சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

வெள்ளி, 9 மே, 2008

சுப்ரபாரதி மணியனின் ஆதாரக்கவலைகள்
ஆர்.பி.ராஜநாயஹம்
---------------------------
HELL IS A CITY MUCH LIKE LONDON என்றான் ஸெல்லி.
PARIS IS A DINGY SORT OF TOWN என்று ஆல்ப்ர்ட்காம்யு கூறினான்.
சுப்ரபாரதிமணியனின் ' தேனீர் இடைவேளை ' நாவலை ஆழ்ந்துணர்ந்து வாசிக்கும் போது HELL IS A TOWN MUCH LIKE TIRUPPUR என்று சுப்ரபாரதிமணியன் சொல்வதை உணரமுடியும்.அவருடைய கட்டுரைகள்
'உலகமயமாக்கலும் உள்ளூர் அகதிகளும் ' 'கரையும் நதிக்கரைகள் ', 'கடத்தல்
கலாச்சாரம் ' போன்றவற்றை வாசிக்கும் போது ' TIRUPPUR IS A DINGY SORT OF TOWN ' என்று வேதனைப்படுவதை உணர முடியும்.
இந்திராபார்த்தசாரதி பார்த்த டெல்லி மேல்தட்டு மக்கள் வாழ்வின் அரசியல்தன்மை, ஆதவன் விவாித்த டெல்லி நடுத்தர மக்கள் வாழ்வின் அரசியல் தன்மை இவற்றிலிந்து வேறுபட்டு மணியன் தான் சார்ந்த திருப்பூர் கீழ்தட்டு மக்கள் வாழ்க்கையில் அரசியல் தன்மை வெளிப்படையாக இல்லாதவாறு எழுதிப்போவதை காணமுடியம். சமூகவியல் சார்ந்து சமகால அரசியல்,கலாச்சார நிகழ்வுகளின் மீதான் ஆய்வாக ' தேனீர் இடைவேளை ' நாவல் விாிகிறது. ({காவ்யா பதிப்பகம்{). ஒரு எழுபத்தைந்து பக்கங்களில் இதன் சாத்தியம் அதிசயம்தான்.
உலகமயமாக்கலில் திறந்த வெளிச்சந்தையில் மலிவாகக் கிடைக்கும் பொருட்கள், அதே நேரத்தில் தண்ணீரும் கூட அாிதாகி விடுகிற அவலம்.எட்டாயிரம் கோடி அந்நிய செலவாணி கிடைக்கிற திருப்பூர் நகரம் சாயக்கழிவுகள், குப்பைகள் சேர்ந்து அழுக்காகி நாறி விட்டது. நொய்யலாறு ரசாயனக் கழிவுகளால் சாக்கடையாகி விட்டது. வேலை தேடி இங்கே பிழைக்க இடம் பெயர்ந்தவர்கள் விவசாயத்தையும், மரபானத்தொழில்களையும் நிராகாித்து விட்டு வந்திருக்கிற துயரம்.சாதாரணத் தொழிலாளிகளும் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் இங்கே அனுபவிக்கிற அவதிகள்., முறையானத் தொழிற்சங்கங்கள் இல்லாததால் தொழிலாளிகளுக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை. மில்கொட்டகைகளில் பெண்களும், ஆண்களும். கல்யாணத்திற்கு பணம் சேர்க்க பெண்களுக்கு மாங்கல்யத்திட்டம். வேலை நேரத்தில் எந்த ஒழுங்கும் கிடையாது. இரவில் கூட பெண்கள் இங்கே கட்டாய வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெண்கள் மீதான் பாலியல் வன்முறை. பழைய மில்கள் மூடப்பட்டு புதிய மில்கள் ஊாின் ஒதுக்குப்புறத்தில் ஆரம்பிக்கப்பட்டு பழைய மில்லில் வேலை பார்த்தவர்களே புதிய மில்லில் தினக்கூலிகளாகக் வேலை செய்ய வேண்டிய துரதிஸ்டம். உலகமயமாக்கலின் எல்லாவகையானத் தாக்கங்களையும் எளிதில் சுலபமாகக் காணக்கூடிய சிறு நகரம்.
'தேனீர் இடைவேளை ' நாவலின் வடிவம் மாறுபட்டது. முதல் பகுதி எழுதப்படாத கடிதங்கள் மல்லிகா , ரங்கநாதன், ஸமீம். போஸ்ட்மேன், கண்ணம்மா, வட்டிக்கு விடும் ராஜேஸ்சிங், வாசகர் செந்தில். இரண்டாவது பகுதி தோற்றுப் போன தொழிற்சங்கவாதி அந்தோணிராஜான் டைாிக்குறிப்புகள். மூன்றாவது பகுதி யதார்த்த வாழ்க்கையில் லட்சிய உலகைக் காண விழையும் செந்திலின் டைாிக்குறிப்புகள்.
தி ஜானகிராமனும், அசோகமித்திரனும் பெண்ணை முழுமையாகச் சித்தாித்தவர்கள்.பெண் மனதின் நுட்பங்களை துல்லியமாக் எழுத்தில் கொண்டு வந்தவர்கள். தேனீர் இடைவேளை நாவலில் மல்லிகா, ஸமீம், கண்ணம்மா ஆகியோர் பாத்திரங்களும் அவர்களுடையச் சிக்கல்களும் சிக்கனமான வாிகளில் சுப்ரபாரதிமணியன் ஒரு பெண்ணாகவே மாறித்தான் விாித்துக் காட்டியிருக்கிறார். ரங்கநாதனின் கடிதங்களில் வெளிப்படும் கிாிஜா,அருக்காணி என்ற விளிம்புநிலைப் பெண்களைக்கூட முழுமையானப் ப e த்திரங்களாக்கி விடுகிறார். ஸ்மீம் மி கொட்டகையில் தன் சிறு அறையிலிருந்து சிறுநீர் கழிப்பதற்காக பதினைந்து அறைகள் தாண்டி கழிப்பறைக்குச் செல்ல நேரும் நிர்ப்பந்தம், அவளுடைய அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் அவளுக்கு எற்படும் கூச்ச உணர்வு. மிக நுட்பமான் இது போன்ற சித்தாிப்புகளில் ஆவேசமிக்கக் கலைநராக சுப்ரபாரதிமணியனின் சாதனை வெளிப்படுகிறது. கோவில்களை ஆடம்பரமாக மில்லில் அமைக்கும் நிர்வாகம் கழிப்பறைகளை சிக்கனமாக ஏன் அமைக்க வேன்ண்டும்.ரங்கநாதன் வேறு மில்லில் வேலைக்கு சேர்கிறார். அந்த மில்லிலும் அழகான பிள்ளையார் கோவில்., ஒரு பொதுவானக் கழிப்பறை, குளியறை.
ரோசாலக்சம்பர்க் ' மனித குலத்தின் தேர்வு காட்டுமிராண்டித்தனமா, கம்யூனிசமா ' என்று கேட்டதுதான் நாபகம் வருகிறது, அந்தோணிராஜான் டைாி ஒரு சமுத்திரம் போல. சேக்ஸ்பியாின் டெம்பஸ்ட், ஈஎம் எஸ், அருந்ததிராய், தொழிற்சங்கப்பெண்கள் அம்முவும், கோவிந்தம்மாவும்.,தொழில் நிறுவன உலகமயமாக்கல், இந்து மத பாசிசம், கோயமுத்தூர் மில் தொழிலாளி சங்கம், கேட் மீட்டிங் கூட்டங்களில் ஜீவா, சி.ஏ.பாலன், பாலதண்டாயுதம் ஆகியோாின் பேச்சு மார்க்சியத்திற்கு வழி திறந்து விட்டதும் , கேட் மீட்டிங்கை ஒழிக்க இன்றைய நிர்வாகம் கேட் முன்னால் பூங்காக்கள் அமைத்தது,புரூக் பாண்டு ட்டா வந்த புதிசில் தொழிலாளர்களுக்கு வாரக்கணக்கில் காலையும், மாலையும் இலவச தேனீர் வழங்கப்பட்டு பின் சம்பளப்பணத்தில் பிடித்தம் செய்து அதற்குதெதிரான தொழிலாளர் போராட்டம், கடிகார முட்களை நகர்த்தி அதிகப்படியான வேலை வாங்கியது,தெலுங்கானாப் போராட்டம், ஆனைகட்டி துவைப்பகுதி ஆதிரூ 7ாசிப்போராட்டம் மாதிாி கூட கேட் பூங்காவுக்கு எதிராகப் போராட்டம் அறிகுறி இல்லாமல் போனது பற்றிய தவிப்பு, சினிமா தியேட்டரே இல்லாத வால்பாறை, நொய்யல் நதி கழிவுகளின் சங்கமாவது பற்றி என்றெல்லாம் எவ்வளவு விசியங்களை அந்தோனிராஜான் டைாி உள்ளடக்கியிருக்கிறது.
ஏதாவது ஒரு நிலையிலாவது தன் வாழ்க்கை தோல்வி என்று எண்ணிப் பார்த்து சோர்ந்து போகாதவன் யாரேனும் உண்டா என்றக் கேள்வி உலுக்கிவிடுகிறது.
செந்தில் இலைநன். HIS WHOLE FUTURE IS BEFORE HIM மெகா சீாியல் அபத்தங்கள் உறுத்தும் அதே வேளையில் சினேநகாவை பிடிக்கிறது. லாாிதண்ணீர், கல்வி, டுயுசன், பகுத்தறிவு பிரசாரத்தின் தேவை, தமிழ் வழிக் கல்வி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை கல்வி, குழந்தையின் மருத்துவ செலவுப்பணம் பள்ளிக்கட்டணமாக கட்டப்படுவது பற்றியெல்லாம் நிறைய சிந்திப்பவன். வாசிப்புதான் வாழ்க்கை அனுபவம். புதியதைத் தேடும் ஆவல் வாய்ப்பு என்பதாக வாசிப்பு பற்றிய பிரம்மைகள் செந்திலுக்கு இருக்கிறது. குடி தனி மனித விருப்பம். ஜர்னலிசம் செய்யமுடியாத சில விசயங்களை நாவல் செய்து விடும் என்று இவனால் கருத முடியவில்லை.மில்லில் வேலை, கொட்டகையில் வாழ்க்கை என்றாலும் இலட்சியக்கனவுகளில் மிதக்கிறான்.கேப்ாியல் மார்க்வெஸ் ' நான் பத்திாிக்கையாளன். கூடவே கொந்சம் கதைகளும் எழுதியிருக்கிறேன் ' என்று கூறியிருப்பதனா ல் பத்திாிக்கை செய்தி எழுதும் பாணியலான இலக்கியப்படைப்புகள் இறுக்கமில்லாமல் நிறையப்பேரை சென்று சேர்கின்றன என்று செந்தில் டைாிக்குறிப்பு எழுதுகிறான். 40 வயதுப் பெண் பிணவண்டியை இடுகாட்டிற்கு தள்ளிக்கொண்டு போவதைப்பற்றிக் கூட டைாியில் எழுதுகிறான்.
வாசிப்பு, இலக்கிய கூட்டங்கள் என்று இருந்த ராஜேந்திரன் இப்போதெல்லாம் மாறிப்போய் 'இலக்கியவாதிகளின் விரோதங்களும் துரோகங்ளும் ஒதுங்கும்படி செய்து விட்டதாகக் ' கூறுவதை இவனால் அங்கீகாிக்க முடியவில்லை.செந்தில் வருகிற சில ஆண்டுகளில் ராஜேந்திரனினின் உணர்வுகளைப்புாிந்து கொள்ள முடியும். அய்ன்ஸ்டான் ' I have never never read anybody ' என்று சொல்லவில்லையா. 'புயலிலே ஒரு தோணி ' ப.சிங்காரத்தை நான் 1989ம் ஆண்டு மதுரை ymcaல் சந்தித்துப் பேசிக்கொண்டுருந்த போது நம் தளத்து படைப்பாளிகள் பலரையும் அவர் வாசித்திருக்கவில்லை என்ற செய்தியை அறிய நேர்ந்தது.
ஒரு வேளை அதனாலேயே கூட ' புயலிலே ஒரு தோணி ' போன்ற சாதனை அவருக்கு சாத்தியமானதோ என்னவோ. வாசிப்பு,இலக்கியம் பற்றிய செந்திலின் பிரமை மிகையாகவே பதிவாகியிருக்கிறது. கி.ரா.வின் கதவு கதையைப்படித்து விட்டு பாராட்டி சுந்தரராமசாமி அதில் ' செகாவியன் டச் ' இருப்பதாக சொன்னபோது கி.ரா. 'செகாவியன் ' என்றால் என்ன என்று அந்தக்காலத்தில் கேட்டார்
முன்பொரு தடவை கி.ரா. அவர்கள் சிட்டியிடம் மற்றப்படைப்பாளிகள் போல் பரந்த வாசிப்பு அனுபவம் தனக்கு இல்லையே என்று வருத்தப்பட்ட போது சிட்டி பதற்றத்துடன் ' வேண்டாம் ரொம்ப வாசிப்பு வேண்டாம். வாசித்தால் எழுத்தில் உங்கள் தனித்தன்மை காணாமல் போய்விடும் ' என்று சொன்னாராம்.
பிடரல் காஸ்ட்ரோ வாசிப்பு ஈடுபாடு அதிகமுள்ளவர். கேபிாியல் கார்சியா மார்க்வெஸான் அனைத்துப் புத்தகங்களையும் படித்தவ்ர். இங்கே ஜீவா, பாலதண்டாயுதம் இலக்கிய வாசிப்புள்ளவர்கள்.ஆனால் சமீபமாய் தலைவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அப்படி தென்படவில்லை. நாவலின் இந்தப் பதிவு பல தோழர்களை கோபப்படுத்துகிறது.
நாவலின் ரங்கநாதனின் SEXUAL POVERTY திகைக்க வைக்கிறது. ரங்கநாதனின் பாத்திரம் நேர்த்தியாக உருவாகியுள்ளது. ரங்கநாதனுக்கு வயது அம்பது என்பது சாியல்ல. அறுபது என்று இருக்க வேண்டும். ரங்கநாதன், அந்தோணிராஜ், செந்தில் மூவருமே பெண் துணையில்லாதவர்கள்.ரங்கநாதன் சபலம் பற்றிப் பேசுகிறார். அந்தோணிராஜ் டைாியில் ஆசை, சபலம், பாலியல் உணர்வுகள் பற்றி எழுதக் கூடாது என்றத் தீர்மாணம் கொண்டவர். செந்திலுக்கு உடம்பில் இருக்கும் காமத்தையெல்லாம் ஒன்று திரட்டி யாாிடமாவது கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.
( இந்த நாவலின் முதல் பகுதி The Unwritten Letters ' என்ற பெயாில் திருமதி பிரேமாநந்தகுமார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தனிப்புத்தகமாக வெளிவந்துள்ளது. இவாின் ' சாயத்திரை ' நாவல் ஆங்கிலத்தில் பாண்டிச்சோி Dr.ராஜ்ஜா அவர்களால் The Coloured Curtain என்றத்தலைப்பிலும், இந்தியில் திருமதி மீனாட்சி புாி அவர்களால் Reng Reng ki chadewr mehli என்றத் தலைப்பிலும் வெளிவந்திருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.)
சமீபத்திய கதை சொல்லி இதழில் 'திரும்புதல் ' என்ற சிறுகதையின் ஆண் பாத்திரம் 'எனக்கான பெண் துணை எங்கே தென்படுவாள் ' என்று கேட்பதை இங்கே நினைவு கொள்ள வேண்டும். உயிர்மை இதழின் ' நீலப்படமும் சுசித்திராவும் ' ,புதிய பார்வை இதழின் 'சூடு ' ஆகிய கதைகளும் பாலியல் உணர்வுகளையே வெளிப்படுத்துபவை . புதிய கோடாங்கியின் 'மாற்றங்கள் ' உலகமயமாக்கல் சம்பந்தப்பட்டது. அரசாங்க அமைப்பில் தனியார் சேவை நுழைவதை எதிர்த்த நிலை மாறி தனியார் சேவை நிறுவனங்களுக்கு அரசாங்க அமைப்பு ஊழியர்கள் தோள் கொடுக்க நேர்ந்துள்ள அசாதாரண நிலை பற்றி, மாறிவிட்ட வெவ்வேறு செருப்புகளை குறியீடாக்கி பேசுகிறது. ' தேநீர் இடைவேளை ' நாவலில் வருவது போல இந்த சிறுகதையிலும் தெருவோரத்தில் ஏற்பட்ட சாவு ஒன்று பிணக்காட்சியாக வருகிறது, தெருவோரக் குடியிருப்பு பெண்களைப்பற்றி மணியன்
' அழுக்கானப் பெண்கள் எல்லாத்துயரங்களையும் அழுக்கின் மூலம் சேர்த்து உடம்பில் அப்பிக் கொண்டவர்கள் ' என்று கவிதையாக சுட்டுகிறதைப் பார்க்கலாம்.
சினிமா பற்றி சுப்ரபாரதி மணியன் எழுதியள்ள பல கட்டுரைகளும் அதிலும் குறிப்பாக அவர் செக்கந்திராபாத் நகரத்தில் இருந்த போது எழுதிய தெலுங்கு , இந்தித்திரைப்படக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு நூலாக வர வேண்டும் . நல்ல கலைப்படங்கள் பலவற்றின் மீதான் விமர்சனக்கட்டுரைகளால் அவர் நடத்தி வரும் 'கனவு ' பத்திாிக்கையில் எப்போதும் திரைப்பட ஊடகத்தின் ஆக்கிரமிப்பை உணர்ந்து கொள்ளலாம்.
இங்க்மார் பெர்க்மான் ' FACE TO FACE ' படம் பற்றி தன் குழுவினருக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு 'முகாமுகம் ' , ஒரு சாிதம், ஒரு திரைப்படம்; மதவாதம் மற்றும் பொதுவுடமை அடிப்படை வாதங்கள் , தில்லி கதா திருவிழா படங்கள்; மங்கம்மாக்கள், பூலான் தேவியின் குரல் , மீராநாயாின் மான்சூன் வெட்டிங்; மலையாளிகளின் சிம்மாசங்கள்; கவிநனும் தடை செய்யப்பட்ட இசைக்குறிப்புகளும் , ரகு ரோமிமோ, குறும்படங்களின் தணிக்கை மீதான் வன்முறை, போன்றக் கட்டுரைகள் பல ஆபூர்வமான உலகளாவியத் திரைப்படங்களிலிருந்து 'பீா குறும் படம் வரை விாிவாகத் தொட்டுப் பேசுபவை.
பிராணிகள், பறவைகள், காட்டுஉயிர்கள் நமக்கு சமச்சீரான இயற்கை வாழ்வைத் தருபவை என்பதாக ' கானுயெிர் காப்போம் ' என்றக் கட்டுரையின் அக்கறை, சா.கந்தசாமி என்னும் கலைநன்., மிகச் சிக்கனமான வார்த்தைகளில் பிரமாண்ட உலகை எழுத்தில் காட்டும் நல்ல கலைநனுடன் ஏற்பட்ட ஒரு பயண அனுபவம். 'படைப்பு மனம் சந்சலமுறும் பின் நவீனத்துவம் ' என்ற தேடல் இவருடைய எழுத்துப் பயணத்தின் தவிப்பை தொிவிக்கிறது.
ஆறு நாவல்கள், பன்னிரண்டு சிறுகதைத்தொகுப்புகள் உட்பட 25 நூல்களை வெளியிட்டுள்ளார்.
ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து தவிப்புடன் தலையைத் தூக்கி பச்சோந்தி பார்த்துக் கொண்டுருந்தது. அதை டால்ஸ்டாய் உற்றுப் பார்த்தார். 'அப்படியா , நானும் கூட கவலையாகத்தான் இருக்கிரேன் ' என்று அதனிடம் வாய் விட்டு சத்தமாகவே கூறினாராம்.
ஆர்.பி.ராஜநாயஹம்