சுப்ரபாரதிமணியன் : அலைவு
இலக்கியம் பற்றிய அலசல்
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ( பனுவல்களும் மதிப்பீடுகளும்)
ஆசிரியர்.: முனைவர்
பா. ஆனந்த குமார் .என்சிபிஎச் வெளியீடு-
ஈழப்பிரச்ச்சினைக்குப்பின் உலகம் முழுவதும் பரவி வாழும்
தமிழர்களின் படைப்பிலக்கிய முயற்சிகளால் தமிழ் இலக்கியப் படைப்புகளில் புலம் பெயர்ந்தோர் இலக்கிய வகை காத்திரமான
இடத்தை அடைந்துள்ளது. அது ஒருவகையில் ஈழத்துத் தமிழிலக்கிய மரபின் தொடர்ச்சியாக
விளங்குகிறது. ஆரம்பத்தில் டொமினிக்ஜீவா, டேனியல், செ.கணேசலிங்கன், கைலாசபதி, கா.சிவத்தம்பி
போன்றோரே அறியப்பட்ட நிலையில் இன்றைக்கு எண்ணற்றப்படைப்பாளிகள் எழுதி வருகிறார்கள்.புலம்பெயர்ந்த இலக்கியத்தின்
ஆரம்ப கால முயற்சிகளின் தேடலை காலனி ஆட்சியிலிருந்து தொடங்கி இந்நூற்றாண்டின்
தீவிரமான முயற்சிகள் வரை அறிமுகப்படுத்தும் நூலாக இது விளங்குகிறது. இதில்
புலம்பெயர்ந்தோரின் கவிதைகள், சிறுகதைகள் மூலம் அவர்களின் புலம் பெயர்வு
வாழ்க்கை பற்றிய இலக்கியப்படைப்புகளை பேரா. ஆனந்தகுமார் எடுத்துக்காட்டுகிறார்..
நாவல் பற்றியக் குறிப்புகள் இந்நூலில் இல்லை.அது விரிவான தளம் .
புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் அயல்நிலம் ,தாய்நிலம்
என்ற கண்ணிகள் விரவிக்கிடப்பதை பல கவிதைகளின் மூலம் எடுத்துக்
காட்டிர்யிருக்கிறார். அகதிகள் வாழ்நிலை அதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.பல
நாடுகளில் அடிமைத்தனமும் நிறவெறியும் அவர்களைச் சிறுமைப்படுத்தியிருப்பதை
மேற்கோள்கள் மூலம் காட்டுகிறார்,இதில் பெண்ணுரிமை சார்ந்த குரல்
குறிப்பிடத்தக்கதாயும் விளங்கிகிறது.இந்த வகையில் வ.அய்.ச.ஜெயபாலன் , கலாமோகன், தீபச்செல்வன்
முதற்கொண்டு தமிழ்நதி ., மல்லிகா வரை பலரின் கவிதைகள்
இடம்பெற்றிருக்கின்றன.
புகலிட இலக்கியத்தில்(
அலைவு இலக்கியம் ) சிறுகதைகளின் பங்கு முக்கியமானது.அவை யாதார்த்தப்பாணி, பின்நவீனத்துவப்பாணியில்
அமைந்திருப்பதை வகைப்படுத்துகிறார்.படித்தவர்களாக இருந்தாலும் கூலி உழைப்பில்
அவர்கள் ஈடுபடுவதைச் சுட்டிக்காடுவது ஒரு முக்கிய அம்சம்.நாடு, தெருக்கள்
அல்லாத மிதவை வெளியில் அவர்கள் வாழ்கிறார்கள் என்கிறார் ஆசிரியர்.
புலம்பெயர்ந்தவர்களின் தேசியம் மற்றும் சமீபத்திய நாடு கடந்த தேசியம் பற்றிய
அவதானிப்புகளும் இதில் உள்ளன. நாவல்
பற்றியக் குறிப்புகள் இந்நூலில் இல்லை
இதோடு தொட்ர்புடைய மீரான் மைதீனின் நாவ்ல்களில் இந்த அம்சங்கள் இருப்பதை
ஊடாகக் காட்டுகிறார். இந்த வகையில் கலாமோகன் முதற்கொண்டு அ.முத்துலிங்கம், மாத்தளை
சோமு , வரை பலரின் சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன.போர் சூழல், அகதி
வாழ்க்கை, கயறு நிலை போன்றவற்றை அவை கோடிட்டாலும் அ.முத்துலிங்கத்தின்
சிறுகதை லவுகீக வாழ்க்கையில அதன் தாக்கம் பற்றிய மாறுபட்டப் பார்வையைச்
சொல்கிறது.மாத்தளைசோமுவின் சிறுகதையில் தோட்டத்தில் உழைத்து அங்கேயே செத்தவர்களைப்
புதைப்பதற்கு இட தேடும் அவலம் தமிழர்களின் அவலக்குறியீடாய் இன்னொரு கோணத்தில் அமைந்திருக்கிறது. 1980ல் மதுரை
அமெரிக்கன் கல்லூரியின் பாடத்திட்ட்த்தில் இடம்பெற்ற போத்திரெட்டியின் ” அயலஇலக்கியம்
நூல் ” ஆரம்ப முயற்சி.. அதன் நீட்சியாகவும் ஆழமாகவும்
தீவிரமாகப்பயணப்பட்டிருக்கிறது இந்நூல் . அந்த வகையில் கவிதை, சிறுகதை
தவிர்த்து நாவல், நாடகம், சுயசரிதம் உட்பட பல பிரிவுகள் பற்றியவை இந்நூலில்
இடம்பெறவில்லை
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ( பனுவல்களும் மதிப்பீடுகளும்)
ஆசிரியர். முனைவர் பா. ஆனந்த குமார் .என்சிபிஎச் வெளியீடு- ரூ 80 பக்கங்கள் 94
சுப்ரபாரதிமணியன்