ஒரு செய்தி :
நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறேன்
கா.
ஜோதியின் கவிதைகள்:
நான்
முன்னுரையில் கா. ஜோதியின் கவிதைகள் குறித்து எழுதவில்லை. அதில் உவப்பில்லை. ஆனால்
அவர் முன்னுரையைக் கட்டாயப்படுத்தியதால் மேடைப்பாடல்களை முன்னிருத்தி அந்த
முன்னுரையை எழுதினேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒப்பிடாமல் அவதூறாய், தாறுமாறாய் எழுதுவது நியாயமல்ல. நான் பின்னர் எழுதிய கீழ்க்கண்டக் குறிப்புகளை முன்பே
அவரிடம் சொல்லியுள்ளேன். அவர் பாணியை மாற்றச் சொல்லி வலியுறுத்தியுள்ளேன். எனக்கு
அவ்வகை கவிதைப்பாணி தேய்ந்து போனத் தடமாக இருந்ததால் என் கருத்தை தெரிவித்துள்ளேன்.
ஆரோக்யமான முறையில் , அவருக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையே வழங்கியுள்ளேன் இதுபோல்ெ நேரிலும்
சொல்லியுள்ளேன் . வெளியீட்டு விழாவிலும் அவரின் கவிதை குறித்து நான் பேசவில்லை.
அவரின் முயற்சிகள் பற்றியே பேசியுள்ளேன் .கவிதை குறித்த என் கருத்தில் உடன்பட
பிறரை நான் கட்டாய்ப்படுத்தவில்லையே .......
அதிருப்தியாளர்களுக்கு..
” கா. ஜோதியின் “ ஒரு சாமானியனின் கவிதைகள் “ நூலின் கவிதைகள் வெகு சாதாரணமானவை. உங்கள் சிபாரிசும், பல தொலைக்காட்சிகளில் வந்த அவரின் சிறு பேட்டிகளும் அந்தத் தொகுப்பு பற்றிய
அதீத நம்பிக்கையைத் தோற்றுவித்த பின் வாங்கிப் படிக்கையில் அதிருப்தியடைந்தோம் “ என்று திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் அதை வாங்கி ஆவலுடன் படித்த சிலர்
என்னிடம் கருத்துத் தெரிவித்தார்கள் .
நான் அத்தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் ஒரு வரி கூட அவரின் கவித்துவத்தை
பற்றி எழுதவில்லை. அவரின் மேடைப்பாடல்களைப் பற்றி சிலாகித்து எழுதியுள்ளேன்.
அவரின் இயல்புகள், பல்வேறு தளங்களில் தொடர்ந்த முயற்சிகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவரின்
கவிதைகளின் மையம் பலரும் எழுதித் தேய்ந்தவை. தேய்ந்த தடத்தில் பயணிப்பவை.
அவ்வப்போது எழும் பிரச்சினைகள், சம்பவங்களையே பெரும்பாலும் மையமாகக் கொண்டவை. பலரும் எழுதித்தீர்த்த
பாணியில் உருவாக்கப்பட்டவை என்பதால் அதில் எனக்கு உடன்பாடில்லாததால் அத்தொகுப்பின்
கவித்துவம் பற்றியெல்லாம் அதில் எழுதவில்லை. அவரின் தொடர்ந்த முயற்சிகள், எளிமையான செயல்பாடுகள் பற்றியே எழுதியுள்ளேன்.
பாத்திர வியாபாரி, நெசவு, பனியன் தொழில், குழந்தைத் தொழிலாளி, வறுமையான குடும்பச்சூழல்( இப்போது அவர் வறுமையில் இல்லை. தொடர்ந்த உழைப்பு
அவரை உயர்த்தி விட்டது ) ஆகியவை குறித்த அனுதாபங்களும் அவரின் முயற்சிகளுக்கான
பாராட்டுதல்களுமே பலரால் வெளிப்பட்டுத்தப்பட்டுள்ளன.. அவரின் வாழ்நிலை அனுபவங்கள், தொழில் சார்ந்த அனுபவங்கள், சமூக அவதானிப்புகள் பற்றி கூரிய பார்வையில் அவர் கவிதைகள் தெரிவித்ததில்லை.
அதையெல்லாம் எழுதும் முயற்சி அவரிடம் இல்லை. மேடை பாடல்களும், அந்த தரத்திற்கு இணையான கவியரங்கக் கவிதைப்பாணியில் நீண்ட கவிதைகளுமே
அவருக்கு உவப்பாக இருந்திருக்கிறது.இறுக்கமான செறிவான கவிதைகளில் அவருக்கு ஆர்வம்
இருந்ததில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக . அவரிடம் பல நவீன் கவிதைத் தொகுப்புகளைக் கொடுத்து
படிக்கச் சொல்லியிருக்கிறேன். அவற்றைப்படித்து விட்டு தீவிரமாக, நுணுக்கமான விசயங்களைத் தெரிவித்திருக்கிறார். ஆனால் வழக்கமான தன்
கவிதைப்பாணியிலிருந்து விலகி நவீன, இறுக்கமான கவிதைகளை எழுதும் முயற்சியில் ஈடுபட்டதேயில்லை...அவருக்கு அதில்
ஆர்வம் இல்லை என்பதும் தெரிந்து விட்டது. வழக்கமான தேய்ந்து போன மையங்கள், தேய்ந்து போன சொற்களை வைத்து பெரும்பாலும் நீண்ட கவிதைகளை மைக், மேடைத் தொனிக்காக எழுதுவதே அவரின் பாணியாகி விட்டது.அதில் அவர் சுயமோகியாகி
அமிழ்ந்திருக்கிரார் என்பது தெரிந்து விட்டது.
இதிலிருந்து அவர் மீண்டு அவரின் வாழ்நிலை, சமூக அனுபவ்ங்களை எழுதுகிற
போதே அவருக்கான பாராட்டு இடத்தைத் தக்க வைத்துக் கொல்ளமுடியும். பாத்திர வியாபாரி, 5 ம் வகுப்பே படித்தவர் , குடும்பச்சூழல் தந்த் நெருக்கடிகளிகளால் சிரமப்பட்டவர் போன்ற அவர் மீது
எழுப்பபடும் அனுதாபமும், பாராட்டும் அவரின் தொடர்ந்த கவிதை முயற்சிக்கு முட்டு கொடுக்காது. அவரின்
வாழ்நிலைப்பின்னணி போன்றே நகைப்பட்டறை தொழிலாளி, நெசவாளி,பலூன் விற்பவர் , படிக்காத விவசாயி போன்ற தளங்களிலிருந்து கவிதை அனுபவ்ங்களை கூர்மையாக
வெளிப்படுத்தியவர்களின் தனித்துவ கவிதை முயற்சியில் சிறு பங்கு கூட ஜோதியிடம்
இல்லை.. உதாரணம் சுயம்புலிங்கம் கவிதைகள்... திருப்பூரிலிருந்து சமீபத்தில்
வெளிவந்திருக்கும் கவிஞர்கள் கனல், துசோ பிரபாகர் போன்றோரின் ஒரு நல்ல கவிதை தரும் கூர்மையையும்
நுணுக்கத்தையும் கூட ஜோதியின் முழு கவிதைத் தொகுப்பு பெறவில்லை என்பது முக்கியம்.
அவரே இயற்றிப் பாடும் மேடைக்கவிதைகளிளேயே அவர் முடங்காமல், அந்த வகையில் நீண்ட கவிதைகளை எழுதாமல் புதுப்புழுவாய் வெளியே வரவேண்டும்.
அதற்கு தொடர்ந்த சரியான கவிதை வாசிப்பும்,-- கைதட்டலை, சுயமோகத்தைத் தவிர்த்த - அவருள் கொட்டிக்கிடக்கும் வாழ்நிலை அனுபவங்களை
கூர்மையானத் தொனியில் கவிதைக்குள் கொண்டு வருவதுமே அவருக்குச் சிறப்பு செய்வதாக
அமையும்.