” கதை சொல்லி.. “ நிகழ்ச்சி
பாண்டியன் நகர்
தாய்த்தமிழ்ப்பள்ளியில் ” கதை சொல்லி.. “ நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. ஆசிரியை விசாலாட்சி தலைமை தாங்கினார்.
கவிஞர் ஜோதிமணி “ கதை சொல்லி ..” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வழிகாடும்
நீதிக் கதைகள், அற நெறிக்கதைகள் பற்றிப் பேசினார். திருப்பூர் இணைய தள அணி
பொறுப்பாளர் சிங்கை அருண் கார்த்திக், தேவராஜன், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்,
நொய்யல் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் முத்துசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திருப்பூர்
இணைய தள அணி சார்பாக இரு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டது.
தலைமையாசிரியை கிருஷ்ணகுமாரி நன்றி
கூறினார்.
செய்தி: ஆசிரியை ஆ. விசாலாட்சி ( பாண்டியன் நகர்
தாய்த்தமிழ்ப்பள்ளி)