சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 9 மே, 2008

இடுக்கு

அளிக்கப்பட்ட மொத்த மாத்திரைகளையும் வேர்க்கடலை உரிப்பது போல் உரித்தெடுத்து விழுங்கிவிட்டாள். சட்டென வாழ ஆசை வந்தது போல சாகக் கூடாது என்று கதறியிருக்கிறாள். மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு போய் இரண்டு மணி நேரத்திற்கு சாவகாசமாய் தன் மன அவஸ்தைகளைப் பிறரிடம் விளக்கிக் கொண்டே இருந்திருக்கிறாள். உப்புக் கரைசல் கொடுத்து கொஞ்சம் வாந்தி எடுத்திருக்கிறாள். 2 மணி நேரத்திற்குப் பின்னே ச்ய நினைவு இழந்திருக்கிறாள்.வலி நிவாரணியை வழங்கி விட்டோம் என்ற நம்பிக்கையில் இரண்டு மணி நேரத்திற்கு வலி தானாகக் குறைந்து போகும். அதற்குப் பின் இரண்டு மணி நேரத்திற்கு வலியின்றி மூளை நரம்புகள் மரத்துப் போக அடுத்த வேளைச் சாப்பாடு வரைக்கும் வலி நிவாரண உத்ரவாதம் கிடைக்கும். அந்த உத்ரவாதத்தை உறுதிப் படுத்தி கொள்ள வேண்டியிருந்தது. வலி நிவாரணியை விழுங்கினேனா என்றுமூளைப்பிசகிடுக்கில் தேட ஆரம்பித்தேன்.கீரைக் குழம்பு சாப்பிட்டது ஞாபகம் வந்தது. பூண்டுக் குழம்புச் செய்யச் சொல்லியிருந்தது ஞாபகப் பிசகாய் போய்விட்டது. மஞ்சள் பொடிக் கலவையில் தயாராகியிருந்த 'முட்டைக் கோஸ்' பொரியலைத் தவிர்த்தது சரியாக ஞாபகம் வந்தது. அதற்கப்புறம் மாத்திரை விஷயத்தில் எதுவரைக்கும் வந்தோம். நீரைக் குடித்தேனே, சீரகத் தண்ணீர் சொம்பு அளவு மிகவும் குறைந்து போயிருந்தது. ஏதோ தூசு மாதிரிக் கூட தென்பட்டதே. தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்க இயலாதே. மிதப்பது அழுக்குத் துணுக்காக இருக்கலாம். அல்லது சீரகத் துணுக்காகக் கூட இருக்கலாம். அந்த அழுக்குத் தோற்ற மாயை நினைத்தபடி நீரைக்குடித்தது ஞாபகம் வந்தது. மாத்திரையைப் பிய்த்தெடுத்துப் போட்டு விட்டுத் தண்ணீரைக் குடித்தேனே என்பதில்தான் ஞாபகப் பிசகு.வாகனக் கைப்பிடிகளுக்காய் தோள்பட்டை சற்றே உயர்ந்தபோது வலி உச்சமாகியது. ஒற்றைக் கையனாய் அலுவலகத்தில் 10 நாட்கள் சாகசம் செய்தாயிற்று. பல சமயங்களில் நீண்ட விடுமுறை எடுக்க இதொரு வாய்ப்பு என்று கூட தோன்றியது. ஆனால் அலுவலகச் சூழல் மோசமாகிவிட்டது. நஷ்டத்தில் இயங்குபவற்றை மூடிவிடவும், லாபத்தில் இயங்குபவற்றை தனியாருக்கு விற்று விடவுமான மத்திய அரசின் கொள்கை விளக்க நடைமுறையில் தனியாருக்குப் பாதி பங்குகளை இலாகா விற்றாகிவிட்டது. இரண்டு வருடத்தில் முழுக்கத் தனியாருக்கு போய் விடும். அப்போது இந்த வகையான ஒற்றைக் கையர்களுக்கு வாய்ப்பு இருக்குமா...என்று தொடர்ந்த சந்தேகம் தோள்வலியை வலி நிவாரணி இன்றியே மரத்துப் போகச் செய்துவிடும். அதுவரைக்கும் தோள் வலியுடன் அலுவலக பார வலியையும் சேர்த்து சுமந்து கொண்டுதான் திரிய வேண்டும்.இரட்டை சக்கர வாகனத்தை பூட்டினேனா இல்லையா என்பது ஞாபகப் பிசகில் சிக்கிக் கொண்டிருந்தது புது விஷயமாகி விட்டது. மாத்திரை சாப்பிட்டோமா இல்லையா என்பதோ இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கையில் இன்னொரு அடுக்கில் இந்த சிடுக்கு. வாகனக் கொட்டகைக்குப் போய் சரி பார்த்து வரும் எண்ணம் பத்து நிம்டங்களாய் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது. சுற்றிலும் கோப்புகள். இடது கை கோப்பில் பட்டால் கூட தோள்பட்டைக்கு வலி உச்சமாகி சென்று விடுகிறது.மேலதிகாரி அறையிலிருந்து வரும்போது உடம்பு வியர்க்க ஆரம்பித்தது. இன்றைக்கு முடித்க்டுக் கொடுக்கவேண்டிய கோப்புகளின் பட்டியலை அவர் கொடுத்திருந்தார். அவர் சொன்னதை நிறைவேற்ற இன்னும் 10 கீழ் நிலைப் பணியாளர்கள் வேண்டும். இன்றிரவு மகா சிவராத்திரியாகவும் இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் முடிக்க முடியாத பட்சத்தில் நாளை எழுத்து மூலம் விளக்கம் வேறு கொடுக்க வேண்டியிருக்கும்.உடம்பு படபடப்பில் நடுங்க ஆரம்பித்தது. குடிகாரனைப் போல கை கால்கள் பரபரக்கும் போஇருந்தது. கைகளின் நடுக்கத்தை சுயமாய் உணர்வது கொடுமை. அதை உணர்வது போல கைகள் நடுங்க ஆரம்பித்தன. கை, கால், உடம்பு நடுக்கத்தைத் தவிர்ப்பதற்காய் என்ன செய்வது என்று யோசித்தேன். ஒரு நிமிடம் அதற்காய் கிடைத்தது பாக்யமாக இருந்தது. மணிபர்சில் இருந்த வலி நிவாரணி மாத்திரை- 200 - இரண்டை எடுத்தேன். உடம்பு படபடப்பிற்கு இத் உபயோகமாகுமா என்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது மாத்திரையை விழுங்கவேண்டும். அவ்வளவுதான். பிளாஸ்டிக் ஜக்கில் இருந்த தண்ணீரைப் பார்த்தேன். சிறு கசடாய் ஏதோ மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டு மாத்க்டிரை போட்டாயிற்று வேறு வழியில்லை.கசடை சற்றே ஒதுக்குவதற்காய் இடது கை ஆள்காட்டி விரலை உயர்த்த நினைத்தேன். தோள் வலியால் உயர்த்த முடியவில்லை. இடது தோள் இறுகிப் போய்விட்டது போலிருந்தது. கசடை ஒதுக்கி விட்டால் என்ன... குடிக்கலாம் என்று தோன்றியது. கசடு சீரகத் துணுக்கு போல இருந்தது ஆறுதல் தந்தது. அது சற்றே இடம்பெயர்ந்து அலைக்கழிந்தது. இரண்டு மாத்திரைகளை போட்டு த்ண்ணீர் குடித்தேன்.சீரகத் துணுக்கு ஞாபகம் வந்தது. காலையில் எச்சிற்கையோடு ஒரு மாத்திரையை எடுத்து சீரகத் துணுக்காய் நினைத்துக் கொண்டே விழுங்கியது ஞாபகப் பிசகிலிருந்து தப்பி சரியாய் வந்தது