சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 26 செப்டம்பர், 2022

தேவை படைப்பாளிகளின் ஒட்டு மொத்தப் படைப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள தொகுப்பு நூல்கள் 0 ஒரு படைப்பாளியின் சில படைப்புகள் சிலரை சென்றடைந்திருக்கும். படைப்பாளியின் ஒட்டு மொத்தப் படைப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள தொகுப்புகள் தேவை .அவை கல்வியாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் பயன்படக்கூடியவை அந்த வகையில் “ ரீடர் “ எனும் வகையில் இந்த மூன்று தொகுப்புகளையும் எடுத்துக் கொள்ளலாம். 1 இந்திர ஜாலம் -அந்த வகையில் கவிஞர் இந்திரனின் கவிதைகள் பற்றிய ஒரு நூலை நா. வே அருள் தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்திரனின் கவிதைகளின் பல்வேறு பரிமாணங்களைத் தரும் கட்டுரைகளை அவரே எழுதியுள்ளார். இந்திரனின் உலகப்பார்வை கட்டுரை கவிதை நூலுக்குள் நுழையும் வாசலாக இருக்கிறது. உலகக் கவிதைகளின் வாசிப்பும் மொழிபெயர்ப்பும் மூலமாக அவர் தமிழ் கவிதை உலகிற்குக் கொடுத்துள்ள கொடை பற்றி கட்டுரைகளில் மொழிபெயர்ப்புக்கவிதைகளில் அவரின் பங்கைப்பற்றி அலசும் முதல் பகுதி அது. இலக்கியக் கொள்கைகளோ, கோட்பாடுகளோ இல்லாத நிலையில் அபிப்ராயங்களையும் சுய விருப்பு வெறுப்புகளையுமே விமர்சனம் என்ற பெயரில் உதிர்த்துக் கொண்டிருக்கும் குழுமாச்சர்ய தமிழிலக்கியச் சூழலில் அக்கறை மிகுந்த ஒரு செயல்பாட்டினுடைய தேவையற்ற ஒரு நிழலாகத்தான் இருக்கிறது விமர்சனம் என்ற இந்திரனின் அபிரப்ராயங்கள் முக்கியமானவை . இரண்டாம் பகுதி அவரின் அந்நியன் முதல் மிக அருகில் கடல் வரை அவரின் பல கவிதைத் தொகுப்புகள் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் . மூன்றாம் பகுதி இருபதற்கும் மேற்பட்ட உதிரிக்கவிதைகளை எடுத்துக் கொண்டு நடத்தப்படும் அலசலில் நவீன கவிதையின் பல்வேறு முகங்களைக் காண முடிகிறது. ( ரூ 180 யாளி சென்னை வெளியீடு ) 2. ப.க பொன்னுசாமியின் படைப்புலகம்: தொகுப்பாசிரியர் : சுப்ரபாரதிமணியன், ஏன், எதற்கு, எப்படி என்று முடிவில்லாதக் கேள்விகளை இலக்கியப்படைப்புகள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. மனிதகுலம் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் சொல்லாமலும் பலபரிமாண வளர்ச்சிகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியப்படைப்புகளும் அறிவுப்புலங்களும் கட்டமைக்கும் உலகிற்கும் யதார்த்த உலகிற்கும் பெரிய இடைவெளி இருக்கிறது, இந்தக்கேள்விகளுக்கான பதிலில் அறம் சார்ந்த விசயங்களும் அடங்கும். கொங்கு வாழ்வியலின் அறம் சார்ந்த கேள்விகளை பூடகமாய் கொங்கு பேச்சுப் படிமங்களின் மூலம் பல பதிவுகள் செய்த திரு ப.க.பொன்னுசாமி அவர்களின் படைப்புகள் பற்றிய ஒட்டு மொத்தமானப் பார்வையை இத்தொகுப்பு தருகிறது. திரு பொன்னுசாமி அவர்களின் பல்வேறு படைப்புகள் பற்றி எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் என்று பலரும் தங்கள் அபிப்பிராயங்களை கட்டுரைகள் மூலம் தெரிவித்திருக்கிறார்கள் என்பதை இத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது. அறிவியல் தமிழ் சார்ந்த சிந்தனைகள், வட்டார இலக்கியம், தொழில்நுட்ப சாதனைகள் , இசைக்கூறுகள் என்று திரு பொன்னுசாமி அவர்களின் படைப்புகள் சார்ந்து எல்லாவிதப்படைப்புகளின் ஆய்வு சார்ந்த கட்டுரைகளாக இவை அமைந்திருக்கின்றன. இலக்கியப்படைப்புகள் பற்றி பெரும்பான்மை பேசினாலும் விஞ்ஞானக்கூறுகளும் அறிவியலும் முதன்மை பெறும் இடத்தில் இருக்கிறது.. மீரா, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களின் எளிமையானக் கட்டுரைகள் ஒரு புறம்.இன்னொரு புறம் விஞ்ஞானச்சிந்தனைகள் சார்ந்த வியப்புகள் கூடி நிற்கின்றன.. பிரேமாந்ந்தகுமார், மருதநாயகம், மாலன் , திருப்பூர் கிருஷ்ணன் என்று பலர் பல்கோணங்களில் எழுதியுள்ளனர்நாவலின் சில பகுதிகள் பெரும் மலையின் துணுக்கை காட்டுகின்றன. அவற்றை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. கல்லூரிக்காலக்கவிதைகள், நாடகங்கள் என்பவை ஆரம்பகாலப்படைப்புகளின் தன்மையைக்காட்டுகின்றன.சுமார் 60 ஆண்டுகளாகப் படைப்புலகில் இவர் இருந்து வருவதின் அடையாளங்களைக் கண்டு கொள்ளலாம் ஒரு இலக்கியப் படைப்பாளியின் மொத்தப் படைப்புகள் பற்றிய ஒரு பருந்துப்பார்வைக்கானத் தளமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. ( ரூ 350 என் சி பி எச் வெளியீடு ) 3. சுப்ரபாரதிமணியன் என்ற பன்முக எழுத்தாளர் இந்த நூலை சென்னையைச் சார்ந்த கண்ணையா அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ளார். இது மற்ற இரு நூல்களிலிருந்து வித்தியாசமானது. இதில் தொகுப்பாளர் ஒருவர் இருந்தால் கூட கட்டுரையாளர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர். ஆர். நல்லக்கண்ணு, பிரபஞ்சன், ஜெயமோகன், முதல் தமிழில் பல படைப்பாளிகள் சுப்ரபாரதிமணியனின் பல நூல்கள் பற்றி எழுதியக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுப்ரபாரதிமணீயனின் நாவல்கள், பயண இலக்கியம், சிறுகதைத்தொகுப்புகள் என்று பல வகை இலக்கியப்படைப்புகள் பற்றி பொதுவான வாசகர்களும் இலக்கிய மாணவர்களும் அறிந்து கொள்ள உதவும் வகையில் அக்கட்டுரைகள் மைந்துள்ளன. இந்த மூன்று நூல்களும் மூன்று முக்கியப் படைப்பாளிகளைப் பற்றிய ஏறத்தாழ முழு விபரங்களையும் அறிந்து கொள்ள உதவுபவை. இது போன்ற தொகுப்பு நூல்கள் தமிழ்ச்சூழலில அவசியமானவை. ( ரூ200 , மார்க்ஸ் ஏங்கல்ஸ். லெனின் படிப்பகம், கோவை, நண்பர்கள் நற்பணி மன்றம் சென்னை வெளியீடு ) - நா. தினேஷ் - ( கட்டுரை : நா. தினேஷ் , திருப்பூர் இலக்கிய வாசகர் ) - ------------ -