மலையாள தமிழ் இலக்கிய இணைப்பு
ஆரோக்கியமானது :
” மலையாள தமிழ் இலக்கிய இணைப்பு வலுவாக இருக்கிறது . சமகாலப்படைப்புகள் இரு
மொழிகளிலும் சரியாக மொழிபெயர்ப்பின் மூலம் பகிர்ந்து கொள்ளப்படுவது கடந்து
பத்தாண்டுகளில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. செம்மொழி அந்தஸ்து கொண்ட தமிழுக்கு
மத்தியில் இளைமையான மொழி எங்களுடையது . எங்கள் ஆதி கவிகளாகவும்
ஆதர்சங்களாகவும் கபிலரையும் அவ்வையையும்,
கம்பனையும் கொண்டிருகிறோம். அதற்காய் பெருமிதம் கொள்கிறோம். தமிழ் இலக்கிய
வளர்ச்சியில் திருப்பூரில் நடக்கும் புத்தகக்கண்காட்சி முக்கிய இடம் வகித்து 16
ஆண்டுகளாய் சாதனை செய்திருக்கிறது. ” என்று நேற்று திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் ஷார்ஜா வாழ்
மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் பேசினார்.
சுப்ரபாரதிமணியன் இவ்வாண்டின் ஷார்ஜா
புத்தக்க் கண்காட்சியில் கல்ந்து கொண்ட அனுபவங்களை விவரித்தார் .
ஷார்ஜா வாழ் மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன்
வெளியிட்ட மலையாள இளம் பெண் கவிஞர் லாமியா அஞ்சுமின் ” பேசாத ..” கவிதை நூல்
சுப்ரபாரதிமணியன் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியீட்டு விழா
திருப்பூர் புத்தகக்
கண்காட்சி:
06/02/2019 : பொன்னுலகம் பதிப்பக அரங்கம்
: எண் 13ல் வெளியிடப்பட்டது வெளியிட்டவர் : மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன்
நூல் பெற்றோர் :பி ஆர் நடராஜன், எழுத்தாளர்
அம்பிகா குமரன்
நிகழ்ச்சி அமைப்பு :
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
* தலைமை : தோழர் பொன்னுலகம் குணா
* எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் * து சோ பிரபாகர் ,
கார்த்தியாயினி, விஸ்வநாதன்,
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வருக ..( லாமியா அஞ்சுமின் ” பேசாத ..” கவிதை நூல்: கவிநிலா பதிப்பகம், திருப்பூர் வெளியீடு ரூ 25 /
98431 22403 )
தோழர் சண்முகம் நன்றி
கூறினார்