சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

வெள்ளி, 15 ஜனவரி, 2021

முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன இப்போது.இன்று சிறுகதையின் வழிகள் மேலும் முன்னகர்ந்துவிட்டன ஜெயமோகன் “”சுப்ரபாரதி மணியனின் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்( ஜெயமோகன் வலைத்தளம் 13/1/21 ) அன்புள்ள ஜெ. முன்பொரு முறை இப்படி எழுதியிருந்தீர்கள் “”சுப்ரபாரதி மணியனின் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் என்னும் கதை அன்னம்விடுதூது என்னும் சிற்றிதழில் வெளிவந்தபோது நான் அறுபது பேருக்கு அக்கதையை வாசிக்கச்சொல்லி கடிதங்கள் எழுதி தபாலில் சேர்த்தேன்.”” அந்த அளவுக்கு உங்களை கவர்ந்த கதை அது.அதை மலையாளத்தில் மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். என்ன சுவாரஸ்யம் என்றால்சுஜாதா இந்த கதையை கலைவடிவம் கைகூடாத கதை என எழுதியிருக்கிறார் சுஜாதாவுக்கு சுப்ரபாரதிமணியன் மீது மரியாதை உண்டு. அவரது மற்ற கதைகளை பாராட்டி விட்டு, ” ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ” என்ற கதை , சிறுகதையே அல்ல என அதை மட்டும் நிராகரிக்கிறார். ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ” என்ற கருவுக்கு சம்பந்தமற்ற தகவல்கள் ஏராளமாக இருப்பதாக சொல்கிறார். மற்றகதைகளில் ஏராளமான சம்பவங்கள் இருப்பினும் அது கதைக்கு தேவைப்படுவதையும் சொல்கிறார் ஆனால் அந்த கதை மட்டுமல்ல.. உங்களது மொழி பெயர்ப்புமேகூட பரவலான வரவேற்பை பெற்றது சுஜாதாவின் விமர்சனங்களுக்கு ஒரு மரியாதை உண்டு என்ற நிலையில் , அவரது விமர்சனங்கள் சுவாரஸ்யம் என்பதை அளவுகோலாக கொண்டவை என நினைக்கிறீர்களா ? அன்புடன் பிச்சைக்காரன் அன்புள்ள பிச்சைக்காரன், ஒவ்வொரு காலகட்டத்திலும் கதைகளுக்குச் சில வடிவச்சிறப்புகள் உருவகிக்கப்படுகின்றன. அவையே ’சரியான’ வடிவங்கள் என்று நம்பப்படுகின்றன. அவற்றை வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதைவிட விமர்சகர்கள் அவற்றில் உறுதியாக இருக்கிறார்கள் ஆனால் புதியபடைப்பு அந்த எல்லையை மீறிச்செல்லும். புதியதாக வந்து நிற்கும். உள்ளடக்கத்தின் புதுமையை ஏற்பவர்களால்கூட வடிவத்தின் புதுமையை ஏற்றுக்கொள்ள முடியாமல்போவதை நாம் அடிக்கடிக் காண்கிறோம் இருவகையினர் அவ்வாறு இறுகிவிடுகிறார்கள். ஒன்று, வாசிப்பை ஒரு வழக்கமாக ஆக்கிக்கொண்டவர்கள். எளிமையான வாசகர்கள். இரண்டு, ஒரு வடிவத்தை வலியுறுத்த முற்பட்டு காலப்போகில் அதில் மனம் அமைந்துவிட்டவர்கள் தொடக்க காலத்தில் தமிழில் சிறுகதைவடிவம் என்பது அரிதாகவே எட்டப்பட்டது. உதாரணம் தி.ஜ.ர, பி.எஸ்.ராமையா என்னும் சிறுகதை ஆசிரியர்கள். அவர்கள் இருவரையும் தமிழின் மாபெரும் சிறுகதையாசிரியர்கள் என சி.சு.செல்லப்பா நம்பினார். அப்படி திரும்பத்திரும்ப எழுதினார். புதிய கதைக்கருக்களை அவர்கள் கையாளவும் செய்தனர். ஆனால் அவர்கள் கதைகள் எவற்றிலுமே சிறுகதையின் வடிவம் திரளவில்லை. அவை வெறுமே கதைகளாக, நிகழ்ச்சிகூற்றுகளாகவே நிலைகொண்டன அதேதான் அழகிரிசாமிக்கும். தமிழிலக்கியத்தில் அவர் ஒரு மேதை. நல்ல கதைகளில் அவர் மிக இயல்பாக அடைந்திருக்கும் உச்சம் மிக அரிதானது. ஆனால் அவருடைய பெரும்பாலான கதைகள் சிறுகதைகளாக ஆகவில்லை. வாசகனுக்குரிய இடைவெளி இல்லாமல் அவரே சொல்லி முடித்துவிடுகிறார். கதைகள் முடியாமல் முடியும் வடிவம் எட்டப்படாமல் விரிவாகச் சொல்லி நிறுத்தப்பட்டவையாக உள்ளன. ஆகவே எழுபதுகளில் சுந்தர ராமசாமி போன்ற விமர்சகர்கள் கதைகளின் வடிவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். சுந்தர ராமசாமி அவருடைய கட்டுரை ஒன்றில் [ கலைகள் கதைகள் சிறுகதைகள். ஆ.மாதவன் கதைகளுக்கான முன்னுரையாக வெளிவந்தது] சிறுகதை வடிவத்தை வலியுறுத்தி அதை மட்டுமே வைத்து தமிழ்ச்சிறுகதைகளை அளவிடுவதைக் காணலாம். இலக்கைச் சென்றடையாமல் சிறகுகளை கோதுவதிலேயே கதையைச் செலவிடுபவர் என வண்ணதாசனையும், சரியாக இலக்கைச் சென்றடைபவர் என்று அசோகமித்திரனையும் மதிப்பிடுகிறார் சுந்தர ராமசாமி சிறுகதைவடிவை மிக ஆவேசமாக வலியுறுத்திவந்தார். தமிழ்ச்சூழலில் அவர் ஆழமான செல்வாக்கையும் செலுத்தினார். சிறுகதை என்பது வேகமான நேரடியான தொடக்கம், வீசப்பட்ட அம்பு இலக்கை நோக்கிச் செல்வதுபோன்ற வடிவம், எதிர்பாராத முடிச்சு அல்லது மேலும் கதையை ஊகிக்கவிடும் முடிவு ஆகியவை கொண்டதாக இருக்கவேண்டும் என்பது அவருடைய கருத்து. எம்.கங்காதரன் சிறுகதைக்குள் உள்விவாதங்கள், துணைக்கதை விரிவுகள், அது சென்றடையவேண்டிய இலக்குடன் தொடர்பற்ற செய்திகள் ஆகியவை இருக்கலாகாது என்று அவர் கருதினார். சிறுகதை யதார்த்தவாதத்தின் கலை என்றும் அதில் அலங்காரம், அணிகள் ஆகியவற்றுக்கு இடமில்லை என்றும் எண்ணம்கொண்டிருந்தார். ஆகவே லா.ச.ராவின் கதைகளையும் அவர் ஏற்கவில்லை. ஆனால் சிறுகதைவடிவம் சரியாக எட்டப்பட்டதுமே ஒருபக்கம் அதன்மேல் சலிப்பு வரத்தொடங்கியது. வேறுவகையான கதைகள் எழுதப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்ட கதைகளில் ஒன்று ‘ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்’ அது கோழிப்போர், கோழிக்கறி ஆகியவற்றைப்பற்றிய செய்திகளாகவே சென்று அப்படியே முடிகிறது. கடைசிவரி மட்டும்தான் கதை. அந்தவகையான ‘வடிவமீறல்’ அன்று ஏற்கப்படவில்லை. நான் அதை சிறுகதைவடிவின் புதிய நகர்வாக கண்டேன். மாறாக, சுந்தர ராமசாமி அதை முந்தையவடிவாக, அதாவது தி.ஜ.ர அல்லது பி.எஸ்.ராமையா காலத்துக் கதையாக கண்டார். சுஜாதா சிறுகதையின் செவ்வியல்வடிவில் நம்பிக்கை கொண்டவர். அவர் சுந்தர ராமசாமியை பலவகையிலும் பின்தொடர்ந்தவர் ஆகவே சுஜாதாவுக்கு அக்கதை வடிவப்பிழையாக, தேவையில்லாமல் தகவல்களை சொல்லிக்குவிப்பதாகத் தோன்றியது. நான் அக்கதையை முன்வைத்து சிறுகதையின் புதிய சாத்தியங்களைப்பற்றி அப்போது பேசினேன் என் எண்ணங்கள் சரிதானா என்று அறிய அக்கதையை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து முக்கியமான கேரள இலக்கியவிமர்சகரான எம்.கங்காதரனுக்கு அனுப்பினேன். கங்காதரன் எம்.கோவிந்தனின் மாணவர், சுந்தர ராமசாமிக்கும் நண்பர். கங்காதரன் அது ஒரு நல்ல கதை என நினைத்தார். அவர் அப்போது தொடங்கிய ஜயகேரளம் என்னும் சிற்றிதழில் வெளியிட்டார். முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன இப்போது.இன்று சிறுகதையின் வழிகள் மேலும் முன்னகர்ந்துவிட்டன