கனவு இலக்கிய வட்டம்: ஜூன் மாதக் கூட்டம் .
புத்தகத்தின்
மீதான தடையை நீக்குக : கோரிக்கை
கனவு இலக்கிய வட்டம்: ஜீன் மாதக்
கூட்டம் வியாழன் மாலை சக்தி பில்டிங், பாண்டியன் நகரில்
நடைபெற்றது. கவிஞர் ஜோதி தலைமை தாங்கினார். சக்தி மகளிர்
அறக்கட்டளையின் தலைவர் கலாமணி கணேசன் .” கனவு” இலக்கிய இதழின் 29 ஆண்டின் முதல் இதழை
வெளியிட்டார். .” கனவு” திருப்பூரிலிருந்து வரும் இலக்கிய
காலாண்டிதழாகும் . 29 ஆண்டுகளாக வெளிவருகிறது ( 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர்
641602 ஆண்டுச் சந்தா ரூ 100 )
கு.செந்தில் எழுதிய “ பழந்தமிழரசும்
மரபும் ( மொழி ஞாயிறு பாவாணர் பார்வையில்
) ” நூல் அறிமுகம் செய்யப்பட்டது . அவர் இதற்கு முன் எழுதிய “
மீண்டெழும் பாண்டியர் வரலாறு “ நூல் மீதான தமிழக அரசின் தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை முன்
வைக்கப்பட்டது.
. இவ்வாண்டின் சிறந்த
படத்திற்கான ஆஸ்கார் பரிசு பெற்ற “ பேர்டு மேன் “ பட அறிமுகத்தை
சுப்ரபாரதிமணியன் நிகழ்த்தினார்.. சிறந்த படம், சிறந்த சுய
கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என
நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய படம் பேர்ட்மேன்.
செய்தி ; கா .ஜோதி