியம் எவ்வளவு? என்று கேட்பார்கள். ஆனால் இஸ்ரவேல் தேசத்திலே, பெண் கேட்டு வருகிற மாப்பிள்ளை வீட்டாரிடம், பெண்ணின் தகப்பனார் கேட்கிற முதல் கேள்வி, "மாப்பிள்ளைக்கு ஒலிவத் தோப்பு உண்டா?" என்பதே. பின்புதான், அத்தி மரங்களைப் பற்றியும், திராட்சத் தோட்டங்களைப் பற்றியும் விசாரிப்பார்கள். காரணம், ஒலிவ தோப்புகள், அவ்வளவு ஆசீர்வாதத்தையும், செழிப்பையும், வருமானத்தையும் கொண்டு வருகின்றன.
இயேசு ஜெபிக்கப் போகும்போது, ஒலிவ மலையிலுள்ள, ஒலிவ மரங்களால் நிறைந்திருக்கிற கெத்செமனே தோட்டத்துக்குப் போனார். அங்கே, பிதாவினுடைய சமுகத்தில் தன்னுடைய இருதயத்தை ஊற்றி ஜெபித்தார். தேவபிள்ளைகளே, உங்களுடைய அலங்காரம் என்ன? உங்களுடைய மேன்மை என்ன? அது, அபிஷேகம் நிறைந்த வாழ்க்கையாக, இருக்கட்டும். ஊக்கமான ஜெபமாயிருக்கட்டும். சங்கீதக்காரன் சொன்னார், "உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக, உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது" (சங். 93:5).
0
ஒலிவ மரம் பார்ப்பதற்கு அப்படியொன்றும் அழகான மரம் இல்லை. லீபனோனின் கம்பீரமான கேதுரு மரங்களைப் போல வானளாவ உயர்ந்து நிற்கும் மரமும் இல்லை. தேவதாரு போல அதன் மரம் அவ்வளவு விலைமதிப்புள்ளதுமில்லை. வாதுமை மரத்தின் பூக்களைப்போல அதன் பூக்களுக்கு மனதைக் கொள்ளைகொள்ளும் அழகும் இல்லை. (உன்னதப்பாட்டு 1:17; ஆமோஸ் 2:9) ஒலிவ மரத்தின் சிறப்பம்சம் மண்ணுக்கடியில் மறைந்துள்ளது. நிலத்துக்கு அடியில் ஆறு மீட்டர் ஆழத்திலும், பக்கவாட்டில் அதைக்காட்டிலும் அதிக தூரத்திலும் பரந்து அகன்று செல்லும் இதனுடைய வேர்களே மரத்தின் வளத்துக்கும் அழியாத உறுதிக்கும் காரணமாகும்.
வறட்சி காலத்தில் கீழே பள்ளத்தாக்கில் இருக்கும் மற்ற மரங்கள் காய்ந்துபோனாலும் மலைச்சரிவுகளிலுள்ள ஒலிவ மரங்கள் காய்ந்துபோவதில்லை. முடிச்சு முடிச்சாக காணப்படும் அடிமரத்தைப் பார்த்தால் இது விறகுக்குத்தான் ஆகும் என்று தோன்றும்; ஆனாலும் அடிவேர்கள் பல நூற்றாண்டுகளுக்கு ஒலிவப் பழங்களைத் தர உதவுகிறது. இந்த உறுதிவாய்ந்த மரம் வளருவதற்கு, இடமும் சுவாசிப்பதற்கு காற்றோட்டமுள்ள மண்ணும் இருந்தால் போதும். களைகளும் நாசம் விளைவிக்கும் தாவரங்களும் இல்லாமல் இருந்தால் போதும். இப்படி இருந்தால் ஒரு மரத்திலிருந்து வருடத்துக்கு சுமார் 57 லிட்டர் எண்ணெய் கிடைத்துவிடும்.
இஸ்ரவேலர் மிகவும் பயனுள்ள இந்த எண்ணெயை பெற்றதால் ஒலிவ மரத்தின்மேல் மிகவும் பிரியமாயிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒலிவ எண்ணெயில் எரிந்த குத்துவிளக்குகளால் "அவர்களுடைய வீடுகள் பிரகாசமாயின". (லேவியராகமம் 24:2) சமையலுக்கு ஒலிவ எண்ணெய் இன்றியமையாததாக இருந்தது. சூரிய வெப்பத்திலிருந்து சருமத்தைப் பாதுகாத்தது. இஸ்ரவேலர் அதிலிருந்து சோப்பு தயாரித்தனர். தானியம், திராட்சை, ஒலிவ பழங்கள் அவர்களுடைய முக்கிய பயிர்கள். ஒலிவ அறுவடை தவறிப்போனால் அது இஸ்ரவேலர் குடும்பத்துக்கு பெரிய நஷ்டமாக இருக்கும்.— (உபாகமம் 7:13; ஆபகூக் 3:17.)
பொதுவாக ஒலிவ எண்ணெய் குறைவில்லாமல் ஏராளமாக கிடைத்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை மோசே 'ஒலிவ மரங்களுள்ள தேசம்' என்று குறிப்பிட்டதற்கு காரணம், அந்தப் பகுதியில் அதிகமாகவே அது வளர்க்கப்பட்டது.
இஸ்ரேல் நாட்டில் கிட்டத்தட்ட அழிக்க முடியாத ஒரு மரம் வளருகிறது! அதை எத்தனைமுறை வெட்டிச் சாய்த்தாலும் அதன் அடிவேர் இருக்கும் வரை மறுபடியும் மறுபடியும் குருத்து விடுகிறது. மரத்தின் சொந்தக்காரருக்கு சமைக்க, விளக்கு எரிக்க, மற்றும் அழகுக்கும் ஆரோக்கியத்துக்குமான சாதனங்களை தயாரிக்க ஏராளமான எண்ணெயை வாரி வாரி வழங்குகிறது.
பண்டையகாலக் கதை ஒன்று நியாயாதிபதிகள் என்ற பைபிள் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, “விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி” போயின. காட்டு மரங்களில் அவை விரும்பித் தேர்ந்தெடுத்த மரம் எது என்று தெரியுமா? அசைக்க முடியாதவாறு எதையும் தாங்குவதும், வளத்தை அள்ளித் தருவதுமான ஒலிவ மரமே.—நியாயாதிபதிகள் 9:8.
3,500 ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கதரிசியாகிய மோசே பண்டைய இஸ்ரவேல் தேசத்தை ‘நல்ல தேசம், ஒலிவமரங்களுள்ள தேசம்’ என்று வருணித்தார். (உபாகமம் 8:7, 8) இன்றும்கூட வடக்கே எர்மோன் மலை அடிவாரத்திலிருந்து தெற்கே பெயர்செபா எல்லை வரையாக ஒலிவ மரத்தோப்புகளை ஆங்காங்கே காணமுடிகிறது. சாரோனின் கரையோரம், சமாரியாவின் பாறைகள் நிறைந்த மலைச்சரிவுகள், கலிலேயாவின் செழிப்பான பள்ளத்தாக்கு ஆகியவற்றை இன்னும் அவை அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
பைபிள் எழுத்தாளர்கள் ஒலிவ மரத்தை அடிக்கடி அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த மரத்தின் அம்சங்கள் கடவுளுடைய இரக்கத்தை, உயிர்த்தெழுதல் வாக்குறுதியை, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை விளக்க உதவின.
.
இஸ்ரவேலர் மிகவும் பயனுள்ள இந்த எண்ணெயை பெற்றதால் ஒலிவ மரத்தின்மேல் மிகவும் பிரியமாயிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒலிவ எண்ணெயில் எரிந்த குத்துவிளக்குகளால் அவர்களுடைய வீடுகள் பிரகாசமாயிருந்தன. (லேவியராகமம் 24:2) சமையலுக்கு ஒலிவ எண்ணெய் இன்றியமையாததாக இருந்தது. சூரிய வெப்பத்திலிருந்து சருமத்தைப் பாதுகாத்தது. இஸ்ரவேலர் அதிலிருந்து சோப்பு தயாரித்தனர். தானியம், திராட்சை, ஒலிவ பழங்கள் அவர்களுடைய முக்கிய பயிர்கள். ஒலிவ அறுவடை தவறிப்போனால் அது இஸ்ரவேல குடும்பத்துக்கு பெரிய நஷ்டமாக இருக்கும்.—உபாகமம் 7:13; ஆபகூக் 3:17.
பொதுவாக ஒலிவ எண்ணெய் குறைவில்லாமல் ஏராளமாக கிடைத்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை மோசே ‘ஒலிவ மரங்களுள்ள தேசம்’ என்று குறிப்பிட்டதற்கு காரணம், அந்தப் பகுதியில் அதிகமாகவே அது வளர்க்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இயற்கைவாதி டிரிஸ்ட்ராம், ஒலிவ மரத்தை ‘தேசத்தின் தனிச்சிறப்பான மரம்’ என்று வருணித்தார். ஒலிவ எண்ணெய்க்கு தனிமதிப்பு இருந்ததாலும், அது மிகுதியாய் கிடைத்ததாலும் மத்தியதரைக் கடல் பகுதி முழுவதிலும் பயனுள்ள சர்வதேச செலாவணியாக பயன்படுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்துகூட ஒருவர் பட்ட கடன் ‘நூறு குடம் ஒலிவ எண்ணெய்’ என்பதாக குறிப்பிட்டார்.—லூக்கா 16:5, 6.
மிகவும் பயனுள்ள இந்த ஒலிவ மரம் தெய்வீக ஆசீர்வாதங்களை நன்றாகவே சித்தரிக்கிறது. கடவுள் பயமுள்ள ஒரு மனிதன் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறான்? “உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப் போல் இருப்பாள்” என்பதாக சங்கீதக்காரன் பாடினார். “உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.” (சங்கீதம் 128:3) இந்த “ஒலிவமரக் கன்றுகள்” யாவை? சங்கீதக்காரன் இவைகளை பிள்ளைகளுக்கு ஏன் ஒப்பிடுகிறார்?
ஒலிவ மரத்தின் விசேஷம் என்னவென்றால் அதன் அடிமரம் புதிது புதிதாக துளிர் விட்டுக்கொண்டே இருக்கும்.* வயதாகும் போது அடிமரம், ஒரு காலத்தில் பலன்தந்தது போல கனி கொடுக்காமல் இருக்கலாம். அப்போது இந்த மரத்தை வளர்ப்பவர்கள் பல கன்றுகளை அல்லது இளங்கிளைகளை அப்படியே வளரவிட்டு விடுவார்கள். இவை மரத்தோடு சேர்ந்து அதன் முக்கிய பாகமாகிவிடும். சிறிது காலம் கழித்துப்பார்த்தால் அந்த வலுமிக்க அடிமரத்தைச் சுற்றி மூன்று அல்லது நான்கு கன்றுகள் பந்தியைச் சுற்றியிருக்கும் பிள்ளைகளைப் போலிருக்கும். இந்தக் கன்றுகளுக்கும் தாய்மரத்தின் அதே வேர்கள்தான் இருக்கும். இவை அனைத்தும் சேர்ந்து அமோகமாக கனிகொடுக்கும்.
ஒலிவ மரத்தின் இந்தத் தனிச்சிறப்பான அம்சம், பெற்றோரின் வலுமிக்க ஆவிக்குரிய வேரிலிருந்து பலத்தைப் பெற்று மகன்களும் மகள்களும் விசுவாசத்தில் எவ்வாறு உறுதியாக வளரமுடியும் என்பதை அழகாக விளக்குகிறது. பிள்ளைகள் வளர்ந்துவருகையில், கனிகொடுப்பதில் அவர்களும் சேர்ந்துகொண்டு பெற்றோருக்கு ஆதரவாய் இருப்பர். தங்களோடுகூட தங்கள் பிள்ளைகள் யெகோவாவை சேவிப்பதை பார்க்கும் பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.—நீதிமொழிகள் 15:20.
கடவுள் பாரபட்சமில்லாதவராக இருப்பதிலும் உயிர்த்தெழுதலுக்காக ஏற்பாடு செய்திருப்பதிலும் அவருடைய இரக்கம் வெளிப்படுகிறது. மனிதர்கள் எந்த இனத்தை அல்லது பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், யெகோவாவின் இரக்கம் எவ்வாறு அனைவருக்கும் கிடைக்கிறது என்பதை விளக்க பவுல் அப்போஸ்தலன் ஒரு ஒலிவ மரத்தை பயன்படுத்தினார். பல நூற்றாண்டுகளாக யூதர்கள் கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாய், ‘ஆபிரகாமின் சந்ததி’யாக இருப்பதில் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்.—யோவான் 8:33; லூக்கா 3:8.
யூத சீஷர்களை பவுல் அடையாள அர்த்தமுள்ள ஓர் ஒலிவ மரக்கிளைக்கு ஒப்பிட்டு பேசினார்.
இயற்கையான யூதர்களில் பெரும்பான்மையினர் இயேசுவை நிராகரித்துவிட்டனர். இதனால் “சிறு மந்தை” அல்லது “தேவனுடைய இஸ்ரவேலின்” எதிர்கால உறுப்பினர்களாகும் தகுதியை இழந்தனர். (லூக்கா 12:32; கலாத்தியர் 6:16) இவ்வாறு அவர்கள் வெட்டி எறியப்பட்ட ஒலிவமரக் கிளைகளைப்போல ஆனார்கள். அவர்களுடைய இடத்தை யார் நிரப்புவார்? பொ.ச. 36-ல் ஆபிரகாமின் வித்தின் பாகமாக ஆவதற்காக புறஜாதியார் தெரிந்துகொள்ளப்பட்டனர். தோட்டத்தில் வளரும் ஒலிவமரத்தில் காட்டு ஒலிவ கிளைகளை யெகோவா ஒட்டவைத்தது போன்று இது இருந்தது. வாக்குப்பண்ணப்பட்ட ஆபிரகாமின் வித்தை உண்டுபண்ணுகிறவர்களில் புறஜாதி ஜனங்களும் இருப்பர். புறஜாதி கிறிஸ்தவர்கள் இப்போது ‘ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளி’களாக முடியும்.—ரோமர் 11:17.
காட்டு ஒலிவ மரக்கிளையை தோட்டத்து ஒலிவ மரத்தில் ஒட்டவைப்பது என்பதை ஒரு விவசாயி நினைத்துக்கூட பார்க்கமாட்டான். அது “சுபாவத்திற்கு விரோதமாய்” இருக்கும். (ரோமர் 11:24) “நல்ல மரத்தை காட்டுமரத்தோடு ஒட்டவைத்தால் அராபியர் சொல்வது போல அது காட்டு மரத்தை கீழ்ப்படுத்தி அடக்கிவிடும், ஆனால் இதையே மாற்றிச் செய்தால் வெற்றி கிட்டாது” என்று தி லாண்ட் அண்டு தி புக் என்ற புத்தகம் விளக்குகிறது. இதைப் போன்றுதான் யெகோவா “புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்கு” கவனம்செலுத்திய போது யூத கிறிஸ்தவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 10:44-48; 15:14) கடவுளுடைய நோக்கம் நிறைவேற்றப்படுவது எந்த ஒரு தேசத்தையும் சார்ந்ததில்லை என்பதற்கு இது தெளிவான ஒரு அடையாளமாக இருந்தது. ஆம், “எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.”—அப்போஸ்தலர் 10:35.
ஒலிவ எண்ணெயை சொல்லர்த்தமாகவும் அடையாள அர்த்தமாகவும் இரண்டு விதமாக பயன்படுத்துவதைப் பற்றி வேதாகமம் குறிப்பிடுகிறது. பண்டைய காலங்களில், காயங்களும் இரணங்களும் சீக்கிரமாய் ‘ஆறுவதற்கு எண்ணெய்’ பயன்படுத்தப்பட்டது. (ஏசாயா 1:6) இயேசுவின் உவமைகள் ஒன்றில் நல்ல அயலானாக இருந்த சமாரியன் எரிகோவுக்கு போகும் வழியில் அவன் சந்தித்த அந்த மனிதனின் காயங்களில் ஒலிவ எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து கட்டினான்.—லூக்கா 10:34.
ஒலிவ எண்ணெயை தலைக்குத் தேய்த்தால் அது புத்துயிரளிப்பதாகவும் இதமாகவும் இருக்கும். (சங்கீதம் 141:5) ஆவிக்குரிய நோயினால் பீடிக்கப்பட்டவனைக் கையாளும்போது கிறிஸ்தவ மூப்பர்கள் ‘கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசு’வார்கள். (யாக்கோபு 5:14) மூப்பர்கள் தரும் அன்புள்ள வேதப்பூர்வமான புத்திமதியும், ஆவிக்குரிய நோயில் இருக்கும் உடன்விசுவாசிகளுக்காக அவர்கள் செய்யும் ஊக்கமான ஜெபமும், காயத்தை ஆற்றும் ஒலிவ எண்ணெய்க்கு ஒப்பிடப்பட்டுள்ளது. எபிரெய மொழிவழக்கில் ஒரு நல்ல மனிதனை “சுத்தமான ஒலிவ எண்ணெய்’ என்று சில சமயங்களில் கூறுவார்கள் என்பது சுவாரஸ்யமாய் உள்ளது.
ஒலிவ மரம் ஓர் உண்மையுள்ள கிறிஸ்தவனுக்கு அடையாளமாக இருக்கிறது. இவர் உலகத்துக்கு அறியப்படாதவராய் இருக்கலாம். ஆனால் கடவுள் அவரை அங்கீகரிக்கிறார். இப்படிப்பட்ட ஒருவர் இந்த ஒழுங்குமுறையில் மரிக்க நேர்ந்தால் அவர் வரப்போகிற புதிய உலகில் மீண்டும் வாழ்வார்.—2 கொரிந்தியர் 6:9; 2 பேதுரு 3:13.
வருடந்தோறும் கனிகொடுத்துக் கொண்டே இருக்கும் பட்டுப்போகாத இந்த ஒலிவ மரம் கடவுளுடைய வாக்குறுதியை நமக்கு நினைப்பூட்டுகிறது: “விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.” (ஏசாயா 65:22) அந்தத் தீர்க்கதரிசன வாக்குறுதி கடவுளுடைய புதிய உலகில் நிறைவேற்றமடையும்.—2 பேதுரு 3:13.
ஒலிவ மரம் ஓர் உண்மையுள்ள கிறிஸ்தவனுக்கு அடையாளமாக இருக்கிறது. அதானால் இந்துக்கள் ஆலமரத்தையும், வேப்ப மரத்தையும், பூவரசம் மரத்தையும் பார்த்து புளகாங்கிதம் அடையும் போது கிறிஸ்தவர்கள் ஒலிவ மரங்களைப் பார்த்துப் பெருமைப்படுவதைக் கண்டேன்.வார்டு இணைய தள தகவல்கள் இவை.
இதயத்திற்கும் உடலுக்கும் இதமாக இருக்கிறது என்று பாரசீக மக்கள் மட்டுமல்ல .. எல்லோரும்தான் சொல்ல வேண்டியிருக்கிறது அதைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்பு.
அமிதாபச்சன் சொன்ன பின்னால் அப்சக்ஷன் ஏது..
• செங்கடல் முதல் நைல் நதி வரை: 4 (எகிப்து , இஸ்ரேல் ,பாலஸ்தீனம் ,ஜோர்டான் நாடுகளுக்கான பயணம்)
சிவாஜிகணேசனின் பல திரைப்படங்களில் அவர் மருத்துவராக வரும் கதாபாத்திரங்களின் போது அவர் அறையில் ஒரு சிலுவையைச் சுற்றிக்கொண்டு ஒரு பாம்பு இருப்பதை படமாகக் கண்டிருக்கிறேன்
இப்போதும் இந்திய மருத்துவச் சங்கங்களின் இலச்சாக அது உள்ளது.அதை நெபோ மலையில் பார்த்தேன். மூலம் எதுவென்று யோசிக்க ஆரம்பித்தேன்
ஜோடானின் முக்கியமான ஒரு மலை. நெபோ ஆண்டவர் மோசேயை அந்த நெபோ மலையிலிருந்து கானான் தேசத்தை பார்க்கும்படி சொல்கிறார் அங்கே தன் மீது வாழ்க்கையை கழிக்குமாறு கூறியுள்ளார் அங்கிருந்து பார்த்தால் எரிக்கோ, ஜெருசலம், ஜோர்டான் ஆறு போன்றவற்றை காண முடியும் அதை எல்லாம் குறிக்கிற வகையில் அங்கே ஒரு ஆலயத்தை அமைத்திருக்கிறார்கள் அங்குள்ள ஒரு சிலுவையை சுற்றிக்கொண்டு ஒரு பாம்பின் சிற்பம் இருக்கிறது இஸ்ரேல் மக்களினை பல வகைக் வை காடுகளில் உள்ள பாம்புகள் கடித்ததால் இறந்து விடுகின்றனர். மோசே ஒரு வெண்கலப் பாம்பை செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார். பாம்பு கடித்த மனிதர்கள் இந்த வெண்கலப் பாம்பை பார்த்து உயிர் பிழைத்தனர். அதனால் சிலுவையோடு பாம்பைப் படைத்த சிற்பத்தை ஒரு இத்தாலியை கலைஞர் ஆண்டனி என்பவர் உருவாக்கினார். அதை அங்கே நட்டு வைத்திருக்கிறார்கள் .போப் ஆண்டவர் 20 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு வந்ததற்கு என்னுடைய அடையாளமாக ஒரு கல் தூணை உருவாக்கியுள்ளார்கள். அது புத்தகம் போன்ற வடிவத்தில் இருக்கிறது. போப் நட்டு வைத்த ஆலிவ் மரம் 20 ஆண்டுகளில் வளர்ந்து நிறப்தை அதிசயமாகக் காட்டுகிறார்கள். ஜோர்டானில் ஆலிவ் மரங்கள் அதிகம்.
மடாபா ஆலயத்தில் ஆறாம் நூற்றாண்டில் புனித பூமியில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களை பற்றி ஒரு வரைபடத்தை உருவாக்கி உள்ளார்கள் ஆனால் இது 125 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டது பின்னால் இதை வருகிறவர்கள் எல்லாம் நிறைய ஆய்வு செய்து வருகிறார்கள் .தரையில் புதைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மலைகள் பள்ளத்தாக்குகள் கிராமங்கள் பழைய நகரங்கள், நதிகளின் கழிமுகம் போன்ற எல்லாம் ஓவியமாக வரையப்பட்டு இருக்கிறது இயேசுவின் கல்லறை கொண்ட ஆலயம் இந்த ஓவியத்தில் இடம்பெற்றுக்கு இருந்தது. அழிந்த எருசலைம் கிபி 70-ல் எப்படி புதுப்பிக்கப்பட்டது என்பது குறித்து வல்லவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் வருகிறார்கள். அதற்காக ஆதாரங்கள் இது போன்ற இடங்கள் தருகின்றன.
பண்டைய உலகின் எட்டாவது அதிசயம் என்று பெரும்பாலும் அறியப்படுகிறது, பெட்ரா ஜோர்டானின் மிக அருமையான புதையல் மற்றும் அதன் மிக முக்கியமான சுற்றுலா அம்சமாகும். அதன் புகழ் மிகவும் தகுதியானது,
கண்கவர் நகரமான பெட்ரா கிமு 2.000 ஆம் நூற்றாண்டில் நபாடேயர்களால் கட்டப்பட்டது, அவர்கள் சிவப்பு மணற்கல் பாறைகளில் கோயில்கள், கல்லறைகள், அரண்மனைகள், தொழுவங்கள் மற்றும் பிற வெளிப்புறங்களை தோண்டினர். இப்பகுதியில் குடியேறி, பட்டு வழிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் சீனா, இந்தியா மற்றும் தெற்கு அரேபியாவை எகிப்துடன் இணைத்த ஒரு முக்கிய நகரமாக மாற்றினர்.
. ஜோர்டானிய பாலைவனத்தின் உள்ளூர் மக்கள் புராண நகரமான நபாடேயர்களை புராணங்களுடன் சூழ்ந்தனர், இந்த வழியில், 1812 இல் சுவிஸ் இந்த புராணக்கதைகளில் உண்மை என்ன என்பதைக் காண பெட்ராவை அடைந்த முதல் ஐரோப்பியரான ஜொஹான் லுட்விக் பர்க்ஹார்ட் சிவப்பு நகரம் பற்றி கூறப்பட்டது. ஆரோன் தீர்க்கதரிசியின் கல்லறையில் ஒரு தியாகம் செய்ய விரும்புவதாக சாக்குப்போக்குடன், அவர் பயணித்த கேரவனில் இருந்து தனது வழிகாட்டியுடன் பிரிக்க முடிந்தது, மேலும் புகழ்பெற்ற நபடேயன் புதையலை தனது கண்களால் சிந்திக்க முடிந்தது.
1822 ஆம் ஆண்டில் அவர் இறந்தபோது, ஜோர்டானிய பாலைவனத்தின் இளஞ்சிவப்பு கல்லில் இருந்து தோண்டப்பட்ட அந்த அசாதாரண இடத்தைப் பற்றிய அவரது நினைவுகள் வெளியிடப்பட்டன, அடுத்த ஆண்டுகளில் பல ஐரோப்பிய சாகசக்காரர்கள் பெட்ராவுக்கு வந்தனர், இதில் பிரபல ஸ்காட்டிஷ் கார்ட்டூனிஸ்ட் டேவிட் ராபர்ட்ஸ் உட்பட பல செய்திகள் மற்றும் ஐரோப்பாவிற்கு செய்தி. அந்த இடத்தின் முதல் வரைபடங்கள்.
மீதமுள்ள நினைவுச்சின்னங்கள் மிகவும் சிதறியுள்ளதால் நகரத்தை ஆழமாக அறிந்துகொள்ள பல நாட்கள் ஆகும் அவை அனைத்தையும் காண நீங்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டும். அவை அனைத்திலும் மிகவும் அடையாளமாக இருப்பது கருவூலமாகும், இது சிக் எனப்படும் குறுகிய பள்ளத்தாக்கு வழியாக அணுகப்படுகிறது.
கட்டப்பட்ட விரிவான செதுக்கல்களால் அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாறை வெட்டப்பட்ட கல்லறைகளை இங்கே காணலாம். அவற்றில் பல காலியாக இருந்தாலும் நல்ல நிலையில் உள்ளன. பூகம்பத்தால் அழிக்கப்பட்ட வீடுகளைப் போலல்லாமல், நபாடேயர்களால் கட்டப்பட்ட ஒரு பெரிய ரோமானிய பாணி தியேட்டரும் பாதுகாக்கப்படுகிறது.
சதுரங்கள், கோயில்கள், பலிபீடங்கள், பெருங்குடல் வீதிகள் மற்றும் பள்ளத்தாக்குக்கு மேலே உயரமான, ஈர்க்கக்கூடிய ஆட்-டெய்ர் மடாலயம் உயர்கிறது, இது 800 பாறை வெட்டப்பட்ட படிகள் ஏறும்.
: ஜோர்டான் நதியில் கிறிஸ்துவின் ஞானஸ்நானம், அதே நதியின் கிழக்குக் கரையில் இருந்து நெருப்பு தேரில் எலியா தீர்க்கதரிசி சொர்க்கத்திற்கு ஏறுவது, நெபோ மலையில் வாக்குப்பண்ணப்பட்ட நிலத்தை மோசே கண்ட இடம் அல்லது மறைந்த நகரம் மடாபா என அழைக்கப்படும் புனித பூமியின் மொசைக் வரைபடம்.
.
பைசண்டைன் மற்றும் ஒமெயாத் மொசைக் ஆகியவற்றின் அனைத்து அழகுகளிலும், தொல்பொருள் அருங்காட்சியகத்தில் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மேரி மற்றும் அப்போஸ்தலர்களின் தேவாலயத்தில் நீங்கள் அனுபவிக்க முடியும். மலர்கள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், தொன்மவியல் அடுக்குகள் - இவை அனைத்தும் சிறிய பல்லாயிரக்கணக்கான துண்டுகளிலிருந்து அமைக்கப்பட்டன. ஆச்சரியமான கற்பனை இந்த வேலை வலி மற்றும் சிக்கலான. துண்டு துண்டாக்கப்பட்ட மொசைக்ஸ் எண்ணிக்கை நன்றாக உள்ளது, அவர்கள் உண்மையில் அனைத்து மடாபா மொழியியல் அர்த்தத்தில் தூங்கும். நன்றாக, ஆச்சரியமாக இருக்கிறது - இது கிறிஸ்துவர் தேவாலயங்கள் - அனைத்து மக்கள் அமைந்துள்ள மக்கள் பெரும் பகுதியாக இஸ்லாமியம் என்று மாநிலத்தில் அமைந்துள்ளது.
எங்கு பார்த்தாலும் ஆலிவ் மரங்கள். சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் உபயோகம். இதயத்திற்கு நல்லது.எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன் என்ற வடிவேலுவின் போதனை ரீதியில் எவ்வளவு சாப்பிட்டாலும் எந்த தொந்தரவும் இல்லை.வகை வகையான உணவுகள்.15-20 அமெரிக்க டாலரில் பபே உணவு வகைகள். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். ஆனால் குடி தண்ணீர் சிரமம். குறைவாகவே குடி தண்ணீர் தந்தார்கள் . தேவையானா 2 அமெரிக்க டாலர் கொடுத்து வங்கிக்கொள்ள வேண்டும்.
அமெரிக்க டாலர் ஆதிக்கம் அங்கு அதிகம். எங்குதான் அமெரிக்க டாலர் ஆதிக்கம் செய்யவில்லை.
000
செங்கடல் முதல் நைல் நதி வரை: 3 (எகிப்து , இஸ்ரேல் ,பாலஸ்தீனம் ,ஜோர்டான் நாடுகளுக்கான பயணம்)
0
ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஃபாரா சிராஜின் (Farah Siraj) கூட்டிணைவு இசை கூட நெடு நேரமாகியும் இரவில் இருட்டைக் கொண்டு வரவில்லை
ஜோர்டான் – அம்மான் நகரில் அந்த நாட்டின் இரவு பத்து மணிக்கு மேலும் சூரியன் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த முதல் நாளில் எப்போது இருட்டாகும் என்று காத்திருந்து சலித்துப் படுக்கைக்குச் சென்றோம்.இரு மணி நேர வித்யாசம் நம் இந்திய நேரத்துடன்.
இரவில் நடந்த ஜோர்டான் நாட்டு கிராமிய இசை புதிதாக இருந்தது. தங்கியிருந்த விடுதியில் மாலை முதலே அந்த இசைக்குழு இசை பரப்பலில் ஈடுபட்டிருந்தார்கள். இரண்டு மணி நேரம் கழிந்த பின்பே அது திருமண ஏற்பாட்டில் அந்த ஜோர்டான் நாட்டு கிராமிய இசைக்குழு இருப்பது தெரிந்தது. நல்ல உயரம், திடமான உடம்பு, அழகு எல்லாம் சேர்ந்து ஆணகளையும் பெண்களையும் நோக்கி வியக்க வைத்துக் கொண்டிருந்தது.
தண்ணீர், எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்கள் இல்லாததால் மத்திய கிழக்கின் மிகச் சிறிய பொருளாதார நாடுகளில் ஜோர்டான் ஒன்று என்று ஆகிப்போனது . (சிஐஏ வேர்ல்ட் புக்யூப்). இதன் விளைவாக நாட்டின் அதிக வேலையின்மை, வறுமை மற்றும் பணவீக்கம் உள்ளது. இந்த பிரச்சினைகள் இருந்தபோதிலும் ஜோர்டானில் பல துறைகள் உள்ளன, இதில் ஆடை உற்பத்தி, உரங்கள், பொட்டாஷ், பாஸ்பேட் சுரங்கங்கள், மருந்துகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு, சிமெண்ட் தயாரித்தல், கனிம வேதியியல், பிற ஒளி உற்பத்தி மற்றும் சுற்றுலா ஆகியவை அடங்கும். நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை ஒரு சிறிய பங்கை வகிக்கிறது. அந்தத் தொழிலில் இருந்து முக்கிய பொருட்கள் சிட்ரஸ், தக்காளி, வெள்ளரிகள், ஆலிவ், ஸ்ட்ராபெர்ரிகள், கல் பழங்கள், ஆடு, கோழி மற்றும் பால் ஆகியவை.
ஜோர்டானின் பருவநிலை பெரும்பாலும் வறண்ட பாலைவனம் மற்றும் வறட்சி நாடு முழுவதும் பரவலாக உள்ளது. இருப்பினும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மேற்குப் பகுதிகளில் குறைந்த மழைக்காலமும் உள்ளது. ஜோர்டான் தலைநகரான அம்மன், 38.5ºF (3.6ºC) சராசரியான ஜனவரி குறைந்த வெப்பநிலை மற்றும் 90.3ºF (32.4ºC) சராசரியாக ஆகஸ்ட் உயர் வெப்பநிலை உள்ளது.
ஆகஸ்ட் வெப்ப நிலை ஜீலையிலேயே வந்து விட்டதை உணர்ந்தேன்
அப்படியான வெப்பநிலையும் சூரியன் மறையாத இரவும் கலந்திருந்த நாளில் ஜோர்டான் சார்ந்த ஏ ஆர் ரகுமானின் இசைக்கோர்வை ஒன்று பற்றிய செய்தியை நண்பர் ஒருவர் அனுப்பி வைத்திருந்தார்.
• 06:42
• 08:44
• கோக் ஸ்டுடியோவின் mtv season 3 பார்க்க நேர்ந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசை என்கிற காரணம் மட்டுமல்லாமல் நேபாள பெண் துறவி அனி சோயிங் (Ani Choying) மற்றும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஃபாரா சிராஜின் (Farah Siraj) கூட்டிணைவும் என்னை ஈர்த்தது. ஆரம்பத்தில் இந்தப் பாடலின் அர்த்தம் புரியவில்லை என்றாலும், அதைப் பொருட்படுத்திக் கொள்ள முடியாதபடியாக அதன் இசை வடிவமும், சந்த லயமும், நம்மில் ஒரு புத்துணர்ச்சியையும், புது அனுபவத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.
• ஆதியில் சலனமற்ற, சப்தமற்ற காரிருள் இருந்தது. பெருவெடிப்பில் நிகழும் சலனமென மென்மையான மணி ஓசையுடன், ஓங்காரச் சப்தத் தொனியுடன் இயக்கம் தொடங்குகிறது. (அனி சோயிங்கின் மந்திர உள்ளடக்கம்) பின் ஒவ்வொரு வாத்தியக் கருவிகளாக இசைக்கத் தொடங்கி, பல்வேறு குரல்களின் மென்மையான பாடல் வரிகளில் தொடங்குகிறது இசை. பூமி உருவானதையும், அதில் உயிர்களின் தோற்றமும், பரிணாம வளர்ச்சியுமாக நம் உணர்வை இசையுடன் இணைத்துப் பார்க்கும் விசாலமான அனுபவமாக முகிழ்கிறது இசை வடிவம்.
• ஃபாரா சிராஜின் அட்டகாசமான ஜோர்டான் நாட்டின் நாட்டுப்புறப் பாடல் வடிவமாக (அவரின் கூற்றுப்படி) நம்மை ஆட்கொள்ளுகிறது அரபி சந்தத்துடன் கூடிய அவரின் குரல். பரிணாமத்தில் படிப்படியாக தன்னைப் புதுப்பித்துக் கொண்ட மனித இனம், கடந்த பத்தாண்டுகளில் வேகம் வேகமென மகிழ்ச்சி, துக்கம், வேதனை, சிரிப்பு, சிலிர்ப்பு, கொடூரம், உறவுச் சிக்கல்கள், உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடான சத்தமென அலைக்கழிக்கப்படுகிறது, இருந்தாலும் ஆதி உயிரியின் கூறு நம் முன் சமைக்கப்பட்டுள்ளதால், ஆதி அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, பரவசம் என்பவற்றை ஏங்கும் முகமாகவே நம் அகத்தோட்டம் உள்ளது. இவ்வாறான அகத்தேடலை ரகுமான் இசைக்கோர்ப்பில் கொடுத்திருப்பார். மெல்ல மெல்லத் தாளகதியுடன் கிளம்பும் இசை, பாடகர்களின் குரல், சடுதியில் திடுமென வேகமெடுக்கத் தொடங்கியதும் நம்மை அறியாமலேயே தாளகதியுடன் ஒன்றிவிடுகிறோம்.
• மேலும் மேலும் என வேகம் கூட்டிச் செல்லும் சிவமணியின் ட்ரம்ஸ், கிடார், ரகுமானின் கீபோர்டு வாசிப்பு, பாடகர்களின் உச்ச ஸ்தாதியுடன் கூடிய வேகம் நம்மை இழக்கச் செய்து பிரபஞ்ச இயக்கத்தின் தாளகதியுடன் ஒன்றி விடுகிறோம். ஃபாரா சிராஜின் குரல் வளமும், மலர்ச்சியும், தோற்றமும் நம் புறவய உணர்ச்சிகளின் தொகுப்பாக மாறி விடுகிறது. ஆனால் மென்மையான, சலனமில்லா மந்திர உச்சாடனத்துடன் கூடிய பேரமைதி கொண்ட தோற்றம் என அனிசோயிங்கின் இருக்கை, மனித மனங்களின் உணர்ச்சிக் குவியல்கள், ஆசைகள், வெறித்தனங்களுக்கு உட்பட்டும், இந்த பூமி தன் இயல்பிலேயே பேரமைதியுடன், சலனமில்லாமல் தன் சுற்றுப்பாதையில் அலாதியான சப்த லயத்துடன் தன் இருக்கையில் இருந்தபடியே சுழல்கிறது என்பதாக உணர வைத்து விடுகிறது.
• பலத்த பேரோசைக்குப் பின் அனிசோயிங்கின் அமைதியான ஓங்காரத்துடன் லயங்கொள்ளும் பாடல் முடிவும், இந்த இசைக்கோர்ப்பினை நிகழ்த்தும் ஏ.ஆர்.ரகுமானின் மென்மையான அசைவுகளுடனும் கூடிய இசை மற்றும் அவரது முகத்திலும் அனிசோயிங்கின் முகத்திலும் காணும் அதே பேரமைதியுடன் கூடிய இயக்கம், அகத்தேடலில் கண்டடையும் பேரானந்த ஆன்மானுபவம், புறவயவுலகியலில் எவ்வகையான உணர்ச்சிக் குவியல்களுக்கு மத்தியிலும் அடைய முடியும் என்பதை உணர்த்துவதாகவுள்ளது.
• நம்முள் அளப்பரிய கிளர்ச்சியையும், பேரானந்த அனுபவத்தையும் கொடுக்கும் இசைவடிவை ஏ.ஆர்.ரகுமான் படைத்துள்ளார். படைப்பின் ஊடகமாகவே அவர் மாறியுள்ளார். இவ்வாறான அனுபவத்தை எமக்குத் தந்த இந்தப் பாடல், தாய்மையின் அர்ப்பணிப்பாக, உலகிலுள்ள எல்லா அம்மாக்களுக்காகவும் சமர்ப்பணம் செய்வதாகக் கூறுகிறார் ஏ.ஆர்.ரகுமான்.
• ஜாரியா பாடலை எழுதியவர் பிரஸ்கன் ஜோஷி.
• இறைவன், கருவைச் சுமக்கும் தாய் மூலமாகவே படைப்பினை நிகழ்த்துகிறார். எனவே அம்மாதான் படைப்பின் ஊடகமாக இருக்கின்றார் என்கிறார் ரகுமான். ஜாரியா என்பதன் பொருளும் அதுவே. ஊடகமாக, வழியாக (Medium, Path) என்று பொருள்படும். இந்த ஜாரியா பாடல் தாய்மையினைப் போற்றுவதன் காரணமாகவே தான் இணைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார் துறவி அனிசோயிங். இந்தப் பாடலில் ஜோர்டானின் நாட்டுப்புறப் பாடலின் இணைப்பைச் சேர்த்து மெருகூட்டியுள்ளதாகக் கூறுகிறார் ஃபாரா சிராஜ். இதில் ரீடாஹா என்பது “எனக்கு அம்மா வேண்டும்” கெஃபிமா ரீடாஹா என்பது “எந்த வழி ஆயினும் நான் அவளுடன் இருக்கவே விழைகிறேன்” என்பதாகப் பொருள் தரும் எனக் கூறுகிறார் ஃபாரா சிராஜ்.
• ஃபாரா சிராஜ் கையாளும் இசை வடிவத்தை அறிந்து கொள்ள வேண்டுமெனில் நமக்கு அரபிய இசை குறித்தான வரலாற்றுப் பார்வையும் அவசியமாகிறது. அரபிய இசை 2010 முதல் தனித்துவமாகவும், பரந்த வீச்சுடையதாகவும் இருந்தாலும், அதன் தொன்மை அரபிய தீபகற்பங்களின் கூட்டிசையாக உருவெடுத்துள்ளது. எனினும் ஐரோப்பிய அறிஞர்களால், அரபி இசை ஈரான் நாட்டில் இருந்து பிறந்தத்தாகவே அனுமானிக்கப்படுகிறது. 20ம் நூற்றாண்டில் இருந்து எகிப்து அரேபிய இசை வடிவத்தை தன்னுள் சுவீகரித்துக் கொண்டது. கெய்ரோ புதுயுக அரபி இசையின் வடிவமாக மாறியது. உம் குல்தும் (எகிப்திய இசைக்கலைஞர்) ஃபரூஸ் (லெபனான் இசைக்கலைஞர்) முதலில் மதம் சாராத இசை வடிவத்தை முன்னெடுத்தவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்கள். 1950 மற்றும் 60களில் அரபிய இசை, மேற்கத்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தவும், அரபிய பாப் இசை உருவானது. மேற்கத்திய இசைவடிவமும் அரபிய இசையை உள்வாங்கியதுடன், அரபிய வாத்தியக் கருவிகளான ஓளட் மற்றும் தெர்புக்கி இசைக்கருவிகளுக்கு மாற்றாக லெக்டிரிக் கிடாரையும், டிரம்ஸையும் உள்வாங்கி இசையை உருவாக்கியது.
• ‘ஹபிபி’உலகம் முழுவதும் புகழ்பெற்றது அனைவரும் அறிந்ததே. மேலும் சூஃபி பாடல்களும் இசை வடிவங்களும் இறைவனின் நெருக்கத்தையும், அவனுடனான உறவையும் உள்ளடக்கியவைகளாக இருந்தன. எலக்ட்ரானிக் நடன இசை வடிவம் ஆஸ்திரேலியாவில் பிறந்த ரிச்சி என்ற இசைக்கலைஞரால் வெகுஜன பாராட்டுதலுக்கு உள்ளாகியதுடன், தற்போதும் இரவு களியாட்ட விடுதிகளில் பாடப்படும் இசைவடிவமாகப் புகழடைந்துள்ளது. இது மேற்கத்திய இசைக்கருவிகளுடன் அரபிய இசைக்கருவிகளின் சேர்ந்திசையாக உருவெடுத்துள்ளது. மிக முக்கியமாக ஆப்பிரிக்க தொடக்கத்தில் உருவான ஜாஸ் மிகவும் புகழ்பெற்ற இசைவடிவமாக இன்றளவில் உருவெடுத்துள்ளது. அரபிய இசை, ராக் இசை நுட்பங்களையும் சுவீகரித்துக்கொண்டது. ராக் இசை எலக்ட்ரிக் கிடாரை மையப்படுத்தி உருவாகி 1940களில் இருந்து அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் துள்ளலுடன் கூடிய இசை வடிவம்.
• அரபிய இசை வடிவம் மக்ஃம் இசை வடிவம் எனப்படுகிறது. மக்ஃம் என்பது மென்மையான இசை வடிவம். மக்ஃம் அளவீடுகள் என்பது சின்னச் சின்ன உறுப்புகளால் ஆன ஒரு தொடர் குறிப்புகளைக் கொண்ட இசைக் குறிப்பேடு. சின்ன உறுப்புகள் ஜின்ஸ் என அழைக்கப்படுகிறது. இதன் பன்மை வடிவம் அஜ்னாஸ் எனப்படுகிறது.
•
• ஜின்ஸ் என்பது தொடர்ந்த மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து குறிப்பேடுகளைக் கொண்டது. மேலும் பிளெமென்கொ என்பது தெற்கு ஸ்பெயின் பகுதியினைச் சார்ந்த மூர் நாகரிக நாடோடிகளின் வேகமான மற்றும் இசைவான கைகளைத் தட்டியும், கால்களால் நிலத்தில் தட்டியும் இசைக்கப்படுகின்ற இசை வடிவம். போசா என்பது பிரேசிலின் சம்பா நடனத்தை ஒத்த நடன இசைவடிவம். ஃபாரா சிராஜ், பிளெமென்கோ, ஜாஸ், போசா மற்றும் பாப் இசை வடிவங்களின் கூட்டிசையாக நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், மனிதநேயத்தை வலியுறுத்தியும் அமைதிக்காகவும், எல்லா மக்களுக்கான விடுதலைக்கும் சேர்ந்ததாக தாள இசை வடிவத்தைக் கையாள்கிறார்.
• புத்தத் துறவியான அனிசோயிங், புத்தமத இசைவடிவமாக, புத்த மந்திரங்களை பல்வேறு தாள லயங்களுடன் பயன்படுத்துகிறார். மந்திரங்களின் வகைகள் அமைதி, அன்பு, ஆனந்தம் என பல்வேறு உணர்வு நிலைகளைக் குறிப்பிடுவதாக உள்ளன. ’நாகி கோம்பா’ இளம்பெண் துறவிகளுக்கான மடத்தை நிர்வகிப்பதுடன், புத்த மந்திர இசைவடிவத்தை உலகெங்கும் கொண்டு சென்றதில் முக்கியமானவர் அனிசோயிங்.
• இப்படியரு கூட்டிணைவைச் சாத்தியப் படுத்தியிருக்கும் ரகுமான் இசையமைப்பாளர் என்பதையும் கடந்து, ஆழ்ந்த அகத்தேடல் கொண்ட மனிதராகவும் நம் முன் நிற்கிறார். அலசல்களும் புரிதல்களும் எவ்வாறு இருப்பினும், ஜாரியாவின் அனுபவம் தியான நிலையில் நம்மைச் சில கணங்களாவது ஆழ்த்துவது யதார்த்தம்.அப்படித்தான் இசையில் ஆழ்ந்து கிடந்து தூங்கப் போனதும் நிகழ்ந்தது. பூ மா சரவணன் எழுதிய ஒரு கட்டுரை இதற்குத் துணை நின்றது ஓலைச்சுவடு இதழில்
•
• ஜோர்டான் அதன் தனித்துவமான நினைவுப் பொருட்கள் மற்றும் பரிசுகளுக்காகவும் பிரபலமானது. அசாதாரண கையால் செய்யப்பட்ட மடாபா விரிப்புகள், உயர்தர பீங்கான் மற்றும் மர பொருட்கள், அத்துடன் கருப்பு வெள்ளி நகைகள் விற்கப்படுகின்றன.ஜோர்டானில் இருக்கும்போது, அரபு இனிப்புகளை முயற்சி செய்யுங்கள் - உலகின் மிக சுவையான விருந்துகள். மீதமுள்ளவை அறிவாற்றல் மற்றும் உல்லாசப் பயணத்தை முழுமையாக ஒருங்கிணைக்கின்றன
• எனவே இஸ்ரேலை விட இங்கு பொருட்கள் கொஞ்சம் விலை மலிவு என்று நண்பர்கள் பொருட்களை வாங்கிக்கொண்டார்கள்.
• கீழ்க்கண்டவாறு குட்டித் தகவல்களையும் சேகரித்துக் கொண்டார்கள்.
• ஜோர்டான் இந்த நாட்டின் தலைநகர் அம்மான்.
• 4. அகதிகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டாத நாடு இது. பாலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளின் அகதிகள் இங்கு குடியேறியுள்ளனர். இப்போதுள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அகதிகள்தான்.
•
• 5. பெட்ரா மிகப் பழமையான நகரம். 'ரோஸ் நகரம்' என்றும் அழைக்கப்படும் இந்த நகரில் அற்புதமான கட்டிடக் கலைக்குச் சான்றாகப் பல கட்டிடங்கள் இருக்கின்றன.
• 6. பெட்ரோல் கிணறுகள் இங்கு இல்லை.
• 7. இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டே நாடுகள் எகிப்தும் இதுவும்தான்.
• 8. கறுப்பு, வெள்ளை, பச்சை நிறப் பட்டைகளின் இடது பக்கத்தில் சிவப்பு முக்கோணத்தில் நட்சத்திரத்துடன் காணப்படுகிறது இதன் தேசியக் கொடி.
• 9. 1946-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாடு.
• 10. அரேபிய மறிமான் (Arabian oryx) தேசிய விலங்கு.
• தேசிய விலங்கையெல்லாம் பார்க்கக் கிடைக்கவில்லை. மலை முகடுகளில் மேயும் ஆடுகள் அவற்றுக்கான உறவிடங்கள், அவற்றைக்கண்காணித்துக் கொள்ளும் மேய்ப்பர்கள் தங்கும் சற்றே சின்னக் குகை போன்ற இடங்கள்.. கவனத்திற்கு வந்தன .
• அதில் நூற்றுக்கணக்கான இந்தியர்களும் மேய்ப்பர்களாக இருப்பார்கள் என்ற தகவல் பகல் நேரத்துக் கொடுமையான வெயிலின் உக்கிரத்தை மனதிற்குள் கொண்டு வந்தது.
• ------------------------------------------------------------------------------------------------------------------------
• -
எகிப்து , இஸ்ரேல் ,பாலஸ்தீனம் ,ஜோர்டான் நாடுகளுக்கான பயணத்திட்டம் முடிவான ஜூலை மாதத்தின் மத்தியில் திருப்பூர் , கோவை மாவட்டங்களில் தொடர்ந்த மழையும் ஈரக்காற்றும் சூழலை ரம்யமாக வைத்திருந்தன. இந்த சூழல் வெளிநாட்டு பயணத்திலும் மையம் கொள்ளும் என்று வழக்கமாக எதிர்பார்ப்பது வழக்கம். அப்படித்தான் நானும் எதிர்பார்த்து இருந்தேன்
ஆனால் சென்னை விமான நிலையத்தை அடைந்தபோது வாட்டிய வெப்பமும் அதன் சூழலும் மனதை உறுத்துவதாக இருந்தது. சித்திரை மாதத்தின் அக்னி நட்சத்திர வெயிலுக்குள் மாட்டிக் கொண்ட மாதிரி இருந்தது. நாம் செல்கிற நாடுகள் உல்லாச பயணம் சார்ந்தது என்பதால் அங்கெல்லாம் இந்த சூழல் இருக்காது .ரம்மியமாக இருக்கும் என்று தான் மனது சொல்லியது
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக நிகழ்ந்த சாவுகள் பிரச்சனைகள் பற்றிய அன்றைய செய்திகள் மனதிற்கு வந்து சிரமப்படுத்தின பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் இருக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. விமான விமான நிலையத்தின் உள்பகுதிக்குள் செல்கிற வரைக்கும் இதே மனநிலை தான் இருந்தது .ஆனால் அங்கிருந்த குளிர்சாதன வசதிகளும் சூழலும் சற்றே ஆசுவாசம் தந்தன
இமிகிரேஷனில் பெட்டிகள் சரியாக போய் சேர்ந்த போது கையில் இருந்த ஏழு கிலோ எடையுள்ள பை பலவகையில் சிரமம் தருவதாக இருந்தது .முதலில் அதிலிருந்து சிறு பொட்டலம் . கொரோனா காலத்தில் மூச்சு சீராக வைத்திருக்கவும் மூச்சு திணறல் இல்லாமல் இருக்கவும இந்த பொட்டலத்தை மனைவி தயார் செய்து தந்திருந்தார் .அப்போது இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பொட்டலத்தில் பயன்பாடு அவ்வப்போது இருந்தது .இந்த முறை இரு சிறு பொட்டலங்களை இரண்டு வார பயணத்திற்காக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வைத்திருந்தார் .அது ஒரு வகையில் இன் கேலர் என்று சொல்லலாம் .மூச்சை சீராக்கவும் எதிர்ப்பு சக்தி தருவதற்கும் சீரகம், கிராம்பு சோம்பு உள்ளிட்ட பலவற்றை பொடி யாக்கி சிறு துணியில் கட்டி இருந்தார் .பயன்படுத்துவது கட்டாயமானது வீட்டில் அல்லது அதை பலரின் பார்வையில் படுவது என்பதெல்லாம் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் சிறு நெல்லிக்காய் அளவு இருந்த அந்த துணியில் கட்டிய பொருள் இமிகிரேஷனில் பல கேள்வியை எழுப்பியது
நான் ஆங்கிலத்தில் அதற்கான பதில் சொல்லிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் அவர்களுக்கு அது சமாதானம் ஆகவில்லை அதை பிரித்து பார்த்துவிட்டு நாக்கில் வைத்து பார்த்தார்கள் .மூக்கில் அருகில் வைத்து சுவாசித்துப் பார்த்தார்கள். என்னையும் சுவாசிக்கச் சொன்னார்கள் .நானும் அதை மூக்கினருகில் வைத்து சுவாசித்துக் காட்டினேன். சரி ஏதோ இயற்கை வைத்தியத்தில் நம்பிக்கை உள்ளவர் .ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கையற்றவர் என்ற முத்திரை குத்தப்பட்டு நான் அங்கிருந்து உள்ளே அனுப்பப்பட்டேன் ஆனால் இது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் தேவையானவை என்பதை பற்றி கூட அவர்களிடம் நான் சொல்ல ஆரம்பித்தேன்
கொரோனா சூழலுக்குப் பின்னால் வீட்டிற்கு வந்த பின்னால் குளியல் போட்டுக் கொள்வதும் வெளியூர் சென்று விட்டு வந்த தருணங்கள் என்றால் ஆவி பிடித்தல் என்பதும் கபசுரக் குடிநீர் குடிப்பது என்பது இயல்பாகி விட்டது. மனைவி கிரிஜா அவர்கள் திட்டமிட்டு அதை செய்து தந்து கொண்டிருந்தார் ..அது ஆறுதலாக இருந்தது எங்கு வெளியில் சென்று விட்டு வந்தாலும் ஆவி பிடித்தலும் கபசுர குடிநீரும் அந்த சூழலில் இருந்து பாதுகாக்கும் என்பது ஒரு வகையில் விஞ்ஞான நம்பிக்கையாக இருந்தது .அப்படித்தான் விமான நிலையத்தின் உள்பகுதிக்கு சென்றபோது இந்த பயணமும் ரம்மியமாக இருக்கும் . அந்த நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான உபாயமாக இருக்கும் என்பதை திடமாக நம்பினேன்
பல ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் கடுமையாக அதிகரித்து அதன் சீற்றத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். ஐரோப்பியக் கண்டத்தின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தொட்டிருக்கிறது. ஏற்கனவே நெருக்கடியில் இருந்த மக்கள் சுருண்டு விழுந்து செத்துக் கொண்டிருக் கிறார்கள். மக்களைப் பாதுகாக்க அரசுகள் தவறிவிட்டதாக தொழிற்சங்கங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். தொடர் எச்சரிக்கை களை மீறி வெப்பமயமாதல் பிரச்சனைகள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை அன்றைய தீக்கதிர் கட்டுரையொன்று இப்படியாகச் சொன்னது. மாறாக, அதற்கான காரணிகளை உற்சாகப் படுத்தும் வகையில்தான் கொள்கைகள் வகுக்கப்பட்டன என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. லண்டனில் உள்ள ஜேபி மோர்கன் அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதலும் நடந்திருக்கிறது. சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களுக்கு இந்த நிதி நிறுவனம் பெரும் அளவில் நிதியை வழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டித்தே இந்தத் தாக்குதல் நடந்தது. இயற்கைப் பாதுகாப்புக் காகப் போராடும் மருத்துவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டில் போடப்பட்ட பாரீஸ் சுற்றுச்சூழல் உடன்பாடு நடைமுறைக்கு வர வேண்டிய இந்தக் காலகட்டத்தில் 3 லட்சத்து 94 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியை ஜேபி மோர்கன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொழிற்சங்கங்கள் மும்முரம்
தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தொழிற்சங்கங்கள் இறங்கியுள்ளன. வெப்பத்தின் உக்கிரத்தால் பணியாற்ற இயலாத இடங்களில் பணிப் பாதுகாப்புக்கான சட்டரீதியான ஏற்பாடு களை செய்து வருகிறார்கள். அதோடு, நெளிவு சுழிவான வேலை நேரம், பணி செய்து கொண்டிருக்கும்போது தேவையான இடைவேளைகள், குளிர் படுத்தும் உடைகள் அணிய அனுமதி மற்றும் போதிய போக்குவரத்து ஏற்பாடுகள் ஆகிய வற்றை உத்தரவாதப்படுத்தும்படி தொழிற் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான லின்சி மான், ‘‘பணியிடங்களை குளிருடன் வைத்திருக்கத் தங்களால் எவ்வ ளவு முயற்சிகள் மேற்கொள்ள முடியுமோ, அவ்வளவு முயற்சிகளை முதலாளிகள் எடுக்க வேண்டும்’’ என்றார். அவரின் கருத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரான்சிஸ் ஓ கிராடி, ‘‘வேலை செய்யும் இடத்தில் அதிக பட்ச வெப்பம் என்ற வரம்பை நிர்ணயிக்க வேண்டும். சொல்லப்போனால், இத்தகைய ஏற்பாடு முதலாளிகளுக்கு நல்லது. அதிக வெப்ப சூழலில் பணிபுரியும் தொழிலாளியால் தன்னுடைய சிறந்த உழைப்பைத் தர முடி யாது’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ வல்லுநர்களும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கப் போகிறது என்று எச்சரிக்கும் மருத்துவ வல்லுநரான டிரேசி நிகோல்ஸ், ‘‘வெளிப்புறங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் தொடர்ச்சியான இடைவேளைகள், திரவ உணவுகள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பசைகள் மற்றும் உடைகள் ஆகியவற்றிற்கு முதலாளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.
வரலாறு காணாத அளவில் வெப்பம் உக்கிரமடைந்துள்ளதால், மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் டொமினிக் ராப் கேட்டுக் கொண்ட பிறகுதான் டிரேசி நிகோல்ஸ் தனது கருத்தைக் கூறியிருக்கிறார். யார் அடுத்து வர வேண்டும், யாரைக் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் சண்டையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருப்பதால் இந்தப் பிரச்சனையில் அக்கறை காட்டவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிடும் ஆபத்து உள்ளது என்று பிரிட்டனின் சுகாதாரப் பாதுகாப்பு முகமை எச்சரிக்கை விடுத்திருந்தும், அது குறித்த ஆலோசனையை மேற்கொள்ள ஏற்பாடு செய்திருந்த உயர்மட்ட, அவசரக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
போர்ச்சுக்கல்
வழக்கமான இறப்பு விகிதத்தை விட வெப்ப அலை வீசுவதால், மரணங்கள் அதி கரித்துள்ளன. போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயி னில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள் ளனர். போர்ச்சுக்கலின் வெப்பம் 47 டிகிரி செல்சியசைத் தொட்டுள்ளது. இது எதிர்பாராத ஒன்றல்ல என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர். வெப்ப அலைகளின் சீற்றத்தால் போர்ச்சுக்கலில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ள னர் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரி விக்கின்றன. உண்மையில் இது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநரான முனைவர் அமீர் கிவாடி, ‘‘2022 ஆம் ஆண்டின் கோடைக் காலம் வழக்கமான வெப்பத்தை விட அதிக மானதாகவே இருக்கும் என்று ஆண்டின் துவக்க கட்டத்திலேயே முன்னறிவிப்புகள் வந்தன. உண்மை நிலை அதையும் விட மோச மாக இருக்கிறது. கணித்ததைவிட வெப்பம் கடுமையாக உள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ்
பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரையில் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கிரீஸ், மொரோக்கோ, இத்தாலி ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வெப்ப பாதிப்பிலிருந்து இந்தச் சுற்றுப்பயணம் அமைய வேண்டும் என்பதை பிரார்த்தனையாக மந்தில் கொண்டு மஸ்கட் செல்லும் விமானத்தில் ஏறினேன்.
000
செங்கடல் முதல் நைல் நதி வரை: 2 (எகிப்து , இஸ்ரேல் ,பாலஸ்தீனம் ,ஜோர்டான் நாடுகளுக்கான பயணம்
ஆடு ஜீவிதம் நாவல் தமிழிலும் பல பதிப்புகள் கண்ட நாவல் . அந்த மலையாள நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் நடிகர் பிருத்வராஜ் உட்பட 50 பேர் கொண்ட குழுவினர் ஜோர்டான நாட்டில் பாலைவனப் பகுதியில் கொரானா காலத்தில் அங்கு விமான சேவை இல்லாததால் முடங்கிக்கிடந்த செய்தி பல நாட்கள் செய்திகளாக வந்தன.
அகதிகள் போன்று தனிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தோம் என்று நடிகர் பிருத்வராஜ் ஒரு பேட்டியில் கூட சொல்லியிருந்தார்
ஜோர்டான் நாடு அகதிகளை அதிகம் வரவேற்கும் நாடு என்று சொல்லப்படுவதுண்டு. சுற்றுலா வருகிறவர்கள் அகதிகளாக மாறும் சூழல் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்
வெயில் சற்றே அதிகமாகத்தான் அம்மான் நகரத்தில் இருந்தது. மழைப்பொழிவு அதிகமில்லை. வறட்சிதான்.ஆனால் வீசும் குளிர்காற்று ஆசுவாசப்படுத்தியது. சொற்ப விளைச்சலுக்கு ஆதாரமாக இந்தக் குளிர்காற்று இருக்கிறதாம்.
ஜோர்டான் அதன் கொந்தளிப்பான அண்டை நாடுகளுடன் இணைந்த ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறது. பக்கத்திலிருக்கும் பாலஸ்தீனம், இஸ்ரேல் போன்றவற்றில் நடக்கும் தீவிரவாதக்குழுக்களின் மோதலும் இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களும் ஜோர்டானை அமைதியான நாடாகக் காட்டிக்கொண்டிருப்பதால் அந்த நாடுகளிலிருந்து மக்கள் வெளியேறி இங்கு குடியேறுகிறார்கள். அமைதிதேசம் என்று கொண்டாடுகிறார்களாம். அதனால் நில மதிப்பு சமீப ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளதாம்.
உலக வங்கி ஜோர்டானை "உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடு" என்று குறிப்பிட்டுள்ளது. வேளாண் மற்றும் தொழில்துறை இராஜ்ஜியம் உள்ளது,.
.ஜோர்டானியர்கள் சுமார் 14% வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.
ஜோர்டானிய ஊழியர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு அரசாங்கம் ஆட்சேபிக்கின்ற போதிலும், தொழில்துறையை தனியார்மயமாக்குவதற்கு உதவினர் .. ஜோர்டான் தொழிலாளர்கள் 77% ஜோர்டான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 12% பேட்ராவின் புகழ் பெற்ற நகரமான Petra போன்ற தளங்களில் சுற்றுலா மற்றும் நிதி, போக்குவரத்து, பொது வசதிகள் போன்ற துறைகளில் சேவை செய்கின்றனர்.
ஜோர்டான் தனது அணுசக்தி நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், நான்கு அணுசக்தி ஆலைகளை கொண்டு வருவதன் மூலம், சவூதி அரேபியாவிலிருந்து விலையுயர்ந்த டீசல் இறக்குமதியை குறைக்கும் மற்றும் அதன் எண்ணெய் சுழலும் இருப்புக்களை சுரண்டுவதன் மூலம் தொடரும். இதற்கிடையில், அது வெளிநாட்டு உதவியை நம்பியுள்ளது.
ஜோர்தானின் நாணயம் தினார் , இது 1 டினாரின் = 1.41 டாலர் பரிமாற்ற விகிதம் உள்ளது.
குறைந்தது 1லட்சம் ஆண்டுகளுக்கு இப்போது யோர்தானில் உள்ள மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை தொல்பொருள் சான்றுகள் காட்டுகின்றன.
இந்த சான்றுகள் கத்திகள், கை அச்சுகள் மற்றும் பனிக்கட்டி மற்றும் பசால்ட் செய்யப்பட்ட ஸ்கேப்பர்கள் போன்ற பல்லோலிதிக் கருவிகள்.
பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அம்மோன், மோவாப், ஏதோம் ஆகிய நாடுகளின் ராஜ்யங்களோடு யோர்தானின் எழுத்துப்பூர்வ வரலாறு ஆரம்பமாகிறது.,
நபி முஹம்மது இறந்த பிறகு, முதல் முஸ்லீம் வம்சம் உருவாக்கப்பட்டது, இதில் இப்போது ஜோர்டான். அம்மனுக்கு அல்-ஊர்டுன் அல்லது "ஜோர்டான்" என்று அழைக்கப்படும் உமாயத் பகுதியில் முக்கிய மாகாண நகரமாக மாறியது. 1258 ல் மங்கோலியர்கள் அப்பாஸ் காளிபாதைக் கைப்பற்றினர்; ஜோர்டான் அவர்களுடைய ஆட்சியின் கீழ் வந்தது. அவர்கள் தொடர்ந்து க்ரூஸேடர்ஸ் , அய்யுயிபைஸ் மற்றும் மம்லூஸ் ஆகியோர் இருந்தனர். 1517 ஆம் ஆண்டில், ஓட்டோமான் பேரரசு இப்பொழுது யோர்தானை வென்றது.
ஒட்டோமான் ஆட்சியின் கீழ், ஜோர்டான்- யோர்தானை தீமையை புறக்கணித்துக்கொண்டிருந்தது. இஸ்தான்புல்லில் இருந்து உள்ளூர் வட்டார ஆளுநர்கள் இந்த பிராந்தியத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். முதலாம் உலகப் போரில் தோல்வியடைந்த பிறகு, 1922 இல் ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுறும் வரை இது நான்கு நூற்றாண்டுகளாக தொடர்ந்தது.
ஒட்டோமான் சாம்ராஜ்யம் சரிந்தபோது, லீக் ஆஃப் நேஷன்ஸ் அதன் மத்திய கிழக்குப் பகுதிகள் மீது கட்டளை ஒன்றை எடுத்துக்கொண்டது. பிரித்தானியாவும் பிரான்சும் இந்த பிராந்தியத்தை பிளவுபடுத்த ஒப்புக் கொண்டது, கட்டாய அதிகாரங்களைக் கொண்டது, பிரான்ஸ் சிரியாவையும் லெபனானையும் எடுத்துக் கொண்டதுடன், பாலஸ்தீன பாலஸ்தீனத்தை (டிரான்ஜோர்டன் உட்பட) பிரிட்டன் எடுத்துக் கொண்டது. கிங் அப்துல்லா சுமார் 200,000 குடிமக்களுடன் ஒரு நாட்டைக் கைப்பற்றினார், அவர்களில் சுமார் அரைவாசிப்போர் நாடோடிக்கும். மே 22, 1946 அன்று, ஐக்கிய நாடுகள் சபையானது டிரான்ஸ்ஜார்டனுக்கு கட்டளை பிறப்பித்தது, அது ஒரு இறையாண்மை அரசாக ஆனது. பாலஸ்தீனத்தின் பிரிவினை மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இஸ்ரேல் உருவாக்கத்தை உத்தியோகபூர்வமாக எதிர்த்ததுடன், 1948 அரபு / இஸ்ரேலிய போரில் இணைந்தது. இஸ்ரேல் நிலவியது, பாலஸ்தீனிய அகதிகள் பல வெள்ளப் பெருக்குகளில் முதலாவது ஜோர்டானுக்குள் நுழைந்தது.
1950 ல், ஜோர்டான் வெஸ்ட் பேங்க் மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகியவற்றை இணைத்தது, இது மற்ற நாடுகளை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. அடுத்த ஆண்டு, ஜெருசலேமில் அல்-அக்சா மசூதியை விஜயம் செய்யும் போது, பாலஸ்தீனிய கொலையாளி கிங் அப்துல்லாவைக் கொன்றார். பாலஸ்தீனிய மேற்குக் கரையின் அப்துல்லாவின் நிலங்களைப் பற்றி அந்த கொலையாளி கோபமடைந்தார்.
அப்துல்லாவின் மனநிலை சரியில்லாத மகனான தாலால் ஒரு சுருக்கமான கடிதத்தை 1953 ல் அப்துல்லாவின் 18 வயதான பேரரசர் அரியணையில் அமர்த்தியிருந்தார். புதிய மன்னர் ஹுசைன், ஒரு புதிய அரசியலமைப்பில் "தாராளவாதத்துடன் பரிசோதனையை" மேற்கொண்டார். பேச்சு சுதந்திரம், செய்தி ஊடகம், மற்றும் சட்டமன்றம்.
1967 மே மாதம், ஜோர்டான் எகிப்துடன் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒரு மாதம் கழித்து, எகிப்திய, சிரிய, ஈராக் மற்றும் ஜோர்டானிய இராணுவ வீரர்கள் ஆறு நாள் யுத்தத்தில் அழித்தனர், மேலும் ஜோர்டானில் இருந்து மேற்குக்கரையையும் கிழக்கு ஜெருசலேத்தையும் கைப்பற்றினர். இரண்டாவது, பாலஸ்தீனிய அகதிகளின் பெரிய அலை ஜோர்டானுக்குள் விரைந்தது. விரைவில், பாலஸ்தீனிய போராளிகள் ( ஃபெடெய்ன் ), தங்கள் சர்வதேச நாடுகளுக்கிடையே சிக்கலைத் தொடுக்கத் தொடங்கியது, மூன்று சர்வதேச விமானங்கள் உச்சமடைந்து, ஜோர்டானில் அவர்களைக் கட்டாயப்படுத்தியது. 1970 செப்டம்பரில், ஜோர்டானிய இராணுவம் மத்திய கிழக்கில் தாக்குதல் நடத்தியது; சிரியாவின் டாங்கிகள் வடக்கு ஜோர்டானைத் தீவிரவாதிகள் ஆதரித்தது. ஜூலை 1971 இல், ஜோர்தானியர்கள் சிரியாவையும், ஃபெடெய்னையையும் தோற்கடித்து, எல்லையை கடந்து ஓடினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், ஜோர்டான் 1973 ல் யோம் கிப்பூர் போரில் (ரமாதான் போரில்) இஸ்ரேலிய எதிர்த்தாக்குதலைத் தடுக்க உதவும் ஒரு இராணுவ படைப்பிரிவை சிரியாவிற்கு அனுப்பி வைத்தார். அந்த மோதலில் ஜோர்டான் தன்னை இலக்காகக் கொள்ளவில்லை. 1988 ஆம் ஆண்டில், ஜோர்டான் உத்தியோகபூர்வமாக மேற்குக்கரைக்கு உரிமை கோரியது. மேலும் பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் மீது அவர்களின் முதல் இண்டிபாடாவில் ஆதரவு தெரிவித்தது.
முதல் வளைகுடாப் போரின் போது (1990 - 1991), ஜோர்டான் சதாம் ஹுசைனை ஆதரித்தது, இது அமெரிக்க / ஜோர்டானிய உறவுகளை முறித்துக் கொண்டது. அமெரிக்கா ஜோர்டானிலிருந்து உதவி விலகி, பொருளாதார துன்பத்தை ஏற்படுத்தியது. சர்வதேச நல்லிணக்கத்தை மீண்டும் பெற, 1994 ல் ஜோர்டான் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட போர் முடிவடைந்தது.
1999 ஆம் ஆண்டில், கிங் ஹுசைன் நிணநீர் புற்றுநோயால் இறந்தார் மற்றும் அவரது மூத்த மகன் வெற்றி பெற்றார், அவர் கிங் அப்துல்லா II ஆனார். அப்துல்லாவின் கீழ், ஜோர்டான் அதன் கொந்தளிப்பான அண்டை நாடுகளுடன் இணைந்த ஒரு கொள்கையை பின்பற்றி, இன்னும் அகதிகளின் கூடுதல் வருவாயை அடைந்துவிட்டது.
மஸ்கட் விமான நிலையில் இசைத்துக் கொண்டிருந்த ஓர் இசைக் குறிப்பை அடையாளம் கண்டு கொண்ட பெங்களூர்க்காரர் ஜோர்டான் இசை இங்கேயே முழங்க ஆரம்பித்து விட்டது என்றார்.தூரத்தில் வெட்டப்பட்டது போல் மலைகள். மரங்கள், செடிகள் இல்லாமல் பாறைகளாக ..போன்சாய் செடிகளைப் போல்..
வைப்பை வசதியை பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்துதான் பெற வேண்டியிருந்தது. வைப்பை வசதிக்குள் சுலபமாக நுழைய முடியவில்லை. அப்போதுதான் ஜோர்டான் இசை காதிலும் நுழைந்தது.
ஜோர்டான் நாட்டு இசை ஏ ஆர் ரகுமானின் இசையில் செய்த பாதிப்பும் அவர் வெளியிட்ட இசை ஆல்பங்களும் கூட முக்கியமானவை.
செங்கடல் முதல் நைல் நதி வரை: 1 (எகிப்து , இஸ்ரேல் ,பாலஸ்தீனம் ,ஜோர்டான் நாடுகளுக்கான பயணம்)
எகிப்து , இஸ்ரேல் ,பாலஸ்தீனம் ,ஜோர்டான் நாடுகளுக்கான பயணத்திட்டம் முடிவான ஜூலை மாதத்தின் மத்தியில் திருப்பூர் , கோவை மாவட்டங்களில் தொடர்ந்த மழையும் ஈரக்காற்றும் சூழலை ரம்யமாக வைத்திருந்தன. இந்த சூழல் வெளிநாட்டு பயணத்திலும் மையம் கொள்ளும் என்று வழக்கமாக எதிர்பார்ப்பது வழக்கம். அப்படித்தான் நானும் எதிர்பார்த்து இருந்தேன்
ஆனால் சென்னை விமான நிலையத்தை அடைந்தபோது வாட்டிய வெப்பமும் அதன் சூழலும் மனதை உறுத்துவதாக இருந்தது. சித்திரை மாதத்தின் அக்னி நட்சத்திர வெயிலுக்குள் மாட்டிக் கொண்ட மாதிரி இருந்தது. நாம் செல்கிற நாடுகள் உல்லாச பயணம் சார்ந்தது என்பதால் அங்கெல்லாம் இந்த சூழல் இருக்காது .ரம்மியமாக இருக்கும் என்று தான் மனது சொல்லியது
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக நிகழ்ந்த சாவுகள் பிரச்சனைகள் பற்றிய அன்றைய செய்திகள் மனதிற்கு வந்து சிரமப்படுத்தின பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் இருக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. விமான விமான நிலையத்தின் உள்பகுதிக்குள் செல்கிற வரைக்கும் இதே மனநிலை தான் இருந்தது .ஆனால் அங்கிருந்த குளிர்சாதன வசதிகளும் சூழலும் சற்றே ஆசுவாசம் தந்தன
இமிகிரேஷனில் பெட்டிகள் சரியாக போய் சேர்ந்த போது கையில் இருந்த ஏழு கிலோ எடையுள்ள பை பலவகையில் சிரமம் தருவதாக இருந்தது .முதலில் அதிலிருந்து சிறு பொட்டலம் . கொரோனா காலத்தில் மூச்சு சீராக வைத்திருக்கவும் மூச்சு திணறல் இல்லாமல் இருக்கவும இந்த பொட்டலத்தை மனைவி தயார் செய்து தந்திருந்தார் .அப்போது இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பொட்டலத்தில் பயன்பாடு அவ்வப்போது இருந்தது .இந்த முறை இரு சிறு பொட்டலங்களை இரண்டு வார பயணத்திற்காக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வைத்திருந்தார் .அது ஒரு வகையில் இன் கேலர் என்று சொல்லலாம் .மூச்சை சீராக்கவும் எதிர்ப்பு சக்தி தருவதற்கும் சீரகம், கிராம்பு சோம்பு உள்ளிட்ட பலவற்றை பொடி யாக்கி சிறு துணியில் கட்டி இருந்தார் .பயன்படுத்துவது கட்டாயமானது வீட்டில் அல்லது அதை பலரின் பார்வையில் படுவது என்பதெல்லாம் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் சிறு நெல்லிக்காய் அளவு இருந்த அந்த துணியில் கட்டிய பொருள் இமிகிரேஷனில் பல கேள்வியை எழுப்பியது
நான் ஆங்கிலத்தில் அதற்கான பதில் சொல்லிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் அவர்களுக்கு அது சமாதானம் ஆகவில்லை அதை பிரித்து பார்த்துவிட்டு நாக்கில் வைத்து பார்த்தார்கள் .மூக்கில் அருகில் வைத்து சுவாசித்துப் பார்த்தார்கள். என்னையும் சுவாசிக்கச் சொன்னார்கள் .நானும் அதை மூக்கினருகில் வைத்து சுவாசித்துக் காட்டினேன். சரி ஏதோ இயற்கை வைத்தியத்தில் நம்பிக்கை உள்ளவர் .ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கையற்றவர் என்ற முத்திரை குத்தப்பட்டு நான் அங்கிருந்து உள்ளே அனுப்பப்பட்டேன் ஆனால் இது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் தேவையானவை என்பதை பற்றி கூட அவர்களிடம் நான் சொல்ல ஆரம்பித்தேன்
கொரோனா சூழலுக்குப் பின்னால் வீட்டிற்கு வந்த பின்னால் குளியல் போட்டுக் கொள்வதும் வெளியூர் சென்று விட்டு வந்த தருணங்கள் என்றால் ஆவி பிடித்தல் என்பதும் கபசுரக் குடிநீர் குடிப்பது என்பது இயல்பாகி விட்டது. மனைவி கிரிஜா அவர்கள் திட்டமிட்டு அதை செய்து தந்து கொண்டிருந்தார் ..அது ஆறுதலாக இருந்தது எங்கு வெளியில் சென்று விட்டு வந்தாலும் ஆவி பிடித்தலும் கபசுர குடிநீரும் அந்த சூழலில் இருந்து பாதுகாக்கும் என்பது ஒரு வகையில் விஞ்ஞான நம்பிக்கையாக இருந்தது .அப்படித்தான் விமான நிலையத்தின் உள்பகுதிக்கு சென்றபோது இந்த பயணமும் ரம்மியமாக இருக்கும் . அந்த நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான உபாயமாக இருக்கும் என்பதை திடமாக நம்பினேன்
பல ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் கடுமையாக அதிகரித்து அதன் சீற்றத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். ஐரோப்பியக் கண்டத்தின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தொட்டிருக்கிறது. ஏற்கனவே நெருக்கடியில் இருந்த மக்கள் சுருண்டு விழுந்து செத்துக் கொண்டிருக் கிறார்கள். மக்களைப் பாதுகாக்க அரசுகள் தவறிவிட்டதாக தொழிற்சங்கங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். தொடர் எச்சரிக்கை களை மீறி வெப்பமயமாதல் பிரச்சனைகள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை அன்றைய தீக்கதிர் கட்டுரையொன்று இப்படியாகச் சொன்னது. மாறாக, அதற்கான காரணிகளை உற்சாகப் படுத்தும் வகையில்தான் கொள்கைகள் வகுக்கப்பட்டன என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. லண்டனில் உள்ள ஜேபி மோர்கன் அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதலும் நடந்திருக்கிறது. சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களுக்கு இந்த நிதி நிறுவனம் பெரும் அளவில் நிதியை வழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டித்தே இந்தத் தாக்குதல் நடந்தது. இயற்கைப் பாதுகாப்புக் காகப் போராடும் மருத்துவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டில் போடப்பட்ட பாரீஸ் சுற்றுச்சூழல் உடன்பாடு நடைமுறைக்கு வர வேண்டிய இந்தக் காலகட்டத்தில் 3 லட்சத்து 94 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியை ஜேபி மோர்கன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொழிற்சங்கங்கள் மும்முரம்
தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தொழிற்சங்கங்கள் இறங்கியுள்ளன. வெப்பத்தின் உக்கிரத்தால் பணியாற்ற இயலாத இடங்களில் பணிப் பாதுகாப்புக்கான சட்டரீதியான ஏற்பாடு களை செய்து வருகிறார்கள். அதோடு, நெளிவு சுழிவான வேலை நேரம், பணி செய்து கொண்டிருக்கும்போது தேவையான இடைவேளைகள், குளிர் படுத்தும் உடைகள் அணிய அனுமதி மற்றும் போதிய போக்குவரத்து ஏற்பாடுகள் ஆகிய வற்றை உத்தரவாதப்படுத்தும்படி தொழிற் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான லின்சி மான், ‘‘பணியிடங்களை குளிருடன் வைத்திருக்கத் தங்களால் எவ்வ ளவு முயற்சிகள் மேற்கொள்ள முடியுமோ, அவ்வளவு முயற்சிகளை முதலாளிகள் எடுக்க வேண்டும்’’ என்றார். அவரின் கருத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரான்சிஸ் ஓ கிராடி, ‘‘வேலை செய்யும் இடத்தில் அதிக பட்ச வெப்பம் என்ற வரம்பை நிர்ணயிக்க வேண்டும். சொல்லப்போனால், இத்தகைய ஏற்பாடு முதலாளிகளுக்கு நல்லது. அதிக வெப்ப சூழலில் பணிபுரியும் தொழிலாளியால் தன்னுடைய சிறந்த உழைப்பைத் தர முடி யாது’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ வல்லுநர்களும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கப் போகிறது என்று எச்சரிக்கும் மருத்துவ வல்லுநரான டிரேசி நிகோல்ஸ், ‘‘வெளிப்புறங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் தொடர்ச்சியான இடைவேளைகள், திரவ உணவுகள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பசைகள் மற்றும் உடைகள் ஆகியவற்றிற்கு முதலாளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.
வரலாறு காணாத அளவில் வெப்பம் உக்கிரமடைந்துள்ளதால், மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் டொமினிக் ராப் கேட்டுக் கொண்ட பிறகுதான் டிரேசி நிகோல்ஸ் தனது கருத்தைக் கூறியிருக்கிறார். யார் அடுத்து வர வேண்டும், யாரைக் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் சண்டையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருப்பதால் இந்தப் பிரச்சனையில் அக்கறை காட்டவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிடும் ஆபத்து உள்ளது என்று பிரிட்டனின் சுகாதாரப் பாதுகாப்பு முகமை எச்சரிக்கை விடுத்திருந்தும், அது குறித்த ஆலோசனையை மேற்கொள்ள ஏற்பாடு செய்திருந்த உயர்மட்ட, அவசரக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
போர்ச்சுக்கல்
வழக்கமான இறப்பு விகிதத்தை விட வெப்ப அலை வீசுவதால், மரணங்கள் அதி கரித்துள்ளன. போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயி னில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள் ளனர். போர்ச்சுக்கலின் வெப்பம் 47 டிகிரி செல்சியசைத் தொட்டுள்ளது. இது எதிர்பாராத ஒன்றல்ல என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர். வெப்ப அலைகளின் சீற்றத்தால் போர்ச்சுக்கலில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ள னர் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரி விக்கின்றன. உண்மையில் இது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநரான முனைவர் அமீர் கிவாடி, ‘‘2022 ஆம் ஆண்டின் கோடைக் காலம் வழக்கமான வெப்பத்தை விட அதிக மானதாகவே இருக்கும் என்று ஆண்டின் துவக்க கட்டத்திலேயே முன்னறிவிப்புகள் வந்தன. உண்மை நிலை அதையும் விட மோச மாக இருக்கிறது. கணித்ததைவிட வெப்பம் கடுமையாக உள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ்
பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரையில் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கிரீஸ், மொரோக்கோ, இத்தாலி ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வெப்ப பாதிப்பிலிருந்து இந்தச் சுற்றுப்பயணம் அமைய வேண்டும் என்பதை பிரார்த்தனையாக மந்தில் கொண்டு மஸ்கட் செல்லும் விமானத்தில் ஏறினேன்.
000
செங்கடல் முதல் நைல் நதி வரை: 2 (எகிப்து , இஸ்ரேல் ,பாலஸ்தீனம் ,ஜோர்டான் நாடுகளுக்கான பயணம்
ஆடு ஜீவிதம் நாவல் தமிழிலும் பல பதிப்புகள் கண்ட நாவல் . அந்த மலையாள நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் நடிகர் பிருத்வராஜ் உட்பட 50 பேர் கொண்ட குழுவினர் ஜோர்டான நாட்டில் பாலைவனப் பகுதியில் கொரானா காலத்தில் அங்கு விமான சேவை இல்லாததால் முடங்கிக்கிடந்த செய்தி பல நாட்கள் செய்திகளாக வந்தன.
அகதிகள் போன்று தனிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தோம் என்று நடிகர் பிருத்வராஜ் ஒரு பேட்டியில் கூட சொல்லியிருந்தார்
ஜோர்டான் நாடு அகதிகளை அதிகம் வரவேற்கும் நாடு என்று சொல்லப்படுவதுண்டு. சுற்றுலா வருகிறவர்கள் அகதிகளாக மாறும் சூழல் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்
வெயில் சற்றே அதிகமாகத்தான் அம்மான் நகரத்தில் இருந்தது. மழைப்பொழிவு அதிகமில்லை. வறட்சிதான்.ஆனால் வீசும் குளிர்காற்று ஆசுவாசப்படுத்தியது. சொற்ப விளைச்சலுக்கு ஆதாரமாக இந்தக் குளிர்காற்று இருக்கிறதாம்.
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022
July 2022 ? uyirmme monthly
சிறுகதை : சுப்ரபாரதிமணியன்
பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்..
சித்ராவிற்கு அந்த குமரன் பஞ்சாலைக்குச் செல்கிற போதெல்லாம் தான் ஏதோ ஒரு வகையில் உடல்ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்பது மனதில் பயத்தை கிளப்பிக் கொண்டு இருந்தது.அப்படியெதுவும் இதுவரை நடந்ததில்லை.
இந்த முறையும் பஞ்சாலையின் முகப்பில் சென்று காவலாளிக்கு வணக்கம் செலுத்திய போது அவன் பார்த்த பார்வையில் ஏனோ உடம்பு நடுங்கியது .அவள் கழுத்தில் இருந்த அடையாள அட்டைகயிற்றுடன் தொங்கி விளையாட்டு காட்டியது.இந்த எண்ணம் விபரீதம் என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.. அவள் கைப்பையில் சமீபத்தில் சங்கு கழுத்து வடிவமைப்பில் ஒரு சின்ன பேனாக் கத்தி வைத்திருக்கிறாள் . பேனா கத்தி என்பதை ஒருவரும் அறியமாட்டார்கள் பேனா போல் எழுதுவதற்கு இருக்கும் .மறுபுறம் விரித்தால் கூர்மையான கத்தியை தென்படும். அதை ஏன் தன் கைக்குள் அடக்கி கொண்டாள் என்பதில் அவளுக்கு ஆச்சரியம் இருந்திருக்கிறது. தன் தன்னார்வ குழுவின் இயக்குனர் மனோகரனிடம் தற்காப்புக்காக ஒரு பெப்பர் ஸ்பிரே வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டாள். அதற்கெல்லாம் நிதி வசதி உள்ளதா என்றார்.
” உனக்கு அந்த ஸ்பின்னிலிங் மில்லுக்கு போய்ட்டு வர்ற பஸ் டிக்கட் கட்டணம் கூடத் தர முடியாமெ பல சமயம் சிரமப்படறம் . இதுல.. இதெல்லாம் என்ன விபரீத கற்பனை. “
இந்த முறை அந்த பஞ்சாலைக்கு அவள் செல்வது 17ஆவது முறை .அவளின் இன்னொரு சக தோழியான ஜெபம் மேரி இன்னொரு தன்னார்வக் குழுவில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் தியாகி பஞ்சமர் பஞ்சாலைக்கு முப்பதாவது முறை சென்றவள். அந்தப் பஞ்சாலையின் முதலாளியை முப்பதாவது முறைச்சென்றபோதே சந்திக்க முடிந்திருக்கிறது. அதனால் பதினேழு முறைகள் என்பதெல்லாம் மிக சாதாரணம் தொடர்ந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நிர்வாகிகளோ முதலாளியோ கண்ணில் படுவர். பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றாள்
அவளின் குழுவிலிருந்து சொல்லப்படுகின்ற பணி அந்த பஞ்சாலையில் உள்ள தொழிலாளருக்கு சுகாதாரம் மற்றும் உடல்நலம் குறித்த வகுப்பெடுக்கும் ஒப்பந்தத்தில் நிர்வாகத்தை உடன்பட வைப்பது. அதை நிர்வாகத்திடம் பேசி ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்து பெறுவது தான் .அதற்குப் பின் தொடர்ச்சியாக அவள் அங்கு அந்த வகுப்புகளில் பாட எடுக்கச் செல்லலாம் என்பதை உணந்திருந்தாள் .தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளை பற்றி சொல்லித் தரலாம் .அங்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதில்லை என்ற ரீதியில் பிரச்சாரத்தையும் துவங்கி அந்த பஞ்சாலை பிரதேசம் பாலியல் அத்துமீறல்கள் இல்லாத பிரதேசம் என்று ஒரு பெரிய விழாவில் அறிவிக்கப்படும். தொடர்ந்து அவளின் அந்த பஞ்சாலை சார்ந்த விழிப்புணர்வு வேலைகள் அங்கு நடைபெறும் . அடுத்த புராஜெக்ட்டில் வேறு தன்னார்வக் குழுவில் இன்னும் சம்பள உயர்வுடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த நல்ல வார்த்தைகளுக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும் .
பஞ்சாலை முகப்பில் இருந்த காவலாளி சற்றே மாநிறத்துடன் இருந்தான். அவனுக்கு உச்சமாய் இருபத்தைந்து வயது கூட இருக்காது. இதுபோன்ற காவலாளிகள் பெரும்பாலும் வயதானவர்களாக தான் இருப்பார்கள், ஆனால் அந்த காவலாளிக்கு இளம் வயது . ஒரு குடும்பஸ்தராக கூட இருக்க மாட்டார் என்று நினைத்தாள்.தன்னைப் போல.
ஆனால் வெயிலிலும் அலைச்சலிலும் அவள் முகம் வாடி இருந்தது.அவன் கூர்ந்து அவளின் கவலை தோய்ந்த முகத்திற்கு ஆறுதல் தருவது போல் பேச ஆரம்பித்தான் .
அவளின் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையை கழற்றி பக்கமிருந்த நாற்காலியில் வைத்தாள். உட்காரச் சொன்னதற்காய் நன்றி சொல்லிக் கொண்டாள்,
பத்து தரமாச்சும் வந்துட்டீங்க.. இன்னும் நீங்க உள்ளே போய் கூட பாக்க முடியல
பதினேழு தரம் ...ஆமாங்க அதுதான் ரொம்ப சிரமமா இருக்கு. இந்த ஒரு கம்பெனியிலிருந்து அக்ரிமெண்ட் போட்டா போதும். அது பலனளிக்கும்.....இத்தனை நாள் வந்ததுக்கு அக்ரிமென்ட் போட்டு கண்லே பாக்க முடியலே .
பஞ்சாலையின் முக்கிய முகப்பு பகுதியிலிருந்து நிர்வாக அலுவலகத்திற்கு செல்வதற்கு பேட்டரி கார் இருக்கிறது . அவனின் எண்ணைய் பூசி தலைமயிர் பரப்பில் வெள்ளி மின்னுவது போல் இருந்தது . அவனது சம்மதம் இல்லாமல் கடக்க முடியாது. பஞ்சாலை முகப்பிலிருந்து அந்த நிர்வாக கட்டிடம் உள்ள நீளமான பாதைகளும் தூரமும் மனதில் வந்து போகும் அவளுக்கு.
ஆமாம்மா நீங்க எந்த குழு.. உங்க குழு பெயர் .
இமயம்..
வேற குழுவும் அப்பப்போ வந்து போறாங்க அவங்களும் பார்க்க முடியல.. இமயம்.. உங்களுக்கு தெரியுமா அம்மா, காவிரி, நொய்யல் அப்படி இப்படி எல்லாம் கூட பேர் போறாங்க. நெறையப் பேர்வந்து போறாங்க
ஆமாங்க அவங்க எல்லாம் வந்து போறது தெரியும் எங்களுக்குக் கெடைக்கும்ன்னு சொல்லலாம் . நம்பிக்கை இருக்கு.
அங்களுக்கும் அனுமதி கிடைக்கலெ.
அதுதான் எங்களுக்கும் அனுமதி கிடைக்க மாட்டேங்குது போல
அவங்களுக்கு கேட்க எல்லாம் சரியா இருக்கா தெரியல
ஆமா
இப்போ யாரும் இல்லையே.. முதலாளி வரும் போதும் சொல்றன்
இப்படித்தான் சொல்றீங்க.. ஒவ்வொருதரமும் வரும் போது இப்படித்தான் சொல்றீங்க.. சரி போன் பண்ணிட்டு வரலாம்னு பார்த்தா போன் பண்ணுனா இமயம்ன்னு சொன்னா போது ரொம்ப பிசியா இருக்கம் அம்மா. அப்புறம் பார்க்கலாம்கீறிங்க முதலாளி, மேனேஜர் .. யாருமே இல்லை என்கிறீங்க.. வெளிநாடு போய் இருக்காங்க வெளியூர் போய் இருக்காங்க . ஒரு வாரம் கழிச்சு பேசிங்கறீங்களாம்மான்னு ஒரே பதில்
அப்படி எல்லாம் பதில் சொல்லச் சொல்றாங்கம்மா.
ஆனாலும் நீங்க தயவு பண்ணீ மனசு வெச்சா முடியும்
சிரமம்தாம்மா. அப்ப நீயே இன்னைக்கி உட்கார்ந்து அவங்க வர்ற வரைக்கும் காத்திருந்து பாத்துட்டு போறதுன்னு முடிவு பண்ணி இருக்கீங்களா..
ஆமாம்
செரி
அப்படித்தான் காத்துக்கிட்டு இருக்க முடிவு பண்ணி இருக்கன்.
அவங்க வந்தா சொல்றேன். நீங்க வேற எதாவது வேலை இருந்ததுன்னா போயிட்டு வாங்க
இல்ல. இன்னைக்கு இங்க மட்டும் இருந்து பாத்துட்டு போலாம்னு இருக்கேன் எத்தனை நாள் வந்துவந்து போறது .
பழனிசாமி பல்வேறு பஞ்சாலைகளுக்கு 30, 40 முறைகள் சென்று இருக்கிறார். அதனால் அவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.ஆனால் எந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை .ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நிலையில் மேலாளரிடம் பெறப்படும் வாக்குறுதி பல சமயங்களில் அடுத்த நாட்களில் நடைமுறைக்கு வருவதில்லை இதெல்லாம் தேவையில்லை எம்.டி சொல்லிட்டாங்க அதனால வேண்டாம். அல்லது இங்கெ முந்தியே ஒரு கமிட்டி எல்லாம் இருக்கு. அதெல்லாம் அவங்களெ பார்த்துக்குவாங்க ஆமா.. விஸ்வநாதன் வக்கீல் இருக்கிறார்.அவர் எல்லாத்தையும் பாத்துக்க்குவார் .
மெல்ல வெளியில் இருந்து வீசும் வெயிலுடன் கூடிய காற்றும்., மின் விசிறி காற்றும் எல்லாம் சேர்ந்து அவள் முகத்து வியர்வையை துரத்திக் கொண்டிருந்தது. தொண்டையில் இறங்கிய குளிர்ந்த நீர் இன்னும் ஆசுவாசப்படுத்தியது. பெரிய அளவிலான உடல் வலி காணாமல் போகப் பிரயத்தனம் செய்தது. எங்கு சென்றாலும் விஸ்வநாதன் பெயரை சொல்கிறார்கள் விஸ்வநாதன் வழக்கறிஞர்.அவர் மக்கள் தொடர்பு வேலைகள் எல்லாம் எப்படி செய்கிறார் என்ற கேள்வி வந்திருக்கிறது .பாதுகாப்பாக அப்படி ஒரு வழக்கறிஞர் பெயரை சொல்லி விட்டால் போதும் என்று என்ற எண்ணம் வந்திருக்கிறது.
நீங்க புதுசா வந்து கமிட்டி பாம் பண்ணி தொழிலாளர்களெப் பார்த்து பேசி கூட்டம் போட்டு.. அவரே எல்லாம் பண்ணுவாரு. அதுதா .
அவளின் பார்வையில் ஒரு பர்லாங் தூரம் கடந்து போய் அந்த நிர்வாக அலுவலகத்தில் யாராவது யாரையாவது சந்திப்பது இன்றையக் குறிக்கோளாக இருந்தது.வெயில் கானல் நீரைப் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தது. பஞ்சாலை முகப்பிற்கு வரும்போது உதவி மேனேஜரை அடையாளம் கண்டு கொண்டு கொண்டாள். இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து போய்க்கொண்டு இருந்த அவரிடம் கேட்டபோது முதலாளி யாரும் இல்ல நான் என்ன பண்ணட்டும் என்றபடி வாகனத்தை முடக்கி விட்டார் .
ஐயா நீங்க இந்த ஊர்க்காரரா
தேனி மாவட்டம்.. அங்க வேலை இல்லை அதனாலதான் இங்க வந்துட்டேன்
அங்கதான் விவசாயம் ..தண்ணீ.. கம்பம் பள்ளத்தாக்கு எல்லாம் பச்சையாக் கிடக்குமோ.. அதை தாண்டி எதுக்கு வர்றீங்க
பாக்க பசுமையா நல்லா இருக்குன்னு சொல்றீங்க வேலை சரியா இருக்காது. அந்தக் கூலி கம்மி . அதெ விட இரண்டு மடங்கு சம்பளம் இங்க கிடைக்கும் .
சரி வீட்டு வாடகை விலைவாசி தண்ணீக்கு காசு கொடுத்து வாங்கறப்போ இந்த சம்பளம் கட்டுபடியாகுமா
அதுசெரிதா. ஆனாலும் இந்த பகுதியில் இருக்கிற பல மில்கள்லெ ஏதாச்சும் வேலை இருக்கும். அதான் வந்துடறோம்
சரி இன்னிக்கு யாரையும் பார்க்க முடியுமா
யாரு இல்லம்மா என்னுடைய கையிலெ எதுவும் இல்லெ.முதலாளிகமார் யாருமே இல்லை நீங்க அவங்க வர்ற நாளா பார்த்து வாங்க. செய்தியை கடிதம் மூலமாகக் கொடுத்துட்டு போங்க.
அவள் தன் கைப்பையில் இருந்து எடுத்த கடிதத்தை இமயம் தன்னார்வ குழுவின் முகவரி அட்டையோடு சேர்த்து கொடுத்தாள்.கடிதத்தின் முனை மடங்கியிருந்ததை நீவி விட்டுக்கொண்டாள். கொஞ்சம் வியர்வை அந்த கடித முனையிலும் ஒட்டிக்கொண்டது.ஈரப்படுத்தியது
இந்த வரலாற்றை எத்தனை தடவை கொடுத்திருப்பீங்க. நானும் கொண்டுபோய்க் கொடுத்து இருக்கேன் .
சரி அப்போ நான் இன்னிக்கி காத்துட்டு இருந்து நேரடியாக குடுத்துட்டு, பேசிட்டுப் போறேன்
சரிம்மா . என்னமோ பண்ணுங்கம்மா
என்னை வெளியே போக சொல்லிட்டு துரத்த மாட்டீங்களே .நான் வெயிட் பண்ணி யாரையாச்சும் பாத்துட்டு போறேன்
சரி நான் என்ன பண்ண முடியும். நான் உன்னை தொரத்த முடியாது. யாராவது கண்ணுல பட்டு என்னன்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லிருவேன்.
கண்டிப்பா பார்க்கணும்
. காவலாளியிடம் ஒரே மாதிரி பேச்சு, உரையாடல் என்று ஒவ்வொருமுறையும் அலுப்பாகவே இருந்திருக்கிறது அவளுக்கு. இந்த வெயில், புழுதியெல்லாம் இன்னும் அலுப்பை தொடரச் செய்யும்.அவ்வளவு வலிமை இந்த வெயிலுக்கு.
அந்தோணிசாமிக்கு தினகரன் மில்லில் ஒரு அளவுக்கு செல்வாக்கு இருந்தது. அங்குள்ள உணவு விடுதியில் மேலாளராக இருக்கும் அவரின் உறவினர்கள் சொல்லி அந்த முதலாளி வீட்டுக்கு போய் பேசி பலமுறை அந்த நிர்வாகிகள் உடன் சந்தித்துப் பேசி எப்படியோ ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்து வாங்கிகொண்டார். அவர் அடுத்த வாரம் தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்க இருப்பதாக சொன்னார். அப்படி யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் தான் முதலாளியும் நிர்வாகிகளையும் அணுக முடியும் என்று தோன்றியது .
போன வாரம் ஒரு பயிற்சி அவளுடைய அலுவலகத்தில் இருந்தது. எல்லாருக்கும் ஒரு பலூனை கொடுத்து ஊதி எதையாவது எழுதச் சொன்னார்கள். சரி என்று பின்னால் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருந்தாள். இப்போதைய தன்னுடைய கனவு என்னவென்று எழுதச் சொன்னார்கள் .தங்களுடைய நோக்கம் என்னவென்று எழுதச் சொன்னார்கள்.
சித்ராவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்குக் கிடைத்தது ஊதாநிற பலூன் .வயிற்றின் உள்ளிருந்து காற்று வெளியேறி அதை நிரப்பினாள் . ரொம்ப நாளாயிற்று இப்படி பலூன் ஊதி அது பெரிதாகி ஜாலம் காட்டி காற்றில் மிதக்கத் தயாரானதும் அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.
அந்த ஊதா நிற பலூனில் கனவு மெய்ப்பட வேண்டும் என்று எழுதினாள். என்ன கனவு. கல்யாணக் கனவா என்று குழுவின் தலைவி செல்வி கேட்டாள். அதெல்லாம் இல்ல இப்போதைக்கு ஏதாவது ஸ்பின்னிங் மில்லெ அக்ரிமெண்ட் எம் ஓ யு வாங்கணும். அதுதான் முக்கியம் அதை பற்றி கனவு .வேற என்ன பண்றது ஒவ்வொரு ஸ்பின்னிங் மில்லுக்கும் நடந்து பார்த்தால் தான் தெரியும்.
அப்போது அந்த குழு விவாதம் சுகாதாரம் பற்றி ஒரு உப தலைப்பில் இருந்தது அவளின் கனவில் ஏதாவது ஒரு பஞ்சாலையில் ஒப்பந்தத்தை வாங்கி விடுவதுதான் முக்கியமான நோக்கமாக இருந்தது .பலரும் பல வண்ணங்களில் பலவித கனவுகளை பலூன்களில் எழுதினார்கள். ஆனால் யாருடைய கனவிலும், பலூனிலும் இப்படி பஞ்சாலை ஒப்பந்தம் பற்றி குறிப்பு இல்லை. எல்லோரும் ஸ்வச் பாரத், சுகாதாரமான இந்தியா, எந்தத் தெருவிலும் சாக்கடையை ஓட விடக்கூடாது, எந்த தெருவிலும் கொசு புழக்கம் இருக்கக்கூடாது, எந்த தெருவும் குப்பைகள் இல்லாமல் இருக்கிற இடமாக மாற வேண்டும் என்பது தான் கற்பனையாக இருந்தது எல்லோருக்கும் சுத்தம் சுகாதாரம்
அப்புறம் நீங்க சாப்டீங்களா..
சாப்பாட்டுக்கு நேரம் இருக்கு
ஆனாலும் உள்ள போனா கேண்டீன்ல சாப்பிடலாம் ஆனா நீங்க உள்ள போறதுக்கு உடமுடியாது
சும்மா விடுவீங்களா.
முதலாளி உள்ளே இருந்தால் விடலாம்.
யாரையாச்சும் நேர்ல பார்த்தா கூட போதும் அவரோட.. இல்லைங்க அவர் போன் நம்பர் கிடைக்க மாட்டேங்குது. செல்போன்.. போன்ல பண்ணிட்டு வாங்குறாங்க. சில பேரு மெயில் பண்ணிட்டு அப்பாயின்மென்ட் வாங்கிட்டு வாங்குறாங்க. சரி இமெயில் நம்பர் இமெயில் அய்டி கொடுங்கன்னா கொடுக்க மாட்டேங்கிறாங்க. குடுக்குற ஈமெயிலில பதில் வர்ரதில்லை. சரி..அப்புறம் உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா ...
கல்யாணத்துக்கு வகை எல்லாம் ஒன்னும் பெருசா தெரியலே இங்க . நான் இங்கே வெளியில இருக்கன் தனியாத்தா .மேனேஜருக்கு வகையான ஆளா இருக்கிறதா சொல்லிட்டு இருக்கேன். நான் இங்கே செய்யற வேலை செக்யூரிட்டி வேலை தான். செக்யூரிட்டி வேலையெச் சொல்லிட்டு கல்யாணம் பண்ண முடியாது. ஆனாலும் வேற வேலைன்னு பொய்யெல்லாம் சொல்லிட்டு பொண்ணு கேட்டு பண்ணிட்டவஙக இருக்கறாங்க . எனக்கு இஷ்டம் இல்லை .வீட்டில் அப்பா அம்மா அதைத்தான் பண்ணிட்டு இருக்காங்க.. பொய்யா எதையாச்சும் சொல்லிட்டு. எங்க மாட்டுவம் எங்கே உதறவம்ன்னு எனக்கு தெரியாது
போன வாரம் ஒரு பயிற்சியின் போது இதுபோல் ஒப்பந்தம் பெறுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி எழுதச் சொன்னார்கள். அதில் முதல் பகுதி நேர்மறையான விஷயங்களை என்று சொன்னார்கள் .
.நம்மில் பலரை பல பஞ்சாலைகளில் இருக்கும் காவலாளிகள் புன்முறுவலுடன் வரவேற்கிறார்கள். முகப்பில் இருந்து நிர்வாக கட்டிடம் உள்ள ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்திற்கு கூட்டிச் செல்வதற்கு பேட்டரிகார்கள் தருகிறார்கள். அல்லது சிபாரிசு செய்கிறார்கள் .குடிப்பதற்கு குளிர்ந்த நீர் தருகிறார்கள். எல்லாம் சீக்கிரம் நடக்கும். ஒப்பந்தம் கிடைக்கும் என்று ஆயிரம் நம்பிக்கையை காவலாளிகள் சொல்கிறார்கள். அந்த காவலாளிகளுக்கு இதைச் சொல்வதில் சோர்வு இருக்கிறது. அதை மீறி அவர்கள் ஏதாவது ஆறுதல் சொல்கிறார்கள் பெரும்பாலும் என்ன ஒப்பந்தம் ..என்ன செய்யப் போகிறோம் என்பதை தேவையில்லாமல் பல காவலாளியிடம் கொட்ட வேண்டியிருக்கிறது ஆனாலும் யாரையும் சந்திக்க முடியாத போது இப்படி யாரிடமாவது கொட்டிவிட்டு வருவது கூட ஆறுதலாகத்தான் இருந்திருக்கிறது சித்ராவிற்கு.
எதிர்மறையான எண்ணங்கள் என்று வருகிறபோது முதல்ல இங்கே கமிட்டி இருக்கு நீங்க எல்லாம் போயி ஒன்னும் புதுசா போட வேண்டியது இல்லை அப்புறம் முதலாளியும் எம்டியும் எங்காவது வெளியூரில் இருப்பாங்க. பிளைட்ல பறந்துட்டு இருப்பாங்க .உங்களுக்காக அவங்க எல்லாம் இங்க உட்கார்ந்திருக்க முடியுமா. நீங்க வர்ற நேரத்துக்கு அவங்க இருக்க முடியுமா என்று விரட்டுவார்கள் முதலாளி,தன் சார்பாக என்று சொல்லி யாரையும் சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லாமல் போய்விடுகிறது. எதற்கெடுத்தாலும் ஏதாவது ஒரு வழக்கறிஞர் பெயரைச் சொல்லி அவர்தான் இந்த மில்லெ எல்லாத்துக்கும்.. அவரோட பேசி சொல்லச் சொல்லுங்கள் .அவர் சொன்னா எங்களுக்கு ரொம்ப சேப்பா இருக்கும்
அவள் தன்னுடைய தன்னார்வ குழு அலுவலகத்தில் அந்த வழக்கறிஞர் பெயரைச் சொல்லி அவரிடம் பேசி சுலபமாக உள்ளே செல்வதற்கு வழி செய்யுமாறு கேட்டுக் கொண்டாள், அவர்களும் பேசியதாக சொன்னார்கள் .ஆனால் இன்னும் அந்த விசயம் முடியாமல் இருக்கிறது.
நீங்க எல்லாம் உளவு பார்க்க வருவீங்க.. வந்து பார்த்துட்டு என்ன நடக்குதுன்னு வெளிய போய் சொல்வீங்க அதனால எதுக்கு என்று சில காவலாளிகள் சொல்கிறார்கள்.
வந்து போறிங்கம்மா இந்த சம்பவம் நடக்குது அந்த சம்பவம் நடக்குதுன்னு இங்க கஷ்டப்படுற கதையெ வெளியே சொல்றீங்க .. என்றும் சொல்கிறார்கள்.
சட்டுன்னு முடியற மாதரி அப்படி எல்லாம் வாய்ப்பு இருக்குங்களா
அதை நான் என்ன சொல்றது.. உன் கிட்ட தான் கேக்கணும் ..ரகசியமா என்று சிலவற்றை எடுத்துச் சொன்னார்கள்
சித்ரா பயிற்சியின் போது எழுதிய சவால்களில் முதல் சவால் ஏதாவது ஒரு பஞ்சாலையில் ஒப்பந்தத்தை போட்டு விடுவது. .கையெழுத்து வாங்கி விடுவது. இரண்டாவது அந்த ஆண்டில் பல பயிற்சி வகுப்புகளை தொழிலாளர்களுக்காக எடுத்து விடுவது .கரண்ட் கட்சமயத்தில் வந்து வகுப்பு எடுங்க என்று செண்பகா மில்லில் சொன்னதை வைத்துக் கொண்டு எப்போது மின்வெட்டு ஆகிறது என்று பார்த்து அந்த நேரத்தில் சென்று வருவது, அதற்கான அனுமதி பெறுவது , அவளின் அடுத்த கனவாக இருந்தது.
சமீபத்தில் மின்சார இலாகாவில் பலரின் தொலைபேசி எண்களை அவள் வாங்கி வைத்து இருந்தாள் .அவ்வப்போது தொலைபேசி செய்து இந்த வாரத்தில் ஏதாவது மின்வெட்டு இருக்குமா சட்டென்று ஒரு நாள் முழுக்க மின்சாரம் இல்லாமல் இருக்குமா என்றெல்லாம் கேட்டிருக்கிறாள் என்னம்மா நல்லா போயிட்டு இருக்கிற சமயத்தில் கரண்ட் கட் எப்போ வரும் எப்போ போகும்ன்னு எங்க உயிரை வாங்குறீங்க என்று சில அதிகாரிகள் அலுத்துக் கொண்டார்கள். அவளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. என்ன தான் மின்சாரத்தடை என்றாலும் ஒப்பந்தம் போடாமல் மின்சார தடை நேரத்தில் போய்விட முடியுமா.. முடியாது ஆனால் இதற்கு எதற்கு இந்த பிரயத்தனம் எல்லாம்..
பயிற்சியில் அவள் எழுதிய குறிப்புகளை எல்லாம் படித்தபோது மற்றவர்களும் அதையே தான் சொல்லக் காத்திருப்பது தெரிந்தது .ஆனாலும் ஒரு நாள் ஒப்பந்தம் பெற்று விடுவோம் என்பது நம்பிக்கையாக இருந்தது. பஞ்சாலை நிர்வாக அலுவலகத்தில் யாராவது தலையாட்டி சரி என்று சொல்லிவிட்டால் போதும் தன் அலுவலகத்தில் சொல்லி ஒரு ஒப்பந்தத்தை தட்டச்சு செய்து கொண்டு வந்து கையெழுத்து வாங்கி விடலாம். அது போதும். அது கூட தட்ட்ச்சு செய்து தயாராக இருக்கும் .
உள்ளார ஒரு தரம் போயிட்டு வந்தா என்ன இங்கே எக்ஸிபிஷனா நடக்குது வேடிக்கை பார்க்கிறதுன்னு கேப்பாங்க
இல்லைங்க உள்ளார மேனேஜர் யாராவது தட்டுப்படுவாங்க. ஏதாவது வழி கிடைக்கும்.
எத்தனை தடவயோ வந்திட்டு இருக்கீங்க. நானுந்தா பாக்கறன்
இன்னிக்கு உள்ள போயிட்டு வரலாம்மா
என்னம்மா நீங்க நச்சரிக்கிறதுனாலே கேட்டன்
சரி போறேன்
போய் அங்க என் பெயரைச் சொல்லாதேம்மா
அது எப்படிங்க சொல்லாம இருக்க முடியும் செக்யூரிட்டி இல்லாமல் உள்ளே வர முடியாது
கேட்டா செரி. என்னவோ சொல்லிக்க
அப்புறம் உன் இஷ்டம்
அவளுக்கு ஆசுவாசம் பிறந்து விட்டது போலிருந்தது உடம்பில் பூத்திருந்த வியர்வை பூக்கள் எல்லாம் கருகி வீழ்ந்துவிட்டன காற்று ஆசுவாசப்படுத்தி அவளை புது மனுசி ஆகிவிட்டது போலிருந்தது சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள் ஸ்டிக்கர் பொட்டு நழுவி இருக்குமோ என்ற பயத்தில் எதிரில் இருந்த கண்ணாடியில் பார்த்தாள். அது முகம் பார்க்கும் கண்ணாடியாக இல்லாமல் கருப்பு தாள் ஒட்டப்பட்டது இருந்தது. உள்ளே இருக்கிற பொருட்களை பிரதிபலிப்பதாக இருந்தது. புத்துணர்ச்சி வந்துவிட்டது போல் அவள் நினைக்கத் தொடங்கினாள்
வர்ரங்க தேங்க்ஸ் ரொம்ப நன்றிங்க தேங்க்ஸ் ரொம்ப நன்றிங்க..
சரி சரி எவ்வளவு சீக்கிரம் வந்தர முடியுமா வந்திரும்மா. அந்த வரைக்கும் எனக்கு பாதுகாப்பா இருக்கும்
சரிங்க சரிங்க.. ரொம்ப நன்றிங்க ..ரொம்ப நன்றி
சித்ராவிற்கு அவள் அப்பாவின் ஞாபகம் வந்தது அவர் நெசவுத்தொழில் செய்து வந்தார். கால் ஆணி வலுவிழந்து போய் நெசவு மிதி பலகையை மிதிப்பதற்கு முடியாமல் போயிற்று பிறகு ஒரு புகையிலை குடோனில் காவலாளியாக வேலை செய்தார். எப்போதும் வாகனங்களும் பெரிய மனிதர்களும் வியாபாரத்திற்காக வந்து போகிற இடம். பெரும்பாலும் உட்கார இடம் கிடைக்காது நேரம் கிடைக்காது .நின்று கொண்டுதான் இருக்க வேண்டும். யாராவது வந்து போய்க் கொண்டிருப்பார்கள் உட்கார்ந்துவிட்டால் என்ன மரியாதை இல்லாமல் உட்கார்ந்து இருக்கே என்று கேட்பார்கள். அவர்கள் திட்டுவதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் நினைத்துக் கொண்டு நின்று சலித்து அந்த கால்கள் தரும் வலியை இரவுகளில் வேதனையாக வெளிப்படுத்தி இருக்கிறார். அம்மா அப்பாவின் கால்களை தொட்டு தொட்டு அழுத்தி ஆசுவாசப்படுத்துவார்கள். வெந்நீர் கொண்டு வந்து வெந்நீர் பாத்திரத்தில் அப்பாவின் கால்களை அமிழ்த்தி வைப்பார். வெந்நீரில் துணியை நனைத்து கால்களை சுத்தப்படுத்துவார். ஆனால் அவருடைய கால் வலி குறைந்தவுடன் ஆழ்ந்த தூக்கத்திற்குப் போய் விடுவார். நரம்புகள் சுருண்டிருப்பதைக் காட்டியிருக்கிறார். . ஆனால் தூக்கம்தான் அவரை ஆசுவாசப்படுத்துவது என்பது அவளுக்கும் தெரிந்திருந்தது. அப்பாவின் தம்பி மகன் பனியன் கம்பெனியில் நின்றுகொண்டே கட்டிங் செய்கிற வேலையை பல ஆண்டுகள் செய்து வந்தார் அவருக்கு இப்படித்தான் காலில் நரம்புகள் சுருண்டு கிடப்பதைக் காட்டியிருக்கிறார். அதை சரி செய்வதற்காக இரண்டு கால்களிலும் ஆக நாலைந்து முறை ஆபரேஷன் என்ற வகையில் சிகிச்சை செய்திருந்தார். ஆனால் எதுவும் ஒத்துழைக்கவில்லை பனியில் கம்பனியில் இருந்து ஓய்வெடுத்துக் கொள் சரியாகும் என்று மருத்துவர்களும் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். அவரும் சின்ன வயதில் வேறுவழியில்லாமல் இப்படி காவலாளியாக ஆகித்தான் போனார். பனியன் கம்பெனியில் நின்று கொண்டு வேலை செய்ய முடியவில்லை. வேறு என்ன வேலை செய்யத் தெரியும் என்று வேதனையும் தொடங்கி விட்டது. வேறு வழி இல்லாமல் அவர் காவலாளி வேலைக்கு தான் சென்றார். செக்யூரிட்டி என வயசானவங்க தான் வருவாங்க நீ என்ன இந்த நாப்பது வயசிலேயே வந்துட்ட என்று அவரைக் கேட்டார்கள் .முடியல அதான் வந்தன் இதென்ன அநியாயமா இருக்கு முடியலையேன்னு வர்றவங்களுக்கு எல்லாம் செக்யூரிட்டி வேலைக்கு ஆகுமா என்று கேட்டிருக்கிறார்கள் அப்பா அவரின் காலில் நரம்புகள் சுருண்டு கிடப்பது போல் கடைசி காலங்களில் உடம்பை குறுக்கிக் கொண்டு படுக்கையில் கிடந்தார் தொடர்ந்து நின்று கொண்டிருப்பது, அதிக ஓய்வு இல்லாமல் இருப்பதை அவர் உடம்பைக் குறுக்கு வைத்துவிட்டது. உடம்பு தாறுமாறாய் சிரமப்படுத்த வைத்தது. அப்படியான சூழலில் தான் அவர் ஒரு பூச்சி சுருண்டு கிடப்பது போல தன்னை சுருக்கிக் கொண்டு கால்களையும் கைகளையும் இறுக்கிக் கொண்டு படுக்கையில் ஒருநாள் இறந்து கிடந்தார். அதை நினைக்கிற போதெல்லாம் அவளின் கண்களில் நீர் கசியும். இந்த காவலாளிகள் மேல் அவள் எந்த ஒரு வசவையும் கோபத்தில் எந்த கணத்திலும் தந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறாள்.அவள் அப்பாவும் காவலாளியாக இருந்திருக்கிறார். எத்தனை பஞ்சாலைகள்.. எத்தனை அலுவலகங்களில் .. எல்லா இடங்களிலும் காவலாளிகள் ...எல்லாவற்றிலும் அவள் நுழைகிறபோது அங்கு இருக்கிற காவலாளிகளை பார்ப்பதை தவிர்ப்பாள். ஏதோ ஒரு வகையில் அவர்கள் அப்பாவை ஞாபகத்தில் கொண்டு வந்து விடுவார்கள் அது அவளைப் படுத்திக் கொண்டே இருந்தது.
அவளின் சித்தப்பாவும் இப்படித்தான் ஒரு பனியன் தொழிற்சாலையில் காவலாளியாக இருந்தார்.. இரவில் தொடர்ந்து தூக்கம் கெட முடியவில்லையென்று அந்த வேலையை விட்டு விட்டார். அவர் குருடாம்பாளையத்தில் இருந்த போது நிறைய கடன் ஆகி விட்டது. நெசவு தொழில் நிம்மதியாக இருக்கவிடவில்லை. ஒரு நாள் இரவில் தறிச்சாமான்களை விட்டு விட்டு கிளம்பி விட்டார். இரவில் விளக்கை ஏற்றி வைத்து விட்டு நடுஇரவில் கிளம்பி விட்டார். இரு தினங்கள் அந்த விளக்கு எரிந்து கொண்டே இருந்திருக்கிறது. வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்ற தோரணை அது.. பல நாட்கள் எரிந்து விளக்கணைந்து இருட்டானபின்புதான் வீட்டில் யாரும் இல்லை என்பது மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.திருப்பூருக்குப் போனவர் சொசைட்டியில் கூலி நெசவுக்கு உட்கார்ந்தார். அதுவும் குடும்பத்தை ஓட்டக் கட்டுபடியாகவில்லை.
சட்டென தாகம் எடுப்பது போல் இருந்தது. கைப்பையில் சிறு பாட்டில் இருநத்து. தினந்தோறும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்லி அவள் தினமும் பார்க்கும் தினசரி வலியுறுத்திக் கொண்டே இருந்தது. . அவள் சென்றாண்டு வேலை செய்த குழு அனுபவம் ஞாபகம் வந்தது. தொழிற்சாலைகளில் தண்ணீர் சேமிப்பு, மின்சார சேமிப்பு என்று வலியுறுத்தி பல பிரச்சாரங்களை செய்கிற பணி அவளுக்கு... அதுவும் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் தண்ணீரைக் குறைக்க பிரச்சாரம் செய்ய சாயப்பட்டறைகளுக்குப் போகச் சொன்னார்கள்.அங்கு போன பின்பு <
...
[Message clipped] View entire message
ReplyForward
சுப்ரபாரதிமணியனின் திரைவெளி நூல்
10/7/22 அன்று திருப்பூரில் வெளியிடப்பட்டது. அதை சென்னை நிவேதிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ275
நூலை ஈரோடு செந்தமிழ் முற்றம் அமைப்பின் செயலாளர் செந்தில்குமார் வெளியிட ஈரோடு உயர் கல்வி அதிகாரி அன்பழகம் பெற்றுக்கொண்டார்.
சுப்ரபாரதிமணியனின் திரைவெளி நூல்
டூலெட்-தேசிய விருது தமிழ்ப்படம்.. இயக்குனர் / ஒளிப்பதிவாளர்
செழியன் -திரைவெளி ” திரைப்பட நூல் பற்றி..
------------------------------------------------
-உலகத் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி இந்தியத் திரைப்படங்கள் குறித்த செய்திகளை விளக்கமாகக் கூறும் திரைப்பட நூல்.
-----------------------------------------------------------------------------------------------
நல்ல படங்களைத் தேர்வு செய்வதற்கும் அதன் கதைத்தளம், நுட்பம், அரசியல் சார்ந்த பின்புலங்களை அறிந்து கொள்வதற்கும் பரவலான அறிமுகம் தேவைப்படுகிறது. அந்த அக்கறையுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட ஒர் பார்வையாளரின் குறிப்புகளென " திரைவெளி "வந்திருக்கிறது.
செம்பேன் உஸ்மான் என்கிற ஆப்ரிக்க இயக்குநரில் இருந்து ஆலிவர்ஸ்டோன் என்கிற அமெரிக்க இயக்குனர் வரை அரிதான படங்களைப் பேசும் இந்த நூல் "ஸ்ரீ கனகலெட்சுமி ரெக்கார்ட் டான்ஸ் குரூப்" என்னும் சுவாரஸ்யமான தெலுங்கு நகைச்சுவைப் படம் குறித்த தகவலையும் தருகிறது. சோமரத்னே திசனாயக்கே எனும் இலங்கை இயக்குனரின் தேசியவாத பற்றிச் சொல்கையில், 'இலங்கையின் உயர் அதிகாரம் இன வர்க்க மேலாதிக்கமும் தமிழர்களை நிலையற்றவர்களாய் வைத்திருக்கும் துயரமும் இந்தப் படத்தில் சரியாகவே வெளிப்படுகிறது')என்று சொல்லும் இந்நூல், ஈழத் தமிழர்கள் பிரான்சில் எடுக்கும் மூன்றாந்தரமான வீடியோ படங்கள் குறித்த செய்திகளையும்('எண்பதுகளில் வெளி வந்தவற்றில் தனிப்புறா, நீதியின் சோதனை குறிப்பிடத்தக்க படங்கள்மாற்றாக ஒரு நல்ல குறும்படமான குடா என்கிற ஆதிவாசிகள் பற்றிய கேரளப்படத்தைப் பற்றியும் இஸ்லாமியப் பெண்கள் மீது மதரீதியான அடக்குமுறையைச் சொல்லும் சப்மிஷன் என்ற வெளிநாட்டு குறும்படம் பற்றிய செய்தியையும் பதிவு செய்கிறது.(.
உலகத் திரைப்படங்களைப் பற்றிப் பேசும் அதே ஆர்வத்துடன் இந்தியாவின் பிற மொழிப்படங்கள் குறித்த செய்திகளையும் இந்த நூல் பதிவு செய்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, இந்தி, வங்காளம், மராத்தி முதலிய மொழிகளில் நிகழ்ந்திருக்கும் திரைப்பட முயற்சிகளும் பதிவாகியிருக்கின்றன. 'ஆசுவாசம் தரும் மராத்திய திரைப்பட உலகம்", தெலுங்கு திரைப்பட உலகம் 88' போன்ற எளிய தலைப்புகளால் திரைப்படங்கள் குறித்த தகவல்களையும் அதன் தரம் சார்ந்த விவரங்களை நூலாசிரியர் சுப்ரபாரதிமணியனின் அபிப்ராயங்களுடனும் இந்த நூல் பதிவு செய்கிறது. ஆதிவாசிகளின் இயல்பான பாடல்களும் அவர்களின் மரபு ரீதியான இசையும் படத்திற்கு உயிர்ப்பூட்டுபவை. ஆனால் வெளிப்பாட்டு முறையில் கதாபாத்திரங்களின் வகையும் சற்று மிகையாக சில இடங்களில் வெளிப்பட்டுவிடுகிறது
படங்கள் பற்றிய செய்திகளை நேரடியாகச் சொல்லாமல் தனது சந்திப்பு மற்றும் பயணஅனுபவம் சார்ந்த கட்டுரைகளாகவும் தனது வாசிப்பு சார்ந்த பதிவுகளாகவும்மாற்றுவது இந்தக் கட்டுரைகளின் பலம். பல இடங்களில் கட்டுரைகள் நேரடியான தகவல்களாகவும் அமைந்து விடுகின்றன. நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட போதும் தவறாக பக்க எண்கள் குறிக்கப்பட்ட பொருளடக்கம் புத்தகத் தயாரிப்பிலிருக்கும் குறை. நேரடியான கட்டுரைகள் தவிர அயல்நாட்டு இயக்குனர்களின் சிறு பேட்டிகளும் இங்மர் பெர்க்மனின் ஒரு கடிதத்தின் மொழியாக்கமும் இந்த நூலில் உள்ளன.
பலருக்கும் திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் இருந்தாலும், வெகுசிலரே தாங்கள் பார்த்த படங்கள் பற்றி எழுதுகிறார்கள். வெறுமனே பார்த்த படங்களின் பெயர்களை அடுக்கி பெருமை பேசுவதையும் இங்குள்ள படங்களை விமர்சிப்பதையும் விடுத்து, நல்ல திரைப்படம் மீது அக்கறை உள்ளவைகள் அது குறித்து எழுத முன்வர வேண்டும். அந்த வகையில் திரைவெளி வழங்கும் அறிமுகம் முக்கியமானது என்று குறிப்பிட்டுளார்.
இலக்கிய சங்கமம் நிகழ்ச்சியில்..
0
10/7/22 ஞாயிறு காலை 10 மணி
மக்கள் மாமன்ற நூலகம் , மங்கலம் சாலை, திருப்பூர்
0
புதிய நூல்கள் வெளியீடு நடைபெற்றது:
சுப்ரபாரதிமணியனின் “ திரைவெளி” ( திரைப்படக்கட்டுரைகள்)
நாமக்கல் நாதனின் “ அதாவது “ ( கவிதைத் தொகுப்பு )
0
0
தன் படைப்பின் அனுபவம்- உரைகள் நிகழ்த்தினர்:
சூலூர் ஆனந்தி ( நாவல்-சிகரம் தொடும் உறவுகள்)
கோவை பாண்டிச்செல்வி ( கவிதை- குக்கூ )
திருப்பூர் மேகா ப்ரியதர்சினி ( சிறுவர் நூல்-மலர் தேவதை )
0
குறும்படம் வெளியீடு :
சுப்ரபாரதிமணியனின் “ பள்ளி மறு திறப்பு” ( இயக்கம் கோவை முருகேஷ்)
0
கவிதைகள் வாசிப்பு / புத்தகங்கள் அறிமுகம் –சிந்து சீனுவின் ராசாத்தி நாவல் அறிமுகம் நடந்தது
0
0
கனவு/ மக்கள் மாமன்றம்,
இலக்கியச் செய்தி :
எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் இம்மாதம் எகிப்து, இஸ்ரேல், ஜோர்டான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இரு வார பயணம் சென்று வந்திருக்கிறார்.
அவரின் இரு நாவல்கள் சமீபத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளன.
1.1098 ( தமிழில் ஜீரோ டிகிரி பதிப்பகம் )
2. The Notch ( மாலு - தமிழில் உயிர்மைப்பதிப்பகம்) இந்த இரு நாவ்லகளை டெல்லி ஆதர்ஸ் பிரஸ் வெளியிட்டுள்ளது
• சுப்ரபாரதிமணியன்
20 நாவல்கள் உட்பட் 80 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து திரைப்பட விழாக்களில் பங்கு பெறுபவர். கனவு என்ற இலக்கிய இதழை 36 ஆண்டுகளாக நடத்தி வருபவர்.
சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “ “ , தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார். இவரின் 5 நாவல்கள் வீதம் மலையாளம், இந்தியிலும் , 15 நூல்கள் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன.
6 நூல்களை ஆங்கிலத்திலிருந்தும் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்
இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்:
2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்ட புக்கிஷ் விருது
சூழலியல் : சுப்ரபாரதிமணியன்
” இயற்கை, பூமி இவை மனிதனின் சாதாரணமான ஆசைகளை சாதாரணமாகவே நிறைவேற்றும் ஆனால் மனிதனின் பேராசையை நிறைவேற்றாது “ என்ற காந்தியின் வாசகம் சூழலுடன் ஒவ்வொரு கணத்திலும் இணைக்கப்படுகிறது
மனிதனின் பேராசையும் இயற்கையைச் சுரண்டி சூழல்களை தொடர்ந்து நாசம் செய்து கொண்டிருக்கிறது .இயற்கை வளங்களை மனிதர்கள் அதிக உரிமை எடுத்துக் கொண்டு சுரண்டு வருவதும் மனிதனின் பயன்பாட்டிற்காகவே இருப்பதாக எண்ணிக்கொண்டு செயல்படுவதை மறுக்கும் சூழலியல் என்ற கோட்பாட்டை ஆர்ணே நேஸ் என்ற இயற்கையாளர் முன்வைக்கிறார் .
மனிதர்களை மையம் கொண்டிருக்கிற இந்த வகை அணுகுமுறையை இந்தச் சூழலியல் கொள்கைகள் விமர்சிக்கின்றன. பூமி மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது. தங்களுக்காக இயற்கையை மாற்றி கொள்ளலாம். அது ஒருவகையில் எப்போவதாவது பெரிய அளவில் கேட்டை உருவாக்கும். .அப்படி கேடுகளை கட்டிக்கொண்டு மனிதனை பாதுகாத்துக்கொள்ள புதுவரையறைகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுவதை சூழலியல் கொள்கைகள் விமர்சிக்கின்றன.
இதன் மூலம் கானுயிர் பல்லுயிர் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இயற்கை பின்பற்றி எளிய வாழ்க்கை நெறிகளை கடைபிடிக்க வேண்டும். இயற்கையை பெருமளவில் சேதப்படுத்தாமல் இருக்க அளவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையே சாரமாக இருக்க வேண்டியிருக்கிறது
.பூமியில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் சமமான உரிமை உண்டு. ஓர் உயிரினம் மீது மற்றொரு உயிரினம் அதிகாரம் செலுத்த எந்தவித உரிமையும் இல்லை . மனித உயிர்கள் மற்றும் மனிதர் அல்லாத பிற உயிரினங்களின் வாழ்வு மனிதர்களின் பயன்பாட்டிற்கான அளவுகோலை சார்ந்ததல்ல . மனிதன் தன் அடிப்படை தேவைகளை பூமியை கொண்டு நிறைவேற்றிக் கொள்ளலாம் . அதை மீறி பூமியின் செழுமையை சுரண்ட மனிதர்களுக்கு உரிமையில்லை
பெரியது , சிறப்புடையது என்ற கருதுகோள்களில் உடன்பாடு இல்லாமல் எல்லா உயிர்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதை ஆர்ணே நேஸ் நேஸ் வலியுறுத்தி இருக்கிறார். .இயற்கை மனிதனால் சுரண்டப்படுகிறது.பூமியில் வாழும் பிற உயிரினங்களும் சுரண்டப்படுகிறது. அதேபோல் சமூகச் சூழல்களில் பெண்களும் சுரண்டப்பட்டு வருகிறார்கள் . என்பதை ஆண் சூழலியல் அடிப்படைவாதம் என்று சொல்லப்படுவதுண்டு. இதற்கு எதிராக பெண் சூழலியல் முன்வைக்கப்படுகிறது.சூழலியலில்தான் எத்தனை பிரிவுகள்..
உயிர்களை ஒருவரின் விருப்பமும் தேவையும் சார்ந்து பயன்படுத்திக் கொள்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று ஆர்ணே நேஸ் சூழலியல் சொல்கிறது . மனிதர்களை முதன்மைப்படுத்தும் சூழலியல் அணுகுமுறைக்கு எதிரானதாக இருக்கும் வேளையில் மனிதனுக்கு எவ்விதத்திலும் எதிரானதல்ல என்று தீர்க்கமாகச் சொல்லப்படுகிறது .
. இயற்கை சூழலில் தான் தேவை என்று வலியுறுத்திய ஆர்ணே நேஸ் காந்தியத்தில் நம்பிக்கையுடைய்வர். 2009இல் lமரணமடைந்த நார்வேக்காரர். அவருக்குப் . பிடித்தமானதை பற்றி பட்டியலிடலாம் ..
பிடித்த வர்ணம் பச்சை, பிடித்த விலங்கு எலி பன்றி , , அவருக்குப் பிடித்த படம் ஆட்டன் பரோவின் காந்தி திரைப்படம் .
கொல்ல வருவது பசுவென்றாலும் கொன்று விடு என்றார் காந்தி. காயப்பட்டு துடிக்கும் விலங்குகளை காப்பாற்றுவதை விட கொல்வது சிறந்தது என்பார் அர்னே. 96 வயதில் இறந்தார் .
காந்தியைப் போலவே அவரை பாதித்தவர் ராக்சல் கார்சன் . அவரின் மௌன வசந்தம் நூல் மூலமாகவும் . நல்ல மலையேற்ற பயிற்சியாளராகவும் விளங்கினார் . பெரிய அணைகளை கட்டுவதற்கு இடம் எதிராக போராட்டங்களை நடத்தியவர். இளம்வயதில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
புரட்சி என்பது மனதில் அடியில் இருந்து தொடங்கப்பட வேண்டும். அது கொண்டு செல்லப்படும் நோக்கம், செயல் முறைகள் குறித்து தெளிவாக சிந்தனைவேண்டும். புரட்சியோ போராட்டங்களோ மனிதர்களின் நுகர்வு வாழ்க்கைக்கு அல்ல எல்லாமும். இயறகைக்காகவும் பிற உயிரினங்களின் வாழ்வுரிமைக்காகவும் அவை என்பதை வலியுறுத்தியவர் .
அவர் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் அக்கறை கொண்டு கருத்துக்களை முன்வைக்கிறார் ஒரு நாளைக்கு 100 உயிரினங்கள் வீதம் ஒரு வருடத்திற்கு ஒன்றரை லட்சம் உயிரினங்கள் மனிதர்களால் அழிகின்றன . இது இயற்கை ஏற்படுத்தும் உயிரின அழிவை விட பத்தாயிரம் மடங்கு அதிகம். சூழல் சமன்பாட்டை உருவாக்க உலக மக்கள் தொகை 100 மில்லியன் அளவிற்கு இருக்க வேண்டும் என்றார்.
மனிதர்களுக்கு பூமி மீது எவ்வளவு உண்மையோ அதே அளவு உரிமை மற்ற உயிரினங்களுக்கும் உண்டு என்பதை நம்பியவர் . ஆர்ணே நேஸ்.
அதை நம்பாமல் நம் நுகர்வு வாழ்க்கை இயற்கையிலிருந்து விலகி ரொம்ப தூரமாய் போய்க் கொண்டிருக்கிறது .வியாதிகளும் மருத்துவமனைகளும் நெருங்கி வந்து விட்டன.
8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003
போப் சூழலியல்
தமிழில் : சுப்ரபாரதிமணியன் )
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலக உணவு தின மையமாக “ பருவநிலை மாறுகிறது, உணவும் வேளாண்மையும் மாற வேண்டும் ” என்பதை தெரிவு செய்துள்ளது. பட்டினிக்கு எதிரானப் போரில் வெற்றி பெறுவதை மேலும் கடினமானதாகக் கருத வைக்கிறது, அதுவும் பருவநிலை மாற்றம் போன்ற ஒரு சிக்கலான சூழ்நிலையில். இயற்கை மனிதனுக்கிடும் சவால், இப்படி மனிதன் இயற்கைக்கிடும் சவால் ஆகியவற்றை எதிர்கொள்வதைப் பொறுத்தமட்டில், நான் சில கருத்துகளை சிந்தனைக்கு முன் வைக்க விரும்புகிறேன்.
தற்போதைய பருவநிலை மாற்றத்திற்கான காரணம் என்ன? நம்முடைய தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்புகளைக் கேள்வி கேட்க வேண்டும். புள்ளி விவரங்கள், முரண்பட்ட கணிப்புகள் போன்றவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் எளிய கேள்விகளைக் கேட்க வேண்டும். இப்படிச் சொல்வதனால் அறிவியல் தரவுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. அவற்றுக்கான தேவை முன்பைவிட அதிகம் இருக்கிறது. ஆனால், வெறும் தரவுகள், அதன் விளைவுகள் என்று நின்று விடாமல் அதையும் தாண்டி நாம் பார்க்க வேண்டும்.
நம் ஒவ்வொரு வருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு, படைப்பு மற்றும் அதன் ஒழுங்கின் பாதுகாவலர்களாக நமக்கிருக்கும் பொறுப்பு, இவையனைத்தும் தற்போதய மாற்றங்களுக்கான வழித்தடத்தை கண்டறிந்து அதன் மூலத்திற்குச் செல்ல நம்மை இட்டுச் செல்கிறது. முதலில், பருவநிலையின் பல எதிர்மறை விளைவுகள், மக்கள், இனக்குழுக்கள், நாடுகளின் சீர்கெட்ட தினசரி நடவடிக்கைகளினால் உருவானவை என்பதை நாம் ஒப்புக்கொண்டும். இதை அறிந்த பின்பு, நெறிமுறை மற்றும் தார்மீக அறம் சார்ந்த மதிப்பீடுகள் மட்டும் இதனைச் சரி செய்ய போதவே போதாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அரசியல் தளத்திலும் நாம் இயங்கியாக வேண்டும். தேவையான சில முடிவுகளை எடுக்க, குறிப்பிட்ட சில வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்க அல்லது புறக்கணிக்க, எதிர்காலத் தலைமுறையின் நலம் பொருட்டு அரசியல் தளத்தில் இயங்குவது முக்கியமான ஒன்றாகும். இதன் மூலமே நாம் உலகைப் பாதுகாக்க முடியும்.
நாம் நடைமுறைப்படுத்த நினக்கும் செயல்களைப் பொருந்த் திட்டமிட வேண்டும். உணர்வின் விளைவாக இருத்தல் கூடாது. அவற்றைத் திட்டமிடுவது அவசியமாகும். இப்பணியில் தலைப்பட்டிருக்கும் அமைப்புகளின் பங்கு இன்றியமையாததாகும். பொதுமக்கள், பொது மற்றும் தனியார் அமைப்புகள், தேச மற்றும் சர்வதேச எந்திரங்களின் கட்டுக்கோப்பான பிணைப்பாகச் செயல்படும் போதே அவை திறன்மிக்கதாக அமையும். எனினும், இந்த பிணைப்பு பெயரற்றதாக இருக்க முடியாது. சகோதரத்துவத்துடன் மூல ஒற்றுமையின் அடிப்படையில் செயல்பட்டாக வேண்டும்.
கால்நடை, விவசாயம், மீன்பிடி தொழில், ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் மக்கள், காடுகள் அல்லது கிராமங்களில் பருவ நிலை மாற்றத்தினுடைய விளைவுகளின் நேரடித் தொடர்புகளோடு வாழும் மக்கள், பருவநிலை மாற்றம் கொண்டால் தங்கள் வாழ்வும் பாதிக்கப்படும் என்பதை தெரிந்துள்ளனர். அவர்களின் தினசரி வாழ்வு சிக்கலான மற்றும் சில நேரங்களில் அதீத சூழ்நிலைகளால் பாதிப்படைகிறது, எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது. இதன் தொடர்ச்சியாய் அவர்களின் வீட்டை, பிரியமானவர்களைக் கைவிடும் எண்ணமும் மேலெழத் தொடங்குகிறது. அமைப்புகளால், தொழில்நுட்பங்களினால், அவ்வளவு ஏன் – நம்முடைய எண்ண அளவிலே கூட கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட்ட உணர்வின் வலி இருக்கிறது.
மக்களின் இலாப நோக்கங்களுக்கும் பாதிப்பில்லாத வகையில். நாட்டுப்புற வாசிகளின் மரபார்ந்த அறிவைக் கொண்டு, நாம் நுகர்வு,உற்பத்தி சார் தர்க்கங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ளலாம். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் துறைகளில் பணியாற்றுபவர்களுள் தங்களைச் சர்வ வல்லமை படைத்தவர்களாக எண்ணிக் கொள்ளக் கூடிய நபர்கள் கூடி உள்ளனர். பருவ மாற்ற சுழற்சியைக் கருத்தில் கொள்ளாமல், பல்வேறு விலங்கு மற்றும் தாவர வகைகளைக் குறைபட்ட வகையில் மாற்றியமைக்கவும் செய்கின்றனர். இதனால், உயிர்களின் பன்முகத்தன்மை அழிவுறுகிறது. ஓர் உயிர் இயற்க்கையில் உள்ளதெனில் அதற்கென்று பங்கு இருக்கும், இருந்தாக வேண்டும். ஆய்வகங்களில் அற்புதமான விளைச்சல்களைத் தரும் வகைகள் சிலருக்கு நன்மை அளிக்கும் ஆனால் மற்றவர்களுக்கு அது அழிவு தருவதாக அமையும். எச்சரிக்கை என்ற அளவில் மட்டுமே நம் கொள்கை முடங்கிவிடக் கூடாது. சமநிலையோடும் நேர்மையோடும் செயல்படும் முறையை நாம் வகுக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு வகை தாவரத்தின் மரபணுத் தேர்வு, உற்பத்தி அளவில் விரும்பத்தக்க நல்ல முடிவுகளைக் கொடுக்கலாம். ஆனால், தன் உற்பத்தி வளத்தை இழக்கும் நிலத்தை பற்றி நாம் கருத்தில் கொண்டோமா? தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை இழக்கும் விவசாயிகளின் கதி, பயன்படுத்த முடியாதவாறு ஆகும் நீர் வளங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக எந்த அளவுக்கு நாம் பருவநிலையை மாற்றுகிறோம் என்ற கேள்வியையாவது கேட்டோமா?
தேவை எச்சரிக்கை உணர்வல்ல, ஞானம்; எதை விவசாயிகளும் மீனவர்களும் தங்கள் நினைவில் பாதுகாத்து தலைமுறைத் தலைமுறைகளாக அளித்தார்களோ, எது இப்போது உலகில் ஒரு சிலருக்கு மட்டும் முழுமையாகப் பயனளிக்கக் கூடியதாக அமைந்திருக்கும் உற்பத்தி முறைகளால் ஏளனமாகப் பார்க்கப்பட்டும் மறக்கப்பட்டும் வருகிறதோ அந்த ஞானம். நினைவில் கொள்ளுங்கள். இப்போதுள்ள முறைதான், அதன் எல்லா அறிவியல் கூறுகளைக் கொண்டிருந்தும், எண்பது கோடி மக்களைப் பட்டினியோடு உழல வைக்கிறது.
இவை போன்ற அவலங்கள் நீடித்திருப்பது, இந்த அமைப்பைப் போல பல்வேறு சர்வ தேச அமைப்புகள் தினசரி எதிர்கொண்டு சமாளிக்கும் அவசரகால நடவடிக்கைகளில் நன்றாகவே பிரதிபலிக்கிறது. பருவநிலை மாற்றத்தை ஏதோ வானிலை ஆய்வோடு தொடர்புடையது என்று மட்டும் குறுக்கிவிட முடியாது. அது மக்களைத் தங்களின் இடம்விட்டு குடிபெயர வைக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா? பருவநிலை மாற்றத்தால் பெரிய அளவில் குடிபெயர்வுகள் நடந்துகொண்டிருக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள் பெருந்திரளான மக்கள் நிர்கதியாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெரிய மனிதக் குடும்பத்தில் பங்கு பெற முடியாமல் தனித்து விடப்படுகிறகள். அவர்களுக்கான இடத்தை எந்த அரசாங்கமோ அதிகாரமோ வழங்க முடியாது. மனிதர் என்ற அளவிலேயே அவர்களுக்கு அதை எடுத்துக் கொள்வதற்கான கண்ணியமும் உரிமையும் இருக்கிறது.
அடிப்படை வாழ்வாதாரத்தை வேண்டி நிற்பவர்களைக் கண்டு மனம் கலங்கி நெகிழ்ந்தால் மட்டும் போதாது. சீரிய முடிவுகளும் நடவடிக்கைகளும் தேவை. சமத்துவமாக உணவை விநியோகித்தோம் என்றால் இந்த உலகில் அனைவருக்கும் உணவளிக்க போதுமான அளவு உற்பத்தி இருக்கிறது. நாம் இதைப் பலமுறை கத்தோலிக்க திருசபை வாயிலாகவும் சொல்லியிருக்கிறோம். ஆனால், இப்போது? தற்கால வணிக முறைகளின்படி உற்பத்தியை உணவு தவிர்த்து மற்ற பயன்பாட்டுகளுக்காக எடுத்துக்கொண்டால் என்ன செய்வது? பட்டினியில் இருப்பவர்களுக்கு உணவைப் பெற வழியில்லாத வரையில், மற்றவர்களிடம் கையேந்தும் நிலையுள்ள வரையில், தேவைக்கும் நுகர்வுக்கும் இடையே சரியான சமன்பாடு உருவாகத வரையில், உணவு வீணாவதைத் தடுக்காத வரையில்,இப்போதுள்ள உணவு விநியோக இயங்குமுறை வெறும் கோட்பாட்டளவில் தான் சரியானதாக இருக்கும்.
இந்த மாற்றத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியமாகும்; அரசியல் கொள்கை முடிவெடுப்போர், நிலத்தை உழுவோர், மீன் பிடிப்போர், காடுகளை பயன்படுத்துவோர் என ஒவ்வோருவரும் அவரவர் பொறுப்புகளை உணர்ந்து ஒரே நோக்குடன் செயல்பட்டால், வளர்ச்சி வெரும் ஒரு சிலருக்கானதல்ல, படைப்பில் உருவான பொருட்கள் எதுவும் அதிகாரம் படைத்தவர்களின் வம்சச் சொத்தல்ல என்ற நிலையை உருவாக்கலாம். எவ்வளவோ ஆக்கப்பூர்வமான வழிமுறைகளும் சிறந்த பழக்கங்களும் இருக்கின்றன.
நாம் செயல்படுவதற்கான ஆசை, அந்த செயலால் விளையும் பயன்களைக் கருதி அமையக்கூடாது. மாறாக, மக்களின் வாழ்விற்கும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குமான அவசியத் தேவையோடு தொடர்புடையது அது என்ற புரிதல் வேண்டும். ஆண்மீகமோ அல்லது பொருள் தேடலோ, எதுவாயினும் அது ஒரு சிலரின் முடிவுகளுக்கேற்ப அமைவதல்ல. மனிதர், மனித உயிர் இவை ஒன்றும் சோதனைக் கருவிகள் அல்ல. உணவென்பது வெறும் பொருளீட்டுவதற்கான கருவி அல்ல. அப்படிப் பட்ட சிந்தனையே உணவை வீணாக்க வைக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தேவையான அளவுக்கு ஆரோக்கியமான உணவை உண்ண உரிமை இருக்கிறது என்பது இயற்கை விதி. ஒற்றுமைப் பண்பை நடைமுறையில் பொருளாதரத்திற்குப் பங்களிக்கும் ஒன்றாக, சகோதரத்துவத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆட்சிமுறையின் அடிநாதமாக ஆக்க அவை செயல்படும் என்று நம்புகிறேன். அதில் சாமானிய மற்றும் விளிம்புநிலை மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பருவநிலை மாற்றம் குறித்த அக்கறைகளும் பயங்களும் பதட்டங்களும் கலந்திருக்கின்றன.
( போப் போன் பிரான்சிஸ் கடிதம் 2016..தமிழில் : சுப்ரபாரதிமணியன் )
சமீபத்தில் “ வண்ணத்துப்பூச்சி” என்ற தனி நபர் நாடகம் நாதன் ரகுநாதன் நடித்தது. திருப்பூரில் நடத்தப்பட்டது. அது கன்னட நாடகம். தமிழாக்கம் செய்யப்பட்டு நூலாக வந்துள்ளது .சிறுவர்களுக்கானது. அது தந்த நினைவில் ..
திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்
பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது ..
அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின் “ வயிறு “ , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள், சி ஆர ரவீந்திரனின் ” பசு “ , கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச் சகோதரர்களே “ , உட்பட சுமார் 20 நடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
இதைத் தவிர பனியன் தொழிலாளர், நெசவாளர் போராட்ட காலங்களிலும் , தேர்தல் காலங்களிலும் பஞ்சப்படி, நெசவு, நாற்காலி, வாக்கு போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் திருப்பூரின் பல்வேறு பகுதி வீதிகளில் நூற்றுக்கணக்கான முறைகள் நடத்தப்பட்டன.
இவற்றை ஆரம்பத்தில் நானும், பின்னர் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரும் இயக்கினோம்., இவர்களில் மற்ற இரு தோழர்களும் பனியன் தொழிலாளிகள் .
இவற்றில் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோர் பல நாடகப்பிரதிகளை உருவாக்கினர். ஆனால் அவர்களின் நாடகங்கள் அச்சுருவோ, புத்தக வடிவமோ பெறவில்லை
என் வானொலி நாடகங்களும் , சில மேடை நாடகங்களும் “ மணல் வீடு “ என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது. இதில் இடம் பெற்ற “ பசுமை எனும் தாய்மை “ என்ற சுற்றுச்சூழல் சார்ந்த நாடகம் கோவை வானொலி மூலம் தேசிய நாடக விழாவில் இடம்பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட முறைகள் மறு ஒலிபரப்புகள் செய்யப்பட்டன .இதில் உள்ள நாடகங்களும் , “ பள்ளி மறு திறப்பு “ என்ற என் சிறுவர் கதைகள் நூலில் உள்ள பல கதைகளும் தாய்த்தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் , பிற பள்ளி மாணவர்களாலும் பலமுறை நாடகங்களாக நடிக்கப்பட்டன.
இவற்றில் ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் “ நாடகம் பேரா. இராமானுஜம், ஜெயந்தன் ஆகியோரின் மேற்பார்வையிலும், ஞானராஜசேகரனின் “ வயிறு “ , , , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ ஆகியவை புவியரசின் மேற்பார்வையிலும் ,
அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “அறந்தை நாராயணனின் மேற்பார்வையிலும் நட்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
எண்பதுகளிம் மத்தியில் நான் என் தொலைபேசி துறைப்பணிக்காக ஹைதராபாத் சென்ற பின்னால் இந்த நாடக முயற்சிகள் குறைந்தன,
ஆனால் இந்நாடகமுயற்சிகள் இன்றும் அவ்வப்போது தொடர்கின்றன.
அந்த வகையில் இவ்வாண்டில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாதக் கூட்டங்களில் அரசியல் கவிதைகளை தோழர் எஸ் ஏ காதர்-தனி நபர் நடிப்பு - மோனே ஏக்டிங்க் வகையில் நாடகமாக்கினார். இவ்வாண்டின் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்ட மாநாட்டில் தோழர் எஸ் ஏ காதர் ஸ்ரீநிதியின் பங்கேற்பில் மதம் என்ற நாடகம் நடைபெற்றது. கோவை திலீப்குமாரின் சிறு நாடகமும் அம்மாநாட்டில் அரங்கேறியது . (தோழர் எஸ் ஏ காதர் 25க்கும் மேற்பட்ட முழு நீள மேடை நாடகங்களை 70,80 களிலும் எழுதி இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் வயது 72. இன்னும் நாடக ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். அவ்ர் இரு நாவல்கள் உட்பட சில நூல்களை வெளியிட்டுள்ளார் . தோழர் எஸ் ஏ காதர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் )
மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரின் தடத்தில் நாடக முயற்சிகள் திருப்பூரில் தொடர்கின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், வெண்மணி நாடகக் குழுக்களின் தொடர்ந்த நாடக செயல்பாடுகள் திருப்பூரில் குறிப்பிடத்தக்கவை .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)