நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை
சிறுவர் நூல் வெளியீடு
* சுப்ரபாரதிமணியனின்
புதிய நூல் - “அன்பே உலகம்“
என்ற சிறுவர் நூல் வெளியீடு 24/1/16 ஞாயிறு மாலை மக்கள் மாமன்ற நூலகத்தில், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூரில் நடைபெற்றது,
தலைமை வகித்தவர்: பிரகாஷ் ( நிறுவனத்தலைவர்,
நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை ) முன்னிலைவகித்தவர் : சி.சுப்ரமணியன் ( மக்கள்
மாமன்றம் )
சுப்ரபாரதிமணியனின் “அன்பே உலகம்“
சிறுவர் நூலை பிரகாஷ் (
நிறுவனத்தலைவர், நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை ) வெளியிட ஆறுச்சாமி ( சைல்டு
லைன் ஒருங்கிணைப்பாளர், திருப்பூர்), ஆசிரியை ஹேமா மேத்தா, சி.சுப்ரமணியன் (
மக்கள் மாமன்றம் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
உரையில் :
சுப்ரபாரதிமணியன்: பெரும்பான்மையான
எழுத்தாளர்கள் சிறுவர்களுக்கான நூல்களை எழுதக் காரணம் அவர்களுக்கும் இருக்கும்
குழந்தை மனப்பான்மையும் குழந்தை இலக்கியம் குறித்த அக்கறையும்தான். எளிமையும்
செய்தியும் அறிவுரையும் என்ற மரபான சிறுவர் கதைகள் சமீப ஆண்டுகளில் புதிய வேகத்தையும், நவீனமான விசயங்களையும்
உள்ளடக்கி வருகின்றன என்பது ஆரோக்கியமானது. தமிழ்க்கல்வி குறைந்து வரும்
இக்காலத்தில் பெரும்பான்மையான குழந்தைகள் ஆங்கிலத்தில் படிப்பதால் தமிழில் குழந்தை
இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்ல பள்ளிகளில் வாசிப்பு இயக்கங்கள் தொடர்ந்து இயங்க
வேண்டும். பெற்றோர்களும் தொலைக்காட்சியில்
குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதைக்
கட்டுப்படுத்தி கதைகளை வாசித்துக்
காட்டுவதிலும் தங்கள் ஈடுபாட்டை
வளர்த்துக் கொள்ள வேண்டும். அது தமிழின் வளர்ச்சிக்கும் தமிழில் குழந்தைகள்
இலக்கிய வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.
ஆறுச்சாமி
( சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர்), :சிறுவர்களுக்கு அடிப்படையான சில
புத்தகங்களே பல கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக விளங்கியிருக்கின்றன.கல்வி சுயநலமாகி
விட்டது. தலைமுறை இடைவெளி அதிகமாகி விட்டது. குழந்தைகளுக்கு பல வகைகளில் நெருக்கடி
தருகிறோம்.குழந்தைகள் பாடப்புத்தகங்கள் மூலம் கல்வி பெறுவது என்பது ஒரு பகுதி.
வாழ்வியல் கல்வி என்பதைக் கற்பிப்பதில் பெற்றோர்க்கும் பங்கு உண்டு .
முடியரசு ( அக்னிப்பேரவை ) ., சாமக்கோடாங்கி ரவி
( வாசக தளம் ), கா.ஜோதி ( கனவு) ஆகியோர் உரையாற்றினர்.
கவிதை
வாசிப்பில் ஆ. அருணாசலம் உட்பட கவிஞர்கள் கவிதைகள் வாசித்தனர்......
(
சுப்ரபாரதிமணியனின் “ அன்பே உலகம் “ சிறுவர் நூல்
வெளியீடு : நண்பர்கள்
உதவிக்குழு அறக்கட்டளை, திருப்பூர்
.நன்கொடை ரூ 50 ., 98944 82752 )