சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 13 ஜனவரி, 2021
Notch என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது Authours press Newdehi rs 300
* சுப்ரபாரதிமணியனின் நாவல் மாலு : புலம்பெயர்தல் எனினும் துவக்கத்திலேயே தீர்ந்துவிடும் லட்சியம்
குற்றங்கள் அனைத்தும் தண்டனைக்குரியன என அனைத்து நாடுகளிலும் சட்டம் உள்ளபோதும் அதிகபட்ச தண்டனையான தூக்கு அல்லது மரணம் விளைவிக்கும் தண்டனை எல்லா நாடுகளிலும் கிடையாது .அது அழிக்கப்பட்டு விட்டது .ஆனாலும் சில நாடுகள் சிங்கப்பூர் மலேசியா போன்றவை அதனை இன்னும் நடைமுறைப் படுத்துகின்றன. ஐநா மனித உரிமை ஆணையம் பலமுறை அவற்றை கண்டுபிடித்து கண்டித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு சிங்கப்பூர் அரசு 29 வயது இளைஞர் ஒருவரை ,தமிழர் இலங்கையைச் சேர்ந்தவர் குறிப்பிட்ட அளவைவிட மிகவும் குறைந்த அளவு சற்று கூடுதலான போதைப் பொருள் வைத்திருந்தார் என்று தூக்கிலிட்டு விட்டது வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடந்தது அப்பீல் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. இந்நாடுகளில் தூக்கிலிடப்படும் குற்றவாளிகளில் கணிசமானோர் போதைப்பொருள் குற்றத்திற்காக தண்டிக்கப்படுவார்கள் .போதைப் பொருளைப் பயன்படுத்துதல், விற்பனை செய்தல், மேலும் கடத்துதல் என்பன மிகுந்த குற்றச் செயல்களாக இங்கே பாவிக்கப்படுகின்றன .மற்ற நாடுகளில் இதற்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடையாது. பிரிட்டிஷ் வணிகர்கள் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் அடிமை வணிகத்தை நிறுத்தி விட்டபின் போதைப்பொருள் விற்பனையை பரவலாக மேற்கொண்டிருந்தனர் என்பது எட்வர்டு கலியாணோ என்பவர் கூறுகிறார் .இந்தியாவை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆண்டபோது அதனை இன்னும் தனது ஆளுமையை பரப்பும் இலக்குகளை ஒட்டி ஒரு ராணுவத் தளமாக -ஒரு நிர்வாக முறைமைத் தளமாகவே கையாண்டனர் என்று அமிதாவ் கோஷிம் குறிப்பிடுகிறார்.இந்தியாவில் இருந்து ஹாங்காங் -சீனா போன்ற நாடுகளுக்கு கடந்து செல்வதற்காக அவர்கள் உருவாக்கிய போதை இலக்குதான் ‘சில்க் ரூட்’ எனப்படும் பட்டுப்பாதை .இந்தியாவின் உயர் கிழக்கில் அமைந்த பர்மா போன்ற நாடுகளையும் வெட்டி செல்லும் பாதை -என்றும் எட்வர்டு கலியாணோ என்பவர் கூறுகிறார். தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாக எடுத்துச்செல்லப்பட்டு இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கில் ஜப்பானிய வீரர்கள் மேலேறிச் செல்வதற்கான ‘குவாய்’ நதியின் மீது கட்டப்பட்ட மிக நீண்ட பாலத்தை உருவாக்குவதற்கான கடினமான ஈவு இரக்கமற்ற பணியிலும் அமர்த்தப்பட்டனர் என்பது வரலாறு .மாலு நாவலின் களம் இவை அல்ல .எனினும் காலம் கடந்த -மேலான நூற்றாண்டிலிருந்து இன்றுவரை இப்பகுதிகளில் விரியும் துயர் நிறைந்த காட்சியில் தனது பெருமூச்சு கலந்து நிறைகிறது. தமிழர்கள் அடிமைகளாக. உடலுழைப்பை கொடுத்தவர்கள் மற்றும் பொய்யான போதைப்பொருள் கடத்தல் உள்ளதாக தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டவர்களும் கூட;
பட்டுப் பாதை வழியாக போதை பொருள்களை கடத்திச்சென்ற ஆங்கில ஆதிக்கத்தின் மீது எந்த நட்பும் உடன்பாடும் சீன –கொரிய- ஜப்பானியருக்கு இருக்க வாய்ப்பில்லை .ஆகவே போதைப் பொருள் தடுப்பு என்பது அவர்களது உணர்வில் கலந்து கோபத்தை கிளறி விட்டு இருக்க வேண்டும் .எனவே போதைப் பொருள் தடுப்புக்கு ஒருபகுதியாக மலேசியா போன்ற நாடுகள் தூக்குத் தண்டனையை பாவிக்க வேண்டும். ஜார்ஜ் ஆர்வெல் பர்மியச் சிறை ஒன்றில் ஒரு இந்தியனின் தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து கட்டுரை வரைந்துள்ளார். சமநிலையும் உயிர்த்துடிப்பு மிக்க ஒரு மனிதன் திடகாத்திரமானவன் கூட நொடிப்பொழுதில் அவனது வாழ்க்கை ;உயிர் அவனைவிட்டு பிரிக்கப்படுகிறது. இது ஒரு வியத்தகு அதிர்ச்சியூட்டும் அனுபவம்.
இயற்கை ஒரு உடலை படைப்பதற்கான தயாரிப்புகளில் பல ஆண்டுகள் ஈடுபடுகிறது .வாழ்வில் ஒரு அங்கமாக இயங்கும் ஒரு மனித உடல் பற்பல திறன்களை உள்ளடக்கியது தனது உணர்வுகளும் கேட்டல். பார்த்தல் போன்ற செய்திகளும் கொண்ட ஒரு மனிதன் நொடியில் கழுத்தில் சுற்றி இறுக்கப்பட்ட ஒரு கயிறால் சவம் ஆகிப் போகிறான் .
‘மாலு’ என்ற சொல் மலேசியாவில் புழக்கத்திலுள்ள கானகப் பகுதி மக்களின் வழக்குச் சொல். ரப்பர் மரங்களில் இடும் குறுக்குவெட்டினைக் குறிக்கும் . விளைவாகப் பால் சுரக்கும். கழுத்தின் குறுக்காக இடப்பட்ட கயிறின் இறுக்கம் உயிரைப் பறிக்கும். தோற்றப் படிவத்தில் இரண்டும் ஒன்று போன்றவை .தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் கைதிகள் மரணத்தை நெருங்கும் கால இடைவெளி வறண்டது .மிகவும் சம்பிரதாயமான ,பொருளற்ற, கனமான இந்தக் காலம் அவர்களுக்கு கடவுளின் இருத்தலை உணர்த்துமா ?.மரணத்தின் பிடியில் தாங்கள் முழுதும் கட்டுண்ட இத்தருணம் தாங்கள் முன்பு ஈடுபட்ட குற்றம் எவ்வாறு சரி அற்றது என்பதை தெளிவாக்குமா ?. ஆனால் இந்த நிலைமை மாலுவின் முக்கிய பாத்திரமான திருச் செல்வத்திற்கு எத்தகைய அனுபவமாக இருந்திருக்கக்கூடும் ?.
ஆர்வெல் தனது கட்டுரையில் தண்டனை நிறைவேற்றி பொருளுடைய --அதனைநிறைவேற்றும்அதிகாரிகளின் பதட்டத்தையும் விவரிக்கிறார் .உரிய நேரத்தை தாண்டி காலை 8 மணிக்கு மேல் எட்டாவது நிமிடத்தில் கைதி தூக்கிலிடப்படுகிறார் .கைதி ராம் .ராம் என்ற பிரார்த்தனையில் ஈடுபடுவதால் தூக்கிலிடும் அதிகாரி அவருக்கு சில கணங்கள் வாழ்கின்ற சலுகையை அளிக்கிறார் .தூக்குக்கயிறு உறுதியாகவும், இலகுவாகவும் வெண்ணை போன்ற பொருட்களை இட்டு தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும் விளைவாக கைதியின் காலடியில் உள்ள பலகையை உரிய கைப்பிடியினால்கையினால் எடுத்த நொடியில் உடல் விழுகின்றது ..உடல் அப்போது முழுக்க அந்த மனிதனை கைவிடும் செய்தியை தெரிவித்து விடும். அதனை முழுக்க அவன் உணர்ந்துகொண்ட அடுத்த கணம் இருள் நிறைந்தது .மூச்சு அடங்குவது. பொறிகள் செயலிழந்து உணர்வு மறைந்து போகின்றது. இயற்கையாக முதுமையில் நிகழும் மரணம் நிச்சயம் அத்தகையதாக இருக்காது .அது பொறிகளை ஒவ்வொன்றாக அடக்கி வரலாற்றின் பக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக மூடும். உறவுகள் அவனை போற்றுவர். கைதியை பின்தொடரும் நாயொன்று பற்றியும் ஆர்வெல் எழுதுவார். இந்த நாய் எங்கிருந்து இவரை தொடர்ந்து வந்தது என்ற ஆய்வில் அவர் ஈடுபடவில்லை .ஒருவேளை கைதி வாழ்ந்திருந்த இடம் சிறையில் இருந்து சற்று அணுகும் தூரத்தில் இருந்து இருக்கலாம் அல்லது ஒரு அனுமதியின் பெயரில் சிறையின் வெளிப்புறங்களில் அது தங்கியிருக்கும் வண்ணம் விட்டு வந்திருக்கலாம்; .யாராவது நண்பர்களுடன் அது வந்து இருக்கலாம் உரிய தருணத்தில் அது தூக்கு பகுதிக்கு வந்து இயன்ற அளவு போராடுகிறது .தண்டனை குறித்த அறிவு அதற்கு இருக்குமா என்பது விளங்கவில்லை ஒருவேளை பிணத்தை திரும்ப ஒப்படைக்கும் போது அது தற்காலிகமாக மகிழ்ச்சி அடையும்- மரணம் யாவருக்கும் நேர்வது .அதனை எதிர்கொள்ளும் உளவியலை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாம் அதனை மறதியின் வாயிலாக தவிர்க்க எண்ணுகிறோம் -தவிர்க்கிறோம் .பொழுதுபோக்கி மகிழ்கிறோம்.அத்தகைய சலுகை உயர் தண்டனை ஒன்றைப் பெறும் கைதிக்கு இருப்பதில்லை அவனது மரணம் செயற்கையானது .
சுப்ரபாரதிமணியனின் அவரது
எல்லா படைப்புகளையும் போலவே புலம்பெயரும் தொழிலாளர்கள் பற்றியது இது. பிழைப்புக்காக தொழிலாளர்கள் ஊருக்கு ஊர்; குறிப்பாக பெரும் நகரங்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் அவற்றின் இறையாண்மையை பேணும் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் ஆகின்றனர் .இடத்துக்கு இடம் வேறுபடும் பழக்கங்களும் கலாச்சாரமும் வேறு. நவீன மனிதன் இன்றைக்கு இதனை பொருள் தேடும் முயற்சியில் ரசிக நிலையில் புதுமை காணும் நிலையில் பார்க்கின்றான். அயல்நாடுகளுக்குச் சென்று வருவது நடுத்தர வர்க்கத்தின் உறுதியான செயல் திட்டங்களில் ஒன்றாக ஆகிவிட்டது .ஏஜென்சிகள் இதற்கான வாக்குறுதியை அளித்து வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களை புலம்பெயர வைக்கின்றன. மக்கள் தொகையும் அதிகம் பெற்று இந்தியா குறிப்பாக தமிழ்நாடு புலம்பெயர் தொழிலாளர் பட்டியல் குறித்த இடத்தில் உள்ளது எனினும் அடிப்படைவாத அணுகுமுறைகள், மனித உரிமைகளை மதிக்காத சட்டங்களை கொண்ட நாடுகளில் புலம் பெயர்கிறவர்கள் அதுபற்றிய அறிவுடன் இயங்காத போது அபாயங்களுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் .மீள முடியாத இடத்தில் நகரங்களிலும் அந்நிய தேசத்து வனங்களிலோ அவர்கள் ஒளிந்து கொள்ளும் போது குடும்பம் என்னும் மிக ஆதாரமான தங்களது சாராம்சத்தில் இருந்து தகவல் தொடர்பு நிலையிலும் துண்டிக்கப்படுகிறார்கள். இந்தியா போன்ற உலகைப் பரந்த நோக்கில் ஜனநாயக நெறிமுறைகளை மதித்து நடக்கின்ற மக்களும், அதிகார அமைப்பும் உள்ள நாடுகளில் கூட புலம்பெயர் தொழிலாளர்களின் புலம்பெயர் நாடுகளின் சட்டமன்றங்களில் உள்ள சமநிலையின்மையை வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன. குறிப்பான குறிப்பாக அவர்களுக்கான தனித்தன்மை வாய்ந்த சட்டங்களோ உலக மனித உரிமை அமைப்புகளோ -உலகத் தொழிலாளர் அமைப்புகள் தொடர்ச்சியாக உரையாடல் நிகழ்த்த பல முயற்சிகள். கிடையாது .அவர்களுடைய நம்பிக்கை அயலகத் தூதர் -இந்திய வெளியுறவுத்துறை அவர்களுடனான தொடர்பினை மட்டும் சார்ந்தது .உள்ளூர் அமைப்புகள் ,அரசியல்வாதிகள் ,அரசுகள் எவ்வாறு இதற்குரிய நேரத்தை ஒதுக்குகின்றன? எவ்வாறு உள்ளூர் வாசியின் நகர்வில் கவனமாக உள்ளன? என்ற வினாக்களுக்கு விடை தேடும் போது நமக்கு ஏற்படுவது அயர்ச்சி.
சுப்ரபாரதிமணியனின் நாவலான மாலு இந்தக் களத்தில்தான் பயணிக்கிறது திருச்செல்வன் விக்னேஷ் ,கிருஷ்ணசுவாமி என நீண்ட பட்டியலில் அடங்கும் இளைஞர்கள் மலேசியாவிற்கு பணிநிமித்தம் குடிபெயர்ந்து எவ்வாறு வெவ்வேறு குற்றங்களில் மாட்டித் தவிக்கிறார்கள் என்பது நாவலின் சித்தரிப்பு திருச்செல்வம் -நண்பர்கள்-அவர்களும், நண்பர்கள் 7 பேரும் தாங்கள் தங்கியிருந்த வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கும் மலேசியர்கள் சிலர் சட்டவிரோதமாக அபின் வைத்திருந்த காரணத்தால் சேர்த்து கைது செய்யப்படுகிறார்கள். போதிய விசாரணையின் பின்னர் 8 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது .திருச்செல்வன் தந்தையான அப்பாசாமி ஒரு ஏழை நெசவாளி .இவ்வாறு தன்னுடைய மகனை மீட்பதற்காக அவர் ஒவ்வொரு அரசு நிறுவன வளாகத்திலும் ஏறி இறங்குகிறார் அலைகிறார் எனும் அவரது தரப்பில் ஆழ்ந்தஉரையாடலைஇந்த நாவல் வைத்திருக்கிறது .உடன் மலேசிய வரலாற்றை உருவாக்கியதில் தமிழர்களுடைய பங்களிப்பும், தமிழ் வாழ்வியல் குறித்த பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆங்காங்கே பொருத்தமான இடங்களில் சொல்கிறார் .அவரது மலேசிய எழுத்தாளர்களுக்கான நீண்ட தொடர்பு ,மேற்கொள்ளும் மலேசிய பயணங்கள் இத்தகு புனைவை எழுதத் துணைநிற்கின்றன. எந்த நேரத்திலும் தூக்கு மேடைக்குத் தள்ளப்பட்டு முகத்தை கருப்புத் துணியால் மூடி, நெறி படும் குரல்வளைகள் மரணத்தையே நல்கும் .ஆனால் தனது மகன் மலேசிய பின்னணியில்- மலேசிய மண்ணில் இருந்து கொண்டு பொருளீட்டி அனுப்புவான் ,தருவான் என்ற பெருமையுடன் விளங்கும் அப்பாசாமி அல்லது அவர் மனைவி ஆகியோர் பொய் குற்ற வழக்கில் அவன் உயிர் புலனாகாத ஒரு தேசத்தில் பிரியக் கூடும் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இது யதார்த்தம். இந்த பதட்டத்தை எதிர்கொள்ளும் துணிவு கூட அப்பாசாமிஇடமில்லை .அவரால் நிம்மதியாக, குழப்பமின்றி ஒரு கோப்பை மதுவை கூட அருந்தும் தெளிவும் இல்லை. தன்னுடைய சாவையாவது பணயமாக வைக்கலாமா என்ற பொறி கூட அவருள் தோன்றுவதில்லை .கதறி அழலாமா வேண்டாமா என்பதில் கூட குழப்பம். இத்தகைய மிகத் தாழ்ந்த சமூக நிலையில் புலன்கள் கூறும் நல்லுணர்வு கூட புரியாமல் வாழ்கின்ற மாந்தர் பொருளைத் தேடிக் கொண்டால் ஒழிய பிழைப்பு இல்லை .அவர்கள் கையறு நிலை வலியது .இத்தகைய அளவுகள் இருந்தபோதும் பொதுப்புத்தியில் வலியுறுத்தப்படும் ஒரு மலேசிய ‘ரிங்கிட்’ மதிப்பு இந்திய ரூபாய் விட அதிகமானது அதன் நிழலில் மேற்கண்ட சோகங்கள் ஒதுங்கும் ..இந்நாவல் யதார்த்த நாவல் ..மொழிபெயர்ப்பு அவ்வளவாக சிரமம் இல்லை ஏனென்றால் பெருமளவு மலேசிய சொல்லாடல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஓரிரு இடங்களில் தாவரங்களின் பெயர்களை மட்டும் தேட வேண்டியிருந்தது ஆங்கில மொழிபெயர்ப்பு இயல்பாகவே செய்ய முடிகிறது.
இந்த நாவல் ஹிந்தியிலும் வெளியாகி இருக்கிறது .உலகம் உண்மைகளின் களம் என்று சிறப்புற வாழும் மனிதர் பலர். எனினும் மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை ,இப்போது ஹாங்காங் ,காஷ்மீர் என்று குடியேற்றங்களால் அவதியுறும் நாடுகளும் இவ்வுலகிலேயே அடங்கியுள்ளன. தனி மனிதன் ஒருவனின் ஒவ்வொரு நாளும் ‘நானு’ம் தொடர்பில்லாமல் ஏது?
----ஆர். பாலகிருஷ்ணன்