3 அபிப்ராயங்கள் :
ஜெயமோகன் : .
சுப்ரபாரதிமணியனை எனக்கு அவர் ஹைதராபாதில் இருக்கும் போதே
தெரியும். இருவரும் ஒரே ஆண்டில் ஜனாதிபதி
வழங்கிய ” கதா விருதை ’’ ப் பெற்றோம். தொடர்ச்சியாக கடிதங்கள் வழியாக இலக்கிய
உரையாடலில் இருந்தோம். அவர் ” கனவு “ என்னும் சிற்றிதழை
நடத்திக்கொண்டிருந்தார். நான் அதில் பங்குபெற்றேன்.
அப்போதுதான் தமிழில் மிகைபுனைவு எழுத்துமுறைகள் பெரும்
ஆர்வத்துடன் அறிமுகமாயின. நேர்கோடற்ற எழுத்துமுறை ஆவேசத்துடன் முன்வைக்கப்பட்டது.
மொழி திருகலாக இருந்தால்தான் அது எழுத்து என்னும் எண்ணம் சிறிய சூழலில்
வலுப்பெற்றது.
நானும் அந்த அலையில் ஆர்வம்கொண்டிருந்தேன். நேர்கோடற்ற
கதைசொல்லும் முறை, மிகைபுனைவு, படிமங்கள்செறிந்த
மொழி ஆகியவை எனக்கு அன்றும் இன்றும் உவப்பானவை. ஆனால் அதையே ஒரே எழுத்துமுறையாகக்
கொள்வதை என்னால் ஏற்கமுடியவில்லை.
அன்று அசோகமித்திரனை ‘எளிமையான
யதார்த்தவாத எழுத்தாளர்’ என நிராகரிக்கும் ஒரு மனநிலை நிலவியது .
அதற்கேற்ப அசோகமித்திரன் அன்று சாவி போன்ற வணிக இதழ்களில் சாதாரணமான பல கதைகளை
எழுதிக்கொண்டும் இருந்தார். சிற்றிதழ்சாந்த இலக்கியம் அவரைக் கடந்து நெடுந்தூரம்
சென்றுவிட்டது என்ற பேச்சு அன்றைய இலக்கியச்சூழலில் அதிக ஓசையிட்டவர்களால்
அடிக்கடி முன்வைக்கப்பட்டது
ஆனால் அசோகமித்திரன் தமிழிலக்கியத்தில் ஒரு சிகரம் என்னும்
எண்ணம் எனக்கிருந்தது. மௌனமாகச் சொல்லப்பட்ட
அவரது கதைகள் வாசகனின் கூர்ந்த கவனிப்பைக் கோருபவை என்று வாதிட்டேன்
அதை சுப்ரபாரதிமணியனிடம் சொன்னேன். அவரும் அசோகமித்திரன் மேல்
பெரும் ஈடுபாடு கொண்டவர். அசோகமித்திரனுக்கு அப்போது அறுபது வயதாகியது. அதையொட்டி
அவருக்காக ஒரு மலர் வெளியிடலாமென நினைத்தோம். நான் பலரிடம் கட்டுரைகள் கோரி பெற்று
ஒருவழியாக ஒரு விமர்சன மலரைத் தயாரித்தேன்.
அது பரவலாகக் கவனிக்கப்பட்டது. உண்மையில் இலக்கியத்தில் ஒரு
திசைமாற்றத்தை உருவாக்கியது. அசோகமித்திரன் மீதான கவனம் மீண்டும் வலுவாக
உருவாகியது.
அவரின் முதல் நாவல் ” மற்றும் சிலர் “ குறிப்பிடத்தக்கது.:
” மற்றும் சிலர் “ நாவலுக்குரிய நிதானமும் அழகும் கூடியிருக்கிறது.
ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துருவம்
உரித்ததாக இருக்கும். புதுமைப்பித்தனுக்கு சிறுகதை, ஜானகிராமனுக்கு நாவல். இப்படி உங்கள் உருவம் நாவல்தானோ என்று இதைப் படித்த போது தோன்றுகிறது. அதிகமான விவரணை, மொத்தமானப் பார்வை போன்ற உங்கள் தனித்தன்மைகள் நாவலுக்கு உரியவை. சிறுகதை போல்
ஒரு புள்ளி மீது படியக்கூடியதல்ல நாவலிஸ்டின் பார்வை. இப்படி படிந்தால் நாவலும் சிறுகதை
ஆகிவிடும். ( 18வது அட்சக்கோடு, வாடிவாசல் மாதிரி ). உங்கள்
பார்வை ஒரே சமயம் பல விசயங்கள் மீது படிவது. இது
நாவலாசிரியனின் பார்வை. சிறுகதை உள்ளங்கையில் ஏந்திய படிகக் கல். நாவல் தொலைதூர மலை. மலைக்கே
உரிய பிரமாண்டம். கச்சிதமான உருவம் இல்லாமை, தெளிவும் தெளிவின்மையும்
பலவித உருவகங்களின் தொகுப்பு போன்ற தன்மை போன்றவை நாவலில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. ஆற்றூர் ரவிவர்மாசார் ” நகர வாழ்வின் ஒரு சில்லு துல்லியமாய் பதிவாகியுள்ளது “ என்றார். பாராட்டக்கூடிய முயற்சி. எனினும்
நாவல் அடிப்படையான் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் அது இதில் இல்லை.. காலமாற்றம் வாழ்வினொரு தோற்றம்.
இவை மட்டும் போதாது . இவை அனைத்தும் உங்கள் நாவலில் உள்ளன. தமிழில் நாவலாசிரியர்கள்
இருவரே. சுரா...திஜா.. நீங்கள் சிறந்த அடுத்த
நாவலை எழுத இயலும். அதற்கு அடிப்படை தேவையான் நாவல் மனம் இருக்கிறது. அனேகமாய் மேற்குறிப்பிட்ட
இருவர் தவிர்த்து மூன்றாவது ஆள் நீங்கள் . ( புகழ்ச்சி இல்லை வெட்கம் வேண்டாம் )
----
சுப்ரபாரதிமணியன் நாவல்கள் : முருகேசபாண்டியன்: சமூகப் போராளியாக அவரின் 15 நாவல்கள் இன்றைய சூழலின்
விமர்சனங்களாக வெளிப்பட்டுள்ளன, சமகாலப்பிரதிபலிப்பு, உலகமயமாக்கலின் நாசம் , விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை என்று
வெவ்வேறு தளப் பரிமாணங்களில் கலைத்தன்மையுடன் எழுதி வெற்றி கண்டிருக்கிறார்.இவரின்
குரல் கார்ப்பரேட் உலகின் வன்முறைக்கு எதிரான முக்கியமான குரல்.விளிம்பு
நிலை மக்களின் குரல்
சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் :, சு.வேணு கோபால் ,
250 சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருக்கும். பலவகை
அனுபவங்கள், பெண்களின் இயல்புகள், பிரச்சினைகள். சுற்றுச்சூழல், சாதாரண மக்களின் இயல்புகள், நிலத்தோடு தொடர்புடைய அனுபவங்கள்.,
மனிதர்களின் தன் வெறுப்பு, வன்மம் என்று விரிவான
தளங்களில் உளவியலோடு ஊடாடி இருக்கிறார். சிறுகதைகள் உயிர்ப்புடன் இருக்கின்றன அவரின் ......
தொடர்ந்த இயக்கத்தால் . சில சிறந்த சிறுகதைகள்:
ஒவ்வொரு
ராஜகுமாரிகளுக்குள்ளும்,
மிச்சம், எதிப்பதியம், கை குலுக்க சில
சந்தர்ப்பங்கள்,விமோசம், வாக்கு..,
தொலைந்து போனக் கோப்புகள்......