ஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப்
பட்டறை
( கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும்
பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாம்)
12/5/19 ஞாயிறு ,இடம் அறிவிக்கப்படும். கட்டணமில்லை . மதிய உணவு, தேனீர்
வழங்கப்படும்... முன்னணி எழுத்தாளர்கள் பயிற்சி அளிப்பர் .
கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டிய கைபேசி எண்கள்:
தோழர்கள் பி ஆர் நடராஜன் ( செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ,
திருப்பூர் மாவட்டம்.) ( 94434 27156 ), இரா. சண்முகம் தலைவர் (99448
15107 )
நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர்
மாவட்டம்.
செய்தி: பி ஆர் நடராஜன் ( செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ,
திருப்பூர் மாவட்டம்.) ( 94434 27156 ),
உலகப் புத்தக தினம்
திருப்பூர் நண்பர்கள் வட்டத்தின் 24ம் சந்திப்பு உலகப் புத்தக தினம்
சார்ந்து செவ்வாய் மாலை வாழ்க வளமுடன் மையம், செரீப்காலனியில் நடைபெற்றது, நேசனல்
சில்கஸ், நேசனல் புத்தக நிலையம் உரிமையாளர் அருணாசலம் தலைமை தாங்கினார்.. உலகப்
புத்தக தினம் உருவாக்கம், சேக்ஷ்பியர் பிறந்த தினமாக அமைவது, மற்றும் புத்தக வாசிப்பு அனுபவங்களை தமிழறிஞர் நீறணி பவள்க்குன்றன் , வெற்றிவேல்,
லக்ஷ்மணன் . ரெத்னம், சுப்ரபாரதிமணீயன் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். உலக புவி
தினத்தைய்யொட்டி சுப்ரபாரதி மணீயன் தன் “ தண்ணீர் யுத்தம் “ என்ற சுற்றுச்சூழல்
நூல் எழுதிய அனுபவஙகளைப் பகிர்ந்து கொண்டார்.( உயிர்மை பதிப்பகம் வெளியீடு
சென்னை).
உலக புவி நாள் .. சுப்ரபாரதிமணியன்
சூழலியல் பற்றி யோசிப்பில் இப்போது முன் நிற்பது தண்ணீர் வணிகப் பொருளாகிப்
போனதும், தண்ணீரால் மூன்றாம் உலக
யுத்தம் என்பதும்தான். “ எல்லோருக்குமான தண்ணீர்” என்பது சுத்தமான குடிநீர்
உபயோகத்தை முன் நிறுத்துகிறது. தண்ணீர் பண்டமாகி விட்டது.தண்ணீரை கார்ப்பரேட்
நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உலகளவிலான ஏற்பாடுகள் பயமுறுத்தவே
செய்கின்றன.” தண்ணீர் விற்பனைக்கல்ல “ என்று தண்ணீரை ஒரு அடிப்படை
உரிமையாகவும் கோரி பெரும் போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. தண்ணீர்
தனியார்மயமாக்கல் என்பது தோல்வியடைந்து வருவதை பல நாடுகளின் போராட்டங்கள்
சுட்டுகின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்கிற பணத்திற்கு பெரும் லாபம்
சம்பாதிக்கலாம் என்பதோடு ஒதுங்கிக் கொள்ள வாய்ப்புகள் வந்திருக்கின்றன.கழிவு
நீரைச் சுத்திகரிக்கும் தொழில் என்பது வளர்ந்து வருகிறது. கழிவு நீரை
சுத்திகரித்துக் குடிப்பது பலநாடுகளில் அமுலுக்கு வந்தாகி விட்டது. தண்ணீர்
சார்ந்த் உரிமைகளை வாங்குதல், வணிகம், விற்றலில் முக்கியத்துவம்
பற்றிய புதிய நடைமுறைகள் உலக அளவில் வந்து விட்டன.இருபது ஆண்டுகளுக்கு முன் தகவல்
தொழில்நுட்பத்துறை இருந்தது போல தண்ணீர் சார்ந்த விசயங்களில் கடுமையான
ஒழுங்குமுறைகள் கோரப்பட்டுக்கொண்டிருக்கின்றன..எந்த வியாபாரத்திலும் அடிப்படை
நேர்மை, அறம் எதிர்பார்க்கப்பட்ட
காலங்கள் உண்டு. நுகர்வும்,
பேராசையும்
விசுவரூபம் எடுத்திருக்கும் நவீன உலகில் சூழலைச் சிதைக்கிற ” அறப்போராளிகள் “ வியாபாரத்தில் பெருகி
விட்டார்கள்.. கார்ப்ப்ரேடுகள் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு கொண்டு செயல்
படுவதே பெரும் அறமாகக் கொண்டாடப்படுகிறது.ரபேல் ஊழல் பற்றி விஜயன் நூல்( பாரதி
புத்தகாலயம் சென்னை வெளியீடு )மற்றும் , திருப்பூர் கனவு இதழ் அறிமுகங்கள் நடந்தன.
நேசனல் சீனிவாசன் நன்றி கூறினார்.
புத்