சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 2 பிப்ரவரி, 2023

காவ்யா சண்முகசுந்தரம் 70 --- சுப்ரபாரதிமணியன் ” 35 ஆண்டுகளாக சுப்ரபாரதிமணியன் என் நண்பராக இருக்கிறார் அவர் எந்த சமயத்திலும் என்னிடம் சண்டை போட்டது இல்லை ” என்று காவியா சண்முகசுந்தரம் அவர்கள் பல சமயங்களில் சிலரிடம் அறிமுகப்படுத்தும் போதும் பேச்சின் போதும் சொல்வார் . அவரிடம் சிறிது சிறிதாய் முரண்பட்டாலும் நடைமுறை எதார்த்தத்தில் அவருடன் சண்டை போடுவதற்கான எந்த சந்தர்ப்பங்களும் எனக்கு அமையவில்லை .காரணம் அவர் தொடர்ந்து இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தன் ஓய்வு வாழ்க்கையில் கூட ஓய்வின்றி பதிப்பகத் துறையில் இயங்கி புதியவர்களையும் கண்டுகொள்ளாதவர்களையும் அடையாளப்படுத்தி முன்னிலைப்படுத்துவதில் உள்ள அவரின் பெரும் உழைப்பு என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்துவது. அவர் என்னுடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ மாறுதடம் “ என்ற தொகுப்பை வெளியிட்டார். அதற்கு முன் நர்மதா பதிப்பகம் ராமலிங்கம் அவர்கள் அப்பா என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார் .அதில் சுஜாதா எழுதிய ஒரு நீண்ட முன்னுரை பலரின் கவனித்துக் உரியதாக இருந்தது. பாவண்ணன் அவர்கள் மூலம் அறிமுகமான காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் மாறுதடம் நூலை அழகாக பதித்திருந்தார் .பெண்களுக்கு நீல நிற சேலைகள் வெகுவாகப் படிக்கும் .அந்த அட்டை முழுக்க அழுத்தமான நீல நிறத்தில் இருந்தது .அதில் ஒரு தடம் எங்கோ சென்று முடிவது போல் ஓவியம் இருந்தது .அதன் பின்னால் சுமார் இருபது நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார் அத்தனையும் அவரின் உழைப்பால் முடிந்திருக்கிறது. அதுவும் என் சிறுகதைகளில் மொத்த தொகுப்பாக இரண்டு பாகங்களை கொண்டு வந்திருப்பது ஒரு முக்கிய சாதனை. முதல் தொகுப்பு ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருந்தது .அவற்றை சந்தைப்படுத்துவதிலும் அவர் ஆர்வம் எடுத்துக்கொண்டிருந்தார். இப்படி பெரும் தொகுப்புகளை கொண்டு வருவதில் அவருக்கு ஆர்வம் சமீபமாய் வந்திருக்கிறது. எனது சிறுகதைகளை அப்படித்தான் கொண்டுவரலாம் என்ற ஆலோசனையை சொன்னார். 10 ஆண்டுகள் கழித்து அப்படி ஒரு பெரிய தொகுப்பை இரண்டாம் பாகமா கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அவருடைய நினைவுறுத்தலின் காரணமாகவே நிகழ்ந்தது இவ்வாண்டில் .. என் சாயத்திரை நாவலின் முதல் பதிப்பை அவர்தான் வெளியிட்டார் அது தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான அந்த ஆண்டின் பரிசை பெற்றது. அதை தவிர ஆங்கிலம் இந்தி மலையாளம் கன்னடம் வங்காளம் போன்ற மொழிகளிலும் வெளிவந்தது .அவர் வெளியிட்ட பல நூல்களை நான் பின்னால் வேறு பதிப்பகங்கள் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறேன் .அப்போதெல்லாம் அவரை சம்மதம் குறித்து அணுகி ஒப்புதல் பெற வேண்டும் என்று எனக்கு தோன்றியது இல்லை .நான் இயல்பாக வேறு பதிப்பகத்திற்கு தந்துவிடுவேன். அதை அவர் அறிந்திருந்தால் கூட அதுபற்றி எதிர்மறையாக எதுவும் சொன்னதில்லை . அந்த வகையில் பல நூல்கள் முதல் பதிப்பாக அவரின் பதிப்பகம் மூலம் வெளிவந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. புனைவு இலக்கியத்தில் அதிலும் குறிப்பாக நாவலில் எண்பதுகளிலேயே சில அழுத்தமான தடங்களை அவர் பதித்திருக்கிறார் அவரின் நாவல்கள் குடும்பச்சூழல் மற்றும் இந்திய குடும்ப உறவுகளின் பொதுவான அமைப்பாக அமைந்திருக்கின்றன .அவை பெருமளவில் கல்லூரி பாடத் திட்டங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. திருப்பூரில் நடைபெற்ற ஒரு ஆப்பிரிக்க திரைப்பட விழாவிற்கு துவக்க விழாவிற்கு வந்த இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் காவியா சண்முகசுந்தரத்தின் நாவல்களை சிலாகித்து என்னிடம் சொல்லி அவற்றை படமாக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் வாழும் காலத்தில் அதெல்லாம் நடந்ததில்லை .அப்போது அந்த நாவலின் காட்சி படிமங்கள் எப்படி திரைப்படங்களுக்கு உகந்ததாக இருக்குமாறு அவர் எழுதியிருக்கிறார் என்பதை பாலுமகேந்திரா அவர்கள் என்னிடம் விளக்கியபோது நான் மகிழ்ச்சியை விட அந்த காலகட்டத்தில் பொறாமையே பட்டிருக்கிறேன். இந்த வார்த்தைகளை அவரின் நாவல்கள் குறித்து பல உதவி இயக்குனர்கள் என்னிடம் கதை விவாதங்களின் போது விவரித்திருக்கிறார்கள் . அவருடனானச் சந்திப்புகள் நல்ல உரையாடல்களுக்கு வழிவகுத்திருக்கின்றன. அவரைச் சந்தித்து திரும்பும் போது எப்போதும் வருத்தத் தொனி தென்பட்டதில்லை. சற்றே மகிழ்வும் ஆறுதலும் தொற்றிக் கொள்வது பெரிய பாக்யம்தான் சமீப ஆண்டுகளில் அவர் நாட்டுப்புறவியல் இலக்கியங்களில் பெரும் அக்கறை கொண்டு பெரியத் தொகுப்புகளை எல்லாம் வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சார்ந்த நாட்டுப்புறவியல் சார்ந்த விஷயங்களை ஆய்ந்து கட்டுரைகளாகவும் பாடல்களை சேகரிக்கும் பணியின் நிறைவாகவும் வெளியிட்டிருக்கிறார் .நாட்டுப்புறவியல் சார்ந்து பல முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை குண்டு குண்டான புத்தகங்களாக கூட கொண்டுவந்திருக்கிறார். அவரின் வயதை தாண்டிய, மீறிய உழைப்பு . அவரின் இன்னொரு முகம் நாட்டுப்புறவியலில் அம்சங்களை எழுத்து பதிவுகளாக கொண்டுவருவதில் சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறார் .நல்ல படைப்புகள் வெளிவர வேண்டும் , நல்ல படைப்பாளிகள் கவுரவிக்கப்பட வேண்டும் என்பது அவரின் விருப்பமான பிரார்த்தனையாகவும் இருந்திருக்கிறது . அவரின் பிரார்த்தனை அவரது நாட்டுப்புற தெய்வங்களிடம் -ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து விலக்களிக்குமாறு மன்றாடுவதை வழக்கமாக இருப்பதை உள்ளூர உணர்ந்திருகிறேன் ” . நாமெல்லாம் அறிவாளிகளல்லாதவர்களாக இருப்பதால், நமது தெய்வம் நமக்கு விலக்களிக்கவில்லை; அதனாலேயே ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டத்திலும் நாம் வாழ்கிறோம். இன்றைய படைப்பாளிகளுக்கு இது நன்கு தெரியும். அவர்கள் அதை வெளிப்படுத்தினால், உடனடியாக விமர்சிக்கப்படுவதோடு தாக்கவும் படுகிறார்கள். மனத்தாழ்மையினால் அவர்கள் மவுனம் காத்தால், அவர்களை இழித்தும் பழித்தும், அவர்களது மவுனம் குத்தலாக்கப் பேசப்படுகிறதே தவிர வேறு எதனைப் பற்றியும் எவரும் வாய்திறப்பதில்லை. காதைக்கிழிக்கும் இந்தக் காட்டுக் கூச்சலின் நடுவே, படைப்பாளிகள் அவர்கள் மதித்துப் போற்றுகின்ற சிந்தனை மற்றும் வெளிப்பாடுகளையும் தனியொரு பாதையாக முன்னெடுத்துச்செல்ல இனிமேலும் இயலுமென நம்பமுடியவில்லை. ஓட்டமாக ஓடும் வரலாற்றிலிருந்தும் விலகி நிற்கும் சாத்தியமென்பது இதுவரையிலும் அதிகமோ, குறைவோ இயன்றேயிருக்கிறது. நிகழ்வுகளோடு உடன்பாடில்லாத எவரானாலும் பொதுவாக மவுனமாகிவிடுகின்றனர்; அல்லது வேறு எதையேனும் பேசுகின்றனர். இன்று, எல்லாமே மாறிப் போய்விட்டிருக்கிறது: மவுனம் என்பதற்கு `எதிர்ப்பு` என்னும் புதிய பொருள் சூட்டப்பட்டுள்ளது. விலகியிருக்கும் அல்லது முடிவெடுத்த தருணமே அதனை ஒரு வாய்ப்பாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டதென்று கருதி, தண்டிக்கப்படுவதோ அல்லது பாராட்டப்படுவதோ நிகழ்வதுடன் கலைஞர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களும் அதில் ஈடுபட்டவர்களாக மாறிவிடுகின்றனர். மேலும், இதில் ஈடுபடுதல்` (involved) என்பது வெறுமனே `செயல்பட்டவர்` (committed) என்பதைக் காட்டிலும் மிகவும் துல்லியமானதெனத் தெரிகிறது. உண்மையில் இது கலைஞனின் வெறும் தன்னார்வச் செயல்பாடு என்பதல்ல, மாறாக கண்டிப்பாகச் செய்தேயாக வேண்டிய இராணுவப் பணி போன்றது. இன்று எல்லாக் கலைஞர்களும் காலத்தின் கப்பலில் ஏறிவிட்டுள்ளனர். அவர்களது கப்பல் அழுகிய மீன்களால் துர்நாற்றமடைந்திருப்பதை உணர்ந்தாலும், உண்மையில் அங்கே தேவைக்கு அதிகமான கொடுங்கோல் மேற்பார்வையாளர்கள் இருப்பதை, எல்லாவற்றிலும் மோசமாக, அவர்கள் நிகழ்போக்குக்குத் தடையாக இருப்பதைத் தெரிந்தாலும் கலைஞர்கள் தங்களைத் தாங்களே நொந்துகொண்டு ஒதுங்கிக்கிடக்கவேண்டியிருக்கிறது. நாம் கடலுக்குள் திசை தடுமாறித் தத்தளிக்கும் கப்பல்களாக அலைகிறோம். கலைஞர்கள், மற்ற எல்லோரையும் போலவே இறந்துவிடாமலிருக்க முடிந்தால், துடுப்புகளை ஏந்தவேண்டும் – அதாவது, உயிரோடு வாழ்வதையும், படைப்பதையும் தொடரவேண்டும். “ என்ற ஆல்பெர் காம்யுவின் கட்டுரையின் சில விசயங்கள் அவ்வப்போது அவரைப்பற்றி நினைக்கிற போது மனதில் வரும் . நான் பெரும்பாலும் அவருடன் கலந்து கொள்ளும் புத்தக வெளியீடுகளில் அவர் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் அந்த படைப்புகளை பற்றி அறிமுகம் செய்பவராக இருந்திருக்கிறார். அவரின் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆழமான அறிவையும் சிந்தனைகளையும் தெரிந்து கொள்ள எந்த சந்தர்ப்பங்களும் அமைந்ததில்லை .அவரின் நாட்டுப்புறவியல் சார்ந்த நூல்கள் அதற்கு ஏதுவாக இருந்தாலும் அவருடைய குரலிலும் உரையிலும் அந்த அம்சங்களை கேட்டு உணர முடியாதபடி சூழல்கள் அமைந்துவிட்டன .ஆனால் அந்த துறையில் அவர் பதிப்பித்த நூல்கள் அவரின் சாதனைகளைட் சொல்லும்..சமீபமாய் நூல்களின் குறைந்த விற்பனையும் அல்லது பரபரப்பு இல்லாத தன்மையும் இருந்தாலும் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் .புது இளைஞர்களை அறிமுகப்படுத்துகிறார் .அவரின் பழைய நண்பர்களின் நூல்களையெல்லாம் பதிக்கிறார் .அவற்றிற்கு வெளியீட்டு விழாவும் நடத்துகிறார் .ஓய்வு பெற்ற பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் இந்த முயற்சிகள் எந்தவிதத்திலும் தளரவில்லை. அவரின் குடும்ப சூழலில் இந்த முயற்சிகள் தேவை இல்லாததாகவும் ஓய்வற்ற வாழ்க்கையை தந்து இருப்பதையும் நான் அறிந்திருக்கிறேன் .ஆனால் எழுத்திலும் பதிப்பக துறையிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த முத்திரையை அவர் எந்த கணத்திலும் இழக்கத் தயாராக இல்லை. அதை அவர் தொடர்ந்து தன் மனதில் கொண்டு தன் வாழ்க்கையின் நேரங்களை செலவழித்து வருகிறார் .அவரின் முயற்சியில் காவியா இதழ் கூட ஏதேனும் ஒரு வகையில் மைல்கல் ஆகும் அதற்கான படைப்புகள் சேகரிப்பு , அவற்றின் பக்கங்களை நிரப்புவதில் நேரத்தை செலவிடுதல் என்பதெல்லாம் அவருக்கு சமீப ஆண்டுகளில் முக்கிய வேலையாக போய்விட்டது .ஆனாலும் தளராமல் காவியா இதழைக் கொண்டு வருகிறார் .காவியா மூலமாக அவர் முன்பு நடத்திக்கொண்டிருந்த எழுத்தாளர்களின் அனுபவங்களை உரைகளாக தருவது பின்னர் அவற்றை எழுத்து வடிவாக்குவது என்பவை சற்று பின்னடைவு அடைந்துள்ளன. ஆனால் அவரின் அலைச்சலால் இது சாத்தியமில்லாமல் போய் இருப்பதாக தோன்றுகிறது. தமிழ் சாகித்ய அகாதமியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒருவர் அவரைப் பற்றின ஒரு பேச்சின்போது நான் ஆலோசனை குழுவின் தலைவராக இருக்கின்ற காலத்தில் அவருக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைக்கும் என்பதை சொன்னார் .ஆனால் அது நிறைவேறவில்லை அதனால் அதற்கு முழு தகுதியும் அவரின் படைப்புகளின் தீவிரமாக தன்மையும் நாட்டுப்புறவியலிலும் வெளிப்பட்டிருக்கிறது அவர் தொடர்ந்து பதிப்பகத்தின் மூலமும் இயங்கி வருவதால் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஆறுதல் தருகிறது. அந்த ஆறுதலை எப்போதும் அவர் என்னைப் போன்றவர்களூக்குத் தரவேண்டும் ... ReplyForward