கவியரசனின்
பரிதவிப்பு நாவல் ; சுப்ரபாரதிமணியன், திருப்பூர்
கவியரசனின்
இலக்கிய ஆர்வத்தை சங்கரன் கோவில் கல்லூரி நிகழ்ச்சிக்கு ஒரு தரம் சென்றிருந்த போது
கண்டேன். என் நூல்கள் பற்றிய ஆய்வுக்கான கேள்விகளை நுணுக்கமாக பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சி அடைந்தேன்..சில
கவிதைகளை கனவு இதழிலும் பிரசுரித்திருந்தேன்
காதல் மணம் புரிந்து கொண்டவர்களின் வாழ்வு
இயல்பானதாக இல்லாத போது அவர்கள் வாழ்க்கை
தாறுமாறானதாக அமைந்து விடுவது பற்றிய ஒரு குறுநாவல் படித்தேன் .நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருந்தது. அதை பிரசுரிக்க ஆர்வம் கொண்டபோது பக்க அளவைப்பற்றிச்
சொல்ல அதை உடனே விரிவாக்கி எழுதினார்,. எளிமையானத்
தோற்றம். அதன் பிரதிபலிப்பாய் எழுத்திலும்
எளிமை. எந்த நவீன விடயங்களுக்கும் ஆட்படாமல் தன் அனுபவ எல்லையை விரித்துச்
செல்லும் பாங்கு போன்றவை நம்பிக்கையளித்தன.
பரிதவிப்பு
நாவலைப் படித்த போது ஒரு மரணம் சார்ந்த சூழலிலிருந்து அது விரிவடைவதைக்கண்டேன். தேச நலனுக்கான சாவு.
பாதிக்கப்படும் குடும்பச் சூழல். தண்ணீரை உறிஞ்சி காசாக்குபவர்கள்.அதைத் தட்டிக்
கேட்கிறவர்களுக்கு வரும் சிரமங்கள், சுகாதாரக் கேடுகள், திருப்பூருக்கு இடம்
பெயரும் கிராம மக்கள் ..பூதாகரமானப்பார்வை கவியரசனுக்கு. ஒன்றை இழந்து
ஒன்று விசுவரூபிக்கும் வாழ்க்கையின் பல கணங்கள். ஒரு நாவலாசிரியனின் பார்வையாய்
ஒன்றின் மீது ஒன்றாய் படியும் வாழ்க்கையின் நிகழ்வுகள் , தரிசனங்கள் . நல்ல
வாசிப்பிற்குரிய நாவலாக மிளிர நுணுக்கமான சித்தரிப்புகள் , அனுபவங்களை கோர்த்துச் செல்லும் பாணீயில் நல்ல கதை
சொல்லியாக மிளிர்கிறார். தளம் குறுநாவல் போன்றதாயினும் பல அடுக்குகளாய்த்
தந்ஹ்டிருக்கிறார். கல்லூரி மாணவனாக, ஆய்வுக்காலத்திலேயே ஒரு சரியான இலக்கியப்பார்வை சார்ந்த இலக்குடன் கவியரசன் பயணப்படுவது பெரும்
சாதனையாகவே படுகிறது. அதை குறுகிய காலத்தில் கவிதைகள், குறுநாவலகள் , நாவல் என்று
தொடந்து படைப்பாக்கத்தில் இருக்கிறார். மகிழ்ச்சி தருகிறது .