திருப்பூர் நண்பர்கள் வட்டத்தின் 24ம் சந்திப்பு
திருப்பூர் நண்பர்கள் வட்டத்தின் 34ம் சந்திப்பு புதன் மாலை வாழ்க வளமுடன் மையம்,
செரீப்காலனியில் நடைபெற்றது,
நேசனல் சில்கஸ்,
நேசனல் புத்தக நிலையம் உரிமையாளர்
அருணாசலம் தலைமை தாங்கினார்..
தொல்பொருள் ஆய்வாளரும்
ஓலைச்சுவடி காப்பாளருமான சுந்தர கணேசன் சிற்ப்பு விருந்தினராகக் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினார் :
ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு என்பது
பழைய இலக்கியங்களையும் வரலாற்றுச்செல்வங்களையும் பாதுகாக்கும் முறை இன்றைக்கு அவசியமாகி விட்டது. கொங்குப் பகுதிகளில்
உள்ள அவ்வகை ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும்.சுவடிகள் பாதுகாப்பில்
பழங்காலப் பாதுகாப்பு முறை, தற்காலப் பாதுகாப்பு முறை ஆகிய இரண்டு வகைகளில், தற்கால பாதுகாப்பு முறை
எளிமையானதாக இருக்கின்றது. ஆனால்
பக்கவிளைவுகளை உண்டாக்கக் கூடியது சுவடிகளை விரைவில் அழியும் நிலைக்குக் கொண்டு
செல்லக் கூடியது. ஆனால் பழங்காலப்பாதுகாப்புமுறை சற்று கடினமானதாக இருப்பினும்
சுவடிகளை நீண்ட நாட்கள் பாதுகாப்பதுடன் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
எனவே சுவடிகளை அழியாமல் பாதுகாக்கப் பயன்
படும் பழங்காலப் பாதுகாப்பு முறையே சிறந்த பாதுகாப்புமுறையாகும்.- என்றார் .
தமிழறிஞர் நீறணி பவள்க்குன்றன் , உசிலை வனநாதர் சதகம் நூல் பற்றிப் பேசினார். ரவி சோ நாடகங்களில்
எள்ளல் தன்மை பற்றிப் பேசினார் , லக்ஷ்மணன் . ரெத்னம், சுப்ரபாரதிமணீயன் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர்.