மூன்று எழுத்தாளர்களின்
நினைவஞ்சலி நிகழ்ச்சி
இம்மாதம் காலமான மூன்று தமிழ்
எழுத்தாளர்களின் நினைவஞ்சலி
நிகழ்ச்சி “ வாசக தளம் “ அமைப்பின் சார்பில்
பழைய மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரிலான, எம்ஜிபுதூர் மூன்றாம் வீதி ” ஓஷோ
பவனி“ல் புதன் அன்று மாலை நடைபெற்றது.
வழக்கறிஞர் சி.ரவி தலைமை தாங்கினார்.
மறைந்த சென்னை சார்வாகன் அவர்களின்
சிறுகதைகளின் சிறப்புத்தன்மையையும் தொழு நோயாளிகளுக்கான மருத்துவப்பணியில் 30
ஆண்டுகளுக்கு முன்பே அவர் பத்மஸ்ரீ பரிசு
பெற்றதையும் குறிப்பிட்டு “ சார்வாகனின் இலக்கியப்பணிகள் “ என்பது பற்றியும்
ச.சுகன்யா விரிவாகப் பேசினார்.
சுப்ரபாரதிமணியன் அவர்கள் சமீபத்தில்
மறைந்த சென்னை எழுத்தாளர் ம.வே.சிவகுமார்,
கோவை கோமகன் ஆகியோரின் இலக்கியவாழ்க்கை, அவர்களின் படைப்புகள் தமிழ்ச்சூழலில்
முக்கியத்துவம் பெறும் நிலை குறித்தும் பேசினார், அவர்களுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டது. சென்னை சார்வாகன் பற்றிய ஒளிப்படம் திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜோதிஜி கணேசன், அரிமா
ராதாகிருஷ்ணன், சபரிஷ்,கவிஞர் ஜோதி உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
செய்தி:
வழக்கறிஞர் சி. ரவி ( சாமக்கோடாங்கி ரவி )