சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 27 ஏப்ரல், 2019

சுப்ரபாரதிமணியன் : 16 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 65 நூல்களை வெளியிட்டிருக்கும்  சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவர்.    திருப்பூரில் வசித்து வருகிறார் . சாயத்திரை “ என்ற சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய  நாவலுக்கான தமிழக அரசின் பரிசு,, தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது , சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய சனாதிபதி வழங்கிய “கதா விருது
          உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்
சுப்ரபாரதிமணியனின் நாவல்கள்:
==========================================
*    மற்றும் சிலர் 1987
*    சுடுமணல் 1990    ( மலையாளத்திலும் வெளியாகி உள்ளது )
*    சாயத்திரை  1998  ( சிறந்த நாவலுக்கான தமிழ அரசு பரிசு 
     பெற்றது,  ஆங்கிலம், கன்னடம், மலையாளம், கன்னடம், இந்தி
     மொழிகளில் வெளியாகியிருக்கிறது  )
*     பிணங்களின் முகங்கள் 2003  ( கோவை கஸ்தூரி சீனிவாசன்
                          பரிசு பெற்றது.ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) 
*     சமையலறைக் கலயங்கள்  2005
*     தேனீர் இடைவேளை 2006 ( ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளது )
*    ஓடும் நதி 2007  ( என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற
                                           விருது பெற்றது)
*   நீர்த்துளி 2011    ( ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது                                        சிறந்த நாவலுக்கு )

* நைரா ( உயிர்மை )
* தறிநாடா ( என்சிபிஎச்)
* புத்துமண்  ( உயிர்மை )
* நைரா ( என்சிபிஎச் )
*  கோமணம் ( முன்னேற்றப் பதிப்பகம் , மலையாளத்தில் வெளிவந்துள்ளது)
*  முறிவு  - 2017 உயிர்மை ( ஆங்கிலத்தில்  வெளிவந்துள்ளது )
*  கடவுச்சீட்டு 2017 ( முன்னேற்றப் பதிப்பகம் )
*  ரேகை ( பொன்னுலகம் பதிப்பகம்  2018  )


தொகுப்பு நூல்கள்
*அசோகமித்ரன் 77 (அசோகமித்ரன்  பற்றியக் கட்டுரைகள்:அமிர்தா, 2010 ) 
* நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் ( 2012 என்சிபிஎச், 2000 கனவு  )
* அ.முத்துலிங்கம் பற்றிய இரு  நூல்கள் 1. பேட்டிகள், அவரின் படைப்புகள்  பற்றிய கட்டுரைகள் ( இரண்டும் கவின்கலை பதிப்ப்கம், சென்னை வெளியீடு 2016 ) 
* சுந்தரராமசாமி மலர் (சுந்தரராமசாமி பற்றிய பலரின் கட்டுரைகள் ,கனவு 1994)
* தற்கால மலையாளக் கவிதைகள் ( மொழிபெயர்ப்பு : ஜெயமோகன் கனவு 1994 )
* கனவு -25 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டப் படைப்புகள் ( காவ்யா, ரூ300 2012 )
* பெண்மை :மலேசியா பெண் எழுத்தாளர்களின் சில  சிறுகதைகள்

வாணி ஜெயம், மங்கள கவுரி ,யோகி ,ரஞ்சனி ,வே.ராஜேஸ்வரி ,சனா ஆதிராஜ் ,ஜெயந்தி கைலாசம் ,உதயகுமாரி கிருஷ்ணன் ,ஜோதி சுப்ரமணியம்              எஸ். பி பாமா., விமலாரெட்டி ஆகியோரின் சிறுகதைகள்
*.”ஓ.. சிங்கப்பூர் “
 சிங்கப்பூர் எழுத்தாளர்களின் சில சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள்
 .( ஷாநவாஸ், ரெ.பாண்டியன். சித்துராஜ் பொன் ராஜ், ஜெயந்தி சங்கர், மாதங்கி, மணிமாலா மதியழகன்  ஆகியோரின் சிறுகதைகள் மற்றும் இவர்கள் பற்றியக்கட்டுரைகளும் மற்றும் எம்கே குமார், அழகுநிலா படைப்புகள்  பற்றிய கட்டுரைகளும் )

( இரண்டும் வெளியீடு : கவிநிலா பதிப்பகம், திருப்பூர்  )
* அரசியல்வாதியும் புறாவும்
பன்னாட்டுக்கவிதைகள், இந்தியக் கவிதைகள்  2018 (ஆங்கிலத்திலிருது தமிழுக்கு, தொகுப்பும் வெளியீடு : கவிநிலா பதிப்பகம், திருப்பூர் , )
* படைப்பும், பகிர்வும் ( 2006 : காவ்யா; சுப்ரபாரதிமணியன்  நூல்கள்                                         பற்றிய மதிபீடுகள் )
* ஹைதராபாத் எழுத்தாளர்கள் சிறுகதைகள்( 1990, காவ்யா )
* ஹைதராபாத் 400 ( 1992, காவ்யா )



subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  : & subrabharathimanianpalanisamy                                                                     blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003