கலையின் நுட்பங்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி…..
” டூ லெட் “ தமிழ்த்திரைப்படம் :
சுப்ரபாரதிமணியன்
திரைப்படத்தை முழுக்க முழுக்க வணிக ரீதியாகவே அணுகும்
தமிழ்த்திரைப்பட உலகத்தில் அக்கலையின்
நுட்பங்களோடு இணைந்து படம் தருபவர்கள் வெகு குறைவு. அதில் கேமராகலைஞர்கள்
எழுத்துக்கு இணையான நுட்பங்களுடன் ஒரு திரைப்படத்தை எடுக்கமுடியும் என்பதற்கு அத்தாட்சியாக டூ லெட்
தமிழ்த்திரைப்படம் அமைந்துள்ளது.கலையின் நுட்பங்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி
பார்வையாளனுக்கு அதைப்பகிர்ந்து கொள்கிற வகையில்
உயர்ந்த தளத்தில் அணுகுகிறவர் ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள் .
மனித வாழ்க்கையில் அன்றாட சாப்பட்டு, தங்குமிடம், உடை
என்ற திருபதிகளைத்தாண்டி மனிதனின்
உளவியல் சார்ந்த திருப்தியும் முக்கியமானது. பிரச்சினையை முன் வைப்பதும் அதை
சரியாக அலசுவதும் அதன் பின்னணியில் உள்ள சமூகக்க்கூறுகளை முன்வைப்பதும் முக்கிய கலைஞனின் கடமையாகவும் அமைகிறது. நுட்பமாக சிந்திக்க
வைக்கும் பண்புகள் ஒரு தேர்ந்த படைப்பின் அமசங்களாக விளங்குகின்றன.
அதற்கானத்தேடலும் முடிவுகளும் கூட நுட்பமானவை.கலை என்ற நுட்பம் வாழ்க்கைக்கானது
என்ற முன்முடிவை மனதில் கொள்பவராலேயே நல்ல படங்களையும், நல்ல படைப்புகளையும்
உருவாக்க முடியும். ரசிக்க முடியும் .அந்த வகையில் ஒரு நல்ல ரசனைக்கான அடையாளமான ஒரு
திரைப்படம் இது.
கல்லூரி, தென்மேற்கு
பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட
படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன், தான் இயக்குநராக
அறிமுகமான முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களை கடந்து
வந்திருப்பது இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை தொடாத சாதனை..
சென்னையில் 2007 முதல்
மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சினைக்குரியதாக
மாறியுள்ளது, நடுத்தர மக்கள் எவ்வாறு இதில்
பாதிக்கப்படுகின்றனர் என்பதும் ஒரு கோணமாக இதில் உள்ளது
வீட்டை காலி செய்யச்சொல்லும்
வீட்டுக்காரர்.அதையடுத்து வேறு வீடு
தேடும் படலம்தான் கதை . அதிலும் எழுத்தாளர் வீடு தேடுவதும் அவருக்கு வீடு கொடுப்பவர்களின்
பார்வையும் விதவிதமானவை. வீட்டை காலி செய்யச் சொல்லிவிட்டதால் வேறு நபர்கள்
வ்ந்து வீடு பார்க்கும் போது எழுத்தாளரின்
மனைவி கூனிக்குறுகி நிற்பதும் குளியலறையிலிருந்து கூட அவசர கதியில் வந்து கதவு
திறந்து விட்டு ஒளிந்து கொள்கிற அவலமும் உண்டு, குழந்தை சுவரில் கிறுக்கிவிடும்
சித்திரங்கள் இதில் சொல்லும் கதைகள் ஏராளம். கடைசி பிரேமில் கூட அந்த சுவர்
சித்திரம் சொல்லும் கதை ஏராளம் . திரைப்பட எழுத்தாளர் என்ற அடைமொழி சிரமமாகிற போதுகணினி மையம்
சார்ந்தவர் என்ற போலி அடையாளம் கவுரவம் தருவதும் அதுவே மோசமான பின் விளைவுகளுக்குக்
கொண்டு செல்வதும் பின்பகுதியில் அமைந்துள்ளது.குழந்தையின் எலி சிங்கம் விளையாட்டு
கூட ஒரு வகையில் குறியீடாகவும் அமைந்து விடுகிரது. குழந்தைகளின் உலகம் வெகு
நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
கஷ்ட காலத்தில் பையன் தன் உண்டியலைத் தருவது. ஜன்னல் பையனின் புகலிடமாகி
வேறு நபர்களை அடையாளம் கண்டுகொள்வது . வீடு காலி செய்து விட்டுச் செல்லும்
ஒருவரின் லாரியில் பூத்துக்கிடக்கிற ஒருதொட்டிச் செடி. ஊறுகாய் விளம்பரத்திற்கு ஒரு படைப்பாளி
வசனம் எழுத வேண்டிய அவலம். . துண்டு இல்லாத சூழலில் தன் வெற்று பனியன் மார்பில்
பொர்த்திக்கொள்ள சட்டெனக் கிடைக்கும்.தாவணியைப் பயன்படுத்துவது என்று நுணுக்கமான விபரங்கள்
உள்ளடங்கியிருக்கீரது. மின்சார இல்லாத நிலையில் பறக்கும் குருவி மின்சாரம் வந்த
பின் அடிபட்டு அதன் இறக்கைகள் சிதறுவது அந்த வீட்டின் மூவரின் சிதைந்த மந்தின்
வெளிபாடாகவே உள்ளது. . வீட்டுச் சொந்தக்காரி குழந்தையின் ஓவியங்களைக் கிழித்து
கசக்கி விட்டுப்போக அதில் ஒன்றை அதை அந்தப்பையன் அப்பா துணிகளுக்கு இஸ்திரி போடும்
போது அதை சுருக்கம் நீக்கத் தருவது போல் தமிழ் ரசிகனின் மனதில் விழுந்திருக்கும்
சுருக்கங்களை நீக்க இந்த செழியனின் படம் உதவும்.
Subrabharathimanian..
subrabharathi@gmail.com Fb: Kanavu Subrabharathimanian Tirupur :
blog: www.rpsubrabharathimanian.blogspot.com
: 8/2635 Pandian
nagar, Tirupur 641 602
/094861 01003