சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 2 பிப்ரவரி, 2023

Kanavu109 issue ஓவிய அனுபவம் நாய்ப்பால் : தூரிகை சின்னராசு நெய்வேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கலை ஆசிரியராக பணியாற்றும் நண்பர் ந. செல்வன் எனக்கு திருப்பூர் கனவு இலக்கிய குறும்பட விருது விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவர். அவர் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் ஓவியக்கலையை பயின்றவர் ஓவியக்கலையின் துணைக்கலையான ஒளிப்பட கலையை தனது வாழ்நாள் பயணமாக தொடர்ச்சியாக இன்றளவும் தொடர்ந்து வரும் அவர் எடுக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் என்னை வரைய தூண்டி வா.. வா...என்று அழைக்கும். அண்மையில் அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது புகைப்படம் சார்ந்த பல புத்தகங்கள் எழுதி முடித்திருந்தார். அவருடைய நிழல் சலனங்கள் மற்றும் இருட்டறை வெளிச்சங்கள் ஆகிய இரண்டு ஆவண படங்களும் புகைப்படம் சார்ந்து ஆழமாக பேசப்பட்டவை. ஒரு ஓவியர் ஒளிப்பட கலைஞராகவும் இருந்து அவரே ஒரு ஆவணப்படத்தை இயக்கினால் அது எவ்வளவு நேர்த்தியாக வரும் என்பதை நமது திரைத் துறையில் ஆகச் சிறந்த ஆளுமைகள் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்கள். உதாரணமாக ஸ்பீல் பெர்க் என்கிற உலக கலைஞனின் சினிமா தொடங்கி ஜப்பானின் அகிரா குர சேவா மற்றும் இந்திய திரை ஆளுமையான சத்தியஜித்ரே வும் இதில் அடக்கம். தமிழ்நாட்டில் உள்ள பல திரைப்படக்கலைஞர்கள் ஒளிப்பதிவாளர்கள் அடிப்படையில் ஓவியர்களே. குறிப்பாக சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்று வெளிவந்த பல்வேறு ஆகச் சிறந்த ஓவியர்கள் என்று மிகப்பெரிய அளவில் திரைப்படத்துறையில் தங்களது முத்திரைகளை பதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓவியர்கள் மட்டுமல்லாது எழுத்தாளர்களாக வும் கவிஞர் வாலி அனுராதா ரமணன் போன்றவர்கள் எல்லாம் ஓவியத்தை அடிப்படை பாடமாக படித்தவர்களே. அந்த வரிசையில் நெய்வேலி செல்வம் அவர்கள் ஓவியம் படித்திருந்தாலும் அவர் ஒளிப்படம் எடுப்பதில் ஒரு படத்தை ஓவியமாகவே எடுத்து விடுகிறார். அத்தகைய சில படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் திருப்பூர் கனவு விருது விழாவிற்கு வந்த பொழுது நான் அவரிடம் அனுமதி வாங்கி ஐந்து ஒளிப்படங்களை ஓவியம் ஆக்க முற்பட்டேன். அதன் பிறகு அதை கோவையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலைமையத்தில் கலை மையத்தில் ஓவிய கண்காட்சிகளிலும் காட்சிப்படுத்தினேன். இந்த ஐந்து படங்களில் குறிப்பாக இங்கே நான் வெளியிட்டுள்ள நாய்ப்பால் என்கிற இந்த ஓவியம் நெய்வேலி செல்வத்தின் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு நான் வரையப்பட்டது. எனது ஓவிய கோடுகளுக்கு உயிரோட்டமாக இருந்தவை உணர்வு பூர்வமான இந்த நாய் பால் என்கிற இந்த நாய் குடும்பத்தின் புகைப்படம் தான். உலக தாய்ப்பால் தினத்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நோய் எதிர்ப்பு சக்தியை பற்றியும் நிறைய விளம்பரங்கள் செய்தித்தாளிலும் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருந்த அந்த வேலையில் தாய்ப்பால் மகத்துவம் குறித்து தொலைக்காட்சி விளம்பரமும், இந்த நாய் புகைப்படமும் என்னை வெகுவாக பாதித்தது. நெய்வேலி செல்வம் அவர்களின் இந்த குறிப்பிட்ட புகைப்படத்தை நான் ஓவியம் ஆக்கும் பொழுது மில்லி மீட்டர் மில்லி மீட்டராக கோடுகளை வரைய முற்பட்ட போது தனது எலும்பும் தோலுமான வறுமையின் உச்சத்தில் இருக்கும் இந்த நாயின் மடியில் தான் ஈன்ற நான்கு குட்டிகளும் முட்டி முட்டி பால் அருந்தும் காட்சி அதன் தொடர்ச்சியாக, அந்த தாய் நாயின் முகத்தில் கண்ணை மூடிக்கொண்டு தன் மன மகிழ்ச்சியை ஈன்ற குழந்தைகளுக்கு பாசமாக தன்னிடம் பால் பருக வாய்ப்பு கிடைத்ததை மனதார நினைத்து கண்ணை மூடி ரசிக்கும் அந்த தாய் பாச உணர்வை இந்த ஓவியம் நான் வரைந்த அந்த நாய்த் தாயின் முகத்தில் ஒவ்வொரு கோடுகளிலும் அனுபவிக்க முடிந்தது. ஒரு ஓவியம் உருவான கதையில் இன்றைய சமூக சிந்தனையும் வெளிப்பட்டதை நான் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாலும் என் புகைப்பட ஓவிய நண்பர் நெய்வேலி செல்வம் அவர்களுடன் பகிர்ந்து கொண்ட பொழுது உயிர் பெற்ற என் புகைப்படம் ஓவியமாக உலா வருகிறது என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்று தெரிவித்தார். எனவே நாம் வரையும் ஒரு நாய் படம் கூட நமக்கு சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்தும் சிந்தனைகளை வழங்கி வர ஏதுவாய் நமது வரைதலுக்கான காட்சி கருப்பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இந்த நாய் பால் என்கிற ஓவியத்தை முடிக்கும் போது தான் தெரிந்து கொண்டேன். தற்பொழுது ஒவ்வொரு தெரு நாய்களை உற்றுப் பார்க்கும் பொழுதெல்லாம் என் நினைவுக்கு வருவது உலக தாய்ப்பால் தினமும் இந்த நா(தா)ய்ப்பால் ஓவியமும் தான். என் ஓவிய அனுபவத்தில் சிறந்த ஓவியங்களில் ஒன்று இது.