சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 12 ஜூன், 2015

 :மு.வ.வின் :கி.பி.2000                                                                                                                                                          =சுப்ரபாரதிமணியன்     
     பிரான்ஸ் காப்காவின் எழுத்துக்களின் பாதிப்பில் உருவான சமீபத்திய படமொன்று மு.வ. அவர்களின்  67 ஆண்டுகளுக்கு முன்   எழுதப்பட்ட
கி. பி. 2000 நாவலோடு வெகுவாக ஒத்திருப்பது ஆச்ச்ர்யம் தந்தது. பாதர்ஸம் மென்  என்ற நார்வே நாட்டுப்படத்தில்  வரும் கதாநாயகன் நம்முடையதைப் போல அல்லாத ஓர் உலகத்தை உருவாக்குகிறான் காதல் ஜோடியின்  முத்த்த்தைப் பார்ப்பவனுக்கு  அது உயிர்ப்பே இல்லாத எந்திர முத்தம் போல் தென்படுகிறது. சட்டென விரக்தி மேலிட தற்கொலை செய்து கொள்ள எண்ணுகிறான். மனிதர்கள் ரத்தமும் சதையுமாக இருந்தாலும் உயிரும் உணர்வும் அற்றவர்கள் போல அர்த்தமில்லாதவர்களாக  உலாவுகிறார்கள் என்பது அவனுக்குத் தெரிகிறது.  மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஹியூகோ  என்ற சுத்திகரிப்புத் தொழிலாளியைச் சந்திக்கிறான். அவனின் அறையின் சுவற்று விரிசலிலிருந்து கேட்கும் இனிய இசை  மறுபக்கத்திற்கு தப்பிச் செல்ல வழி காட்டும் என நினைக்கிறான். ரக்சியமாக  சுவற்றை உடைக்கும் போது அது ஒரு வீடாகவும், யதார்த்த உலகிற்கு மாறுபட்டதாகவும்  இருப்பதாகக்க் காண்கிறான். கை நீட்டினால் அவனுக்குத் தேவையானதெல்லாம் கிடைத்து விடுகிறது. வாழும் யதார்த்த உலகம் அல்லாத இன்னொரு உலகத்தைக் கான்கிறான்.  மரணமோ, கனவுகளோ அங்கில்லை ஆனால் தனிமையின் கொடுமையை உணர்கிறான்.
     கி பி 2000 நாவல் தன்னிலையில் சொல்லப்பட்டிருக்கிறது. தொழிற்சாலையிலிருந்து வீட்டிற்கு மாலையில் திரும்பும் கதாநாயகன் மிகுந்த மனச்சோர்விற்கு உள்ளாகுகிறான். காணும் யதார்த்த உலகம் அவனைச் சுடுகிறது. வாடுகிறான். இந்த அளவில் உருகும் நிலைமையும் தீமையே என்று தோன்றுகிறது.  செயற்கையான மறதியைத் தேடிக் கொள்ள முடியவில்லை அவனால்.  நஞ்சு உண்டு ஒரே மரப்பாக மறந்து மாய்வது மேலானது என்றாலும் கோழைத்தனமானது என்று நினைக்கிறான்.. கர்ப்பமாயிருந்தாலும் விறகு சுமக்கும் ஏழைதாயாலும் மாணவன் ஒருவன் கல்லூரியில் பணம் கட்ட முடியாததும் அவனை அன்று மிகவும் வருத்தமுறச் செய்கின்றன. பொல்லாத உலகம் அவனுக்குப் பிடிப்பதில்லை. அவனின் நண்பன் ஒருவனின் கடிதம் ஓர் அத்யாயம் முழுக்க விரிகிறது. கல்லூரி நாட்களில் அவனுக்கு தமிழ்நாட்டு லெனின் என்ற பட்டப்பெயர் இருந்தது. அவனின் இரண்டு குழந்தைகளும், மனைவியும் வறுமையால் வாடுகிறார்கள். ஓய்வு இல்லாத உழைப்பு வெறுப்பை உண்டாக்குகிறது.  ஊரிலுள்ள தாய்க்கு மாதாமாதம் பணம் அனுப்ப வேண்டியிருக்கிறது. அவன் தம்பி உடல் நல்க்குறைவால் சிரமப்படுகிறான். அவனுக்கு எலும்புருக்கி நோய். தேர்தல் நேரம் என்பது அலுவலக்த்தில் தலைமைக் கணக்கருடனும் பிறருடனும் பகையைமையைத் தோற்றுவிக்கிறது. குடுமப்ச் சிரமங்கள் அவனைத் தர்கொலைக்குத் தூண்டுவதாகவும், ஆறுதல் பெற வேண்டியும் அக்கடிதத்தை எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறான். ஆ.க. என்ற நண்பன் ஒவ்வொரு நொடியும் மூச்சுத்துணறுகிறேன் என்ற தன் நிலையையும் ஒவ்வொரு நொடியும் வாழ்க்கை  எனக்குத் திணறலாகவே உள்ளது என்ற நண்பர் நிலையினையும் மறந்து அடுத்தடுத்து வந்தக் கொட்டாவிகள்  அவனைத் தூக்கமென்னும் இன்பக் கரைக்கு இழுத்துச் செல்கின்றன. உறக்கத்தில் புதிய கனவுலக்த்தைக் காண்கிறான்.  என்பது மீதி ஒன்பது அத்யாயங்களில் நாவலில் விரிகிறது.
     அளவளாவி என்ற பெயரில் பெரிய பெரியக்கட்டிடங்கள் தென்படுகின்றன. பொது உடை  பொது உடமையின்  முதல் படியாக இருக்கிறது. நண்பர் என்ற பெயருடன்  பொதுத்  தொண்டர் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்துவதுகிறார். இயல்பாய் பாடலாம். ஓவியம் தீட்டலாம். நடிக்கலாம். மதமாச்சர்யம் அல்லாமல் இருக்கலாம். செல்லியின்  கவிதையை விளக்கிச் சொல்லும் ஒருவர்  காணப்படுகிறார். கார் என்பது சக்கரம் இல்லாமல் ஓட்டுனர் தேவையில்லாமல்  எங்கும் எளிதில் போகக் கூடியதாக இருக்கிறது. ரஸ்யர்கள், சீனர்கள் போன்று வெளிநாட்டினரும் தென்படுகின்றனர். அந்த உலகில் வாழ வலியுறுத்தப்படும் மூன்று விதிகளில் முதல் விதி “ உலகத்தில் மக்கள் வேற்றுமையை மறந்து  அன்பு பாராட்ட வேண்டும்என்பதேயாகும். அங்கு அவரவர் பழக்கத்திற்கு ஏற்றவகையில் உணவு கொள்வதற்காக பலவகை உணவுப் பிரிவுகள் இருக்கின்றன். படிப்பு குறிப்பிட்ட கால நேரத்தில் அடங்குவதில்லை. உணவு விடுதியும் ஒரு தொழிற்சாலையாக அமைந்து மக்களுக்கு வேண்டிய உணவு தருகிறது.  வீடுதோறும் நெசவுத்தறியும், காய்கறித்தோட்டமும் இருந்த  நிலை போய் ஊருக்குப் பொதுவான நெசவாலையும் காய்கறிப்பண்ணையும் அமைந்திருக்கிறது. மூன்று நாள் விடுமுறை கோலாகலம். வீடுதோறும் சமையலறை அமைத்து பெண்களை ஓய்வில்லாமல் உழைக்கச் செய்யாமல் பொது சமையலறை அமைத்து பெண்கள் ஓய்வில்லாமல் உழைக்கச் செய்யாமல் பொது சமையலறை இருக்கிறது. அச்சுக்கூடமும், நாடக அரங்கும் கூட்டுறவு முறையில் பொதுவானதாக இருக்கிறது. உயர்ந்தக் கட்டிடங்களாய் பள்ளிக்கூடம், கல்லூரி போன்றவை அமைந்திருக்கின்றன.  முதல் மாணவனுக்குப் பரிசு கொடுக்கும் பழக்கம் இல்லை. பள்ளி விடுமுறையில் தொழிற்சாலைக்குச் செல்லலாம். பல வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பெண்களே. வரலாறு என்பது அரசபரம்பரை, தொன்மையான காலம் என்றில்லாமல் கடந்த கால நிகழ்ச்சிகளாய் அவற்றின் சொல்லாடலாய் 1640ம் ஆண்டுக் கல்கத்தாவையும், 1940ம் ஆண்டு சென்னையையும் பற்றிச் சொல்வதாக இருக்கிறது.  பிச்சை எடுக்கும் பழக்கம், ரிக்சாக்களில் மனிதர்கள் இழுபட்டது, டிராம் வண்டி நெரிசல் உட்பட பல அதில் இருந்தன. மக்களுக்கு உணவு, உடை முதலியன கொடுப்பதற்கு வியாபாரம் என்ற வழக்கம் இருந்தது சொல்லப்படுகிறது. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் காலையில்  படிப்பும், மாலையில் தொழிற்சாலைக் கல்வியும் பயிற்சியும் பெறுகின்றனர். ஆனால் சாதி முறை தொழில் என்ற குறுகிய பாகுபாடு இல்லை. திருடுகிறவர்கள், கொள்ளையடிக்கிறவர்கள்  வாழத்தெரியாதவர் என்று தனிப்பகுதியில் வாழ அனுமதிக்கப்பட்டு திருத்தப்படுகிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கென்ற சிகிச்சை: பழ உணவும், சூரிய ஒளியும், ஊற்று நீரும் என்றாகிறது. பதினைந்து வயதிற்கு மேல் குறைந்தது  அய்ந்து ஆண்டுகள்  தொழிற்சாலையில் தொழிலாளியாக இநுருந்தால்தான் கல்லூரியில் சேர இடம் கிடைக்கும் வருடம் நாலு மாதம் உலகம் சுற்ற ஏற்பாடு செய்யப்படும். வழக்கறிஞர் என்ற ஒருவர் இல்லாத உலகம் அது. கல்லூரியில் படிக்காதவர்  தேர்தலில் நிற்க்கக் கூடாது. குடவோலை தேர்தல் முறை.  நூறு வய்திற்கு மேல் இருப்பவர்கள் பெரியோர் என் அழைக்கப்படுவர். தேர்தலில் அறுபது சதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு. பேரின்பம் என்று குழந்தைகள் வளரும் இடம்  இருக்கிறது.. அது பெரியவர்களின் உலகமாயும் இருக்கிறது, தீராத னோய்களையும் பொல்லாத விபத்துகளையும் வாழ்கையிலிருந்து அக்ற்றிவிட்டால் காதல் சாகப் போவதில்லை. அவனுக்காக காதலியும் சாக வேண்டியதில்லை. நூறு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு பேரின்பத்தில் குழந்தைகளோடு பழகி அமைதி நிலையில் உயிர் விடுபவர்கள் என்ற உலகமும் அது. இயந்திரங்கள் உள்ள உலகம் என்பதால் உழைப்பாளர்களுக்கு நிறைய ஓய்வு கிடைக்கிறது. இந்தப் பேரினப உலகத்தை தன் கனவின் நிலையாக மு.வ யதார்த்தில் தன் கனவின் நிலையாக மு.வ. யதார்த்தத்திலிருந்து  வேறுபட்ட “உட்டோபியன்உலகமாகப் பார்த்திருக்கிறார் இந்நாவலில்.அல்லது சிந்தனை களத்தில்.
    இதில்குடும்ப  உறவுகள் பற்றியக் கற்பனைஉலகின் பாத்திரங்கள் மிகவும் குறைவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. மனத்தூய்மையும் அன்பும் பிரதானமான மு.வ.வின் வழக்கமான கதாபாத்திரங்கள் இதில் குடும்ப உறவுகளின் சிடுக்குகளுக்குள் அகப்படவில்லை. குடும்ப உறவுகளின் விசித்திரத் தன்மை பற்றி எழுதுவதும் கட்டுடைப்பதும் அவரின் மனதிற்கு அதிர்ச்சி தருவதாகவே இருந்திருக்கும். சனாதன மனம் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாதுதான்.
     மு.வ்.வின் கற்பனை உலகில் குழந்தைகள் அபூர்வமாக்த்தான் வெளிப்பட்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் இடம் பெறும் அத்யாயத்தில்தான் இயந்கை சார்ந்த எண்ணங்களும் வெளிப்படுகின்றன.     நிலாவை நோக்கி   குழந்தை வா வா என்றழைக்கிறான். அது வரவில்லை. அதை உருத்து நோக்கி டுப்..டுப் என்றான். வெற்றி பெற்றது போல் மகிழ்ந்தான். டுப்..டுப் என்பதன் பொருள்  திட்டுவதாகும். அவன் ஏதாவது இடையூறான தவறுகள் செய்யும் போது நான் தப்பு, தப்பு என்று சொல்லி வந்தேன். என் பெரிய மகன்   நான் இல்லாத வேளையில்  இதை           “ துப்...துப்என்று தவறாக எண்ணிக் கொண்டு அவனுடைய பள்ளிக்கூட அறிவால்  துப்பாக்கியை நினைவில் வைத்துக் கொண்டு நிலாவைப் பார்த்து அதன் ஒத்துழையாமையை வெறுத்து டுப்..டுப் என்றான்என்ற சுவாரஸ்யமான பகுதி இருக்கிறது.
      விலங்குகள் இல்லாத உலகில் மனிதர்கள் வாழ்வது போல் இந்த கற்பனை உலகம் இருக்கிறது. பூனை பற்றி மட்டும் இப்படியொரு குறிப்பு நாவலில் இடம் பெற்றிருக்கிறது. “ பழங்காலத்தில் பூனைக்கு மனிதர்களை விட மிகுதியான வல்லமை இருந்த்து. மக்களின் வேலைகளைக் கெடுத்துவிடக்கூடிய வல்லமை அதற்கு இருந்த்து. அதனால் அந்தக் காலத்து மக்கள் பூனைகுறுக்கே வந்தால் மிகவும் கவலைப்பட்டார்கள்ல். தொடங்கின வேலையை விட்டு விட்டார்கள் . இந்தக் காலத்தில் பூனைக்கு அந்த வல்லமை இல்லை. “ பகுத்தறிவு சார்ந்த உலகின் மாதிரியாக மு.வ. இதைத் தந்துள்ளார்..
     அறமும் மனத்துய்மையும் கொண்ட மனிதர்களை மு.வ. அவரின் பிற நாவல்களில் படைத்திருப்ப்பார்.. கடமை உணர்வு, நாட்டுப்பற்று மொழிப்பற்று பற்றி இவரின் கதாபாத்திரங்கள் பிற நாவல்களில் பிரசங்கங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். திருவள்ளுவரின்  அறனெறி இவருள் தந்த பாதிப்புதான். இவரின் உரையெழுதும் பணிக்கு முக்கியமான அடிப்படியாக்க் கூட இருந்திருக்கிறது. இதில் இவரின் கற்பனை உலக்த்தில் இவரின் முந்தின நாவல்களின் மாதிரி வடிவ கதாபாத்திரங்களும், லட்சிய மனிதர்களும்  இடம் பெற்றிருக்கிறார்கள். பொதுவுடமைத்தத்துவம் இவருள்  பெரும் பாதிப்பை நாற்பதுகளிலேயே ஏற்படுத்தியிருக்கக் கூடும். உலகப் போர்களில் உலக எதேச்சதிகாரத்திற்கான ரஸ்யாவின் குரலும் பங்கும் மு.வ.வை பாதித்து சோவியத் ரஸ்யாவின் சோசலிச உலக்த்தைப் பற்றியக் கனவை இந்த நாவலில் விரித்திருக்கிறது என்று சொல்ல்லாம் . இந்த நாவல் வெளிவந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மு.வ. ரஸ்யா செல்கிறார். என்வே ரஸ்யாவைப் பார்க்காமல் அந்தப் பொதுவுடமைச் சமூகம் பற்றியக் கற்பனையில்தான் இந்த நாவலை எழுதியிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.
     ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984,விலங்குப்பண்ணை,சுஜாதாவின்  சொர்க்கத்தீவு, வ ராவின்  கோதைத்தீவு  போன்ற நாவல்கள் எதிர்காலம் பற்றிய விபரீதக்கற்பனைகளாகவும், அதிகார உலகத்தைக் கட்டுடைக்கிறதாகவும் அமைந்திருக்கின்றன், ஆனால் மு.வ்.வின் கற்பனை உலகம் அமைதியான பேரினப் வாழ்க்கையின் நப்பாசையாக இருக்கிறது. நாற்பதுகளில் கற்பனை விஞ்ஞானக் கதைகளின் பெரும் விளைச்சலில் ரஸ்யாவின் நெபோக்கோ போன்றோர் உச்சத்தில் இருந்த போது பொதுவுடமைக் கற்பனை உலக்ம் மு.வ.வின் பார்ர்வை வேறு கோணத்தில் அமைந்திருக்கிறது இதில். இரண்டாம் உலகப் போரின் விளைவுகளும், சோவியத் வெற்றியும் கூட இந்நாவல் வெளிவந்த காலத்தில்தான் நிகழ்ந்தவை. பொதுவுடமை உலகம் பற்றிய கற்பனையை விரித்து கி.பி.2000 நாவலில்  மு.வ. எழுதியிருக்கும் இதன் 1947ம் ஆண்டில்தான் மு.வ்.வின் கற்பனையான அன்பும், அறனெறியும் கொண்ட உலகிற்கு எதிரான வகையில் சோதனினை முயற்சியில்   அணுகுண்டு செய்யும் முடிவை சோவியத் ரஸ்யா வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதப்போர்களுகளும், தகவல் தொழில் நிட்பமும் விஸ்வரூபித்து வளர்ந்திருக்கும் இன்றைய விபரீத  உலகில் மு.வ.வின் அறமும், மனத்தூய்மையும், அமைதியுமான கற்பனை உலகை யாரும் ஏக்கத்தின் வெளிப்பாடாகவேக் கொள்வர். அந்த ஏக்கம் நிறைவேறக் கூடியதாக், முடியாதத்தாக இன்றையச் சூழலில் இருப்பதை இந்த நாவல்  அல்லது கற்பனை நூல் பெருமூச்சாக வெளிப்படுத்துகிறது எனலாம்.

       சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602