* subrabharathi@gmail.com Fb:
Kanavu Subrabharathimanian Tirupur : blog:
www.rpsubrabharathimanian.blogspot.com
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602
/094861 01003
கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய “ சுற்றுச்சூழல் முகாம்-சூழலியல் “
--------------------------------------------------------------------------
திண்டுக்கல்லில் சுற்றுச்சூழல் முகாமினை இருதினங்கள் 27,28 மே- கலை இலக்கியப்
பெருமன்றம் நடத்தியது பத்திரிக்கையாளர் ஜெயப்பிரகாஷ் ஒருங்கிணைத்தார். ஈரோடு பசுமை
இயக்கம் டாக்டர் ஜீனானந்தம், பாமயன், அமைதி அறக்கட்டளை பால்பாஸ்கர் போன்றோர் நாம் எதிர்கொள்ளும் சூழலியல் நிலைகள் பற்றிப்
பேசினர் . ”
படைப்பிலக்கியத்தில் சுற்றுச் சூழல்
” என்ற தலைப்பில்
சுப்ரபாரதிமணியன் பேசினார்
திண்டுக்கல் சுற்றுச்சூழல் முகாமில் சுப்ரபாரதிமணியன்
பேசியதில்..சுற்றுச் சூழல் படைப்பிலக்கியத்தில்..
----------------------------------------------------------------------------
என் சுற்றுச்சூழல் நாவல்கள்
( சாயத்திரை, புத்துமண் ) முன் வைக்கும் உள்ளீடான
தார்மீகக் கேள்விகள் உலகளாவில் சுற்றுச் சூழல் பிரச்சனைகளாக வடிவெடுத்துவிட்டன என்பது
இன்னும் துயரமானது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களாய்
திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் பயமுறுத்துகின்றன. அடிப்படை மனித உரிமைப்ப்பிரச்சினைகளாக சுற்றுச்சூழல்
பிரச்சினைகள் உலகெங்கிலும் வடிவெடுத்துள்ளன.
கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம்
போன்றவை உலக அளவில் முதலாளித்துவதின் கருணை முகங்களாய் காட்டப்படும் இந்நாளில் நவீனக்கொத்தடிமைத்தனமும் புதிய பரிணாம விசுவரூபங்களைக் கொண்டிருக்கிறது.மனிதர்களின் பேரசைக்காக மண்ணை நாசமாக்குவதும், ஆறுகளை மாசுபடுத்துவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும் தொடர்ந்த
தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் நடைபெற்றுவருவது கவலை கொள்ள வைக்கிறது. அதற்கான எதிர்ப்புக்குரல்
சுற்றுச் சூழல் படைப்புகள்
கடந்த 20 ஆண்டுகளாக நானும் படைப்பிலக்கியவாதிகளும்
எழுதிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், குழந்தைத்
தொழிலாளர் பிரச்சினைகள், குழந்தைத்தொழிலாளர்
நலன்கள் குறித்த அக்கறையை அக்கறைகொண்டு அவை
பற்றிய படைப்புகளை முன்னிருத்துகிறது. கார்ப்பரேட் உலகம் பற்றிய பல விமர்சனங்களையும்
அக்கறையுடன் வெளியிட்டு வருகிறது.கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்யலாம்.லாபம் சம்பாதிக்கலாம்.
அதே சமயம் நதியைப் பாழாக்குவதற்கோ, நிலத்தடி
நீரை,
மண்ணை பாழாக்குவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை. சம்பாதிக்கும்
லாபத்தில் ஒரு பகுதியை தொழிலாளர் நலனுக்காக
கார்ப்பரேட் சமூக நலத்திட்டத்தின் கீழ்
செலவு செய்ய வேண்டும் என்று விதிகளும், பாராளுமன்ற மசோதாக்களும் இருந்தாலும் அவை
நடைமுறைபடுத்தப்படுவதில்லை. பேர் டிரேடு -நியாய வணிகம் சார்ந்து அவர்கள் இயங்க வேண்டிய
அவசியத்தை என் கட்டுரைகள் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன.
கார்ப்பரேடுகளுக்கு எதிரான குரலாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு
பற்றிய அக்கறையை தொடர்ந்து வலியுறுத்துகிறது.
உலக அளவில் மனித உரிமைப்பிரச்சினைகளாக முன்வைக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் பற்றிய
விவாதங்களை முன்னெடுப்பது ஆரோக்கியமானதாகும்.
சமூகத்தின் மனச்சாட்சியின் குரலாக, ஒருவகையில்
எழுத்தாளர்களின் குரலாக அது இலக்கிய ஆளுமைகள், கலைத்துறையினர், அறிவுத்துறை முன்னோடிகளை இளைய தலைமுறைக்கு
அறிமுகப்படுத்துகிறது.உலக மயமாக்கலால் கிராமங்களிலிருந்து துரத்தப்படும் மக்கள் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள்.
இங்கு அவர்கள் தொழிலாளிகளின் உரிமையற்று, வெறும் கூலிகளாக, கொத்தடிமைகளாக, சுமங்கலித்திட்டத்தின கீழான அடிமைகளாக, குழந்தைத் தொழிலாளர்களாக தொடர்ந்து இயங்கி
வருகிற அவலத்திலிருந்து மீட்டெடுக்கிற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நுணுக்கமாகவும், பூடகமாகவும் சமீப்ப் படைப்புகள் வெளிவருவது ஆரோக்கியமானதாக இருக்கிறது.
இது இலக்கிய தர்மத்தின் குரலாக ஊடகங்களுக்கு முன் உதாரணங்களை முன்வைக்கும் முயற்சியாகும்