சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 2 பிப்ரவரி, 2023
முதல் பேட்டி / சுப்ரபாரதி மணியன்
.
குழந்தைத் தொழில் எதிர்ப்பு சம்பந்தமாக ஒரு உலகப்பயணத்தை நோபல் பரிசு பெற்ற டெல்லி வாழ் சமூகப்போராளி கைலாஷ் சத்யார்த்தி அவர்களும், திண்டுக்கல் பால்பஸ்கரும் ஏற்பாடு செய்த போது என்னையும் இணைத்துக் கொண்டார்கள். அதற்காய் வெகு சிரமப்பட்டு நான் பணிபுரிந்து வந்தத் தொலைத்தொடர்புத்துறையில் அனுமதி பெற்றிருந்தேன். ஆனால் அப்பயணம் அமையாததால் சிங்கப்பூர் சென்றேன்.
என் முதல் பேட்டி பத்திரிக்கையில் வெளிவந்தது திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தமிழ் முரசு பத்திரிகைக்காக சிங்கப்பூரில் எடுத்த பேட்டி தான். அப்போது நான் சிங்கப்பூர் உலக புத்தக கண்காட்சிச் சென்றிருந்தேன். ரெ. பாண்டியன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தேன்.
‘
கனிமொழி கருணாநிதி அவர்களின் நேர்காணலின் சூழல் விவரிக்கப்பட்டிருப்பது விசேசமாக அமைந்தது. செர்பிய எழுத்தாளர் மிலோ ராட் பாவிச் அவர்களுடன் நடைபெற்ற ஒரு நேர்காணல் கேள்விகளை எனக்கானதாக எடுத்துக்கொண்டு பதில் சொல்லி இருக்கிறேன் ஒரு பகுதியில்
பேட்டி
தொகுப்புரை: பொன். குமார்
அன்புள்ளங்களுக்கு வணக்கம்!
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் இலக்கிய உலகில் நாற்பத்தைந்து ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருப்பவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என எண்பதுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் வெளியிட்டிருப்பவர் . கனவு என்னும் சிற்றிதழை தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பவர். தொழிலாளர்கள், பெண்கள், சிறுவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு படைப்புகள் மூலம் குரல் எழுப்பி வருபவர். சுற்றுச் சூழலைக் காக்க வேண்டும் என்பதிலும் பெருமுனைப்பு கொண்டவர். இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு இலக்கியப் பணியைத் தொடர்ந்து செய்து வருபவர்.
சுப்ரபாரதி மணியன் தன் இலக்கியப் பயண காலத்தில் பல்வேறு நேர்காணல்களைச் சந்தித்துள்ளார். பேட்டிகள் தந்துள்ளார். அவரின் நேர்காணல்கள்/ பேட்டிகள் இங்கு முதன்முறையாக ' புலி வாலை பிடித்த கதைகள்' என்னும் தலைப்பில் தொகுக்கப்படுகின்றன.
எழுத்தாளரின் முதல் நேர்காணலை எடுத்தவர் கனிமொழி கருணாநிதி. சிங்கப்பூரின் தமிழ் முரசு நாளிதழுக்கான நேர்காணல் இது. சிறியதாயிருந்தாலும் சிறப்பான நேர்காணல். கனவு இதழ் குறித்தே மூன்று கேள்விகள். கனவு எப்படி ஆரம்பிக்கப்பட்டது, கனவு எந்தளவு வெற்றிப் பெற்றது, கனவை எந்த திசையில் கொண்டு செல்லப்படுகிறது என கனவு இதழ் குறித்த பதில்களில் கனவு இதழ் மீதான அவரின் ஆர்வமும் இலட்சியமும் வெளிப்படுகிறது. கனவு இதழுக்காக தொடர்ந்து சந்திக்கும் பொருளாதார இழப்பை ஒருவித மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஒரு தனி மனிதராக கனவு இதழைத் தொடர்ந்து நடத்தி வருவது அவரின் இலட்சியப் பிடிப்பைக் காட்டுகிறது.
' எழுத்தாளனுக்கென்று தனியாக சமூகக் கடமை என்றிருக்கிறதா?' என்றொரு கேள்வியை எழுப்பியுள்ளது புதுப்புனல். இது சுப்ரபாரதி மணியனுக்கான கேள்வி மட்டுமல்ல. எல்லா எழுத்தாளருக்குமானது. இதற்கான பதிலை மிக விரிவாகக் கூறியுள்ளார். " ஒற்றைக் குரலாகத்தான் எழுத்தாளனின் படைப்பை மற்றவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் அது ஒற்றைக் குரல் இல்லை. பல ஆண்டுகளாக சமூகம் பற்றின அவதானிப்பின் ஒட்டு மொத்தமான அனுபவக் குரல் தனிப்பட்ட உணர்ச்சி என்ற வகையில் அது தென்பட்டாலும் வாசகன் தன்னை அதில் உணர்ந்து கொள்வதில் ஒற்றைக் குரலின் வீச்சும், தீவிரமும் தெரிந்து கொள்கிறான். ஆனால் குரல் கொடுக்க முடியாதவர்களின் குரலாக அவன் வெளிப்படுகிறான் என்பது இந்தக் குரலே சமூகத்தின் குரலாகவும் உண்மையானது. இந்தக் குரலே சமூகத்தின் குரலாகவும் அமைந்து எழுத்தாளனை சமூக மனிதனாக்குகிறது " என பதிலளித்து ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமையை உணர்த்தியுள்ளார். இது அனைத்து எழுத்தாளர்களின் குரலாக ஒலித்துள்ளது.
கோடுகள் இதழிலான நேர்காணல் மிக நீளமானது. மற்றும் விரிவானது. ஓர் எழுத்தாளர் என்பதையும், இலக்கியம் என்பதையும் தாண்டி கேட்கப்பட்ட ஒரு கேள்வி" சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது எதற்காக?". இட ஒதுக்கீட்டை ஓர் அம்சம் என்று குறிப்பிட்டவர் இட ஒதுக்கீடு என்பது சாதி ஒழிப்பதற்கான ஒரு அளவுகோல் தான் என சரியான பதில் தந்து சமூக நீதி குறித்து தன் பார்வையை தீர்க்கமாக தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் நாவல்களில் பெரும்பாலும் திருப்பூர் களமாக இருக்கும். திருப்பூர் மக்கள் பாத்திங்களாக இருப்பர். இது குறித்து ஒரு கேள்வியை பேசும் புதிய சக்தி எஸ். செந்தில்குமார் எழுப்பியதற்கு சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டதும் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதுமே காரணம் என்கிறார். படைப்புகள் மூலம் பேசப்பட்டதாலே ஓரளவு வெற்றியும் கிட்டியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதியாளர்கள் கொள்கையில் கடை பிடித்தல், மனித உரிமை பிரச்சனைகளாக மாறியது, நலத்திட்டங்கள் உருவானவை ஆகியவை படைப்பின் மூலம் கிடைத்த வெற்றி என்கிறார்.
இனிய உதயம் இதழுக்காக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனை நேர்கண்டவர் பொன். குமார். ' ஒரு படைப்பாளியின் இலட்சியம் விருது பெறுவதா? மக்களிடம் கொண்டு படைப்புகளை சேர்ப்பதா?' என்னும் கேள்விக்கு ' வாசகனிடம் படைப்புகள் கொண்டு சேர்ப்பதில் தான் படைப்பாளியின் லட்சியம் இருக்க வேண்டும்' என்று ஒரு தெளிவான பதிலைக் கூறியுள்ளார். ஒரு படைப்பாளியின் இலட்சியம் என்ன என்பதை, எதுவாக இருக்க வேண்டும் என்பதை படைப்பாளர்களுக்கு உணர்த்தியுள்ளார்.
இலக்கியம் சோறு போடுமா என்றொரு கேள்வி எல்லோரிடமும் உண்டு. இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிலருக்கே இலக்கியம் சோறு போடுகிறது. இதை கருத்தில் கொண்டு அம்ருதா இதழுக்காக நேர்கண்ட பாலு சத்யா தொடுத்த வினாவிற்கு " வணிக எழுத்தை மட்டும் நம்பி வாழலாம். பரபரப்பான மலின ரசனையுடன் செய்யப்படும் விசயங்கள் விற்பனையாகும். தீவிர எழுத்து சோறு போடாது. புலி வாலை பிடித்த கதைதான். நிராகரிப்பின் வலியும் தீவிரமாய் எழுதுகிறவனை மனநோயாளிக்கும்" என தீவிரமாய் எழுதும் எழுத்தாளனின் நிலையைத் தெரிவித்துள்ளார். வணிக எழுத்தே சோறு போடும் என வகைப்படுத்திக் காட்டியுள்ளார். தீவிரமான எழுத்தாளர்கள் எல்லாம் புலி வாலை பிடித்தவர்கள் என்று தானும் புலி வாலை பிடித்த ஓர் எழுத்தாளரே என்கிறார்.
ஓர் எழுத்தாளனின் மன அழுத்தங்களை, மன உணர்வுகளை, மன வலிகளை, கடந்து வந்த கடும்பாதைகளை வெளிப்படுத்த நேர்காணல்கள் ஒரு நல்ல வாய்ப்பு. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் தான் எதிர்கொண்ட கேள்விகளை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி தன்னையும் தன் வாழ்வையும் தன் படைப்புகள் குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார். ஓர் எழுத்தாளன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்த முடியாததை, எழுத்தில் சொல்ல முடியாததை நேர்காணல்கள் கொண்டு வருகின்றன. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் படைப்புலகம் தாண்டி அவரின் வாழ்வுலகத்தைக் காட்டுகின்றன. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் நேர்காணல்கள் என்பவை படைப்புக்கு சமம் என்கிறார். இத்தொகுப்பிற்கு மிக பொருத்தமாக ” புலி வாலை பிடித்த கதைகள்” என தலைப்பிட்டுள்ளார். ஒரு நிராகரிப்பின் வலி தெரிகிறது. அனைத்து நேர்காணல்களையும் வாசிக்கும் போது எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் வாழ்வைக் கூறும் ஒரு படைப்பாகவே உள்ளன. விருதுகளுக்காக படைக்காமல் சமூகத்திற்காக படைத்திடும் சுப்ரபாரதி மணியனுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும்.
அ. மார்க்ஸ் நேர்காணல்கள், த. ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள், ஆ. சிவசுப்ரமணியன் நேர்காணல்கள், அ. முத்துலிங்கம் நேர்காணல்கள், ச. தமிழ்ச் செல்வன் நேர்காணல்கள், அ. ராமசாமி நேர்காணல்கள், மாலன் நேர்காணல்கள், எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள், நாஞ்சில் நாடன் நேர்காணல்கள், சாரு நிவேதா நேர்காணல்கள், அப்பணசாமி நேர்காணல்கள், பாவண்ணன் நேர்காணல்கள், ரமேஷ் பிரேதன் நேர்காணல்கள், ஆதவன் தீட்சண்யா நேர்காணல்கள், அழகிய பெரியவன் நேர்காணல்கள், சுரேஷ் குமார் இந்திர ஜித் நேர்காணல்கள், ஷோபா சக்தி நேர்காணல்கள், சேரன் நேர்காணல்கள், புகழேந்தி நேர்காணல்கள் என வாழும் படைப்பாளிகளின் நேர்காணல்கள் பல வந்துள்ளன. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் புலி வாலை பிடித்த கதைகள் என்னும் இந்நேர்காணல்கள் தொகுப்பு மிக தாமதமாகவே வருகிறது.
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் நேர்காணல்களை தொகுத்து ஒரு தொகுப்பாக்கி வழங்க ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளார். பெருமையாக இருக்கிறது. அதற்காக அவருக்கு என் நன்றி. பதிப்பகத்திற்கும் வாசித்து விமர்சிக்கும் தங்களுக்கும் நன்றி.
என்றும் அன்புடன்
பொன். குமார்
21 /15 புதிய திருச்சிக் கிளை வடக்குத் தெரு லைன்மேடு சேலம் 636006 9003344742
Kaavya books rs 120