“ திருப்பூர்
-100 “ ரூ 100
கே.சுப்பராயன்(பாரளுமன்ற
உறுப்பினர் “ திருப்பூர் ) அவர்களின் முன்னுரையுடன் . வெளியீடு : தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்.
கனவு 34 ம்
ஆண்டில் …... ஜீன2019 இதழ் வெளிவந்துள்ளது.
மணிமாலா மதியழகன், ராமன் முள்ளிப்பள்ளம் சிறுகதைகள், ஆர்,பாலகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன் கட்டுரைகள். தேவரசிகன், சாமக்கோடாங்கி ரவி, தமிழமுது,ப.சுடலைமணி, துருவன் பாலா கவிதைகள் விலை ரூ 20.. ..
8/2635 Pandian nagar, Tirupur 641 602 /
94861 01003
எஸ்.
ஏ.காதரின் நூல்கள்
-
குருவிக்காரன் –சிறுகதைத் தொகுப்பு
- குயிலா –நாவல்
- குருவிக்கூடு –நாவல் .......பிரதிகளுக்கு ..8610172809
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர்
மாவட்டம்
மாதக்
கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு மாலை 5 மணி முதல் ... இலக்கிய உரைகள்,
நூல்கள் வெளியீடு, நூல்கள் அறிமுகம், கவிதைகள்
வாசிப்பு , பாடல்கள் , கருத்துரைகள்... மில் தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி
சாலை, திருப்பூர் . வருக
*
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
திருப்பூர் மாவட்டம் மாத செய்தி மடலுக்கு படைப்புகளை மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப prnatarajan1253@gmail.com
ரேகை - சுப்ரபாரதிமணியனின்
நாவல்- ஆயிஷா இரா நடராசன்
இன்றும்
புதினங்கள் நெடுங்கதைகள் சிறுகதைகள் என
கதைகளை பிரிக்கிறோம். ரவீந்திரநாத் தாகூரின் குமுதினி 300 பக்கம்
என்றாலும் உலகம் அதை நாவல் என்று அழைப்பது இல்லை. ஆங்கில நாவலாசிரியர் ஹென்றி
ஹட்சன் உட்கார்ந்து ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் எதுவும் நாவல் கிடையாது
என்கிறார் .ஆனால் இது பழைய கருத்து இந்த வாட்ஸப் யுகத்தில் வாசிப்பு ஒரே மூச்சில்
முடிப்பது மட்டுமல்ல நறுக்கு தெறித்தார் போல் உண்மையை வெளியிடுவது. வாசிக்கும்
மனங்களை பாதிப்பது என மாறிவிட்டது .
சுப்ரபாரதிமணியனின் எழுத்து நெஞ்சை தொடும் சுடும் என்ற
வகைப்பாட்டை சேர்ந்தது ரேகை :திருப்பூர்
நாவல் ரத்தமும் சதையும் கலந்த மற்றொரு
படைப்பு .
ஜாதகம் சோதிடம் பார்க்கும் பரம்பரை குடும்பத்தில்
சிதையோடு தொடங்கும் கதை நவீன நாடகக்காரர் சுப்பையா முதல் விலைமகள் பரமேஸ்வரி கடும்
உழைப்பாளியான அமலம், . கிறிஸ்துவ போதகர் , கள்ளநோட்டு கோபால் என விரியும் யதார்த்த
உலகம் புதிய திருப்பூரை டாலர் நகரமாக
நம்முன் விரிய வைக்கிறது. கலை இரவில்
வரும் தங்கர்பச்சானும் பாலாஜி சக்திவேலும் கூட பாரதி வேசம் சுப்பையாவை
பாராட்டுகிறார்கள். ஆனால் அவருடைய குறும்பட டைரக்ஷன் கனவு பலிப்பதே இல்லை .எம்பில்
பிராஜெக்ட் செய்யும் ரத்தினவேல் உட்பட நாம் அனைவரும் நாவலோடு எளிதில் இறுதியில் ஐக்கியமாகி விடுகிறோம்.
கேம் கூலி முறை
பற்றியும் அதன் ஒழிப்பு பற்றியும் விவரிக்கும்போது பீகார்
நேபாள கூலிகள் குறித்த தனிப்பதிவு இந்த நாவலில் உள்ளது அழுத்தமான
ரேகை இது ( ரூபாய் 125 பொன்னுலகம் பதிப்பகம் திருப்பூர்
பக்கம் 142). –