சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

வெள்ளி, 9 மே, 2008

எஸ் எஸ் ஸ்டேன்லிசுப்ரபாரதிமணியனின் தேர்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான" THE LAST SYMPHONY "வெளியிட்டு விழா சமீபத்தில் திருப்பூரில் நடந்தது. அக்கூட்டத்தில்திரைப்பட இயக்குனர் எஸ் எஸ் ஸ்டேன்லி( மெர்க்க்குரிப்பூக்கள், ஏப்ரல் மாதத்தில், புதுக்க்கோட்டையிலிருந்து சரவணன், கிழக்குக் கடற்கரை சாலை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ) பேசியது::சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுப்ரபாரதிமணியன் போன்ற நல்ல எழுத்தாளர்கள் தமிழ் திரைப்பட உலகத்திற்குள் வர வேண்டும் என அழைக்கிறேன்.ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டினரும் தமிழ் திரைப்படங்களில் முதலீடு செய்ய ஆரம்பத்திற்கும் இந்த காலகட்டம் சிக்கலானது. தமிழ் திரைப்படம் மக்களின் தமிழ் வாழ்வும், கலாச்சார அம்சங்களும் கொண்ட படங்களைத் தயாரித்து முன்னோடிகளாக இருக்கும் பதினாறு வயதினிலே முதல் சேது வரையிலான சிறு தயாரிப்பாளர்கள் வரும் வாய்ப்புகள் அடைபட்டு போகும் துர்ப்பாக்கியங்கள் பன்னாட்டு நிறுவன முதலீட்டு முயற்சியில் உள்ளன. சுப்ரபாரதிமணியனின் "சாயத்திரை", "தேனீர் இடைவேளை" போன்ற நாவல்கள் முன்பே ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன என்பது ஆரோக்கியமான விசயம்.எனக்கு ஆர்குட் இணைய தளத்தில் அறிமுகமானவர் சுப்ரபாரதிமணியன்.இணைய தளம் போன்றவற்றில் எழுத்தாளர்கள் இயங்குவதும்,இலக்கியம் குறித்தும், திரைப்படத்துறை குறித்தும் விவாதிப்பது இன்றைய எழுத்தாளர்களுக்கு மிகவும் தேவையானது.வாசிப்பதில் அக்கறை கொண்ட நான் சுந்தரராமசாமியின் நாவலொன்றை படமாக்குகிற ஆசையில் ஆரம்ப கட்டங்களில்தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். அசோகமித்திரன் , பிரபஞ்சன் போன்றவர்களின் படைப்புகளும் திரைப்படமாகும் நேர்த்தி பெற்றவை.காலம் அதற்கு உதவி புரிய வேண்டும்.நான் என்னுடைய கதைக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்கிறேனே தவிர கதாநாயகர்களுக்குத் தகுந்த மாதிரி கதை அமைப்பதில்லைஇப்போதுள்ள கதாநாயகர்களிட்மும், தயாரிப்பாளர்களிடமும் படத்தில் நீங்கள் ஒரு டாக்டராக வருகிறீர்கள் அல்லது பொறியாளராக வருகிறீர்கள் என்று சொன்னால் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். ஆனால் ஒரு ரவுடியாக வருகிறீர்கள் என்று சொன்னால் உடனே கதையைக் கேட்பார்கள் இப்போது ரசிகர்கள் இதைத் தான் விரும்புகிறார்கள் அதற்குத் தகுந்தமாதிரிதான் படத்தின் பெயர்களும் பொறுக்கி, பொல்லாதவன், கெட்டவன் என்று உள்ளன. இதற்கு ரசிகர்கள்தான் காரணம்.தமிழில் நிறைய நல்ல படங்கள் வரும் போது நாமும் ஒரு இயக்குனராக இருக்கிறோமே என கூச்சமாக இருக்கும். என்னுடைய லட்சியம் நல்ல படம் தர வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்குப் பொருளாதாரம் வேண்டும் அதனால் இப்போது சம்பாதித்து விட்டு புதுமுகங்களை வைத்து நல்ல படங்களை எடுப்பேன். மலையாளத்தில் மட்டும் நல்ல படங்கள் வருகின்றன என்று சொல்ல முடியாது. தமிழிலும் மிக நல்ல படங்கள் சமீபத்தில் வந்திருக்கின்றன..நல்ல படங்கள் வரவேண்டுமென்றால் பார்வையாளராகிய நீங்கள் மோசமான படங்களை நிராகரிக்க வேண்டும். நீங்கள் உங்கள் பார்வையை மாற்றும் போதுதான் நாங்கள் மாறுவோம்..எல்லோரும் திருப்பூர் என்றால் 10,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம் என்றுதான் நினைக்கிறார்கள் .ஆனால் அதற்கு வேறு பார்வை உண்டு. பனியனுக்குத் தேவையான அதிநவீன இயந்திரங்களை எல்லாம் தயாரிக்க முடிந்த வெளிநாட்டினரால் பனியனை ஏன் தயாரிக்க முடியவில்லை.அங்கு பனியன் தயாரித்தால் சாயக்கழிவுகளால் அவர்கள் நாட்டில் சுற்றுச்சூழல் žர்கேடு இருக்கும். சுகாதாரக் கேடு இருக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு திருப்பூர் போன்ற நகரங்களைக் குப்பைகூடையாக்கிக் கொண்டுருக்கின்றனர்..திருப்பூரைப் பற்றி நான் ஒரு படம் எடுக்கும் போது இதையெல்லாம் என் படத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்வேன்.. சமூக மனிதனை எனது கதாநாயகனாகக் கொள்வேன். அவன் சமூகத்தில் இருந்து அந்நியனானவனாக இருக்கமாட்டான்..