சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

புதன், 13 ஜனவரி, 2021

சிறுகதை அடைபட்ட கதவு சுப்ரபாரதிமணியன் பாஷோ அவனின் இரட்டை சக்கர வாகனத்தில் சீரான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான் .குமரன் நினைவகம் அருகில் அதை நிறுத்திவிட்டு வானத்தைப் பார்த்தான். வானம் நீல மயமாக நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. நட்சத்திரங்களை எண்ணுகிற பாட்டி செத்துப் போய் ரொம்ப வருடம் ஆகிவிட்டது அவனுக்கும் அப்படித்தான் எப்பவாவது நட்சத்திரங்களை எண்ண வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது .ஆனால் அதெல்லாம் பல சமயங்களில் முடிந்ததில்லை பெரும்பாலும் வீட்டிற்குள் தான் அடைந்திருக்க வேண்டும் ஊரில் இருக்கிற போதெல்லாம் ஊரடங்கு சட்டம் துப்பாக்கி சத்தம் இல்லாவிட்டால் பசி இதன் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டும் இப்போது இங்கே வானம் பார்க்கவும் வானத்தில் நட்சத்திரங்களை பார்க்கவும் நிலவு அவ்வப்போது வந்து போவதை பார்க்கவும் அவனுக்கு ஏதுவாக இருக்கிறது .அதுதான் அவன் அவ்வப்போது இரட்டை சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு நல்ல நடுராத்திரியில் வீதிகளில் உலா வருவான். அவன் முன்னால் நின்றிருந்த காவல்துறைக்காரன் தன்னுடைய வாகனத்தை கை காட்டி நிறுத்தினான் என்ன இங்க நின்னு நட்சத்திரம் பாக்கறன் நட்சத்திரம் என்ன ..சினிமா நட்சத்திரம் இல்ல மேல தமிழ் நல்லா வருது போல இருக்கு வருது இங்கே வந்து எத்தனை வருஷம் ஆச்சு மூணு வருஷம் ஆச்சு என்ன வேலை செய்ற எல்லாரும் பண்ற தான் பனியன் கம்பெனி ..ஒரு சின்ன கடை வைத்து இருக்கேன் சரி சரி உன்னுடைய விஷா எல்லாம் முடிஞ்சிடுச்சா அதான் இருக்கு டூரிஸ்ட் விசா . ஆமா சரி வேற.. இந்த வண்டி ,, என்னோடது உனக்கு எல்லாம் வண்டி தர்ராங்களா தந்திருக்காங்க ஆதார் கார்டு வாங்கிட்டேன் அட.. பேன்நம்பர் எல்லாம் வச்சிருக்கியா பேன்நம்பர் இல்லாம எப்படி வியாபாரம் பண்ண முடியும் . காசு குடுத்தா எல்லாம் கெடைக்கும். அது ஆப்ரிக்க்காரனோ ஆஸ்திரேலியாக்காரனோ.. சரி வேற .என்ன இது யாருடைய படம் தெரியுமா தெரியும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்காக உங்க ஊருல செத்துப்போனவர் அங்க சுதந்திரப் போராட்டம் எல்லாம் இருக்கா எங்க நைஜீரியாவில் இந்த மாதிரி போராட்டங்கள் வெடிக்கும் .. துப்பாக்கி சூடு இருக்கும் .ராணுவ மறைந்திருக்கும் ..எல்லாத்தியுமே ஒரு வன்முறை இருக்கும் எங்க வீட்டு பெண்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்க முடியாது .உங்க ஊரு ரொம்ப நல்லா தான் இருக்கா சேரி சேரி .சரி டிரைவிங் லைசென்ஸ் வச்சிருக்கியா வச்சிருக்கேன். யார் பெயரில் என் பெயர் தாங்க பாக்கணுமாம அதப் பாத்தா என்ன .எல்லாம்.. அப்புறம் இந்த இன்ஷூரன்ஸ் ரெடி பண்ணி இருக்கியா பண்ணி இருக்கேன் சரி நீ எதுக்கும் ஸ்டேஷன் வந்துட்டு போ. பக்கம் தானே வா போலாம் எதுக்குங்க ஸ்டேஷன் என் வண்டி வண்டிக்கு லைசென்ஸ் இருக்குன்னு சொல்றேன் அப்புறம் எதுக்கு கேக்குறீங்க இல்ல எதுக்கும் வந்துட்டு போங்க பர்சிலிருந்து 200 ரூபாய் எடுத்து அந்த காவல்துறை காரனிடம் தந்தான் பாஷோ சரி சரி சீக்கிரம் போ . திரியாதே . சந்தேக கேஸ் போட்டுருவாங்க வண்டியை முடுக்க ஆரம்பித்தான் பாஷோ அந்த காவல்துறைக்காரன் வாங்கி கொண்ட பணத்தை பார்த்தபடி பேண்ட் பாக்கெட்டில் சொருகினான் . சரி சரி சீக்கிரம் போ செக்கிங்க வந்தா சிரமம் .கண்டிப்பா பண்ணுவாங்க அதுக்கு நீ கண்டுக்காத ..எல்லாம் கம்மி தான் பாஷோ வண்டியை முடுக்கிக் கொண்டே மெல்ல அண்ணா பெரியார் சிலைகளை கடந்து வந்தான். இன்னும் கொஞ்ச நேரம் இந்த நடுஇரவில் நட்சத்திரங்களும் வானமும் பார்த்தபடி வண்டி ஓட்டிச் செல்லலாம் என்று அவன் நினைத்திருந்தான் நைஜீரியாவில் அவன் காதலி ரேனா இப்படித்தான் நடுஇரவில் வானமும் நட்சத்திரங்களும் பார்க்க ஆசைபடுவாள். நமக்கு எல்லாம் அது வாழ்க்கையில் கெடைக்கலே நீ இந்தியாவில் இருக்க உனக்கு அதெல்லாம் வாச்சு இருக்கா என்று பலமுறை கேட்டு இருக்கிறாள். அங்க இது மாதிரி இல்ல ..நல்லா இருக்கும் என்று அவன் சொல்லியிருக்கிறான் அப்போ நான் இந்தியா வரணும் உங்களுடன் வானமும் நிலமும் நட்சத்திரங்களும் பார்க்கிற மாதிரி படுத்துக்கிடக்கணூம் ..... ரோட்டில் படுத்து கிடக்க வேண்டும் , ரோட்லே திரியணும் அங்க முடியும் எப்ப வர்ற நீ கல்யாணம் பண்ணிட்டு கூட்டிப்போக ஓகே ஓகே நீ அதுவரை காத்திரு நாலைந்து தெருக்கள் என்று அலைந்து வானமும் வெறிச்சென்ற சாலைகளும் பார்த்தான் .அவன் குமரன் அடிபட்ட இடத்திற்கு வந்தபோது அங்கு முன்னால் இருந்த இரண்டு காவல்துறையினர் அவனை கை நீட்டி விரித்து நிற்கவைத்தனர் நான் இப்போதுதான் ஒரு காவல்துறையினரைக் கடந்து வந்திருக்கிறோம் என்று சொன்னால் அவர்கள் நம்பப் போகிறார்களா என்ற சந்தேகம் வந்தது. தன் காதலியை கூட்டிக்கொண்டு வந்து வானமும் நட்சத்திரங்களும் பார்க்க சுதந்திரமாக போக முடியும் .படுத்துக் கிடந்து கொண்டு வானத்தை ரசிக்க முடியும் என்று சட்டெனத் தோன்றவில்லை .வருத்தம் மேலெழும்பியது அவனுக்கு அவன் தன் பர்சில் இன்னும் பணம் மிச்சம் இருக்கிறதா என்று தேட வேண்டும் என்று நினைத்தான் பிச்சிப்பூ : பொன்னீலன் நாவல் :சுப்ரபாரதிமணியன் பேச்சு வழக்கு இயல்பிலேயே நாவல் முழுக்க சொல்லப்பட்டிருப்பது சிலருக்குத் தேன். சிலருக்கு பாகற்காய் பொறியல் . அதுவும் கன்யாகுமரி பேச்சு வழக்கில். நீண்ட கால சரித்திரத்தை உள்ளடக்கிய நாவல் 76 பக்கங்கள் தான்.. பிரிட்டிஸ் தர்மம், மனுதர்மத்திற்கிடையே மக்கள் அல்லல்படும் காலம் முதல் சர்க்கார் உத்யோகம் உயர்சாதிகளுக்கும் மதம் மாறினவர்களுக்குமட்டுமே என்றிருந்த காலம் முதல் இந்நாவல் தொடங்கி கேரளாவின் வைக்கம் போராட்டத்திற்கு பின்னான பெண்களின் எழுச்சியோடு முடிகிறது. கட்டுமுட்டான மட்டச்சாதி மனுஷர் உச்சச் சாதி மனுஷர் உட்காரக்கூடிய நாற்காலியில் உட்காரும் வழக்கறிஞர் நீதிபதி காலமும் வருகிறது.மெல்ல மெல்ல சமூக சீர்திருத்தங்கள் மீட் அய்யர், வைகுண்டர் என நீள்கிறதும் பிச்சிப்பூ என்ற பெண் பங்கு பெறும் பெண்களீன் எழுச்சியும் முக்கியமானது. இவ்வளவு நீண்ட சரித்திரத்தை மெக நாவல் கூட ஆக்கியிருக்கலாம். ஆனால் எல்லாவற்றிலும் சுருக்கம். சிறு சிறு அத்தியாயங்கள் . படிக்க சுவாரஸ்யமும் இயல்பும் தருகிறது. ( ரூ70, என்சிபிஎச், சென்னை )