சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 18 ஏப்ரல், 2019

முகமூடிகள் :மணீமாலா மதியழகன் சிறுகதைத் தொகுதி : சுப்ரபாரதிமணியன்
சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகளில் பெரும்பாலும் ஊடாடி நிற்கும் அம்சங்களை 2 பிரிவுகளாகச் சொல்லலாம். 1.சிங்கப்பூருக்கு பணம் சம்பாதிப்பதற்காகவும் குடும்ப தேவைகளுக்காகவும் தமிழ்நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து வந்து  வாழும் தமிழர்களின் அனுபவங்கள். 2 அங்கேயே பிறந்து வளர்ந்து ஒருவகையில் பூர்வகுடிகள் உடன் சம்பந்தம் கொண்ட தமிழர்களுடைய அனுபவங்கள் .இந்த வகையில் மணிமாலா மதியழகன் அவர்களின் அனுபவங்கள் இரண்டாம் பிரிவைச் சார்ந்தது அதேசமயம் முதல் பிரிவுத் தமிழர்களின் அனுபவங்களையும் தன்னுள் வரித்துக் கொண்டு  இந்த அனுபவங்களை  கதைகளாக  எழுதி வருபவர்கள் பலர் .  அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்குப் போய் சிரமப்பட்டு தொடர்ப்பில் இருக்கும் அவர்களின் அனுபவங்களை முதல் கதையில் சொல்லியிருக்கிறார். அவனின் சம்பளம் வருவாயை எண்ணி வரும் தொலைபேசி அழைப்பை அவன் எதிர்கொள்ளும் விதம் நாகரீகமாக இல்லைதான் ஆனால் வேலை சார்ந்த பல பகிர்வுகள்,  பிரிவு சார்ந்த துயரங்கள் எல்லாம் அவரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதை கதை கூறுகிறது . வெடித்து கிளம்பிய பிறகு தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர போது அவன் தன்னை உணர்ந்து கொள்கிறான். அவன் நிலை என்ன என்பது  நமக்கு தெரிகிறது. ஒரு பெண்ணின் மீதான எரிச்சலின் ரூபத்தை ஒரு பெண்ணே உள்வாங்கி எழுதி இருப்பது தான் அக்கதையின் சிறப்பு என்று சொல்லலாம் . சில கதைகளில் .சில விசித்திரமான மனநிலை கொண்ட மனிதர்களையும் சந்திக்கிறோம். மகன் இறந்த பிறகு உடல்தானம் குறித்து வற்புறுத்துகிறார்கள் அதற்கு மறுக்கிறார் ஒரு தந்தை.  விதவையான நிலையில் ஒரு பெண் மீது செலுத்தப்படும் அனுதாபங்களை ஏற்றுக்கொள்ளாமல் மறுமணம் என்கிற அந்தஸ்தை ஒரு பெண் விசித்திரமாக மறுக்கிறாள் . அவளின் அனுபவம் இன்னொரு கோணம் அல்லவா.
.குடும்பத்தில் மனைவியின் அடாவடித்தனமும் நுகர்வுக் கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருப்பதும் ஒரு கணவனின் பொறுமையை சோதிப்பதை ஒரு கதை சொல்கிறது .அவன் தன்னைத் தானே நொந்து கொண்டு இந்தியாவுக்கு போய்விடுவோம் என்ற மிரட்டலை தீர்மானமாக சொல்ல வேண்டியிருக்கிறது இதுபோல் விசித்திரமான பெண்களை பல கதைகளில் மணிமாலா அவர்கள் சொல்கிறார். இப்படி பெண்களைச் சித்திரப்பதற்கும் மன முதிர்ச்சி  வேண்டும் .நிகழ் கால சம்பவங்களை எடுத்துக்கொண்டு அதை புராண கதாபாத்திரங்களை கொண்டு நகர்த்துவதும் விமர்சிப்பதும் இரண்டு கதைகளில் இருக்கிறது. அப்படித்தான் கைபேசி தரும் தொல்லைகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஒரு குடும்பத்தில் எப்படி சீரழிவை கொண்டு வருகிறது என்பதை ஒரு கதை சொல்கிறது .புராண கதாபாத்திரங்களும் மனிதர்களும் இயைந்து வருகிறார்கள்  இரண்டு கதைகளில்... இத்தொகுப்பில் பல கதைகள் உச்சபட்சமான நகைச்சுவை உணர்வோடு சொல்லப்பட்டிருக்கிறது டீபாய் என்ற கதையை ஒரு குறியீடாக கொண்டு ஒரு குடும்பச் சூழலில் பல்வேறு விதமான விஷயங்களை மனதில் கொள்ளலாம். இப்படி நகரம் சார்ந்த கதாபாத்திரங்களை நவீன வாழ்க்கையின் சிக்கலுக்கு கொண்டுவருவது அதிலும் குறிப்பாக கைபேசியின் உடைய வித்தைகளை பற்றி சொல்லுவது போன்றவை இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை அம்சங்களை கொண்டிருக்கின்றன. இந்த கதைகளின் பொதுவான தளங்கள் பல விதங்களில் பல நிலையில் வெறும் இறுக்கத்தை தவிர்த்து இயல்பான சுவாரஸ்யமான வாசிப்புக்கு இட்டுச் செல்வது ஒருவகை பாணியாக இருக்கிறது. முகமூடிகள் என்ற கதை சிங்கப்பூர் வாழும் தமிழர்களின் முகமூடிகளை எடுத்து இயல்பான முகத்தை காட்டுவதாக இருக்கிறது .வயது முதிர்வு காரணமாக மறதி நிலை ஏற்படுவதை சொல்லும் ஒரு கதையில் சிங்கப்பூரின் ஒரு பகுதி காடாக இருப்பதை காடாக இருந்தது என்று ஒரு முதியவர் நினைவில்  கொண்டே பேசிகொண்டிருக்கிறார் . அதுபோல தமிழர்களில் இடம்பெயர்ந்த வாழ்க்கையில் இன்னல்களை தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் கதை சூழலில் இயல்பான தமிழர்களின் அனுபவங்களை இக்கதைகள் கொண்டிருக்கிறன. மணிமாலா மதியழகன் அவர்கள் சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு எழுத்தாளர் அவரின் இந்த சிறிய தொகுப்பு 20 அம்சங்களை மையமாகக் கொண்டிருக்கிறது சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகள் தமிழுக்கு நல்வரவாக இருப்பதன் இன்னொரு அடையாளம் இக்கதைகள்  ரூ 200, கரங்கள் பதிப்பகம், கோவை