திருப்பூர் புத்தகக் கண்காட்சி : முதல்
நாள் எழுத்தாளர்களுக்குப் பாராட்டுக்கு..
---------------------------------------------------------------------------------------------------------------
குழந்தைகள் அடிமைத்தனத்தை
முடிவுக்குக் கொண்டு வருவதே எனது வாழ்நாள் லட்சியமாகும்' என்று
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தி சமீபத்தில்
தெரிவித்தார். அவர் தொன்னூறுகளில் குழந்தைத் தொழில் ஒழிப்புப் பணியில்
திருப்பூரில் ஈடுபட்டிருந்தார். அவருடன் இணைந்து செயல்பட்டிருக்கிறேன்.
ஆரோக்கியம், கல்வி, குழந்தைகள்
பாதுகாப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு, சட்டங்கள்
என அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து, வலுவான திட்டம்
ஒன்றை உருவாக்கும் பணியில் குழந்தைகளுக்கான எதிர்காலத் திட்டங்களில் அவர் ஈடுபட்டுவருகிறார்
தற்சமயம்..
இன்னும் எத்தனை நாள்களுக்குதான் திரைப்பட
நடிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் நமது நாயகர்களாக நினைத்துக்
கொண்டிருப்பது? குழந்தைகள் அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடும் புதிய
தலைமுறை நாயகர்களை நாம் உருவாக்குவோம் என்கிறார் கைலாஷ் சத்யார்த்தி.
புதிய கதாநாயகர்கள் மாற்று
கதாநாயகர்களாகவும் எதிர் கதாநாயகர்களாகவும் இருக்க வேண்டும். மாற்று அரசியல் , மாற்று
கலாச்சாரத்தை உருவாகுக்கும் எதிர் கதாநாயகர்களாக அவர்கள் இருக்கவேண்டும்.
அந்தப்பணியில் இந்தப்புத்தகக் கண்காட்சியின் இந்த நூல்கள் ஈடுபடும். புதிய
கதாநாயகர்களை இந்தப்புத்தகங்கள் உருவாக்கும். அதை உணர்த்தவே படைப்பாளிகளுக்குத்
தரும் இந்த பாராட்டு ஒரு குறியீடாக அமைந்திருக்கிறது.
--- சுப்ரபாரதிமணியன்