சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 26 செப்டம்பர், 2022
ப க பொன்னுசாமியின் படைப்புலகம்
ஏன், எதற்கு, எப்படி என்று முடிவில்லாதக் கேள்விகளை இலக்கியப்படைப்புகள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. மனிதகுலம் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் சொல்லாமலும் பலபரிமாண வளர்ச்சிகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியப்படைப்புகளும் அறிவுப்புலங்களும் கட்டமைக்கும் உலகிற்கும் யதார்த்த உலகிற்கும் பெரிய இடைவெளி இருக்கிறது, இந்தக்கேள்விகளுக்கான பதிலில் அறம் சார்ந்த விசயங்களும் அடங்கும். கொங்கு வாழ்வியலின் அறம் சார்ந்த கேள்விகளை பூடகமாய் கொங்கு பேச்சுப் படிமங்களின் மூலம் பல பதிவுகள் செய்த திரு ப.க.பொன்னுசாமி அவர்களின் படைப்புகள் பற்றிய ஒட்டு மொத்தமானப் பார்வையை இத்தொகுப்பு தருகிறது.
ஒரு படைப்பாளியின் சில படைப்புகள் சிலரை சென்றடைந்திருக்கும். படைப்பாளியின் ஒட்டு மொத்தப் படைப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள இது போன்ற தொகுப்புகள் தேவை .அவை கல்வியாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் பயன்படக்கூடியவை
அந்த வகையில் “ ரீடர் “ எனும் வகையில் இத்தொகுப்பை எடுத்துக் கொள்ளலாம்.
திரு பொன்னுசாமி அவர்களின் பல்வேறு படைப்புகள் பற்றி எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் என்று பலரும் தங்கள் அபிப்பிராயங்களை கட்டுரைகள் மூலம் தெரிவித்திருக்கிறார்கள் என்பதை இத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது.
அறிவியல் தமிழ் சார்ந்த சிந்தனைகள், வட்டார இலக்கியம், தொழில்நுட்ப சாதனைகள் , இசைக்கூறுகள் என்று திரு பொன்னுசாமி அவர்களின் படைப்புகள் சார்ந்து எல்லாவிதப்படைப்புகளின் ஆய்வு சார்ந்த கட்டுரைகளாக இவை அமைந்திருக்கின்றன. இலக்கியப்படைப்புகள் பற்றி பெரும்பான்மை பேசினாலும் விஞ்ஞானக்கூறுகளும் அறிவியலும் முதன்மை பெறும் இடத்தில் இருக்கிறது.. மீரா, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களின் எளிமையானக் கட்டுரைகள் ஒரு புறம்.இன்னொரு புறம்
விஞ்ஞானச்சிந்தனைகள் சார்ந்த வியப்புகள் கூடி நிற்கின்றன.. பிரேமாந்ந்தகுமார், மருதநாயகம், மாலன் , திருப்பூர் கிருஷ்ணன் என்று பலர் பல்கோணங்களில் எழுதியுள்ளனர்நாவலின் சில பகுதிகள் பெரும் மலையின் துணுக்கை காட்டுகின்றன. அவற்றை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. கல்லூரிக்காலக்கவிதைகள், நாடகங்கள் என்பவை ஆரம்பகாலப்படைப்புகளின் தன்மையைக்காட்டுகின்றன.சுமார் 60 ஆண்டுகளாகப் படைப்புலகில் இவர் இருந்து வருவதின் அடையாளங்களைக் கண்டு கொள்ளலாம்
ஒரு இலக்கியப் படைப்பாளியின் மொத்தப் படைப்புகள் பற்றிய ஒரு பருந்துப்பார்வைக்கானத் தளமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. சி பி எச் நிறுவனத்திற்கும் நன்றி. ப க பொன்னுசாமி அவர்கள் மதுரை , சென்னைப் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிட்த்தக்கது . தமிழில் 10 க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை எழுதியவர் . மூன்று நாவல்களும் அவரின் பங்களிப்பாக வரவேற்பைப் பெற்றுள்ளன
rs 350 NCBH Chennai
-சுப்ரபாரதிமணியன்