சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 10 ஜூன், 2015

சமூகத்திற்குப் பயன்படும் எழுத்து
  
தோழர் ஆர். நல்லக்கண்ணு                                                                                              

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
                 
 NCBH      நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா



* 07-06-2015 ஞாயிறு மாலை மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி சாலை, திருப்பூரில் நடைபெற்றது . 
* தலைமை :   இரா. சண்முகம் ( திருப்பூர் மாவட்டத்தலைவர்,  க.இ.பெ.மன்றம் ) தாங்கினார்.  வரவேற்புரை: ரங்கராஜ் ( மேலாளர்,NCBH   கோவை ) வழங்கினார் .
.சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் பற்றி தோழர் ப.பா இரமணி ( மாநில செயலாளர், க.இ.பெ.மன்றம்) , தோழர் ரவி ( திருப்பூர் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூ .கட்சி ) நடேசன், தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர். ஈஸ்வரன் ( மாநில துணைச் செயலாளர், தமுஎகசங்கம் ) ஆகியோர் பேசினர்.


சிறப்புரை:   தோழர் ஆர். நல்லக்கண்ணு                                     ( மூத்த தலைவர் , தேசிய நிர்வாகக் குழு, இந்திய கம்யூ .கட்சி). அவரின் உரையில்:


சுப்ரபாரதிமணியன் ஆரம்பத்தில் தாமரை போன்ற முற்போக்கு இதழ்களில்  தன் எழுத்துப் பணியைத் துவங்கியவர். கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி 12 நாவல்கள் உடப்ட 45 நூல்களை வெளியிட்டு சாதனை புரிந்திருக்கிறார்  எனலாம். திருப்பூர் போன்ற பெரும் வணிக நகரத்தின் மக்களின் வாழக்கையை சரியாக பிரதிபலித்து வருகிறார். .உலகமயமாக்கலில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதையும் முதலாளித்துவ சுரண்டலையும் படைப்புகளில் வெளிப்படுத்தி உள்ளார். நொய்யலைப் பற்றி கவிஞர் வெள்ளியங்காட்டன் எழுதிய கவிதை எனக்குப் பிடிக்கும். அந்த ஜீவநதி இன்றைக்கு மாசுபட்ட நதியாகி விட்டது.நதியை நாம் வெகுவாக சுரண்டி விட்டோம். அதை சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை “ நாவல் பிரதிபலித்தது. திருப்பூர் மக்களின் இன்றைய வாழ்க்கையை அது பிரதிபலிக்கிறது. பழைய நொய்யல் சார்ந்த திருப்பூரையும் பிரதிபலிக்கிறது. அதி பல தொன்மக்கதைகளும் உள்ளன. ராவுத்தக்கவுண்டர் பற்றிய  ஒரு தொன்மக்கதை எனக்குப் பிடித்தது.  பெயரில் ஒரு சாதித்தமத்துவம் உள்ளது. பஞ்சகாலத்திலும் பல்ருக்கு வாரி வழங்குபவர் அவர். ஆனால் பஞ்சத்தை எதிர்கொள்ள முடியாமல் செத்துப் போகிற  அவலம் அதில். ஏழைகளுக்கு உதவி செய்தும் முறையான நீர் மேலாண்மை செய்தும்  உதாரணமாக அவர் காட்டப்பட்டிருக்கிறார். தொழிலால் சிதைந்த  திருப்பூர் வாழ்க்கை அதில் உள்ளது, தொழில் இயறகையோடு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அது இல்லாமல் பேராசை எண்னத்துடன் செயபடும் முயற்சிகள் காலப்போக்கில் பிரசினைகளை சந்திக்க  நேர்வதை  “  சாயத்திரை “ நாவலில் சொல்கிறார். அது சிறந்த நாவலுக்கான் அது தமிழக அரசின் பரிசு பெற்ற நாவலாகும். இந்தி, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம் என் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு கொண்டதாகும்.. நீடித்த வளர்ச்சி தேவை. அது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலமே பெற முடியும். அதற்கென்று இருக்கும் அறத்தைப்பற்றி இவரின் “ சூழல் அறம் “ கட்டுரைத் தொகுப்பு சொல்கிறது.  இன்றைய வாழ்வில் நாம் குவித்துக் கொண்டிருக்கும்  பலவகைகுப்பைகள் பற்றி அந்த நூல் எடுத்துரைக்கிறது. இவர் சுற்றுச்சூழல் சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். அதில் ஒன்றுதான் “ சூழல் அறம் “. 

சுற்றுச்சூழலை வைத்து எழுதும் முன்னணி படிப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.                            சமையலறைக்கலயங்கள் “ நாவல் இரு பெண்களை வைத்து திருப்பூர் பனியன் கம்பனி தொழில் வாழ்க்கையைச் சொல்கிறார்.  ஆப் நைட், புல் நைட் என்று கேள்விப்ப்ட்டிருக்கிறேன். இந்நாவலில் தொழிலாளர்கள் வெடி நைட் செயவதாக எழுதியுள்ளார். அதிசியமாக உள்ளது. எட்டு மணி நேர வேலை உரிமையை போராடிப் பெற்றோம். ஆனால் வெடி  நைட் என்று தங்கள் உழைப்பை மக்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்தால் பெண்கள் உள்ளனர். பதமா போன்ற பெண்களின் வாழ்க்கை  தொடந்து கொண்டிருக்கிறது.எல்லா மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் இங்கு வந்து குவிந்திருக்கிறார்கள், குழந்தை உழைப்பைப் பற்றியும் நாவல்களில் பேசுகிறார். கனகு என்ற பையன்  குழந்தைப் ப்ருவத்தை இழந்து  தொழிலாளியாகிற அவலம் , பள்ளிப் படிப்பு இழந்து போனதைப் பற்றி “ பிணங்களின் முகங்கள் “ நாவலில் எழுதியுள்ளார். சமீபத்தில் தினமணி பத்திரிக்கை இந்நாவல் ஒவ்வொருவரின் நூலக்த்திலும் இருக்க வேண்டிய நாவல் என்று பாராட்டியிருக்கிறது. பெண்கள் மீதான் வன்முறை பற்றி இந்த நாவலும் பேசுகிறது. இவர் பல நாடுகளுக்கு பயணம் சென்றிருக்கிறார். அந்த அநுபவங்களை  “ மண் புதிது ”  நூலில் பதிவு செய்தைருக்கிறார். லண்டன் போன்ற நாடுகளில் தமிழர்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறார். அங்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்குள் இருக்கும் பாகுபாடுகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்..நாட்டிய அரங்கேற்றம் போன்றவை நட்த்தப்படுவதில் இருக்கும் ஆடம்பரம்,  புலம்பெயர்ந்த சூழலில்அவர்களின் வாழ்க்கையை நுணுக்கமாக எழுதியுள்ளார்

. உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவித்து பருத்தி நகரம் போன்ற  நூல்களையும் வெளியுட்டுள்ளார். அதிலொரு கட்டுரையில் பங்களாதேஷ் சென்று அங்கு பெண்கள் குறைந்த கூலி தரப்பட்டு சுரண்டப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார்.உள்ளுர் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முயற்சிகளில் அக்கறை காட்டி எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளார். கனவு “  என்ற இலக்கிய காலாண்டிதழை 29 ஆண்டுகளாக நடத்தி பல நூறு படைப்பாளிகளீன் படைப்புகளை பிரசுரித்து ஊக்கம் தந்து வருகிறார். தனி மனித படைப்பாளியாக நிண்று விடாமல் எழுத்தாளர்களை ஊக்குவைப்பது, இலக்கிய இதழ் நட்த்துவதன் மூலம் ஒரு இயக்கமாகவே செயல்படுகிறார்.. இந்த அளவில் அவரின் விரிந்த அளவிலான பணி வெகுவாகப் பாரட்டப்பட வேண்டியதாக உள்ளது.


கடந்த 25 ஆண்டுகளாக உலகமயமாக்கலின் தாக்கம் இந்திய சமூகத்தில்  மிக மோசமாக இருந்து வருகிறது.முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு எல்லை இல்லை என்பது போலாகி விட்ட்து. சந்தைக்கு கட்டுப்பாடு இல்லை என்பதால் முன்றாம் உலக நாடுகளின் வர்த்தகங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன, தொழில் வளர்ச்சி என்பது இயற்கையோடு இணைந்ததாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் முன்னேற்றம் என்று வருகிற போது சுற்றுச்சூழல் குறித்த அக்கறை புறக்கணிக்கப்படுகிறது.. இது அபாயகரமான விளைவுகளை தட்ப வெப்ப சூழ்நிலைகளில் ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் ஒரு வடிவம்தான் இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அதிக சூடும் ., வெப்பமாற்றமும். அய்ம்பூதங்களையும் கொள்ளையடித்துச் சுரண்டுவதன் பலனை இன்றைய வெப்பசூட்டால்  உணர்கிறோம். இயறகையை நம்மிலிருந்து பிரிக்காமல் அதன் பலனை அனுபவிக்க வேண்டும்...மனிதனின் பேராசையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. . குழந்தை உழைப்பும், பெண்களின் உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டலும் உச்ச கட்டத்திலிருக்கிறது. குழந்தைப்பருவத்தை அனுபவிக்காத குழந்தைகள், தங்களீன் சுதந்திரத்தை அனுபவிக்காத பெண்கள் என்று அவர்கள் மாறி வருகிறார்கள். பொதுமக்கள் தாங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை  உணர்வதற்காக எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில்  அவற்றை வெளிப்படுத்துகின்றனர். சமூக நோக்கமும், உணர்வும் கொண்டு எழுத்தாளர்கள் எழுத வேண்டும்.சமூகப் பார்வை எழுத்தாளர்களுக்கு அவசியம் தேவை. நச்சு இலக்கியம் ஒழிக்கப்பட எழுத்தாளர்கள் எழுத வேண்டும். புதிய சமூகத்தை  உருவாக்கும் பணியில் எழுத்தாளர்கள் ஈடுபட வேண்டும். சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் அந்த வகையில்  திருப்பூரின் மனச்சாட்சியின் குரலாகவும், உலக மயத்திற்கு எதிரான குரலாகவும் அமைந்து வருகின்றன  . அவர் தொடர்ந்து இலக்கிய உலகில் சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.

சொந்தக்கவலை , ஊர்க்கவலைகளால் கண் முன் நடக்கும் சமுதாய அவலங்களை கவனிக்க மக்கள் மறந்து விடுகின்றனர்.  பிரச்சினைகளின் ஆழம் அறிந்து கவிஞர்களும் சமுதாய அக்கறை உள்ள எழுத்தாளர்களும் எழுத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர்.  பிரச்சினைகள் தானாக மாறும் யாராவது வந்து மாற்றுவார்கள்  என அசந்து போன நிலையில் மக்கள் உள்ளனர். அந்நிலையை மாற்றி சமுதாய்ப் பிரச்சினையை திரும்பிப் பார்க்க வைக்கும் உணர்வுகளைத்தூண்டும் எழுத்துக்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல், இயற்கை, சமுதாய்ப் பிரச்சினைகள் சார்ந்த நூலக்ள் மக்களுக்கு விழிப்புணர்வு ஊற்படுத்தும் வகையில் அடிக்கடி வெளிவர வேண்டும். மக்களிடம் உந்துதல் ஏற்பட்டு சமுதாயம் சார்ந்த அக்கறை தானாக வெளிப்படும். எதையும் ஆழமாகப் படிக்கிற ஆழமாகப் புரிந்து கொள்கிற தன்மை அதிகரிக்க வேண்டும். இலக்கியக் கூட்டங்கள், புத்தக அறிமுகக் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படவேண்டும். இலக்கியங்கள் குடும்பத்தை நேசிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. இதனால், குடும்ப உறவுகளில், நல்ல மாற்றங்கள் ஏற்படும். மனித இயற்கையைப் புரிந்து வாழ வேண்டும்.இயற்கையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இயற்கையை அழித்தால்  அது நம்மைப் பழிவாங்கும் .