சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 15 ஜனவரி, 2021

முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன இப்போது.இன்று சிறுகதையின் வழிகள் மேலும் முன்னகர்ந்துவிட்டன ஜெயமோகன் “”சுப்ரபாரதி மணியனின் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்( ஜெயமோகன் வலைத்தளம் 13/1/21 ) அன்புள்ள ஜெ. முன்பொரு முறை இப்படி எழுதியிருந்தீர்கள் “”சுப்ரபாரதி மணியனின் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் என்னும் கதை அன்னம்விடுதூது என்னும் சிற்றிதழில் வெளிவந்தபோது நான் அறுபது பேருக்கு அக்கதையை வாசிக்கச்சொல்லி கடிதங்கள் எழுதி தபாலில் சேர்த்தேன்.”” அந்த அளவுக்கு உங்களை கவர்ந்த கதை அது.அதை மலையாளத்தில் மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். என்ன சுவாரஸ்யம் என்றால்சுஜாதா இந்த கதையை கலைவடிவம் கைகூடாத கதை என எழுதியிருக்கிறார் சுஜாதாவுக்கு சுப்ரபாரதிமணியன் மீது மரியாதை உண்டு. அவரது மற்ற கதைகளை பாராட்டி விட்டு, ” ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ” என்ற கதை , சிறுகதையே அல்ல என அதை மட்டும் நிராகரிக்கிறார். ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ” என்ற கருவுக்கு சம்பந்தமற்ற தகவல்கள் ஏராளமாக இருப்பதாக சொல்கிறார். மற்றகதைகளில் ஏராளமான சம்பவங்கள் இருப்பினும் அது கதைக்கு தேவைப்படுவதையும் சொல்கிறார் ஆனால் அந்த கதை மட்டுமல்ல.. உங்களது மொழி பெயர்ப்புமேகூட பரவலான வரவேற்பை பெற்றது சுஜாதாவின் விமர்சனங்களுக்கு ஒரு மரியாதை உண்டு என்ற நிலையில் , அவரது விமர்சனங்கள் சுவாரஸ்யம் என்பதை அளவுகோலாக கொண்டவை என நினைக்கிறீர்களா ? அன்புடன் பிச்சைக்காரன் அன்புள்ள பிச்சைக்காரன், ஒவ்வொரு காலகட்டத்திலும் கதைகளுக்குச் சில வடிவச்சிறப்புகள் உருவகிக்கப்படுகின்றன. அவையே ’சரியான’ வடிவங்கள் என்று நம்பப்படுகின்றன. அவற்றை வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதைவிட விமர்சகர்கள் அவற்றில் உறுதியாக இருக்கிறார்கள் ஆனால் புதியபடைப்பு அந்த எல்லையை மீறிச்செல்லும். புதியதாக வந்து நிற்கும். உள்ளடக்கத்தின் புதுமையை ஏற்பவர்களால்கூட வடிவத்தின் புதுமையை ஏற்றுக்கொள்ள முடியாமல்போவதை நாம் அடிக்கடிக் காண்கிறோம் இருவகையினர் அவ்வாறு இறுகிவிடுகிறார்கள். ஒன்று, வாசிப்பை ஒரு வழக்கமாக ஆக்கிக்கொண்டவர்கள். எளிமையான வாசகர்கள். இரண்டு, ஒரு வடிவத்தை வலியுறுத்த முற்பட்டு காலப்போகில் அதில் மனம் அமைந்துவிட்டவர்கள் தொடக்க காலத்தில் தமிழில் சிறுகதைவடிவம் என்பது அரிதாகவே எட்டப்பட்டது. உதாரணம் தி.ஜ.ர, பி.எஸ்.ராமையா என்னும் சிறுகதை ஆசிரியர்கள். அவர்கள் இருவரையும் தமிழின் மாபெரும் சிறுகதையாசிரியர்கள் என சி.சு.செல்லப்பா நம்பினார். அப்படி திரும்பத்திரும்ப எழுதினார். புதிய கதைக்கருக்களை அவர்கள் கையாளவும் செய்தனர். ஆனால் அவர்கள் கதைகள் எவற்றிலுமே சிறுகதையின் வடிவம் திரளவில்லை. அவை வெறுமே கதைகளாக, நிகழ்ச்சிகூற்றுகளாகவே நிலைகொண்டன அதேதான் அழகிரிசாமிக்கும். தமிழிலக்கியத்தில் அவர் ஒரு மேதை. நல்ல கதைகளில் அவர் மிக இயல்பாக அடைந்திருக்கும் உச்சம் மிக அரிதானது. ஆனால் அவருடைய பெரும்பாலான கதைகள் சிறுகதைகளாக ஆகவில்லை. வாசகனுக்குரிய இடைவெளி இல்லாமல் அவரே சொல்லி முடித்துவிடுகிறார். கதைகள் முடியாமல் முடியும் வடிவம் எட்டப்படாமல் விரிவாகச் சொல்லி நிறுத்தப்பட்டவையாக உள்ளன. ஆகவே எழுபதுகளில் சுந்தர ராமசாமி போன்ற விமர்சகர்கள் கதைகளின் வடிவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். சுந்தர ராமசாமி அவருடைய கட்டுரை ஒன்றில் [ கலைகள் கதைகள் சிறுகதைகள். ஆ.மாதவன் கதைகளுக்கான முன்னுரையாக வெளிவந்தது] சிறுகதை வடிவத்தை வலியுறுத்தி அதை மட்டுமே வைத்து தமிழ்ச்சிறுகதைகளை அளவிடுவதைக் காணலாம். இலக்கைச் சென்றடையாமல் சிறகுகளை கோதுவதிலேயே கதையைச் செலவிடுபவர் என வண்ணதாசனையும், சரியாக இலக்கைச் சென்றடைபவர் என்று அசோகமித்திரனையும் மதிப்பிடுகிறார் சுந்தர ராமசாமி சிறுகதைவடிவை மிக ஆவேசமாக வலியுறுத்திவந்தார். தமிழ்ச்சூழலில் அவர் ஆழமான செல்வாக்கையும் செலுத்தினார். சிறுகதை என்பது வேகமான நேரடியான தொடக்கம், வீசப்பட்ட அம்பு இலக்கை நோக்கிச் செல்வதுபோன்ற வடிவம், எதிர்பாராத முடிச்சு அல்லது மேலும் கதையை ஊகிக்கவிடும் முடிவு ஆகியவை கொண்டதாக இருக்கவேண்டும் என்பது அவருடைய கருத்து. எம்.கங்காதரன் சிறுகதைக்குள் உள்விவாதங்கள், துணைக்கதை விரிவுகள், அது சென்றடையவேண்டிய இலக்குடன் தொடர்பற்ற செய்திகள் ஆகியவை இருக்கலாகாது என்று அவர் கருதினார். சிறுகதை யதார்த்தவாதத்தின் கலை என்றும் அதில் அலங்காரம், அணிகள் ஆகியவற்றுக்கு இடமில்லை என்றும் எண்ணம்கொண்டிருந்தார். ஆகவே லா.ச.ராவின் கதைகளையும் அவர் ஏற்கவில்லை. ஆனால் சிறுகதைவடிவம் சரியாக எட்டப்பட்டதுமே ஒருபக்கம் அதன்மேல் சலிப்பு வரத்தொடங்கியது. வேறுவகையான கதைகள் எழுதப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்ட கதைகளில் ஒன்று ‘ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்’ அது கோழிப்போர், கோழிக்கறி ஆகியவற்றைப்பற்றிய செய்திகளாகவே சென்று அப்படியே முடிகிறது. கடைசிவரி மட்டும்தான் கதை. அந்தவகையான ‘வடிவமீறல்’ அன்று ஏற்கப்படவில்லை. நான் அதை சிறுகதைவடிவின் புதிய நகர்வாக கண்டேன். மாறாக, சுந்தர ராமசாமி அதை முந்தையவடிவாக, அதாவது தி.ஜ.ர அல்லது பி.எஸ்.ராமையா காலத்துக் கதையாக கண்டார். சுஜாதா சிறுகதையின் செவ்வியல்வடிவில் நம்பிக்கை கொண்டவர். அவர் சுந்தர ராமசாமியை பலவகையிலும் பின்தொடர்ந்தவர் ஆகவே சுஜாதாவுக்கு அக்கதை வடிவப்பிழையாக, தேவையில்லாமல் தகவல்களை சொல்லிக்குவிப்பதாகத் தோன்றியது. நான் அக்கதையை முன்வைத்து சிறுகதையின் புதிய சாத்தியங்களைப்பற்றி அப்போது பேசினேன் என் எண்ணங்கள் சரிதானா என்று அறிய அக்கதையை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து முக்கியமான கேரள இலக்கியவிமர்சகரான எம்.கங்காதரனுக்கு அனுப்பினேன். கங்காதரன் எம்.கோவிந்தனின் மாணவர், சுந்தர ராமசாமிக்கும் நண்பர். கங்காதரன் அது ஒரு நல்ல கதை என நினைத்தார். அவர் அப்போது தொடங்கிய ஜயகேரளம் என்னும் சிற்றிதழில் வெளியிட்டார். முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன இப்போது.இன்று சிறுகதையின் வழிகள் மேலும் முன்னகர்ந்துவிட்டன

புதன், 13 ஜனவரி, 2021

கனவு வெளியீடுகள். * மாயாறு – இரு நெடுங்கவிதைகள் ( சுப்ரபாரதிமணியன் ) ரூ 75 * புலி – மொழிபெயர்ப்புகள். ( சுப்ரபாரதிமணியன் ) ரூ75 * திருப்பூரும் கொரானாவும் – ( யுவராஜ் சம்பத் ) ரூ 100 * எனது முகவரி –மதுராந்தகன் கவிதைகள் ரூ 75 * எச்சரிக்கை செய்யும் பூமி- சிதம்பரம் ரவிச்சந்திரன் சுற்றுச்சூழல்; கட்டுரைகள் ரூ150 * பதினோழு வயதில் –சாக்கோ சிறுகதைகள் ரூ 150 * பால் டம்ளர் – 21தெலுங்கு சிறுகதைகள் ரூ150 : மொழிபெயர்ப்பு : ராஜி ரகுநாதன் * விழிகள் வீசிய வலைகள் –நாமக்கல் நாத கட்டுரைகள் ரூ100 * சேவ் -25 படிக்கற்களும் பூங்காக்களும் நட்சத்திரங்களும்- ரூ 100 * முத்தழகு கவியரசனின் பரிதவிப்பு நாவல் ரூ 125 * பிளிறல்- சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் ரூ 100 * வேலியோரத்து வெள்ளை மலர்கள் – க. ரத்னம் ரூ 75 * பாலில் சர்க்கரை பழுதாகலாமோ- ப.க. பொன்னுசாமி கட்டுரைகள் ரூ80 * நவீனத்துவமும் மார்க்சீயமும் – பி ஆர் ராமானுஜம் ரூ120 * பொய் பேசும் தேசம் – பானுமதி பாஸ்கோ கட்டுரைகள் ரூ150 * தீபனின் கவிதைத் தொகுதி ” சமூகத்தின் அரசியல் பொய்கள் – ரூ 75 விற்பனைக்கு: ** காரிகாவனம் தொகுப்பு : சுப்ரபாரதிமணீயன் ரூ 180 – *ஓ.செகந்திராபாத் : சுப்ரபாரதிமணீயன் ரூ 70 * சுப்ரபாரதிமணீயன் கதைகள் 1 ம்பாகம் , 2ம் பாகம் ரூ1000., ரூ 500- * கனவு தொகுப்பு காவ்யா ரூ350 , தனிஇதழ் தொகுப்பு ரூ 500 *சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள் டிஸ்கவரி ரூ350 கனவில் கிடைக்கும் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் * மற்றும் சிலர் 1987 * சுடுமணல் 1990 ( மலையாளத்திலும் வெளியாகி உள்ளது ) * சாயத்திரை 1998 ( சிறந்த நாவலுக்கான தமிழ அரசு பரிசு பெற்றது, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், கன்னடம், இந்தி , வங்காள மொழிகளில் வெளியாகியிருக்கிறது ) * பிணங்களின் முகங்கள் 2003 ( கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த நாவல் பரிசு பெற்றது.ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) * சமையலறைக் கலயங்கள் 2005 -ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) * தேனீர் இடைவேளை 2006 ( ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளது ) * ஓடும் நதி 2007 ( என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற விருது பெற்றது) * நீர்த்துளி 2011 ( ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது சிறந்த நாவலுக்கு ) * சப்பரம் ( இந்தியிலும், மலையாளத்திலும் வெளிவந்துள்ளது ) * மாலு ( இந்தியிலும், ஆங்கிலத்திலும் , மலையாளத்திலும் ) * நைரா ( உயிர்மை ) * தறிநாடா ( என்சிபிஎச்) * புத்துமண் ( உயிர்மை ) * கோமணம் ( முன்னேற்றப் பதிப்பகம், கிழக்கு ) மலையாளத்திலும் வெளிவந்துள்ளது * கடவுச்சீட்டு (முன்னேற்றப் பதிப்பகம். , பழனியப்பா ) * ரேகை ( பொன்னுலகம் ,திருப்பூர் )
கடற்கரையில்…. மலையாளச் சிறுகதைகள் தமிழில்: பா. ஆனந்தகுமார் ---சுப்ரபாரதிமணியன் மலையாளச் சிறுகதைகளுக்கு 125 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.மலையாள உலகில் இதையொட்டி சிறந்த 125 சிறுகதைகள் என்ற வெவ்வேறு பட்டியல்களோடு பல புத்தகங்கள் வந்து விட்டன. மலையாள இலக்கிய உலகில் வெங்கையில் குன்ஷிராமன் நாயர் என்ற பத்திரிக்கையாளர் 1891 இல் எழுதிய நகைச்சுவை கதை ஒன்று முதல் கதையாக கணிக்கப்படுகிறது கெ.ஏ சுகுமாரன் மலையாள இலக்கியத்தின் முதல்வர் என்ற பாராட்டுகளோடு ஜனங்களிடத்தில் மின்னலிட்டவர் . கேலி சித்திரம் உத்வேகம் நிறைந்த வசனம் தொடர்கள், காதல் ,ஆபாசம் என்ற கலவையுடன் கொடுத்தார். அவர் கதைகள் சுவாரஸ்யத்தளத்துடன் விளங்கின மலையாளத்தில் ஆரம்ப காலகட்டத்தில் கெ.சுகுமாரன், மூர்க்கோந்து குமரன் , அம்பாடி நாராயணன் பொதுவான் போன்றோர் வெளிப்பட்டனர். நிகழ்ச்சிகளை கதையாக்கி சிறப்பு செய்தனர். ஈவி கிருஷ்ணன் பிள்ளை போன்றோர் முன்னிலை வகித்தனர். அடுத்த தளத்திற்கு மலையாள கதைகளை எஸ். ராம வாரியார், எம். ஆர், பட்டத்திரி பாடு போன்றோர் நுழைந்து ரியலிஸம் ரொமாண்டிசிசம் கலந்து தந்த காலகட்டத்தை பிரதிபலித்தனர் 1930- 35 களில் யதார்த்த அடித்தளங்களில் கேரள சமூக வாழ்க்கை ஓரளவு வெளிப்பட்டது. முந்திரில் கோடு ராம வாரியார், பட்டத்திரிபாடு போன்றோர் இதில் முன்னணி வகித்தனர் . பிறகு வந்த எழுத்தாளர்களில் கேசவதேவ், பொற்றெக்காடு, காரூர், தகழி, பஷீர், லலிதாம்பிகார்ஜனா போன்றோர் சமூக தளங்களுக்கான பொருளை எடுத்துக் கொண்டனர், பாட்டாளி வர்க்க இலக்கியம் ஒருபுறம் கோலோச்சியது .பஷீர் சமூக சிக்கல்களையும் வெளிப்படுத்தினார். கலை பிரச்சாரம் அன்றி வேறில்லை . தானும் முற்போக்குக் கருத்துகளீன் பிரசாரகன் என்று கேசவதேவ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் பிரகடனப்படுத்திக் கொண்டனர்.பஷீர் போன்றோரின் சிறுகதைகளில் வறுமை சார்ந்த சித்திரங்கள் நகைச்சுவையாகவும் எள்ளலும் கலந்து ஒரு புதிய பரிமாணம் பெற்றன . தகழியின் கதைகளில் ஒரு புறத்தில் மாபசான் பாதிப்பும்,செகாவின் ஆழமும் கருக்கொண்டு ஆன்மீகம், வறுமை என்று ஊடாடின. .பொன்ன்னம் வர்க்கி, கோவூர் ,கிருஷ்ணன் குட்டி உருபு போன்றோர் மத்தியதர வர்க்க பிரச்சனைகளையும் வாழ்வியலையும் வெளிப்படுத்தினர். இன்னொருபுறம் கேரளா வாழ்வியலை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தின. அடுத்ததாய் அந்த புதிய தலைமுறை காலத்தின் மாற்றத்தை பிரதிபலிப்பைக் காட்டியது. என் டி வாசுதேவன் நாயர், குட்டி கிருஷ்ணன், ராபி, வெட்டுவன் போன்றோர் சமூக வாழ்வியலையும் வெளிப்படுத்தினர். அவை இன்னொரு புறம் கேரளா வாழ்வியலை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தின. அடுத்து வந்த புதிய தலைமுறை கால மாற்றத்தின பிரதிபலிப்பை காட்டியது.எம்டி வாசுதேவன் நாயர் கதைகளில் நசிந்து போன நாயர் சமூக நினைவுத்தொடர்கள் மனோத்துவம் கலந்த வார்ப்பில் மிளிர்ந்தன. முகுந்தன் சக்காரியா சி வி பாலகிருஷ்ணன் கமலதாஸ் ஹரிகுமார் பத்மநாபன் போன்றோரின் சிறுகதைகள் தனித்தன்மையாக விளங்கின பிரஞ்ச் ஆட்சியில் இருந்த நேரத்தில் பிறந்த முகுந்தன் கதைகள் மய்யழி நதிக்கரை மக்களின் வாழ்வியலை பிரதிபலித்தன. அவர் கதைகளில் நினைவுகள் வரலாற்றில் சிறு சிறு பகுதிகளாக நின்றன. .எந்த காலகட்டத்திலும் தெளிவான கூறுகளைக் கொண்டவை இப்போது இப்போக்கு பின்நவீனத்துவ தாக்குதலில் இன்னும் தீவிரம் பெற்று மலையாள சிறுகதைகள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது . இந்தப் பரிமாணத்தைக்காட்ட ஆனந்தகுமார் 12 கதைகளை மொழிபெயர்த்து தொகுப்பாக்கியுள்ளார். பல கதைகள் தாமரை இதழில் வந்தவை.தகழி முதல் முகுந்தன் வரை வகை வகையான கதைகள் உள்ளன.. மாதவிக்குட்டி என்ற பெண்ணும் இதில் இருக்கிறார்,.முதல் கதை பசீரின் உலகப்புகழ் பெற்ற மூக்கு. இது யதார்த்தம் தாண்டியும் வெவ்வெறு பரிமாணங்களுடன் பயணிக்கிறது உச்சமான எள்ளலுடன்.....கடைசிக்கதை அசோகன் செருவில்லின் “ இரண்டு புத்தகங்கள் “. யதார்த்த கதைகளின் உச்சம் இது.இப்படி வகை வகையான கதைகள் உள்ளன .பலரின் மொழிபெயர்ப்புகளில் சுருக்கப்பட்டதனம் இருக்கும். சிரமமான பகுதிகள் மொழிபெயர்க்கப்படாமல் விடுபட்டீருக்கும். சமஸ்கிருதமயமாக்கல் பாதிப்பு இருக்கும்.. நேரடித்தன்மை இருக்காது .இவையெல்லாம் களைந்த சிறப்பான மொழிபெயர்ப்புதான் ஆனந்தகுமாருடையது.பல்வேறு இலக்கியப்போக்குகளைக் காட்டும் கலைடாஸ்கொப்பாக இத்தொகுப்பு உள்ளது. அதற்குக் காரணமாக காக்கநாடன், ஓவி விஜயன், சேது போன்றோரின் கதைகளும் உள்ளன .மொழிபெயரப்புக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் அவர். ரூ 110, தமிழினி வெளியீடு
Notch என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது Authours press Newdehi rs 300 * சுப்ரபாரதிமணியனின் நாவல் மாலு : புலம்பெயர்தல் எனினும் துவக்கத்திலேயே தீர்ந்துவிடும் லட்சியம் குற்றங்கள் அனைத்தும் தண்டனைக்குரியன என அனைத்து நாடுகளிலும் சட்டம் உள்ளபோதும் அதிகபட்ச தண்டனையான தூக்கு அல்லது மரணம் விளைவிக்கும் தண்டனை எல்லா நாடுகளிலும் கிடையாது .அது அழிக்கப்பட்டு விட்டது .ஆனாலும் சில நாடுகள் சிங்கப்பூர் மலேசியா போன்றவை அதனை இன்னும் நடைமுறைப் படுத்துகின்றன. ஐநா மனித உரிமை ஆணையம் பலமுறை அவற்றை கண்டுபிடித்து கண்டித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு சிங்கப்பூர் அரசு 29 வயது இளைஞர் ஒருவரை ,தமிழர் இலங்கையைச் சேர்ந்தவர் குறிப்பிட்ட அளவைவிட மிகவும் குறைந்த அளவு சற்று கூடுதலான போதைப் பொருள் வைத்திருந்தார் என்று தூக்கிலிட்டு விட்டது வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடந்தது அப்பீல் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. இந்நாடுகளில் தூக்கிலிடப்படும் குற்றவாளிகளில் கணிசமானோர் போதைப்பொருள் குற்றத்திற்காக தண்டிக்கப்படுவார்கள் .போதைப் பொருளைப் பயன்படுத்துதல், விற்பனை செய்தல், மேலும் கடத்துதல் என்பன மிகுந்த குற்றச் செயல்களாக இங்கே பாவிக்கப்படுகின்றன .மற்ற நாடுகளில் இதற்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடையாது. பிரிட்டிஷ் வணிகர்கள் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் அடிமை வணிகத்தை நிறுத்தி விட்டபின் போதைப்பொருள் விற்பனையை பரவலாக மேற்கொண்டிருந்தனர் என்பது எட்வர்டு கலியாணோ என்பவர் கூறுகிறார் .இந்தியாவை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆண்டபோது அதனை இன்னும் தனது ஆளுமையை பரப்பும் இலக்குகளை ஒட்டி ஒரு ராணுவத் தளமாக -ஒரு நிர்வாக முறைமைத் தளமாகவே கையாண்டனர் என்று அமிதாவ் கோஷிம் குறிப்பிடுகிறார்.இந்தியாவில் இருந்து ஹாங்காங் -சீனா போன்ற நாடுகளுக்கு கடந்து செல்வதற்காக அவர்கள் உருவாக்கிய போதை இலக்குதான் ‘சில்க் ரூட்’ எனப்படும் பட்டுப்பாதை .இந்தியாவின் உயர் கிழக்கில் அமைந்த பர்மா போன்ற நாடுகளையும் வெட்டி செல்லும் பாதை -என்றும் எட்வர்டு கலியாணோ என்பவர் கூறுகிறார். தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாக எடுத்துச்செல்லப்பட்டு இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கில் ஜப்பானிய வீரர்கள் மேலேறிச் செல்வதற்கான ‘குவாய்’ நதியின் மீது கட்டப்பட்ட மிக நீண்ட பாலத்தை உருவாக்குவதற்கான கடினமான ஈவு இரக்கமற்ற பணியிலும் அமர்த்தப்பட்டனர் என்பது வரலாறு .மாலு நாவலின் களம் இவை அல்ல .எனினும் காலம் கடந்த -மேலான நூற்றாண்டிலிருந்து இன்றுவரை இப்பகுதிகளில் விரியும் துயர் நிறைந்த காட்சியில் தனது பெருமூச்சு கலந்து நிறைகிறது. தமிழர்கள் அடிமைகளாக. உடலுழைப்பை கொடுத்தவர்கள் மற்றும் பொய்யான போதைப்பொருள் கடத்தல் உள்ளதாக தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டவர்களும் கூட; பட்டுப் பாதை வழியாக போதை பொருள்களை கடத்திச்சென்ற ஆங்கில ஆதிக்கத்தின் மீது எந்த நட்பும் உடன்பாடும் சீன –கொரிய- ஜப்பானியருக்கு இருக்க வாய்ப்பில்லை .ஆகவே போதைப் பொருள் தடுப்பு என்பது அவர்களது உணர்வில் கலந்து கோபத்தை கிளறி விட்டு இருக்க வேண்டும் .எனவே போதைப் பொருள் தடுப்புக்கு ஒருபகுதியாக மலேசியா போன்ற நாடுகள் தூக்குத் தண்டனையை பாவிக்க வேண்டும். ஜார்ஜ் ஆர்வெல் பர்மியச் சிறை ஒன்றில் ஒரு இந்தியனின் தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து கட்டுரை வரைந்துள்ளார். சமநிலையும் உயிர்த்துடிப்பு மிக்க ஒரு மனிதன் திடகாத்திரமானவன் கூட நொடிப்பொழுதில் அவனது வாழ்க்கை ;உயிர் அவனைவிட்டு பிரிக்கப்படுகிறது. இது ஒரு வியத்தகு அதிர்ச்சியூட்டும் அனுபவம். இயற்கை ஒரு உடலை படைப்பதற்கான தயாரிப்புகளில் பல ஆண்டுகள் ஈடுபடுகிறது .வாழ்வில் ஒரு அங்கமாக இயங்கும் ஒரு மனித உடல் பற்பல திறன்களை உள்ளடக்கியது தனது உணர்வுகளும் கேட்டல். பார்த்தல் போன்ற செய்திகளும் கொண்ட ஒரு மனிதன் நொடியில் கழுத்தில் சுற்றி இறுக்கப்பட்ட ஒரு கயிறால் சவம் ஆகிப் போகிறான் . ‘மாலு’ என்ற சொல் மலேசியாவில் புழக்கத்திலுள்ள கானகப் பகுதி மக்களின் வழக்குச் சொல். ரப்பர் மரங்களில் இடும் குறுக்குவெட்டினைக் குறிக்கும் . விளைவாகப் பால் சுரக்கும். கழுத்தின் குறுக்காக இடப்பட்ட கயிறின் இறுக்கம் உயிரைப் பறிக்கும். தோற்றப் படிவத்தில் இரண்டும் ஒன்று போன்றவை .தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் கைதிகள் மரணத்தை நெருங்கும் கால இடைவெளி வறண்டது .மிகவும் சம்பிரதாயமான ,பொருளற்ற, கனமான இந்தக் காலம் அவர்களுக்கு கடவுளின் இருத்தலை உணர்த்துமா ?.மரணத்தின் பிடியில் தாங்கள் முழுதும் கட்டுண்ட இத்தருணம் தாங்கள் முன்பு ஈடுபட்ட குற்றம் எவ்வாறு சரி அற்றது என்பதை தெளிவாக்குமா ?. ஆனால் இந்த நிலைமை மாலுவின் முக்கிய பாத்திரமான திருச் செல்வத்திற்கு எத்தகைய அனுபவமாக இருந்திருக்கக்கூடும் ?. ஆர்வெல் தனது கட்டுரையில் தண்டனை நிறைவேற்றி பொருளுடைய --அதனைநிறைவேற்றும்அதிகாரிகளின் பதட்டத்தையும் விவரிக்கிறார் .உரிய நேரத்தை தாண்டி காலை 8 மணிக்கு மேல் எட்டாவது நிமிடத்தில் கைதி தூக்கிலிடப்படுகிறார் .கைதி ராம் .ராம் என்ற பிரார்த்தனையில் ஈடுபடுவதால் தூக்கிலிடும் அதிகாரி அவருக்கு சில கணங்கள் வாழ்கின்ற சலுகையை அளிக்கிறார் .தூக்குக்கயிறு உறுதியாகவும், இலகுவாகவும் வெண்ணை போன்ற பொருட்களை இட்டு தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும் விளைவாக கைதியின் காலடியில் உள்ள பலகையை உரிய கைப்பிடியினால்கையினால் எடுத்த நொடியில் உடல் விழுகின்றது ..உடல் அப்போது முழுக்க அந்த மனிதனை கைவிடும் செய்தியை தெரிவித்து விடும். அதனை முழுக்க அவன் உணர்ந்துகொண்ட அடுத்த கணம் இருள் நிறைந்தது .மூச்சு அடங்குவது. பொறிகள் செயலிழந்து உணர்வு மறைந்து போகின்றது. இயற்கையாக முதுமையில் நிகழும் மரணம் நிச்சயம் அத்தகையதாக இருக்காது .அது பொறிகளை ஒவ்வொன்றாக அடக்கி வரலாற்றின் பக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக மூடும். உறவுகள் அவனை போற்றுவர். கைதியை பின்தொடரும் நாயொன்று பற்றியும் ஆர்வெல் எழுதுவார். இந்த நாய் எங்கிருந்து இவரை தொடர்ந்து வந்தது என்ற ஆய்வில் அவர் ஈடுபடவில்லை .ஒருவேளை கைதி வாழ்ந்திருந்த இடம் சிறையில் இருந்து சற்று அணுகும் தூரத்தில் இருந்து இருக்கலாம் அல்லது ஒரு அனுமதியின் பெயரில் சிறையின் வெளிப்புறங்களில் அது தங்கியிருக்கும் வண்ணம் விட்டு வந்திருக்கலாம்; .யாராவது நண்பர்களுடன் அது வந்து இருக்கலாம் உரிய தருணத்தில் அது தூக்கு பகுதிக்கு வந்து இயன்ற அளவு போராடுகிறது .தண்டனை குறித்த அறிவு அதற்கு இருக்குமா என்பது விளங்கவில்லை ஒருவேளை பிணத்தை திரும்ப ஒப்படைக்கும் போது அது தற்காலிகமாக மகிழ்ச்சி அடையும்- மரணம் யாவருக்கும் நேர்வது .அதனை எதிர்கொள்ளும் உளவியலை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாம் அதனை மறதியின் வாயிலாக தவிர்க்க எண்ணுகிறோம் -தவிர்க்கிறோம் .பொழுதுபோக்கி மகிழ்கிறோம்.அத்தகைய சலுகை உயர் தண்டனை ஒன்றைப் பெறும் கைதிக்கு இருப்பதில்லை அவனது மரணம் செயற்கையானது . சுப்ரபாரதிமணியனின் அவரது எல்லா படைப்புகளையும் போலவே புலம்பெயரும் தொழிலாளர்கள் பற்றியது இது. பிழைப்புக்காக தொழிலாளர்கள் ஊருக்கு ஊர்; குறிப்பாக பெரும் நகரங்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் அவற்றின் இறையாண்மையை பேணும் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் ஆகின்றனர் .இடத்துக்கு இடம் வேறுபடும் பழக்கங்களும் கலாச்சாரமும் வேறு. நவீன மனிதன் இன்றைக்கு இதனை பொருள் தேடும் முயற்சியில் ரசிக நிலையில் புதுமை காணும் நிலையில் பார்க்கின்றான். அயல்நாடுகளுக்குச் சென்று வருவது நடுத்தர வர்க்கத்தின் உறுதியான செயல் திட்டங்களில் ஒன்றாக ஆகிவிட்டது .ஏஜென்சிகள் இதற்கான வாக்குறுதியை அளித்து வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களை புலம்பெயர வைக்கின்றன. மக்கள் தொகையும் அதிகம் பெற்று இந்தியா குறிப்பாக தமிழ்நாடு புலம்பெயர் தொழிலாளர் பட்டியல் குறித்த இடத்தில் உள்ளது எனினும் அடிப்படைவாத அணுகுமுறைகள், மனித உரிமைகளை மதிக்காத சட்டங்களை கொண்ட நாடுகளில் புலம் பெயர்கிறவர்கள் அதுபற்றிய அறிவுடன் இயங்காத போது அபாயங்களுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் .மீள முடியாத இடத்தில் நகரங்களிலும் அந்நிய தேசத்து வனங்களிலோ அவர்கள் ஒளிந்து கொள்ளும் போது குடும்பம் என்னும் மிக ஆதாரமான தங்களது சாராம்சத்தில் இருந்து தகவல் தொடர்பு நிலையிலும் துண்டிக்கப்படுகிறார்கள். இந்தியா போன்ற உலகைப் பரந்த நோக்கில் ஜனநாயக நெறிமுறைகளை மதித்து நடக்கின்ற மக்களும், அதிகார அமைப்பும் உள்ள நாடுகளில் கூட புலம்பெயர் தொழிலாளர்களின் புலம்பெயர் நாடுகளின் சட்டமன்றங்களில் உள்ள சமநிலையின்மையை வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன. குறிப்பான குறிப்பாக அவர்களுக்கான தனித்தன்மை வாய்ந்த சட்டங்களோ உலக மனித உரிமை அமைப்புகளோ -உலகத் தொழிலாளர் அமைப்புகள் தொடர்ச்சியாக உரையாடல் நிகழ்த்த பல முயற்சிகள். கிடையாது .அவர்களுடைய நம்பிக்கை அயலகத் தூதர் -இந்திய வெளியுறவுத்துறை அவர்களுடனான தொடர்பினை மட்டும் சார்ந்தது .உள்ளூர் அமைப்புகள் ,அரசியல்வாதிகள் ,அரசுகள் எவ்வாறு இதற்குரிய நேரத்தை ஒதுக்குகின்றன? எவ்வாறு உள்ளூர் வாசியின் நகர்வில் கவனமாக உள்ளன? என்ற வினாக்களுக்கு விடை தேடும் போது நமக்கு ஏற்படுவது அயர்ச்சி. சுப்ரபாரதிமணியனின் நாவலான மாலு இந்தக் களத்தில்தான் பயணிக்கிறது திருச்செல்வன் விக்னேஷ் ,கிருஷ்ணசுவாமி என நீண்ட பட்டியலில் அடங்கும் இளைஞர்கள் மலேசியாவிற்கு பணிநிமித்தம் குடிபெயர்ந்து எவ்வாறு வெவ்வேறு குற்றங்களில் மாட்டித் தவிக்கிறார்கள் என்பது நாவலின் சித்தரிப்பு திருச்செல்வம் -நண்பர்கள்-அவர்களும், நண்பர்கள் 7 பேரும் தாங்கள் தங்கியிருந்த வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கும் மலேசியர்கள் சிலர் சட்டவிரோதமாக அபின் வைத்திருந்த காரணத்தால் சேர்த்து கைது செய்யப்படுகிறார்கள். போதிய விசாரணையின் பின்னர் 8 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது .திருச்செல்வன் தந்தையான அப்பாசாமி ஒரு ஏழை நெசவாளி .இவ்வாறு தன்னுடைய மகனை மீட்பதற்காக அவர் ஒவ்வொரு அரசு நிறுவன வளாகத்திலும் ஏறி இறங்குகிறார் அலைகிறார் எனும் அவரது தரப்பில் ஆழ்ந்தஉரையாடலைஇந்த நாவல் வைத்திருக்கிறது .உடன் மலேசிய வரலாற்றை உருவாக்கியதில் தமிழர்களுடைய பங்களிப்பும், தமிழ் வாழ்வியல் குறித்த பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆங்காங்கே பொருத்தமான இடங்களில் சொல்கிறார் .அவரது மலேசிய எழுத்தாளர்களுக்கான நீண்ட தொடர்பு ,மேற்கொள்ளும் மலேசிய பயணங்கள் இத்தகு புனைவை எழுதத் துணைநிற்கின்றன. எந்த நேரத்திலும் தூக்கு மேடைக்குத் தள்ளப்பட்டு முகத்தை கருப்புத் துணியால் மூடி, நெறி படும் குரல்வளைகள் மரணத்தையே நல்கும் .ஆனால் தனது மகன் மலேசிய பின்னணியில்- மலேசிய மண்ணில் இருந்து கொண்டு பொருளீட்டி அனுப்புவான் ,தருவான் என்ற பெருமையுடன் விளங்கும் அப்பாசாமி அல்லது அவர் மனைவி ஆகியோர் பொய் குற்ற வழக்கில் அவன் உயிர் புலனாகாத ஒரு தேசத்தில் பிரியக் கூடும் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இது யதார்த்தம். இந்த பதட்டத்தை எதிர்கொள்ளும் துணிவு கூட அப்பாசாமிஇடமில்லை .அவரால் நிம்மதியாக, குழப்பமின்றி ஒரு கோப்பை மதுவை கூட அருந்தும் தெளிவும் இல்லை. தன்னுடைய சாவையாவது பணயமாக வைக்கலாமா என்ற பொறி கூட அவருள் தோன்றுவதில்லை .கதறி அழலாமா வேண்டாமா என்பதில் கூட குழப்பம். இத்தகைய மிகத் தாழ்ந்த சமூக நிலையில் புலன்கள் கூறும் நல்லுணர்வு கூட புரியாமல் வாழ்கின்ற மாந்தர் பொருளைத் தேடிக் கொண்டால் ஒழிய பிழைப்பு இல்லை .அவர்கள் கையறு நிலை வலியது .இத்தகைய அளவுகள் இருந்தபோதும் பொதுப்புத்தியில் வலியுறுத்தப்படும் ஒரு மலேசிய ‘ரிங்கிட்’ மதிப்பு இந்திய ரூபாய் விட அதிகமானது அதன் நிழலில் மேற்கண்ட சோகங்கள் ஒதுங்கும் ..இந்நாவல் யதார்த்த நாவல் ..மொழிபெயர்ப்பு அவ்வளவாக சிரமம் இல்லை ஏனென்றால் பெருமளவு மலேசிய சொல்லாடல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஓரிரு இடங்களில் தாவரங்களின் பெயர்களை மட்டும் தேட வேண்டியிருந்தது ஆங்கில மொழிபெயர்ப்பு இயல்பாகவே செய்ய முடிகிறது. இந்த நாவல் ஹிந்தியிலும் வெளியாகி இருக்கிறது .உலகம் உண்மைகளின் களம் என்று சிறப்புற வாழும் மனிதர் பலர். எனினும் மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை ,இப்போது ஹாங்காங் ,காஷ்மீர் என்று குடியேற்றங்களால் அவதியுறும் நாடுகளும் இவ்வுலகிலேயே அடங்கியுள்ளன. தனி மனிதன் ஒருவனின் ஒவ்வொரு நாளும் ‘நானு’ம் தொடர்பில்லாமல் ஏது? ----ஆர். பாலகிருஷ்ணன்
முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன இப்போது.இன்று சிறுகதையின் வழிகள் மேலும் முன்னகர்ந்துவிட்டன ஜெயமோகன் “”சுப்ரபாரதி மணியனின் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்( ஜெயமோகன் வலைத்தளம் 13/1/21 ) அன்புள்ள ஜெ. முன்பொரு முறை இப்படி எழுதியிருந்தீர்கள் “”சுப்ரபாரதி மணியனின் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் என்னும் கதை அன்னம்விடுதூது என்னும் சிற்றிதழில் வெளிவந்தபோது நான் அறுபது பேருக்கு அக்கதையை வாசிக்கச்சொல்லி கடிதங்கள் எழுதி தபாலில் சேர்த்தேன்.”” அந்த அளவுக்கு உங்களை கவர்ந்த கதை அது.அதை மலையாளத்தில் மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். என்ன சுவாரஸ்யம் என்றால்சுஜாதா இந்த கதையை கலைவடிவம் கைகூடாத கதை என எழுதியிருக்கிறார் சுஜாதாவுக்கு சுப்ரபாரதிமணியன் மீது மரியாதை உண்டு. அவரது மற்ற கதைகளை பாராட்டி விட்டு, ” ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ” என்ற கதை , சிறுகதையே அல்ல என அதை மட்டும் நிராகரிக்கிறார். ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ” என்ற கருவுக்கு சம்பந்தமற்ற தகவல்கள் ஏராளமாக இருப்பதாக சொல்கிறார். மற்றகதைகளில் ஏராளமான சம்பவங்கள் இருப்பினும் அது கதைக்கு தேவைப்படுவதையும் சொல்கிறார் ஆனால் அந்த கதை மட்டுமல்ல.. உங்களது மொழி பெயர்ப்புமேகூட பரவலான வரவேற்பை பெற்றது சுஜாதாவின் விமர்சனங்களுக்கு ஒரு மரியாதை உண்டு என்ற நிலையில் , அவரது விமர்சனங்கள் சுவாரஸ்யம் என்பதை அளவுகோலாக கொண்டவை என நினைக்கிறீர்களா ? அன்புடன் பிச்சைக்காரன் அன்புள்ள பிச்சைக்காரன், ஒவ்வொரு காலகட்டத்திலும் கதைகளுக்குச் சில வடிவச்சிறப்புகள் உருவகிக்கப்படுகின்றன. அவையே ’சரியான’ வடிவங்கள் என்று நம்பப்படுகின்றன. அவற்றை வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதைவிட விமர்சகர்கள் அவற்றில் உறுதியாக இருக்கிறார்கள் ஆனால் புதியபடைப்பு அந்த எல்லையை மீறிச்செல்லும். புதியதாக வந்து நிற்கும். உள்ளடக்கத்தின் புதுமையை ஏற்பவர்களால்கூட வடிவத்தின் புதுமையை ஏற்றுக்கொள்ள முடியாமல்போவதை நாம் அடிக்கடிக் காண்கிறோம் இருவகையினர் அவ்வாறு இறுகிவிடுகிறார்கள். ஒன்று, வாசிப்பை ஒரு வழக்கமாக ஆக்கிக்கொண்டவர்கள். எளிமையான வாசகர்கள். இரண்டு, ஒரு வடிவத்தை வலியுறுத்த முற்பட்டு காலப்போகில் அதில் மனம் அமைந்துவிட்டவர்கள் தொடக்க காலத்தில் தமிழில் சிறுகதைவடிவம் என்பது அரிதாகவே எட்டப்பட்டது. உதாரணம் தி.ஜ.ர, பி.எஸ்.ராமையா என்னும் சிறுகதை ஆசிரியர்கள். அவர்கள் இருவரையும் தமிழின் மாபெரும் சிறுகதையாசிரியர்கள் என சி.சு.செல்லப்பா நம்பினார். அப்படி திரும்பத்திரும்ப எழுதினார். புதிய கதைக்கருக்களை அவர்கள் கையாளவும் செய்தனர். ஆனால் அவர்கள் கதைகள் எவற்றிலுமே சிறுகதையின் வடிவம் திரளவில்லை. அவை வெறுமே கதைகளாக, நிகழ்ச்சிகூற்றுகளாகவே நிலைகொண்டன அதேதான் அழகிரிசாமிக்கும். தமிழிலக்கியத்தில் அவர் ஒரு மேதை. நல்ல கதைகளில் அவர் மிக இயல்பாக அடைந்திருக்கும் உச்சம் மிக அரிதானது. ஆனால் அவருடைய பெரும்பாலான கதைகள் சிறுகதைகளாக ஆகவில்லை. வாசகனுக்குரிய இடைவெளி இல்லாமல் அவரே சொல்லி முடித்துவிடுகிறார். கதைகள் முடியாமல் முடியும் வடிவம் எட்டப்படாமல் விரிவாகச் சொல்லி நிறுத்தப்பட்டவையாக உள்ளன. ஆகவே எழுபதுகளில் சுந்தர ராமசாமி போன்ற விமர்சகர்கள் கதைகளின் வடிவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். சுந்தர ராமசாமி அவருடைய கட்டுரை ஒன்றில் [ கலைகள் கதைகள் சிறுகதைகள். ஆ.மாதவன் கதைகளுக்கான முன்னுரையாக வெளிவந்தது] சிறுகதை வடிவத்தை வலியுறுத்தி அதை மட்டுமே வைத்து தமிழ்ச்சிறுகதைகளை அளவிடுவதைக் காணலாம். இலக்கைச் சென்றடையாமல் சிறகுகளை கோதுவதிலேயே கதையைச் செலவிடுபவர் என வண்ணதாசனையும், சரியாக இலக்கைச் சென்றடைபவர் என்று அசோகமித்திரனையும் மதிப்பிடுகிறார் சுந்தர ராமசாமி சிறுகதைவடிவை மிக ஆவேசமாக வலியுறுத்திவந்தார். தமிழ்ச்சூழலில் அவர் ஆழமான செல்வாக்கையும் செலுத்தினார். சிறுகதை என்பது வேகமான நேரடியான தொடக்கம், வீசப்பட்ட அம்பு இலக்கை நோக்கிச் செல்வதுபோன்ற வடிவம், எதிர்பாராத முடிச்சு அல்லது மேலும் கதையை ஊகிக்கவிடும் முடிவு ஆகியவை கொண்டதாக இருக்கவேண்டும் என்பது அவருடைய கருத்து. எம்.கங்காதரன் சிறுகதைக்குள் உள்விவாதங்கள், துணைக்கதை விரிவுகள், அது சென்றடையவேண்டிய இலக்குடன் தொடர்பற்ற செய்திகள் ஆகியவை இருக்கலாகாது என்று அவர் கருதினார். சிறுகதை யதார்த்தவாதத்தின் கலை என்றும் அதில் அலங்காரம், அணிகள் ஆகியவற்றுக்கு இடமில்லை என்றும் எண்ணம்கொண்டிருந்தார். ஆகவே லா.ச.ராவின் கதைகளையும் அவர் ஏற்கவில்லை. ஆனால் சிறுகதைவடிவம் சரியாக எட்டப்பட்டதுமே ஒருபக்கம் அதன்மேல் சலிப்பு வரத்தொடங்கியது. வேறுவகையான கதைகள் எழுதப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்ட கதைகளில் ஒன்று ‘ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்’ அது கோழிப்போர், கோழிக்கறி ஆகியவற்றைப்பற்றிய செய்திகளாகவே சென்று அப்படியே முடிகிறது. கடைசிவரி மட்டும்தான் கதை. அந்தவகையான ‘வடிவமீறல்’ அன்று ஏற்கப்படவில்லை. நான் அதை சிறுகதைவடிவின் புதிய நகர்வாக கண்டேன். மாறாக, சுந்தர ராமசாமி அதை முந்தையவடிவாக, அதாவது தி.ஜ.ர அல்லது பி.எஸ்.ராமையா காலத்துக் கதையாக கண்டார். சுஜாதா சிறுகதையின் செவ்வியல்வடிவில் நம்பிக்கை கொண்டவர். அவர் சுந்தர ராமசாமியை பலவகையிலும் பின்தொடர்ந்தவர் ஆகவே சுஜாதாவுக்கு அக்கதை வடிவப்பிழையாக, தேவையில்லாமல் தகவல்களை சொல்லிக்குவிப்பதாகத் தோன்றியது. நான் அக்கதையை முன்வைத்து சிறுகதையின் புதிய சாத்தியங்களைப்பற்றி அப்போது பேசினேன் என் எண்ணங்கள் சரிதானா என்று அறிய அக்கதையை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து முக்கியமான கேரள இலக்கியவிமர்சகரான எம்.கங்காதரனுக்கு அனுப்பினேன். கங்காதரன் எம்.கோவிந்தனின் மாணவர், சுந்தர ராமசாமிக்கும் நண்பர். கங்காதரன் அது ஒரு நல்ல கதை என நினைத்தார். அவர் அப்போது தொடங்கிய ஜயகேரளம் என்னும் சிற்றிதழில் வெளியிட்டார். முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன இப்போது.இன்று சிறுகதையின் வழிகள் மேலும் முன்னகர்ந்துவிட்டன ஜெயமோகன்
சிறுகதை அடைபட்ட கதவு சுப்ரபாரதிமணியன் பாஷோ அவனின் இரட்டை சக்கர வாகனத்தில் சீரான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான் .குமரன் நினைவகம் அருகில் அதை நிறுத்திவிட்டு வானத்தைப் பார்த்தான். வானம் நீல மயமாக நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. நட்சத்திரங்களை எண்ணுகிற பாட்டி செத்துப் போய் ரொம்ப வருடம் ஆகிவிட்டது அவனுக்கும் அப்படித்தான் எப்பவாவது நட்சத்திரங்களை எண்ண வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது .ஆனால் அதெல்லாம் பல சமயங்களில் முடிந்ததில்லை பெரும்பாலும் வீட்டிற்குள் தான் அடைந்திருக்க வேண்டும் ஊரில் இருக்கிற போதெல்லாம் ஊரடங்கு சட்டம் துப்பாக்கி சத்தம் இல்லாவிட்டால் பசி இதன் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டும் இப்போது இங்கே வானம் பார்க்கவும் வானத்தில் நட்சத்திரங்களை பார்க்கவும் நிலவு அவ்வப்போது வந்து போவதை பார்க்கவும் அவனுக்கு ஏதுவாக இருக்கிறது .அதுதான் அவன் அவ்வப்போது இரட்டை சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு நல்ல நடுராத்திரியில் வீதிகளில் உலா வருவான். அவன் முன்னால் நின்றிருந்த காவல்துறைக்காரன் தன்னுடைய வாகனத்தை கை காட்டி நிறுத்தினான் என்ன இங்க நின்னு நட்சத்திரம் பாக்கறன் நட்சத்திரம் என்ன ..சினிமா நட்சத்திரம் இல்ல மேல தமிழ் நல்லா வருது போல இருக்கு வருது இங்கே வந்து எத்தனை வருஷம் ஆச்சு மூணு வருஷம் ஆச்சு என்ன வேலை செய்ற எல்லாரும் பண்ற தான் பனியன் கம்பெனி ..ஒரு சின்ன கடை வைத்து இருக்கேன் சரி சரி உன்னுடைய விஷா எல்லாம் முடிஞ்சிடுச்சா அதான் இருக்கு டூரிஸ்ட் விசா . ஆமா சரி வேற.. இந்த வண்டி ,, என்னோடது உனக்கு எல்லாம் வண்டி தர்ராங்களா தந்திருக்காங்க ஆதார் கார்டு வாங்கிட்டேன் அட.. பேன்நம்பர் எல்லாம் வச்சிருக்கியா பேன்நம்பர் இல்லாம எப்படி வியாபாரம் பண்ண முடியும் . காசு குடுத்தா எல்லாம் கெடைக்கும். அது ஆப்ரிக்க்காரனோ ஆஸ்திரேலியாக்காரனோ.. சரி வேற .என்ன இது யாருடைய படம் தெரியுமா தெரியும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்காக உங்க ஊருல செத்துப்போனவர் அங்க சுதந்திரப் போராட்டம் எல்லாம் இருக்கா எங்க நைஜீரியாவில் இந்த மாதிரி போராட்டங்கள் வெடிக்கும் .. துப்பாக்கி சூடு இருக்கும் .ராணுவ மறைந்திருக்கும் ..எல்லாத்தியுமே ஒரு வன்முறை இருக்கும் எங்க வீட்டு பெண்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்க முடியாது .உங்க ஊரு ரொம்ப நல்லா தான் இருக்கா சேரி சேரி .சரி டிரைவிங் லைசென்ஸ் வச்சிருக்கியா வச்சிருக்கேன். யார் பெயரில் என் பெயர் தாங்க பாக்கணுமாம அதப் பாத்தா என்ன .எல்லாம்.. அப்புறம் இந்த இன்ஷூரன்ஸ் ரெடி பண்ணி இருக்கியா பண்ணி இருக்கேன் சரி நீ எதுக்கும் ஸ்டேஷன் வந்துட்டு போ. பக்கம் தானே வா போலாம் எதுக்குங்க ஸ்டேஷன் என் வண்டி வண்டிக்கு லைசென்ஸ் இருக்குன்னு சொல்றேன் அப்புறம் எதுக்கு கேக்குறீங்க இல்ல எதுக்கும் வந்துட்டு போங்க பர்சிலிருந்து 200 ரூபாய் எடுத்து அந்த காவல்துறை காரனிடம் தந்தான் பாஷோ சரி சரி சீக்கிரம் போ . திரியாதே . சந்தேக கேஸ் போட்டுருவாங்க வண்டியை முடுக்க ஆரம்பித்தான் பாஷோ அந்த காவல்துறைக்காரன் வாங்கி கொண்ட பணத்தை பார்த்தபடி பேண்ட் பாக்கெட்டில் சொருகினான் . சரி சரி சீக்கிரம் போ செக்கிங்க வந்தா சிரமம் .கண்டிப்பா பண்ணுவாங்க அதுக்கு நீ கண்டுக்காத ..எல்லாம் கம்மி தான் பாஷோ வண்டியை முடுக்கிக் கொண்டே மெல்ல அண்ணா பெரியார் சிலைகளை கடந்து வந்தான். இன்னும் கொஞ்ச நேரம் இந்த நடுஇரவில் நட்சத்திரங்களும் வானமும் பார்த்தபடி வண்டி ஓட்டிச் செல்லலாம் என்று அவன் நினைத்திருந்தான் நைஜீரியாவில் அவன் காதலி ரேனா இப்படித்தான் நடுஇரவில் வானமும் நட்சத்திரங்களும் பார்க்க ஆசைபடுவாள். நமக்கு எல்லாம் அது வாழ்க்கையில் கெடைக்கலே நீ இந்தியாவில் இருக்க உனக்கு அதெல்லாம் வாச்சு இருக்கா என்று பலமுறை கேட்டு இருக்கிறாள். அங்க இது மாதிரி இல்ல ..நல்லா இருக்கும் என்று அவன் சொல்லியிருக்கிறான் அப்போ நான் இந்தியா வரணும் உங்களுடன் வானமும் நிலமும் நட்சத்திரங்களும் பார்க்கிற மாதிரி படுத்துக்கிடக்கணூம் ..... ரோட்டில் படுத்து கிடக்க வேண்டும் , ரோட்லே திரியணும் அங்க முடியும் எப்ப வர்ற நீ கல்யாணம் பண்ணிட்டு கூட்டிப்போக ஓகே ஓகே நீ அதுவரை காத்திரு நாலைந்து தெருக்கள் என்று அலைந்து வானமும் வெறிச்சென்ற சாலைகளும் பார்த்தான் .அவன் குமரன் அடிபட்ட இடத்திற்கு வந்தபோது அங்கு முன்னால் இருந்த இரண்டு காவல்துறையினர் அவனை கை நீட்டி விரித்து நிற்கவைத்தனர் நான் இப்போதுதான் ஒரு காவல்துறையினரைக் கடந்து வந்திருக்கிறோம் என்று சொன்னால் அவர்கள் நம்பப் போகிறார்களா என்ற சந்தேகம் வந்தது. தன் காதலியை கூட்டிக்கொண்டு வந்து வானமும் நட்சத்திரங்களும் பார்க்க சுதந்திரமாக போக முடியும் .படுத்துக் கிடந்து கொண்டு வானத்தை ரசிக்க முடியும் என்று சட்டெனத் தோன்றவில்லை .வருத்தம் மேலெழும்பியது அவனுக்கு அவன் தன் பர்சில் இன்னும் பணம் மிச்சம் இருக்கிறதா என்று தேட வேண்டும் என்று நினைத்தான் பிச்சிப்பூ : பொன்னீலன் நாவல் :சுப்ரபாரதிமணியன் பேச்சு வழக்கு இயல்பிலேயே நாவல் முழுக்க சொல்லப்பட்டிருப்பது சிலருக்குத் தேன். சிலருக்கு பாகற்காய் பொறியல் . அதுவும் கன்யாகுமரி பேச்சு வழக்கில். நீண்ட கால சரித்திரத்தை உள்ளடக்கிய நாவல் 76 பக்கங்கள் தான்.. பிரிட்டிஸ் தர்மம், மனுதர்மத்திற்கிடையே மக்கள் அல்லல்படும் காலம் முதல் சர்க்கார் உத்யோகம் உயர்சாதிகளுக்கும் மதம் மாறினவர்களுக்குமட்டுமே என்றிருந்த காலம் முதல் இந்நாவல் தொடங்கி கேரளாவின் வைக்கம் போராட்டத்திற்கு பின்னான பெண்களின் எழுச்சியோடு முடிகிறது. கட்டுமுட்டான மட்டச்சாதி மனுஷர் உச்சச் சாதி மனுஷர் உட்காரக்கூடிய நாற்காலியில் உட்காரும் வழக்கறிஞர் நீதிபதி காலமும் வருகிறது.மெல்ல மெல்ல சமூக சீர்திருத்தங்கள் மீட் அய்யர், வைகுண்டர் என நீள்கிறதும் பிச்சிப்பூ என்ற பெண் பங்கு பெறும் பெண்களீன் எழுச்சியும் முக்கியமானது. இவ்வளவு நீண்ட சரித்திரத்தை மெக நாவல் கூட ஆக்கியிருக்கலாம். ஆனால் எல்லாவற்றிலும் சுருக்கம். சிறு சிறு அத்தியாயங்கள் . படிக்க சுவாரஸ்யமும் இயல்பும் தருகிறது. ( ரூ70, என்சிபிஎச், சென்னை )
திருப்பூர் அழகு பாண்டி அரசப்பனின் தேனீர் உபசரிப்பில்.. கேரளாவில் மலப்புறப்பகுதி ஒரு குக் கிராமத்தில் ஒரு தேனீர் கடை . அது இலக்கிய வாதிகளின் மேடையாகியிருக்கிற அற்புதத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள. நூல்கள் படிக்கக் கிடைக்கும். எழுத்தாளர்களின் சந்திப்பு நடக்கும் வாசக சாலை அது. தமிழ் எழுத்தாளர்கள் பலரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மலையாள எழுத்தாளர்கள் அங்கு கூடுவது அங்கு சாதாரணம்.பல பத்திரிக்கைகள் , பருவ இதழ்கள் அந்த தேனீர் கடையைக் கொண்டாடித் தீர்த்து விட்டன. அது போல் அழகு பாண்டி அரசப்பனின் தேனீர் கடை இலக்கியம் பேசவும் அன்போடு எல்லா வித விளிம்பு நிலை மனிதர்களும் உறவாடவும் ஓர் இடம். அவர் தேனீர் உபசரிப்பில் அன்பைப் பகிர்ந்து கொள்வார், அவருக்குக் கிடைக்கிற ஞாயிறு அவருக்கு அபூர்வமானது. வாரம் முழுதும் உழைத்துச் சலித்து பின் ஒரு நாள் ஓய்வு.அந்த ஞாயிறுவை அவர் எப்போதும் குடும்பத்தோடும் இலக்கிய நண்பர்களின் கூட்டங்களோடும் கழிப்பார். ” ஞாயிறு போதும் “ என்றொரு அவரின் கவிதை இருக்கிறது. ஆனால் அவரின் வாசிப்புக்கும் எழுத்துப் பயிற்சிக்கும் பல தொடர் ஞாயிறுகள் தேவை. அது போன்ற தொரு தொடர் கரோனா விடுமுறையில் அவர் தொடர்ந்து எழுதிய வாய்மொழியிலான கதைகளின் பாங்கு சிலிர்க்கவைக்கிறது. எத்தனை எத்தனையோ மனிதர்கள். அவர்களின் அன்பு உள்ளங்கள். துயரங்களை மீறி மனிதத்தைக் கொண்டாடும் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கும் சிறுகதைப்பணி இத்தொகுப்பின் கவிதைகளுக்கு முன் பிரமாண்டமானதுதான். அன்பாக பழகுவது அம்மா தொடங்கி குடும்ப உறவினர்களீடம் மட்டும்தானா. உறவினர்களிடம் மட்டும்தானா. .. உலகம் முழுமைக்குமான நேசக்கரம் நீட்டல் இந்தக் கவிதைகளிலும் ஒளிந்திருக்கிறது.. இப்போது தேனீர் கடைக்காரர் . முன்பு பனியன் கம்பனி தொழிலாளி. தொழில் எதுவாக இருந்தாலும் அவரின் முகம் ஒன்றுதான். கவிதையைக்காட்டும் முகம் . .அன்பை விரிக்கும் முகம். அந்த அன்பு எழுத்தாளர்களென்றால் இன்னும் விரியும். இவ்வாண்டு திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வின் போது தன் மகள் கைகளில் பூக்களை அள்ளி எழுத்தாளர்களுக்குப் கேடயமும் பொன்னாடையும் புத்தகங்களும் தரப்பட்ட போது தந்து மலரச் செய்த அற்புதம் தந்த நெகிழ்வு ,. அந்த நெகிழ்வை இத் தொகுப்பின் பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. இப்போது சிறுகதைகளில் அவர் பயன்படுத்தும் வட்டார வாய்மொழி வரலாற்று நடையில் பத்து பைசா, அடிச்சிறுக்கி போன்றக் கவிதைகளும் அமைந்துள்ளது. நீ இல்லாத போதுதான் புரிகிறது உன் இல்லாத ரகசியம் என்றொரு வரி அவரின் கவிதைகளுக்குள் ஒளிந்திருக்கிறது. அந்த ஒளிதல் விளையாட்டிலிருந்து விலகி தன்னை வெளிப்படுத்த இவ்வளவு தாமதமாயிருக்கிறது என்பது தான் சிறு வருத்தம் அவர் தொடர்ந்து இலக்கிய உலகிலும் செயல்படுதல் அவரின் தேனீர் கடையின் சூழல் போல் தொடர வேண்டும் - சுப்ரபாரதிமணியன், திருப்பூர்